Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10981401_649160098572582_578189290731000

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10959657_351956751668535_45377671476506610985378_351956781668532_303947513770069

 

 

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கசகசா ஒரு மசாலா பொருள் என்று மட்டுமே தெரியும்.அதன் மற்றொரு முகத்தை அறிவீர் .

பாப்பி விதை( POPPY SEED)தான் கசகசா .இதன் செடி வளர்ந்த பின் விதைகளை உருவாக்கும் பை உருவாகும் .விதை முற்றும் முன் அந்த பை பசுமை நிறத்தில் இருக்கும் .அதன் மேல் கீறி,அதிலிருந்து வடிகிற பாலை சேகரிச்சா ..

அதுதான் ஓபியம் என்னும் போதை வஸ்து.விதை மாற்றினால் நல்ல பயன் தரக்கூடிய கசகசா.நல்லதும் கெட்டதும் நாம் பயன்படுத்துவதை பொறுத்துதான் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10262108_543250195817999_808942316815549

 

ஹாலிவுட் சூப்பர்

ஸ்டார்களை உலகமே தலையில்

தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம்

அது...!!!

ஆனால்,,,

அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர்

ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச்

செய்தவர்,,,

நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வர்

சிவாஜி கணேசன்.

சிவாஜியின்

நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன்

சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு,,,

தங்கள்

வீடுகளுக்கே அழைத்துச்

சென்று உபசரித்தார்கள் அந்த ஹாலிவுட்

ஸ்டார்கள்.

"காட்பாதர்" கதாநாயகன் மார்லன் பிராண்டோ,

"பென் ஹர்" நாயகன், சார்டன் ஹெஸ்டன், டென்

காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய "பூல்பிரன்னர்"

உள்பட ஹாலிவுட் பஞ்ச பாண்டவர்கள் மத்தியில்,

எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா...!!!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஊடகவியலாளரின் மரணம்..

 

sathiyamoorthy-600x849.jpg

 

 

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2015 உடன் ஐந்தாண்டு பூர்த்தி கொள்கின்றது.

தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.

மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ். இடப்பெயர்வுடன் தனது பல்கலைக்கழக வாழ்க்கையை இடைநிறுத்த வேண்டிய சூழலை எதிர்கொண்டார்.

ஒரு ஊடகன் என்ற காரணத்தினால் அன்றைய தனது மேலதிக கல்வியை நிறுத்திக் கொண்ட அவர் வன்னியில் ஊடகங்களின் பங்களிப்பில் முனைப்புக் காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனக்கான பங்களிப்பினைச் சரியாகப் பயன்படுத்தி பணியாற்றினார்.

கால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முனைந்தார். அந்தக் காலப்பகுதியில் அவர் புதுக்குடியிருப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய செயற்பாட்டாளர்களாக அன்று விளங்கிய இளம் படைப்பாளர்களுடனும், ஆர்வலர்களுடனும் கைகோர்த்து அந்த அமைப்பின் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றினார்.

இந்த நிலையில் எழுவின் ஆலோசனையுடன் எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் போது வன்னியில் செயற்பட்டுவந்த பல்வேறு ஊடகத்துறைசார் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்சிகளை வழங்கிவந்தனர். அந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார். அந்தக் கற்கை நெறியினை முன்னெடுப்பதற்கான முழுமையான முனைப்பில் கல்வித்திணைக்களம் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டினை அவரே மேற்கொண்டிருந்தார்.

அதே காலப்பகுதியில் வன்னியில் இருந்து வெளிவந்த கலைபண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களின் முக்கிய இடத்தினை சத்திய மூர்த்தியினுடைய படைப்புக்கள் பெற்றிருந்தன. அதன் பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட ரீ.ரீ.என் – (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார். இதே காலப்பகுதியில் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட இணையத்தளம் ஒன்றின் செய்தி தொகுப்பாளராகவும் செயற்பட்ட அவர் புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

அதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்தவண்ணமே உள்ளன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நாள்நோக்கு மற்றும் நிலவரம் நிகழ்சிகளில் இவரது செவ்விகள் அடிக்கடி இடம்பெற்றன. தாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது. கல்லூரியின் கற்கைநெறியின் போது செய்தி தொடர்பிலான விரிவுரைகளாகவே அவரது பணி அமைந்திருந்தது.

வன்னியில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்களின் போது பு.சத்தியமூர்த்தி நேரடியாகவே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். தனது பார்வையில் சரி எனப்பட்டதை எடுத்து வெளிப்படுத்துவதில் அல்லது அது தொடர்பில் விவாதிப்பதில் அவர் என்றும் பின்நின்றதில்லை. சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் வன்னியிலும், புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக போராளிகளுக்கான வழிகாட்டி, மற்றும் குறிப்பிட்டகாலம் மாணவர்களுக்காக வெளியாகிய கடுகு உட்பட்ட சஞ்சிகைகள் என்பனவற்றிலும் இவரது படைப்புக்கள் தொடராக வெளிவந்தன. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் அவரிடம் நிறைந்தே காணப்பட்டது. பு.சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜன் ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.

கிளிநொச்சியில் அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து படிப்படியாக ஒவ்வொரு இடமாக அவர் தனது பணி இடத்தினைச் சார்ந்தே குடியமர்ந்து வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தததை அவதானிக்க முடிந்தது. இந்த நிலையில் இடப்பெயர்வின் தொடராய் வள்ளிபுனத்தில் இருந்து தனது குடும்பத்தினரை இரணைப்பாலை என்ற இடத்தில் இருத்திவிட்டு வள்ளிபுனம் பகுதிக்குச் சென்ற வேளை எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது உயிர் பிரிந்தது. உடனடியாகவே தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.

அவரது நினைவு நிகழ்வுகள் புலம்பெயர் தேசமெங்கும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவருக்கான எந்த ஒரு வணக்க நிகழ்வினையும் இன்றுவரையில் தாயகத்தில் நிகழ்த்தவில்லை என்ற சோகம் அல்லது துயர் இன்னமும் ஆற்றுப்படுத்த முடியாது உள்ளது. குறிப்பாக வன்னியில் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் ஊடகவியலாளர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலோ அல்லது தாயகப் பகுதிகளிலோ கொல்லப்படுகின்றபோது அவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வன்னிப் பகுதியில் நிகழ்த்தி முடிப்பதில் பு.சத்தியமூர்த்தி தீவிரமாக செயற்படுபவர் என்பது. அவரது மனைவி கமலநந்தினி, அவர் தனது சகோதரன் மாவீரர் சிந்துஜன் நினைவாக தனது மகளுக்கு சிந்து எனப் பெயரிட்டார். தனது மகளை ஒரு ராஜதந்திரி ஆக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என அவர் அடிக்கடி கூறுவதுதான் அவரது சுட்டி மகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் நிழலாடுகின்றது.

வன்னியில் ஊடகப்பணியில் தம்மை வெறுத்து சொற்களுக்குள் அடக்க முடியாத பணியாற்றிய பல ஊடகர்கள் தொடர்பில் இதுவரையில் வெளித்தெரியாத செய்திகளே உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகளும், நண்பர் சத்தியமூர்த்தி ஆற்றிய பணிகளும் வீண் போகுமா? அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா? காலமே நீ பதில் சொல்வாய்..

நினைவுப் பகிர்வு:- ஹர்சன்.

Unthan-Ninaivil..-600x814.jpg

 

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு போராட்டக் கள ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.

சிறிலங்கா படையினரின் திட்டமிட்ட எறிகணைத் தாக்குதலில் பலியான ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் இழப்பு போராட்டக் களத்தில் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பா.உ எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போர்ச் சூழலில் இருந்து கொண்டு ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய சத்தியமூர்த்தி உள்நாட்டில் மாத்திரமின்றி புலம் பெயர் நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். என தெரிவித்த அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“சிறிலங்கா அரசாங்கம் வன்னியில் திட்டமிட்டு தமிழினப் படுகொலையைச் செய்து வருகின்றது. வேற்று நாட்டுப் பகைவர்கள் மீது போர் தொடுப்பது போன்ற நிலையில் உள்நாட்டில் உள்ள அந்நாட்டுப் பிரசைகள் மீது கண்மூடித்தனமாக உயிராபத்து மிக்க உலகத்தால் தடை செய்யப்பட்ட கொத்தனிக் குண்டுகளைப் பயன்படுத்தி கொலை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் தினமும் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த மண்ணில் வாழ்ந்து எதிரிகளின் தாக்குதலால் பலியாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் உயிரும் பெறுமதியானது. ஓவ்வொரு விடுதலை வீரர்களின் உயிரும் விலை மதிப்பற்றது. அந்த நிலையில் சிறந்த ஊடகவியலாளராக இருந்த சத்தியமூர்த்தியின் இழப்பும் ஈடிணையற்றது.

எனது நெருங்கிய நண்பரான சத்தியமூர்த்தி மிகவும் முற்போக்குவாதி. சிறந்த சிந்தனையாளன், தேசப்பாற்றாளன். சிறிது காலம் மட்டக்களப்பில் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தபோது என்னை அறிந்து என்னுடன் இணைந்து தேசியம் தொடர்பாக பல வேலைத்திட்டங்களைச் செய்தவர். நான் அப்போது ஊடகத்துறையில் இருந்தபோது என்னுடன் இணைந்து செயற்பட்டவர். அவரிடம் நல்ல ஆழமான கருத்துக்கள் இருந்தன.

நான் வன்னிக்குச் செல்லும்போது ஒவ்வொரு முறையும் என்னைத்தேடிவந்து ஊடகத்துறை தொடர்பாக நீண்டநேரம் விவாதிப்பவர். அவர் ஊடகத்துறை மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர்.

சிறிலங்கா அரசாங்கம் தற்போது மாத்திரமல்ல இதற்கு முன்னரும் கூட வன்னியில் ஊடக நிலையங்களை இனங்கண்டு அதன் மீது வான்வெளித் தாக்குதல்களை நடத்தி பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிந்த பணியாளர்கள் என பலரை படுகொலை செய்துள்ளது. அந்த வரிசையில் சத்தியமூர்த்தியின் இழப்பும் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அந்நாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அந்த அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

Sathyamoorthy-600x400.jpg

 

நாளை நானாக இருப்பேன் என்று சொன்னவர் இன்று போய் விட்டார்.

புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம்

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.

வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர்.

மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

 

Saththiyamoorththi..-600x849.jpg

 

 

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு – ஈழமுரசு.

குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என ஈழமுரசு இதழ் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈழமுரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

சாவிற்குள் வாழ்ந்துகொண்டு தாயக மண்ணில் நடக்கின்ற நிகழ்வுகளை மிகவும் திறமையாக எடுத்துக்கூறியும், எழுதியும் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் மனங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவர் சத்தியமூர்த்தி.

புலம் பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட இவர், தொலைக்காட்சிகள், வானொலிகள், நாளேடுகள் மற்றும் இணையத் தளங்களில் இவரது அரசியல் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இடம்பெற்று வந்த நிலவரம் அரசியல் ஆய்வு நிகழ்ச்சி மற்றும் அரசியல் ஆய்வுப் பத்திகள், தாயக நிலவரம், வாராந்த அரசியல் கண்ணோட்டம் போன்றவற்றில் இடம்பெற்ற இவரது ஆய்வுகள் தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தக்க வகையிலும், அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருந்த இவரது எழுத்துக்களும், கருத்துக்களும் உலகத் தமிழ் மக்களால் அதிகளவில் இவரது ஆய்வுகள் விருப்புடன் வரவேற்கப்பட்டதற்கு காரணமாக அமைந்திருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம்.

ஈழமுரசிற்கும் இவருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் காத்திரமானது. ஈழமுரசுக்கு தனது ஆய்வுகளை மட்டுமல்ல ஆலோசனைகளையும் வழங்கி அதன் வளர்ச்சிக்கு பக்க பலமாக நின்றவர். குறிப்பாக ஈழமுரசில் வருகின்ற மகிந்த சிந்தனைப் படுகொலை என்ற பக்கத்தின் வருகையை இவர் பாராட்டியதுடன், அதன் கனதியும் எதிர்காலத்தில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதையும் தனது ஈழமுரசிற்கான வாழ்த்துரையின் போது எடுத்துக் கூறியிருந்தார்.

மகிந்த சிந்தனைப் படுகொலைகளை ஆவணப்படுத்துவதற்கும் இதனை வேற்று மொழிகளில் மொழிபெயர்த்து உலக நாடுகளின் பார்வைக்கு வைப்பதற்கும் இந்தப் பக்கம் எத்தனை தூரம் அவசியமானது என்பதை தனது வாழத்துரையின்போது மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தவர். ஆனால், அதே மகிந்த சிந்தனைப் படுகொலைக்குள் சத்தியமூர்த்தி அவர்களும் உள்ளடக்கப்படுவார் என்று நாம் சற்றும்கூட எதிர்பார்க்கவில்லை.

இளம் வயதிலேயே மிகவும் சிறந்த ஒரு உடகவியலாளராக பரிணமித்து வந்த இவர், நீண்ட காலம் எங்கள் மண்ணில் வாழ்ந்து தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பாரிய பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிறிலங்கா அரசின் கொடூர இனப்படுகொலைக்குள் ஏற்கனவே பல ஊடகவியலாளர்களை இழந்திருந்த தமிழினம், இப்போது இன்னொரு சிறந்த ஊடகவியலாளரையும் இழந்திருக்கின்றது.

 

இவரது இழப்பு இவர் பணியாற்றிய ஊடக இல்லத்திற்கு மட்டுமல்ல, தமிழ் ஊடகத்துறைக்கே பெரும் இழப்பு. இந்த நிலையில், இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினரின் துயரத்தில் ஈழமுரசும் பங்கெடுத்துக்கொள்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LED_candles.jpg

 

 

http://thesakkatru.com/doc24533.html

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வழியுறுத்தி...

இன்று தம்பி முருகதாசன் நினைவு பேரணி சென்னையில் .

ஐ நா அலுவலக அருகில் ..

 

10858459_742455059184376_612540201202869

 

1521993_742455475851001_7344738127850075

 

10405361_742455819184300_789945791629684

 

10959835_742456222517593_834808431853399

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Feb 12, 2015 : Abraham Lincoln 206th Birthday Anniversary

 

1456560_551293894973157_8692195617053511

 

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு

தெரிவியுங்கள் .

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள் .. துயரமான வேளைகளில்

சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள் ;. போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,

ஆபிரஹாம் லிங்கன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good Morning ..

 

10950710_938100939536555_146622582705212

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

604014_564299073583412_1185420161_n.jpg?

 

 

 

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஐக்கிய நாடுகள் கல்வி. அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும்இ பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் முடிவெடுப்பவர்களை வானொலி மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

 

பிப்ரவரி 13 - உலக வானொலி நாள்

இன்று உலக வானொலி நாள் ஆகும். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பெப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.

உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை´ எனப்படுபவர்.

´கம்பியற்ற தகவல்தொடர்பு முறை´ மற்றும் ´மார்க்கோனி விதி´ ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.

இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ´மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்´, ´வானொலி´ மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்து விட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.

தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.

பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார். இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.

ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாட உள்ளனர்.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !
 

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !

 

காதலன், காதலர் தினம், காதலர் தினம் வரலாறு, காதலகாதல், சேவியர், வேலண்டைன் வரலாறு, வேலண்டைன்ஸ் டே

 

 

 

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரியவந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

 

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

 

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

 

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

 

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

 

6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

 

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

 

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

 

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

 

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

 

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

 

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

 

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

 

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

 

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

 

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

 

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

 

18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

 

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

 

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.

 

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

 

22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

 

23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

 

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

 

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

 

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

 

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

 

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

 

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

 

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

 

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

 

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

 

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

 

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

 

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

 

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள்!!!

Have-a-great-weekend-Cynti-cynthia-selah

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

 

133521_179108518789638_8347297_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது :

ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்...

ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...

ஒரு இலட்சியம் - சாதியுங்கள்...

ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...

ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்...

ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10978535_744937615604797_809041488680602

 

 

எழுதப் படிக்கத் தெரியாத காதலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த காதலன் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்? இதோ நம் தோழர் கார்க்கி தன் ரஷ்ய காதலிக்கு கடிதம் எழுத நேர்ந்தால் நடக்கும் சங்கடங்களை குறித்து பேசுகிறார்:

அன்புள்ள ஓல்கா,

உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது, உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப் புரிந்து கொள்ள நீ வேறுயாருடைய உதவியாவது நாட வேண்டும். இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளை அடக்கிக் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது.

உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள அழகு மாதிரி கல்வியும் இருக்கக்கூடாதா, என்று என் மனம் ஏங்குகிறது. ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது, உன்னிடம் அழகு இருக்கிறது. இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக்தியாகத் திகழும். உன் நீலநிறக் கண்களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்த்து என்பது என் கருத்து...

அன்புள்ள

கார்க்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10996804_1040689072615155_15916838389632

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிப்ரவரி 13 - வில்லியம் ஷாக்லே பிறந்த தினம்

ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான வில்லியம் ஷாக்லே பிறந்த தினம் (பிப்.13).

மின்னணுயுகம் தொடங்கியபோது, வெற்றிடக் குழாயால் ஆன மின்னணு கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. அவை வெகு சீக்கிரம் சூடவதாகவும், அளவில் பெரிதான கருவிகளை அமைக்க பயன்படுவதாகவும் மட்டுமே இருந்தது.

ஜான் பார்டீன் மற்றும் வால்டர் ப்ரட்டெயிட் எனும் இரு விஞ்ஞானிகள் தங்கத்தை கொண்டு இரண்டு தொடர்பு புள்ளிகளை ஜெர்மானியத்தில் உண்டு செய்கிறபொழுது உள்ளே செலுத்தப்படுகிற மின்சமிக்கை வெளியே வருகிற பொழுது இன்னமும் பெரிதாக்கப்பட்டு வெளியேறுவதை கண்டறிந்தார்கள். அதை மேலும் செம்மைப்படுத்தி ட்ரான்ஸ்சிஸ்டரை ஷாக்லே தலைமையிலான குழு உருவாக்கியது.

எண்ணற்ற தவறுகள் செய்தாலும் பரவாயில்லை அதிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும் நாம் என்று தன் குழுவை ஊக்குவித்து, அதிலிருந்து சரியான முடிவுகளை கண்டறிய செய்தார். கச்சிதமான ட்ரான்ஸ்சிஸ்டர் பெல் ஆய்வகத்தில் உருவானது.

உலகின் போக்கையே மாற்றிப்போடுகிற சாதனையை இக்கண்டுபிடிப்பு செய்தது என்றால் அது மிகையில்லை. மிகப்பெரிய அளவில் இருந்த பல்வேறு கருவிகள் அளவில் குட்டியானது; துல்லியம் மற்றும் செயல்பாட்டு திறன் அதிகரித்தது. குறைக்கடத்திகள் எனப்படும் ஜெர்மானியம் சிலிகான் முதலியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்டர்கள் டிவி, ரேடியோ, கால்குலேட்டர் ஆகியவற்றின் அளவை மிகப்பெரிய அளவில் குறைத்தது. மின்சார செலவும் குறைந்து. அவற்றின் பயன்பாடு அதிகரித்தது ட்ரான்ஸ்பர் ரெசிஸ்டர் என்பதே ட்ரான்சிஸ்டர் என ஆனது.

மின்தடையை தாண்டி மின்சார சிக்னல்களை கடத்தவும், பெருக்கவும் செய்வதால் இப்படி ஒரு பெயர் உண்டானது இதைக்கொண்டே வாக்மேன் கருவியை அகியோ மோரிடோ உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான 1956இன் நோபல் பரிசு இம்மூவருக்கும் வழங்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவங்க,

தன் வாழ்க்கை முழுவதும் நல்லவங்களா

நடிச்சிக்கிட்டே இருப்பாங்க..

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10994631_912598532107296_700378642_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good Morning..!!!

 

1798466_600413086700243_158849620_n.jpg?

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1013257_600414846700067_678324043_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1780715_10201393582696882_1209169998_n.j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10968462_600584296738944_335894026862516

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் உறவுகளே...

 

10978548_924207514286690_203543597418293

இன்று மகா சிவராத்திரி!!

 

free-wallpaper-of-lord-shiva-5.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இன்று குடும்ப விடுமுறை தினம்..

 

10983137_735667056531410_418091679705161

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் கனடாவின் மேபில் இலை கொடி.

 

peace-tower-mt.jpg

 

1965-பிப்ரவரி மாதம் 15-ந்திகதி மேப்பிள் இலை கொடி அமைதி கோபுரத்தில் முதன் முதலாக பறக்க விடப்பட்டது.

சமாதான மதிப்புக்கள், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும்  நீதி ஆகியனவற்றின் சின்னமான கனடிய கொடி அனைவரையும் கனடியர்கள் என வரையறுத்து ஒற்றுமை படுத்துகின்றதென பிரதம மந்திரி Stephen Harper இன்று தெரிவித்தார்.

முதன் முதலாக பிப்பரவரி 15-1965ல் எமது தேசிய கொடி பாராளுமன்ற ஹில்லில் ஏற்றப்பட்ட போது எமது தேசத்தின் சமூகங்கள் மற்றும் உலகம் பூராகவும் பறக்க ஆரம்பித்தது.

பாராளுமன்ற ஹில்லின் கொடி மாஸ்டரான றொபேட் லபொன்ரே சாமாதான கோபுரத்தில் கொடியை ஏற்றுவதற்கு 392-படிகளை ஏறிச்சென்று பறக்க விடுவார்.

இன்று வழக்கத்தை விட மிகவும் மெதுவாகவே படிகளை கடந்ததாக கூறியுள்ளார்.

இவர் ஒவ்வொரு வார நாட்களிலும் மேப்பிள் இலை கொடியை உயர்த்தும் மற்றும் பதிக்கும் பணியை செய்கின்றார்.

வருடந்தோறும் ஏற்றப்பட்ட கொடிகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. எவருக்கும் கொடுக்கப்படவில்லை. 50-கொடிகளையும் கனடியர்கள் மற்றும் நிறுவனங்களிற்கும் வழங்க உள்ளதாக பிரதம மந்திரி இன்று தெரிவித்தார்.

ஆண்டு நிறைவு குறித்த பிரிட்டிஷ் அரசியின் அறிக்கை ஒன்றை கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்ரன் வெளியிட்டார். -

 

 

canada mirror.

 

 

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.