Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி 
திறமை இல்லாமல் இருக்கலாம்
ஆனால் அனைவருக்கும் 
திறமையை வளர்த்து கொள்ள
 ஒரே மாதிரியான வாய்ப்புக்கள் உள்ளன...
 
-அப்துல் கலாம்
  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1441286_1561844667399644_889553603673110

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நயாகராவின் தோற்றம்.(கல்லாறு சதீஷ் )

 

11054373_1060548873961999_58805411274436

 

10997021_1060548877295332_67904496123831

 

11018669_1060548863962000_57048622855445

10560348_1060548993961987_64237438839049

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11071745_786423248106472_764778720847952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்வான தருணங்கள் 

மலரட்டும் இனிமையாக...

நெகிழ்வான நேசங்கள் 

நிகழட்டும் ... காலை வணக்கங்கள் 

 

1459697_678083885565722_777965316_n.jpg?

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டமணி பிறந்த நாள் மார்ச் 18 சிறப்பு பகிர்வு

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

* பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

* அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவுள்ள ஜீவன். 

 

1982345_637341162970324_363590733_n.jpg?

1377286_642258845811889_1984538148_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..

 

mon-23-dry-sparrow.jpg

1962809_698589260199867_1766302455_n.jpg

 

சிட்டுக்குருவி சில துளிகள் !

* ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

* ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.

* தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.

* சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.

* சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.

* சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. 

* இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.

* உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கால ஆரம்ப நாள்..

 

 

1526975_734626306571187_1435997423_n.jpg

 

 

first-day-of-spring-2015-northern-hemisp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

March 21 : International #Forest Day

 

10501701_922324147801478_773342228952137

1982295_735993463108097_1693714295_n.jpg

 

 

மரம் நமக்கு வரம் :- உலக காடுகள் தினம்

-

மரங்களும், மற்ற தாவரங்களும் அடர்த்தியாகவும்,

அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம்

காடு எனப்படுகிறது. காலநிலை சீராக

இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி,

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மார்ச் 21ம்

தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படு

கிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீத

அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம்

வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி,

மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை,

எண்ணெய், உறைவிடம், விறகு என மனித

சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள்

நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில்

காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப்

போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என

நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏன் காடுகள் தேவை

காடுகள் என்பவை, வெறும் மரங்களை மட்டும்

குறிப்பிடுவதில்லை.

இது வாழ்க்கை கட்டமைப்பில் (உயிர்க்கோளம்)

ஒன்று. மரங்களுக்கும், காடுகளுக்கும்

ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின்

உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது.

இதைத் தவிர நமது வீடுகளிலும்,

பொது இடங்களில் சுட்டெரிக்கும் சூரிய

ஒளியிலிருந்தும் தப்பித்துக் கொள்ள மரங்களின்

நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப்

பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண்

அரிப்பையும் தடுக்கின்றன. தட்ப வெட்ப நிலை சீராக

இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.

அழியும் காடுகள்

இன்றைய சூழலில்

மரங்களை பார்ப்பது அரிதாகிறது. சாலை, ரயில்

பணிகளுக்காக ஏற்கனவே இருக்கும்

மரங்களை அரசு வெட்டித் தள்ளுகிறது. வனப்

பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயினால் மரங்கள்

எரிந்து சாம்பலாகின்றன. அன்றாட பயன்பாட்டுக்காக

வும் மரங்கள் வெட்டப்படுகின்றன. விளை நிலங்கள்,

குடியிருப்பு பகுதிகளாக மாறுவதாலும்

காடுகளின் அளவு குறைகிறது.

உலக வனத்துறை சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும்

போது, 10 மரங்கள் நடப்பட வேண்டும்.

அப்படியிருந்தும் இருபது ஆண்டுகளில்,

ஒரு சதவீதம் மட்டுமே புதிய மரங்கள் நடப்பட்டுள்ளன.

என்ன செய்வது

பல வழிகளில் மனித இனத்துக்கும்,

விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை,

பாதுகாக்க வேண்டும். புதிதாக

காடுகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரின்

வீடுகளில் ஒரு மரம் வளர்க்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் மரங்களையும் பராமரித்தால்,

பூமிக்கு தேவையான காடு நிலைப்பெறும்.

இந்திய பொருளாதாரம்,

விவசாயத்தையே சார்ந்துள்ளது.

இதற்கு காடுகளை பாதுகாப்பது அவசியம்.

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10258819_10155332366715717_8122058165109

உலக கவிதைகள் தினம்.21.03.2015.

 

 

1238934_735073639859787_323269626_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10511286_10202531329551142_6997104956221

 

 

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

‘என்னை எழு’ தென்று சொன்னது வான்!

ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்

ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!

காடும் கழனியும் கார்முகிலும் வந்து

கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!

ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்

அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல் வரும், பசுந்

தோகை மயில் வரும் அன்னம் வரும்.

மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்

மாணிக்கப் பரிதி காட்சிதரும்

‘வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்

வெற்பென்று சொல்லி வரைக’ எனும்

கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து

கூவின என்னை! – இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள

என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.

அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்

ஆவியில் வந்து கலந்ததுவே.

‘இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் -

துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில்

தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.’

- பாவேந்தர் பாரதிதாசன் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11069815_10205625935641289_7525795350452

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1452065_429726273819967_1864903340_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1507141_790589081023222_1436615447225886

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

 

 

March 22 : #WorldWaterDay 

 

13201_922808014419758_853286006082575662

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11058719_1462055840751011_75736833166062

 

 

தமிழனுக்கு புகழாரம் சூட்டிய சிங்கப்பூரின் தந்தை இன்று மரணம் மனவேதனையோடு அவரின் உரையிலிருந்து இதை கண்ணீரோடு வெளியிடுவதோடு மறைந்த சிங்கப்பூரின் தந்தை முன்னால் பிரதமர் லீ குவான் யூவிற்கு பிரித்தானிய ஈழத்தமிழர் படை கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.

”பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உணர்ச்சிப்பெருக்கம்!

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்

11080528_10153806011374237_7163980643605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8733538080_609c20f3f9.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1011593_1448151618755918_1418387328_n.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good Morning

 

1964835_737577199609431_1167319013_n.jpg

கலையுலகில் கே.பி.சுந்தராம்பாள்.

 

1000630_210645882478414_648543146_n.png?

 

 

 

இன்றைய இசையமுத விமர்சனம்

ஆஹா...அருமை..... தொடர்ந்து சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி பொழிந்துகொண்டே இருக்கின்றன....

உங்களின் இந்த செய்கையினால்... தமிழ்த்திரை உலகில் வரலாறு படைத்த கலைஞர்கள் மறக்கப்படாமல் என்றும் நினைவில் நிறுத்தப்படுகிறார்கள்....

உங்கலது இந்தப்பணி தொடரட்டும்.....

சுந்தராம்பாளினது குரலில் கே.வீ.மஹாதேவனின் இசையில் ஏ.பீ. நாகராஜனின் இயக்கத்தில் நல்ல காட்சியமைப்புடன் கூடிய இனிய பாடல்....

என்ன ஒரு குரல் வளம் கொன்டிருந்தார் சுந்தராம்பாள் ?

இவரின் பாடல்கள்கல் கேட்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்...

ஔவையார் என்றால் நமது நினைவுக்கு வரும் உருவம் சுந்தராம்பாளினது..... கட்டபொம்மன் என்றால் சிவாஜியின் உருவம் நினைவில் வருவது போல.....

எனக்குத்தெரிந்து சுந்தராம்பாள் மூன்று படங்களில் ஔவையாராக நடித்துளார்.

முதலாவதாக ஜெமினி நிறுவனம் தயாரித்த " ஔவையார் " படத்தில் இவர் ஔவையாராக நடித்து பெரும் புகழ் அடைந்தார்..

பின்னர் " திருவிளையாடல்" , " கந்தன் கருணை " போன்ற படங்களிலும் ஔவையாராக நடித்து புகழ் அடைந்தார்....

20 ம் நூற்றாண்டின் மிக பிரதானமான 100 தமிழர்களில் ஒருவர்....

சுந்தராம்பாள் தமிழிசை நாடகம் அரசியல் திரைப்படம், ஆன்மீகம் என பல துறைகளில் புகழ்பெற்றவர்.

இவரின் முழுப்பெயர் கொடுமுடி, பாலாம்பாள் சுந்தரம்பாள்.........................................................................................................

நமது நாட்டுடனும் சம்பந்தப்பட்டுள்ளார் சுந்தராம்பாள்.....

இலங்கைக்கும் வருகை தந்த கே.பீ.சுந்தரம்பாள் இங்குள்ள பல ஊர்களுக்கும் சென்று பல நாடங்களை அரங்கேற்றினார்.

அவர் நடித்த வள்ளித்திருமணம் , நல்ல தங்காள், கோவலன், ஞானசவுந்தரி, பவளக்கொடி போன்ற நாடகங்கள் புகழ்பெற்றவையாக காணப்பட்டது.

கொழும்புக்கு நாடக குழுக்களுடன் வருகை தந்தபோது எஸ்.ஜி. கிட்டப்பா என்பவரை சந்தித்தார். தனது குரல் வளத்தாலும் நடிப்பினாலும் பலரது கவனத்தை ஈர்த்து புகழுடன் இருந்த கிட்டப்பாவுடன் கே.பீ.சுந்தரம்பாள் இணைந்து பல நாடகங்களை நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கிட்டப்பாவும் சுந்தரம்பாளும் திருமணம் செய்து கொண்டனர்.

" பக்த நந்தனார் " எனும் திரைப்படத்தின் ஊடாக நடிகராக திரையுலகில் கால்தடம் பதித்த கே.பீ.சுந்தரம்பாள் இப்படத்திலுள்ள 41 பாடல்களில் 19 பாடல்களை பாடியுள்ளார். 

"பக்த நந்தனார் " படத்தில் நந்தனாராக ஆண் வேடம் ஏற்றார் சுந்தராம்பாள்.... அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் (எனது எண்னப்படி கல்கி கிருஷ்ணமூர்த்தி ) பெண் ஒருவர் ஆண் வேடம் ஏற்றதை காரசாரமாக விமர்சித்து பத்திரிகையில் எழுதியிருந்தார்......

ஆனால் சுந்தராம்பாள் கலங்கவில்லை.... தைரியமான பெண்னாக இருந்தார் சுந்தராம்பாள்....

காலம் சுழன்றது...அந்த எழுத்தாளருக்கு ( கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு ) வேண்டிய எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி " சாவித்திரி " படத்தில் ஆண் வேடம் தாங்கி நாரதராக நடிக்க வேண்டிய சூழல் உருவாகி படமும் வெளிவந்தது.... சுந்தராம்பாள் ஆணாக நடித்தபோது பொங்கி எழுந்த அந்த எழுத்தாளரின் ( கல்கியின் ) பேனா...இப்போது அமைதியாக இருந்தது...

சுந்தராம்பாள் மணிமேகலை, ஒளவையார், பூம்புகார் , மகா கவி காளிதாஸ், திருவிளையாடல் ,கந்தன் கருணை ,துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார, திருமலை தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் பாடி நடித்துள்ளார்.

" பூம்புகார் " என்பது கலைஞர் கருணானிதியின் கதை வசனத்தில் வெளிவந்த படம்.... கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும் , கண்னகியாக விஜயகுமாரியும் , மாதவியாக ராஜஷிறீ யும் நடித்தனர்.... இதில் "அறவணடிகள் " என்ற முக்கிய பாத்திரம் வருகின்றது.... கருணானிதி இந்த வேடத்தில் சுந்தராம்பாளே நடிக்க வேண்டும் எனத்தீர்மானித்துவிடார்.... ஆனால்...உடனடியாக அது முடியவில்லை...... சுந்தராம்பாளை சந்திக்க கருணானிதி முயன்றபோது அவர் ஒரு கோவிலுக்கு சென்றுள்லதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது...உடனே கருணானிதி அந்தக்கோவிலுக்கு சென்றார்.. அது ஒரு மலைக்கோவில்....சுந்தராம்பாள் வழிபாடு முடித்து கீழே வரும்வரை மலை அடிவாரத்திலேயே காத்திருந்தார் கருணானிதி.... இதில் என்ன விஷேஷம் ? கருனானிதி ஒரு நாஸ்திகர்... ஆனாலும் சுந்தராம்பாளின் மீது இருந்த அபிமானத்தினாலும் மதிப்பினாலும்..கோவில் அடிவாரம் வரை சென்று அவரிற்காக காத்திருந்து இருக்கின்றார் கலைஞர் கருணானிதி..... அவ்வளவு மதிப்புக்கொண்டிருந்தார் திரை உலகினரின் மத்தியில் சுந்தராம்பாள்....

கலை உலகை ஆண்டு தமிழ் உலகில் இயல் இசை , நாடகம் என்ற முத்தமிழிலும் தனது பங்களிப்பை செலுத்திய கே.பீ.சுந்தராம்பாள் தமிழ் உலகில் ஒரு அழியா சகாப்தம் என்றால் அது எள்ளளவும் மிகை அல்ல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11016041_961333570573799_791265511297705

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

இயற்கை...

 

 

10402459_910648148975960_298866551952132

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் அருமை ் தொடருங்கள்

 

128524d1356851651t-happy-wedding-day-sub

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11011005_372680559605382_825981569316156

 

1522584_1413049962343124_450862958120619

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.