Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் பேசிய - என் வாழ்க்கையை செதுக்கிய இலக்கிய பாடல்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.

மனிதன் தோன்றிய காலத்தில் மண்ணும், நீரும், காற்றும், வானமும் பொதுவாக இருந்தது. வளர வளர வலுத்தவன் இளைத்தவனை அடித்து அடிமையாக்கினான். பூமியைப் பிரிதான், கடலைப் பிரித்தான், வானத்தையும் பிரித்து விட்டான். பேரழிவூட்டும் ஆயுதங்களைக் கண்டுபிடித்தான், எண்ணற்ற உயிர்களை அழித்தான்.

இனஅழிப்பு உலகமெங்கும் நீக்கமற தொடர்கிறது... காட்டுமிராண்டிகள் கத்தி அரிவாளில் செய்த உயிர்க் கொலைகளை நாகரிக மனிதன் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைகள் மூலம் செய்கிறான்.

இந்த அவலங்கள் என்று முடியப்போகின்றன?

2500 ஆண்டுகளுக்கு முன்னரே 

எல்லா ஊரும் என் ஊரே உலக மக்கள் அனைவரும் என் உடன்பிறப்புக்கள் என்று சொல்லியவன் தமிழன். அதுமட்டும் அல்ல, 

நமக்கு வரும் நன்மை தீமைக்கு நாமே பொறுப்பு. நோய் வருவதும் போவதும் நம் உடலை நாம் பேணிப் பாதுகாப்பதைப் பொருத்தது. சாவு எங்களுக்கு புதிதல்ல, வாழ்க்கை மலர்ப் படுக்கையும் அல்ல

காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் பொழுது அதில் சிக்கிக் கொள்கின்ற தெப்பம் எப்படி முட்டி மோதி உருண்டு, புரண்டு ஓடுகிறதோ அது போல மானுட வாழ்க்கை இந்த மண்ணில் அலைகழிக்கப் படுகிறது - என்பதையும் நம் பெரியோர்கள் சொல்லிவிட்டார்கள். 

அதனால் கல்வியில் சிறந்தவர்களையும், செல்வத்தில் சிறந்தவர்களையும் கடவுளாக மதிக்க மாட்டோம். ஏதுமில்லாத ஏழையை, படிக்காத பாமரனை, ஈனப்பிறவியாக நினைத்து காலால் எட்டி உதைக்கவும் மாட்டோம் - என்ற கருத்துக்களை ஒரே பாடலில் சொன்னவர் கணியன் பூங்குன்றனார்.

"யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே ; முனிவின் ,

இன்னாது என்றலும் இலமே ; 'மின்னொடு

வானம் தண்துளி தலைஇ , ஆறாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணை போல , ஆருயிர்

முறைவழிப் படூஉம்' என்பது , திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே ;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ."

புறநானூறு -பாடல் 192

கணியன் பூங்குன்றன்

 

நடிகர்.சிவகுமார்

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

253137.jpg:D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

253137.jpg:D  :lol:

 

:)  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

279820.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11138999_847597338644935_475348720974819

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10352830_10152248800647944_7488103172616

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11070095_690321331123125_327968328327514

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10150566_637516946323190_649927031356122

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஏப்ரல் மாதம் 15ம் திகதி உலக கலை தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.2011 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சர்வதேச கலை ஒன்றியமானது, பிரபல ஓவியக் கலைஞரான லியனார்டோ டாவின்சியின் பிறந்த தினமாகிய ஏப்ரல் மாதம் 15ம் திகதியினை சர்வதேச கலை தினமாக பிரகடனம் செய்தது.
 
# ஏப்ரல் 152014  லியனார்டோ டாவின்சியின் 562வது ஜனன தினம்
 
அந்த வகையில் உலகில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் 10 ஓவியங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில...!
 

1. பவுல் செசன் (பிரெஞ்சு ஓவியர்)

1892/93 ம் ஆண்டினைச் சேர்ந்த "The Card Players"என்கின்ற ஓவியமானது
2011ம் ஆண்டு $250 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
cn_image.size.cezanne.jpg
 

 

2. பாவ்லோ பிக்காசே (ஸ்பானிய ஓவியர்)
1932 ம் ஆண்டினைச் சேர்ந்த "La Rêve (The Dream)"  என்கின்ற ஓவியமானது
2013ம் ஆண்டு $155 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.

 

dream.jpg
 
 



 
3. பிரான்சிஸ் பேகன் (பிரிட்டிஷ் ஓவியர்)
1969 ம் ஆண்டினைச் சேர்ந்த "Three Studies of Lucian Freud" என்கின்ற ஓவியமானது
2013ம் ஆண்டு $142.4 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
bacon-auction-3_2732553b.jpg
 



4. ஜக்சன் பொல்லக் (அமெரிக்க ஓவியர்)
1948 ம் ஆண்டினைச் சேர்ந்த "Number 5, 1948"என்கின்ற ஓவியமானது
2006ம் ஆண்டு $140 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
pollock.number-8.jpg


 

 
5. வில்லியம் டி கூனிங் (டச்சு ஓவியர்)
1952/53 ம் ஆண்டினைச் சேர்ந்த "Woman III"என்கின்ற ஓவியமானது
2006ம் ஆண்டு $137.5 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.

 

Woman3.jpg
 
 


6. குஸ்டாவ் கிளிம்ட் (ஆஸ்திரிய ஓவியர்)
1907 ம் ஆண்டினைச் சேர்ந்த "Adele Bloch-bauer I"என்கின்ற ஓவியமானது
2006ம் ஆண்டு $135 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
Gustav_Klimt_046.jpg
 
 

 

 
7. எட்வட் முன்ச் (நோர்வே ஓவியர்)
1895 ம் ஆண்டினைச் சேர்ந்த "The Scream" என்கின்றஓவியமானது
2012ம் ஆண்டு $119.9 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
munch-scream-auction.jpg
 
 
 

 

8. ஜஸ்பர் ஜோன்ஸ் (அமெரிக்க ஓவியர்)
1958 ம் ஆண்டினைச் சேர்ந்த "Flag" என்கின்றஓவியமானது
2010ம் ஆண்டு $110 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.

 

jasper-johns-flag-1958.jpg
 
 


 
9. பாவ்லோ பிக்காசே (ஸ்பானிய ஓவியர்)
1932 ம் ஆண்டினைச் சேர்ந்த "Nude, Green Leaves and Bust" என்கின்ற ஓவியமானது
2010ம் ஆண்டு $106.5 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
616.jpg
 
 


10. அன்டி வார்ஹொல் (அமெரிக்க ஓவியர்)
1932 ம் ஆண்டினைச் சேர்ந்த "Silver Car Crash [Double Disaster]" என்கின்ற ஓவியமானது
2010ம் ஆண்டு $105.4 மில்லியன் ஏலத்தில்விற்பனையாகியது.
tumblr_mwf0sn0cQw1qaihw2o1_1280.jpg
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 15, 2015 - ஆபிரஹாம் லிங்கன் அவர்களின் 150 வது நினைவு தினம்

 

 

Abraham-Lincoln-9382540-2-402.jpg

 

 

1554367_773443039335680_5436885590596385

 

 

 

ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனநாயக முறையின் கலங்கரை விளக்காக விளங்கி அமெரிக்காவில் அடிமை வியாபாரத்தினை ஒழிக்கும் முயற்சியில் தன் உயிரை அர்ப்பணித்தவர். வறுமை காரணமாக பாடசாலை செல்லமுடியாது தந்தையின் தச்சுப்பட்டறையில் துணைபுரிந்தார். பலமைல்கள் தூரம் நடந்து சென்று கடன் வாங்கிப் புத்தகங்களைப் படித்தார். பின்பு சட்டம் பயின்று சாதாரண வழக்கறிஞர் ஆனார்.
 
தன் வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தினை பல்வேறு தோல்விகளைக் கடந்து 1860ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர்.
 
ஆபிரஹாம் லிங்கன் வெள்ளை மாளிகையை அடைய கடந்துவந்த பாதை.....
 
Ø  1816 ~ ஆபிரஹாம் லிங்கனின் குடும்பத்தினர் அவர்கள் பாரம்பரியமாக குடியிருந்த வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தன் குடும்பத்திற்கு உதவு புரியுமுகமாக வேலைக்கு செல்ல நேர்ந்தது.  
 
Ø  1818 ~ ஆபிரஹாம் லிங்கனின் தாயார் மரணம்
 
Ø  1831 வியாபாரத்தில் தோல்வி
 
Ø  1832 ~ சட்டசபை தேர்தல் தோல்வி
 
Ø  1832 ~ சட்டக்கல்லூரி செல்வதற்காக தனது தொழிலினை இழந்தார், ஆனாலும் சட்டக்கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.
 
Ø  1833 வியாபாரத்தில் தோல்வி
 
Ø  1834 ~ சட்டசபைத் தேர்தல் தோல்வி
 
Ø  1835 ~ பிரஹாம் லிங்கன் மணம்முடிக்கவிருந்த அவனது காதலி மரணம்
 
Ø  1836 ~ நரம்புக் கோளாறு நோய் பாதிப்பினால் 6 மாதங்கள் படுக்கையிலேயே காலத்தினைப் போக்கினார்
 
Ø  1838 ~ சட்டசபை சபாநாயகர் தேர்தல் தோல்வி
 
Ø  1840 ~ எலக்டர் தேர்தல் தோல்வி
 
Ø  1843 ~ காங்கிரஸ் தேர்தல் தோல்வி
 
Ø  1846 ~ காங்கிரஸ் தேர்தல் வெற்றி; வாசிங்டன் சென்று நல்லதொரு வேலையில் இணைந்துகொண்டார். 
 
Ø  1848 ~ காங்கிரஸ் மீள் தேர்தல் தோல்வி
 
Ø  1849 ~ தன் சொந்த மாநிலத்தில் காணி அதிகாரி பதவியில் இணைய விண்ணப்பித்தார்; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
Ø  1854 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி
 
Ø  1856 ~ உப ஜனாதிபதி தேர்தல் தோல்வி
 
Ø  1858 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி
 
Ø  1860 ~ ஜனாதிபதி தேர்தல் வெற்றி     
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 16: உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு..

 

April 16, 2015 : ‪#‎CharlieChaplin‬ 's 126th Birthda

 

 

11152345_935353436498549_740181608905984

துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .

மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !

ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .

பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது . அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன

வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். ""நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது" என்று சொன்னார் அவர்.

பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும், வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.

தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.

ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.

அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவரை மீண்டும் தன் மண்ணுக்குள் அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,"அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு தன்மை உள்ளவர் ""என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது. சாப்ளின் ,"நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !"என்றார். பின் ஏசுவே ஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர்

தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.

அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.

தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10360389_10203979171500740_5016795904202

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10653693_10153150599393957_7205944871072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

naddu_pattralar.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

277727.gif

April 18, 2015 : Albert Einstein 60th Death Anniversary

 

 

  10154227_774876865858964_373242149774807

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10413303_677743859009667_228250763676753

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10484620_1570864843159847_40561290935426

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழும் -இதழும்

 

1908106_1566540563592275_660175200218258

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11013014_363963820460750_467149219051610

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும்

தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1629_687185491320670_158195513199959371_

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

HOUSTON-  ரெக்சசில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பெண் ஒருவர் ஐந்து பெண் குழந்தைகளை பிரசவித்ததாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிறந்த முதலாவது பெண் ஐம்பிறவிகள் இவர்களென தெரிவிக்கப் பட்டது.

Danielle Busby  என்ற இப்பெண் அறுவைச் சிகிச்கை மூலம் இக்குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவரது கணவர் அடம் மற்றும் மூத்த மகள் பிளேய்க் இருவரும் ஒலிவியா மாரி, அவா லேன், ஹேசல் கிறேஸ், பாக்கர் கேற் மற்றும் றிலி பேஜ்ஸ் ஆகிய ஐவரையும் இந்த உலகத்திற்கு வரவேற்றனர்.

இவர்கள் பிரசவ காலத்திற்கு முன்பாக 28-வாரங்களில் ஒரு டசினிற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் உதவியுடன் பிறந்துள்ளனர்.

அமெரிக்காவின் முதலாவது பெண் ஐம்பிறவிகள் இவர்கள் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

set.jpg

set2-600x450.jpg

set1-600x289.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள் ....

 

11138634_963542553686519_287559963458588

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.