Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 min · 
 
 
 
 

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்".....

ஜூலை 18: 'ஆப்ரிக்க காந்தி’எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா பிறந்த தின சிறப்பு பகிர்வு

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது, ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை..
==================================================

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்

 
Mahesh Meenaa's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி எத்தனை மணிநேரம் பேசினாலும் எடுத்தியம்ப இயலாது
அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல்மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்சியாளராக, நாடகத்தமிழ் நல்லாசிரியராக நமது தாயக மண்ணிலே நற்பணிபுரிந்தவர்.
தமிழுக்காக, தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் இனத்திற்காக, இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.
சைவத்தின் காவலர்கள் என்று எழுந்தவர்கள், சாதித்துவத்தின் காவலர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை விதைத்தார்கள். மனித குலத்தின் மடமைத்தனத்தின் உச்சநிலையான வருணப் பாகுபாடுகளை வளர்த்தார்கள். ஆனால் சுவாமி விபுலானந்த அடிகளோ, மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார். சாதிப் பிரிவுகளை நீக்க உழைத்தார். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று தீயவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.
உலகத்திலேயே முதல் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பதவி வகித்திருந்த சுவாமி அவர்கள் தமது பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும்கூட அடிமட்டத் தமிழ் மக்களுக்கு கல்வியறிவூட்டுவதில் அக்கறையோடு முனைந்தார்.
தமிழ்நாட்டு மக்களிடையே கல்விமறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தன்னிகரற்ற பணிகளை ஆற்றிய சுவாமி அவர்கள். ஈழத்திலும் ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனானார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்காக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் சுவாமி அவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராகப் பணிபுரிந்தோர் அவரதுகாலத்திற்கு முன்னர் என்றாலும் சரி, அவருக்குப் பின்னர் இன்றுவரை என்றாலும் சரி யாருமே பிறந்ததுமில்லை, உயர்ந்தவராய்த் திகழ்ந்ததுமில்லை, பணியிலே சிறந்ததுமில்லை.
தமிழர்களுக்குக் கல்வியுட்டுவதிலே தளராத அவரது முயற்சியினால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். பேராசிரியர்களாக, பண்டிதமணிகளாக, புலவர்மணிகளாக உருவாகினார்கள். வாழையடி வாழையாகத் தமிழ் வளர்ச்சியின் எருவாகினார்கள். அதனால் சுவாமியவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மொழி வளர்ச்சியின் கருவாகினார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கான பாடத்திட்டத்தினைத் தயாரித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே. அதன்மூலம் சீரியவழியில் தமிழ் ஆராய்ச்சிக்கல்வி வளர்வதற்கும், தமிழ் ஆராய்ச்சிக் கலை தொடர்வதற்கும், தமிழ்மொழியின் நிலை உயர்வதற்கும் காலாக அமைந்தவர் சுவாமிகளே.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே.
கணிதம், வரலாறு, பொதிகவியல், தாவரவியல், விலங்கியல், இராசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத் தலைவராகவும், இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க்கலைச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் அகராதி 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்தவகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பக்காற்றிக்கொண்டிருக்கின்றது.
சுவாமி அவர்கள், இந்தியாவில் இராமகிரு~;ண மடத்தால் வெளியிடப்பட்ட வேதாந்த கேசரி என்றும் ஆங்கிலப் பத்திரிகைக்கும், இராமகிரு~;ண விஜயம் என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரால் அவ்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கங்களும் சமய உண்மைகளை விளக்குவனவாக மட்டுமன்றித் தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு என்பவற்றைப் பரப்புவனவாகவும் அமைந்திருந்தன.
தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப்பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். பாரதியாரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துவிட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில், தொட்டிகளில்கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும், பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.
பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.
படித்தவர்கள், விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள், அவருக்குப் பதவி அளித்தவர்கள்
எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?
விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல, தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டுசென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.
சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற, கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும், இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன.
வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் புவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
என்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கின்ற யாழ்நூல் விபுலானந்த அடிகளாரின் இசைத் தமிழ்ப் பணியினை இசைத்துக் கொண்டிருக்கின்றது. வழக்கொழிந்து போன பண்டைத்தமிழ் இசைநூல் இலக்கணத்தை யாழ்நூல் வகுத்துரைக்கின்றது. நூற்று மூன்று வகையான பண்களைப் பகுத்துரைக்கின்றது. மறைந்துகிடந்த தமிழிசை மரபுகளை எடுத்துரைக்கின்றது.
1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தினால் யாழ்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
யாழ்நூல் அரங்கேற்றம் நடைபெற்றதன்பின்னர் நாற்பத்து ஐந்து நாட்களே அடிகளார் இவ்வுலகில் வாழ்ந்தார்கள். 1947 ஆம் ஆண்டு
பதினான்கு ஆண்டுகள் அடிகளார் அவர்கள் அயராது செய்த ஆராய்ச்சியின் பலனாக தமிழ் இசையின் தொன்மையைத் தமிழ் உலகம் அறிந்துகொண்டது. தமிழ் இசையின் அருமையைத் தமிழிசை உலகம் புரிந்துகொண்டது. தமிழ் இசையின் பெருமையை எல்லா உலகமும் தெரிந்துகொண்டது.
அவருக்குப்பின்னர் தமிழ் இசைபற்றி ஆராய்கின்ற அறிஞர்களுக்கு யாழ்நூலே ஆதாரமாய் அமைந்தது.
மதங்கசூளாமணி நாடகத்தமிழுக்கு அடிகளார் வழங்கிய நல்லதொரு நூல்
N~க்ஸ்பியருக்கு அடிகளார் வைத்த பெயரே மதங்கசூளாமணி என்பதாகும்.
N~க்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களைத் தெரிந்தெடுத்து அவற்றின் சிறப்புக்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். அந்த ஆங்கில நாடகங்களில் சுவைமிகுந்த உரையாடல் பகுதிகளை சுவைகுன்றாமல் செய்யுள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாடக இலக்கணங்கள் பற்றி நயம்பட எடுத்துரைத்துள்ளார். கூத்துக்களின் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியலோடு கூத்துக்கள் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் கூறியுள்ளார். தமிழ்நூல்கள் தருகின்ற தகவல்களையும், இசைநாடக இயல்புகளையும் கருத்துரை செய்துள்ளார்.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் 13 ஆம் திகதிகளில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 23 ஆவது வருடாந்த விழா.
அடிகளார் அவர்கள் முதல்நாள் “தமிழ் அபிவிருத்தி” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் நாள் கலாநிதி உ.வே. சாமிநாதையர் தலைமையில் “N~க்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையின் விரிவே மதங்கசூளாமணி என்ற நூலாகும். அது மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இவ்வாறு, அண்ணாமலைப்பல்களைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக,
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளின் பங்காளராக,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவத்திற்குரியவராக,
மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் பெரிதும் மதிக்கப்பட்ட அறிஞராக
அடிகளார் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன.
அடிகளார் அவர்கள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப்பாடசாலைகளை அமைத்தார். வறிய மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தார். அதன்மூலம் தமிழையும் வளர்த்தார், தமிழ் மக்களின் கல்வியையும் வளர்த்தார்.
லண்டன் விஞ்ஞானப் பட்டதாரியான சுவாமி அவர்கள் இலங்கையின் முதலாவது தமிழ்ப்பண்டிதர் என்ற பெருமைக்குரியவர். கொழும்பு அரசினர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் புனித பத்தரிசியார் கல்லூரியிலும் பௌதிகவியல் ஆசிரியராகப் பணி புரிந்த அடிகளார், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராக மட்டற்ற பணியாற்றியவர்.
இன்று கொழும்பு மாநகரிலே சிறந்து விளங்குகின்ற விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், காரைதீவு சாரதா வித்தியாலயம் ஆகியவற்றை ஆரம்பித்தவர் சுவாமியவர்களே. அவை மட்டுமா? யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்;வரா வித்தியாலயம் விவேகானந்தா வித்தியாலயம், ஆகியவற்றை பொறுப்பேற்று நடாத்தியதுடன் வண்ணார் பண்ணையில் அநாதைச்சிறுவர் இல்லத்தினை அப்போதே ஆரம்பித்து வைத்தவர் விபுலானந்த அடிகளே.
ஈழமுதற்பனி இமயம் வரைக்கொடி கட்டும் இசைத்தமிழன்
இந்திய வாணியை ஆங்கிலபீடத் தேற்றிய புதுமையினோன்
தோழமை கொள்வட மொழிமயமாகிய தொன்மை யிசைத்தமிழைத்
தூயதனித்தமிழ் வடிவிற் தோற்றிய தந்தையெனுந் துணையான்
சூழமுதத் தமிழ் வாணர் மதிக்கொரு சோதிச் செஞ்சுடரோன்
சுவாமிசிவானந் தக்கடலாகிய படிமைத் தோற்றத்தோன்
என்று பாடினார் விபுலானந்த அடிகளாரின் மாணவர்களில் ஒருவரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்.
முத்தமிழையும் வளர்த்தவர், முழுத் தமிழ் இனத்திற்காகவும் உழைத்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்கள். அவருக்கு நிகராக அவருக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி இதுவரை யாரும் யாரும் இலங்கையில் தோன்றியவர் இல்லை என்றால் அதற்கு நியாயமான எதிர்வாதம் இருக்கமுடியாது.
வாழ்க விபுலானந்த அடிகளின் புகழ்.

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன்

மாவீரன் என்ற வார்த்தையை சொன்ன மாத்திரத்தில் பலர் நினைவுக்கும் வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய மாவீரர்களில் நெப்போலியனும் ஒருவர். உலகையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த அந்த மாவீரனின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே இன்னமும் இருக்கிறது.
ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி நெப்போலியன் எப்படி இறந்தார் என்பதுதான். இப்படி கேள்வி கேட்பதற்கு காரணமும் இருக்கிறது.
மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தை குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச்சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த ஒரு வீரன் தானாகவே நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றால் நம்பமுடியவில்லை என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள்.
நெப்போலியன் கடைசியாக இருந்த தனிமைச் சிறையில் என்ன நடந்தது என்பதை அறிய யாருக்கும் எந்த ஆவணமும் அப்போது கிடைக்கவில்லை.
கி.பி.1816 முதல் 1821-ம் ஆண்டு வரை அதாவது அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்கு கிடைத்தன. ஆய்வின் முடிவில் அந்த முடிகளில் ஆர்கானிக் அமிலம் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமான ஒரு மனிதனின் முடியில் ஆர்கானிக் அளவு சோதனையில் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு இருப்பதில்லை. அதனால் நெப்போலியனின் மரணத்துக்கு காரணம் விஷமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்தார்கள்.
விஷம் கலந்த காற்றை சுவாசித்ததால், நெப்போலியன் மரணம் அடைந்ததாக லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார். பின் நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறையை ஆய்வு செய்ததில் மேலும் இரண்டு ஆதாரங்கள் கிடைத்தன.
ஒன்று அங்கிருந்த ஓவியம். இரண்டு அந்த அறையின் சுவரை அலங்கரித்த வால்பேப்பர்கள். இவை இரண்டிலும் மெல்லக் கொல்லும் விஷம் பூசப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாக பயன்படுத்தி இருந்தனர்.
அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால் விஷம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசித்து சுவாசித்து இறந்து விட்டார் என்று ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
வால் பேப்பரை ஓட்டும் பசையில் விஷத்தை கலந்திருந்ததால், பசி தாங்க முடியாத நெப்போலியன் அந்த வால் பேப்பரை கிழித்து தின்றதால் இறந்தார் என்று ஒரு தரப்பும் அறிவித்தது. இன்னும் முழுமையான தீர்வுக்கு வர முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் சரித்திரத்தை புரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Konjam murukkum.konjam kuchipalakaram(achupalkaram)eruku enthanka sandai podamal yella rum sapidungo.

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை பீதியடையச் செய்த போக்கிமொன் கோ கேம்?

 Jul 19, 2016  Mahesh  அறிவியல்  0


16-1468653790-05வெளியான சில நாட்களில் உலகம் முழுக்க அதிரடி ஹிட்டடித்த போக்கிமோன் கோ, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நாடுகளிலும் அதிகம் விளையாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர்களில் பலர் கோவில் உட்படப் பல்வேறு இடங்களில் போக்கிமான் வேட்டையில் ஈடுபட்டு வருவதை அவர்கள் பதிவு செய்யும் ட்வீட் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. உலகம் முழுக்கப் பிரபலமாகி வரும் போக்கிமான் கோ அதிகாரப்பூர்வமாகச் சீனாவில் இன்னும் வெளியிடப்படவில்லை. வெளியாகாத போக்கிமான் கோ கேம் குறித்துச் சீனா பயம் கொள்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண ஆண்ட்ராய்டு கேம் குறித்துச் சீனா ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?

போக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டு கேம் விளையாட்டில் பயனர்கள் நிஜ வாழ்க்கையில் நடந்து சென்று ஸ்மார்ட்போன் திரையில் தெரியும் விர்ச்சுவல் கார்டூன் கதாப்பாத்திரங்களைக் கண்டறிய வேண்டும்.

அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடுவதால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் கார் விபத்துகளும் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மெரிக்க அதிகார சபை உறுப்பினர் ஒருவர் போக்கிமான் கோ ஆப் டெவலப்பர்களை விளையாட்டின் தரவு தனியுரிமை பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கக் கோரியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைன் கேமிங் சந்தையாக விளங்கும் சீனாவில் போக்கிமான் கோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இருந்தும் இந்தக் கேம் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சதி திட்டமாக இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ரகசிய ராணுவ தளங்களை அறிந்து கொள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் விரித்திருக்கும் வலை தான் போக்கிமான் கோ, யாரும் இந்தக் கேமினை விளையாடாதீர்கள் எனச் சீன சமூகவலைத்தளம் வெய்போவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நின்டென்டோ கோ லிமிடெட் நிறுவனம் போக்கிமான் உரிமையை வைத்திருக்கின்றது. மேலும் அமெரிக்காவின் கூகுள் இணைந்து சீனாவின் ரகசிய ராணுவ தளங்களை அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது என இது குறித்து வெளியான சதியாலோசனை கோட்பாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கேம் கூகுள் மேப்ஸ் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றது.

16-1468653783-01

தேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டிய போக்கிமான் கதாப்பாத்திரங்களை நின்டென்டோ மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும், மக்கள் செல்ல அனுமதி இல்லாத ராணுவ தளங்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில், தவிர்க்க முடியாத காலங்களில் போர் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா சீனாவை எளிதாகத் தாக்கி அழிக்க இந்தக் கேம் வழி செய்யலாம் என வெய்போ தளத்தில் வெளிவரும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கேமினை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை, இதனால் இது குறித்து வெளியான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனச் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லீ கங் தெரிவித்துள்ளார்.

போக்கிமான் கோ சீனாவில் வெளியிடப்படுவது குறித்து நின்டென்டோ நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழால் இணைவோம்'s photo.

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

-Thanjai Raju Vedachalam

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அழகோவியம்'s photo.
 

சிவாஜி பற்றி சில துளிகள்

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது 
ஆனால் அது எல்லா மனிதர்களாலும்
புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதே கவலையாக இருக்கிறது

நல்ல படைப்பாளன் புறமானது கொண்டுமட்டும் கவிதை எழுதுவதில்லை: அக மனதின் பல்வேறு அடுக்குகளில் அவன் சஞ்சரிக்கின்றான்

மனித குலம் பயன்படுத்தித் தேய்த்த பழைய வார்த்தைகள் அவனுக்கு போதுமானதாய் இல்லை

ஆகவே அவன் தன் கைக்கு சிக்கிய கறுப்பு வெள்ளை வார்த்தைகளுக்கு வர்ணமடிக்கிறான்

நிறம் குழைந்த வார்த்தைகளால் மொழிக்கு வண்ணம் கூட்டுகிறான்

படைத்தவனைவிடவும் படைப்பு மேம்பட்டது
பிறப்பு இறப்பு இரண்டும் படைத்தவனின் பௌதீக உடலுக்கு

பிறப்பு மட்டுமே உண்டு நல்ல படைப்புக்கு

இளமை முதுமை என்ற ரசாயன மாற்றங்கள் உண்டு படைத்தவனுக்கு

இளமை மட்டுமே உண்டு நல்ல படைப்புக்கு

******கவிஞர் வைரமுத்துவின் நூலிருந்து****+++++

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கனவுகள்
வினோதமானவை
கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்
வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்
வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்


****கவிஞர்..வைரமுத்து*******

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகை உலுக்கிய 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று

33 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும் தமிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத்தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன் வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009 இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் மீண்டும் மீண்டும் தவறுகின்றது.

 
Jeya Jey's photo.
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத நேரடியாக உணர்ந்த தமிழர்களுக்கெதிரான படுகொலையை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுணர்வுகள் என்பது தானாகத் தோன்றுவது. அதை உருவாக்க முடியாது.
கபாலியில் களிப்பவர்களிடம் கறுப்பு ஜுலை பற்றிப் பேச முடியாது.

 
Alvit Vasantharany Vincent's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


பாட்டுக்குப் பாட்டு:

ரண்டு நாள் முன்னே காலை நேரம் வீட்டுக்குள் பிஸியாக நான் இருந்த நேரம். ஆரம்பித்தது பாருங்க ஒரு பாட்டுக்குப் பாட்டு. தொடர்ந்து பத்து நிமிடமாய் மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டேயிருந்தன இரண்டு மைனாக்கள். மெதுவாக காமிராவுடன் நான் அருகில் செல்லவும் ஒன்று விர்ரெனப் பறந்து விட்டது.

ற்றதோ ‘அட, ஒண்ணும் செஞ்சுட மாட்டாங்க. என்னைப் பாரு எப்படி பயப்படாம நிற்கிறேன்’ என்றது.

6. தோரணை

Mina-a1_a.jpg


பிறகு ‘பாடவா என் பாடலை..’ என ஓரிரு நிமிடங்கள் எனக்காகத் தொடர்ந்து பாடியது:

7. தனி ஆவர்த்தனம்

minaa-3.jpg

மீண்டும் திரும்பித் துணையைக் கூப்பிட்டது சேர்ந்து பாட வருமாறு:

8. வா வா அன்பே அன்பே..

Mina-b1.jpg

து அடுத்த கட்டிடத்தில் அமர்ந்தபடி ‘ஊஹூம்’னு சொல்ல இது என்னைப் பார்த்து..,

9. ‘வரட்டுமா..’

Mina-c.JPG
அது சரியான பயந்தாங்குளி. ரொம்ப வெட்கமும். கண்டுக்காதீங்க’ என்று சொல்லிவிட்டு சிறகை விரித்துப் பறந்து போய்விட்டது:)!

[ஆனந்த ராகத்தை என் ஃப்ளிக்கர் தளத்தில் ரசித்தவர்கள்].

எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.
***

 

படித்ததிலிருந்து...............................................................

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Loganathan Kanapathipillai's photo.
Loganathan Kanapathipillai with 

 

 

ஜூலை 26 – சர்வதேச சதுப்பு நிலக் காடுகள் தினம்

கடற்கரையோரங்களிலும் ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரங்களிலும், உப்பங்கழிகளை அடுத்துள்ள சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடிய ஒருவகைத் தாவரக் கூட்டங்களே சதுப்பு நிலக் காடுகள்│கண்டல் காடுகள் (Mangroves) என்றழைக்கப்படுகின்றன. 

கண்டல் காடுகள் வெப்பமும் மழையும் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. கரையோர கண்டல் காடுகள், மழைக்காடுகளுக்கு சமமானவையாகும். இவை தாவரங்கள், மற்றும் உயிரின பல்வகைகளின் வாழிடமாக விளங்குவதுடன் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிபுரிகின்றன. அத்துடன் மண்ணரிப்பு, புயல், சுனாமி போன்ற இயற்கையழிவு சேதங்களிலிருந்து கரையோரங்களை பாதுகாக்கின்ற தடுப்பரண்களாகவும் கண்டல் காடுகள் விளங்குகின்றன.

கண்டல் காடுகளுக்கு பிரதான அச்சுறுத்தலாக இறால் பண்ணைகள் விளங்குகின்றன. உலகில், கடந்த 20 ஆண்டுகளில் 35% ஆன கண்டல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கரையோரங்களை அண்மித்த கண்டல் காடுகள் அழிக்கப்பட்டு வர்த்தக நோக்கிலான இறால் குழிகள் அமைப்படுகின்றன. குறிப்பாக பிரேசில், கொலம்பியா, ஈக்குவடோர், ஹொண்டூராஸ், கெளதமாலா, மெஸிக்கோ, பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியன்மார், கென்யா, நைஜீரியா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கின்றன.

கரையோர சுற்றுச் சூழலுக்கு பாரியளவில் நன்மை வகிக்கின்ற கண்டல் காடுகளைப் பாதுகாக்க வேண்டியது எம் எல்லோரினதும் தலையாய கடமையாகும்.

(படம் – யாழ்ப்பாணக் கரையோர கண்டல் காடுகள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் என்பது பிரியாமல் இருக்கும் உறவை மேலும் பிரியத்தோடு பிரியாமல் இருக்கவைக்கும் இயந்திரம் ஆகும்....

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆனால்'

"ஆனால்' என்ற வெறுக்கத்தக்க சொல் வந்துவிட்டால் முன்னால் சொன்னதெல்லாம் வீணாகிவிடும்; இல்லை என்று மறுப்பதோ, அவமானப்படுத்துவதோ மேலாகும்.

ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு பின்னர் "ஆனால்' என்று கூறத் தொடங்கினால் அந்தப் புகழ்ச்சியைப் போல் இழிவானதும், வெறுக்கத் தக்கதும் வேறில்லை.
-பீச்சர்.

""ஆனால்' என்ற வார்த்தை இரக்கத்தின் துடிப்புக்களை நிறுத்திவிடும்; அன்பு ததும்பும் சிந்தனைகளை அடைத்துவிடும். சகோதரப் பான்மையுடன் செய்யும் வேலைகளை அடியோடு நசுக்கிவிடும்.
- டேனியல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை செய்திகள்

பிரான்சில் தீவிரவாத தாக்குதல்: யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு

9d701c1ccedd118f34a0189ab6c8b02e?s=50&d=
Posted on July 27, 2016
FotorCreated
 
644SHARES
 
 
 
 
 
 
 
 
 

பிரான்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

 

 
இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,
பிரான்சில் கடந்தவாரம் பாரா ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில் அகப்பட்ட குறித்த யாழ் வாசி தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மூளை செயல் இழந்து மரணமடைந்துள்ளதாக உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக 25 ஆண்டுகளிற்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில் வாழ்ந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மூளை செயல்இழந்தபோதிலும் உடம்பின் பல பாகங்கள் நேற்று முன்தினம் செயல்பட்ட நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்த்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் முன்பு இடம்பெற்ற ஓர் அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தாயார் , மற்றும் உடன் பிறந்த உறவுகள் என்பன யாழில் வசிக்கின்றனர்.

http://sangamamfm.com/archives/27991

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

????ஜூலை - 28

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

(World Nature Conservation Day)

????�உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது???

????????????????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” - அக்னிச் சிறகுகள் நூலின் முடிவு.kalam

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு படநிறுவனம் பாட்டு எழுதித் தர வேண்டியது. அவரும் அன்புடன் இசைந்திருந்தார். 1973-ம் ஆண்டு மே திங்கள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால் தவறாது முன்கூட்டியே எழுதித் தர வற்புறுத்தவே, கவியரசு சரியென்று சொன்னார்.. என்றாலும் வழக்கம் போல மறந்துவிட்டார்.. பட நிறுவனத்தாரோ பயணம் கிளம்பும் முன் ஒருமுறை மே மாதம் என்று நினைவூட்டி புறப்பட்டனர்.. பலனில்லாமல் போகவே, போய் இறங்கிய பின்பு மணிக்கொரு முறை மே மாதம்... மே மாதம் என்று நச்சரித்தனர்..

எரிச்சல் தாளாத கவிஞர் எழுதினார்...

"அன்பு நடமாடும் கலைக்கூடமே... ஆசை மழை மேகமே.. "
அவன்தான் மனிதன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பிரபலப் பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...!

- ப.பி.

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே 

மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே... ஏ...
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே 

வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே

இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே

காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே

அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச புலிகள் தினம் July 29 : World Tiger Day.

உலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன. கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன.
வங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும். அதன் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது.
சீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.
உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.
புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன.
உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன.
இருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நட்பென்றால் நாம் என்போம்

 
Sahana Sahana's photo.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.