Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அதிகம் பேசப்படும் மனிதராக டிரம்ப்.....கூடவே...500 & 1000....மோடியும்....

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் 96 ஆவது பக்கத்தை திருப்பி விட்டு போய் இருக்கீனம்....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து எதிர்பார்ப்புக்களையும் கணிப்புக்களையும் மீறி, வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அதற்கான முக்கிய காரணங்கள்:
விளம்பரம்

டிரம்பின் வெள்ளை அலை

வெள்ளை அலை

முடிவுகள் தலைகீழாக மாறின. ஒஹியோ, ஃபுளோரிடா, வட கரோலினா ஆகிய அனைத்தும் டிரம்புக்கு ஆதரவாக மாறின. அதுதான், ஹிலரி கிளிண்டனின் பாதுகாப்பு அரணைத் தகர்த்தெறிந்தது.
மத்திய மேற்கு பிராந்தியம் ஹிலரிக்கு பெருமளவில் கை கொடுக்கும் என்று நம்பினார்கள். பல பதிற்றாண்டுகளாக அந்தப் பிராந்தியம், ஜனநாயக் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன. கறுப்பினத்தவர் மற்றும் வெள்ளையின உழைக்கும் வர்க்கம் அவர்கள் பக்கம் இருந்தது.

அந்த வெள்ளையின உழைக்கும் வர்க்கம், குறிப்பாக கல்லூரிப் படிப்பு இல்லாத ஆண்களும் பெண்களும், இந்த முறை ஜனநாயகக் கட்சியைக் கைவிட்டார்கள். கிராம மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்தார்கள். கடலோரப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள். இப்போது தங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
விர்ஜினியா, கொலராடோ மாகாணங்கள் விரைவில் விழந்த நிலையில், விஸ்கான்சினும் டிரம்புக்கு ஆதரவாக வீழ்ந்தபோது, ஹிலரியின் நம்பிக்கை தகர்ந்தது.

டிரம்ப் அலை மிக வேகமாக தாக்கியிருக்கிறது.

அதிர்வுகளால் அசையாத டிரம்ப்
வெற்றியின் பக்கம்
பலரை அவமானப்படுத்தியதாக, ஊடகங்களை பகைத்துக் கொண்டதாக விமர்சிக்கப்பட்டார். பெண்களிடம் பாலியல் ரீதியாக ஈர்க்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி பல குற்றச்சாட்டுக்கள் டிரம்பை கடுமையாகவும், வேகமாகவும் தாக்கின. ஆனால், உறுதியான குணம் கொண்ட டிரம்ப் அதனால் அதிர்ந்துபோய்விடவில்லை. குண்டுதுளைக்காத ஆடை அணிந்தவரைப் போல, அந்தத் தாக்குதல்களும் அவர் மீது பட்டுத் தெறித்துவிட்டன.

அன்னியர்

தீவிர பிரசாரம்

தீவிர பிரசாரம்

ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராகப் போராடினார். தனது கட்சியில் உள்ள செல்வாக்கு மிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராடினார். எல்லோரையும் வென்றுவிட்டார்.
அவரது அந்த போராட்ட குணமே, டிரம்புக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் பூர்வாங்க சுற்றில் மோதிய பெர்னி சேன்டர்ஸ், டெட் க்ரூஸ் உள்ளிட்ட தேசிய அரசியல்வாதிகள் வாக்காளர்களின் மனநிலையை ஓரளவு அறிந்திருந்தார்கள். ஆனால், டிரம்பை போல யாரும் முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை.

ஹிலரிக்கு வந்த மின்னஞ்சல் சோதனை

ஜேம்ஸ் கோமி

ஜேம்ஸ் கோமி

ஹிலரி கிளிண்டன், தனியார் சர்வர்கள் மூலமாக, தனது மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, எப்.பி.ஜ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்துவதா, இல்லையா என்ற குழப்பமும் இதில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் துவக்கப் போவதாக எப்.பி.ஐ யக்குநர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார்.
அப்போதிருந்து டிரம்ப் தனது பிடியை இறுக்கத் துவங்கினார். அவரது பிரசார வேகம், எடுத்து வைத்த கருத்துக்கள் அதிக ஆதரவாளர்களை அவரது பக்கம் கொண்டு வந்தது.

அடுத்த இரு வாரங்களில், எப்.பி.ஐ நிலையை மாற்றிக் கொண்டது. ஹிலரிக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதில்லை என ஜேம்ஸ் கோமி அறிவித்தார்.
ஹிலரி, தனது அதிகாரப்பூர்வ பணிகளுக்கான மின்னஞ்சல்களுக்கு அரசாங்க சர்வர்களைப் பயன்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கல் எழுந்திருக்காது. அந்த சுமை அவரது தோள்களை விட்டு இறங்கவில்லை.

உள்ளுணர்வை நம்பினார்

வெற்றிக் களிப்பில்

வெற்றிக் களிப்பில்

அரசியல் மரபுகளுக்கு மாறான பிரசார யுத்திகளை மேற்கொண்டார் டிரம்ப். ஆனால் அதன் நுணுக்கங்களை, நிபுணர்களைவிட கூடுதலாகவே தெரிந்து வைத்திருந்தார்.
நெருங்கவே முடியாது என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்ட விஸ்கான்சின், மிச்சிகன் போன்ற மாகாணங்களில் மாபெரும் பேரணிகளை நடத்தினார் டிரம்ப். ஆனாலும், ஹிலரியின் பிரசாரத்துடன் ஒப்பிடுகையில் டிரம்பின் பிரசாரம் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பரிகாசிக்கப்பட்டது. ஆனால், சூட்சமத்தை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார் டிரம்ப்.

கடைசியில் வெற்றி முரசைக் கொட்டியிருக்கிரார் டிரம்ப்.
டிரம்பின் நெருங்கிய வட்டம், குழந்தைகள் மற்றும் ஆலோசகர்கள், இனி வெள்ளை மாளிகையில் இருந்து, அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, உலக அளவில் யுத்திகளை வகுக்கப் போகிறார்கள்.

http://www.bbc.com/tamil/global-37922427

Image may contain: sky, cloud and one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இன்று..Nove 9 

1960: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 43 வயதான ஜோன் எவ். கென்னடி வெற்றி பெற்று, அமெரிக்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட மிக இளம் ஜனாதிபதியானார் -

See more at: http://tamilmirror.lk

Nove 9

1921 - ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்கள் பறிக்கப்படவும் உதிரவுமே பிறந்திருந்தபோதும் அவை அதற்காய் எந்த வருத்தங்களையும் எங்கும் பதிவு செய்வதே இல்லை இல்லையா.

எல்லாம் இயற்கையென்றாபின் பிறத்தலும் மரித்தலும் ஒன்றுதான். மகிழ்ச்சியோ துக்கமோ இரண்டையும் ஏற்பதுதான் நியதியும்கூட.

15042124_10207941013027589_8914928996615289212_o.jpg15039650_10207941014267620_475910717831920257_o.jpg14991124_10207941015627654_5553199186450429184_o.jpg15016235_10207941017987713_4727833374111243894_o.jpg

by.Iyyappa Madavan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
November 10 : World Science Day for Peace & Development
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது.

No automatic alt text available.

Remembrance Day(11.11.2016)

Image may contain: text
 
World War-I Ended 11.11.1918 @ 11 am·
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது. போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் "பிளாண்டர் புலத்தில்" எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.
கனடாவில் "லெஸ்ட் வீ போர்கெட்" (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது.

Lest we forget 
November 11

Image may contain: flower
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 11,1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது. 


யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 எரிக்கப்பட்டுச் சாம்பலானது.எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

வரலாறுஇந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

 

Image may contain: plant, tree and outdoor

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு....,:- அ.மயூரன்.

               76221_161640063874693_2075068_n.jpg?oh=6

 

                          இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.   அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

 

74153_161641390541227_1764140_n.jpg?oh=1

    முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.

 

 

   சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை இந்நாளில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர். 

 

      அந்தவகையில் நவம்பர் 11 திகதி அமுலுக்கு வந்த இந்த சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் Armistice day  எனவே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர். மாறாக ஜேர்மன் படைகள் ஹிட்லரின் தலைமையில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு 2 வது உலகயுத்தம் தொடங்கப்பட்டமையால் இந்த யுத்தநிறுத்த தினம் கைவிடப்பட்டது. இருந்தும் 2வது உலக மகாயுத்தம் முடிவடைந்த்தன் பின்னர் பிரித்தானிய அரசினால் இந்த யுத்தநிறுத்த தினமானது நினைவு தினமாக (Remembrance Day) ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டபோது அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டன. அன்றிலிருந்து இத்தினம் பொப்பி தினமாக நினைவுகூரப்படுகின்றது. 

 

148359_161643233874376_4539178_n.jpg?oh=

 

       மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக்க் கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் 35,527 வீர்ர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 35,527 அவுஸ்திரேலிய வீர்ர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் (Western Front)  புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவனது உடலே 35,527 வீர்ர்களின் நினைவுகளுக்கும் சாட்சி.இதேபோல 2007 ஆண்டு 1வது உலகப் போரில் கொல்லப்பட்ட ஜக்ஹண்டர் என்ற அவுஸ்திரேலிய வீரனின் உக்கிய எலும்புகள் மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெல்ஜியம் போர் மயாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பிரித்தானியாவும் 2007 இல் இறந்த வீரனை அடக்கம் செய்த்து நினைவிருக்கலாம்.   

 

 

     தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது.

76810_161641100541256_2644049_n.jpg?oh=f

 

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields  நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae   என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields  போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர். 

 

 

ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்

 

74566_161641223874577_960197_n.jpg?oh=a6

 

“Flanders Fields  போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் தங்கள் காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம் வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக் கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields  இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள். இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் இல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்”.   

 

                அற்புதமான உள்ளார்த்தம் நிறைந்த உயரிய கவிதை வரிகள் எம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் வீழ்ந்தவர்களுக்காக வருடாவருடம் விழா எடுப்பவர்களல்லவா நாங்கள். அழகிய சிவந்த இதழ்களைக் கொண்ட பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. மேலும் இந்தப் பொப்பி மலரானது ஆரம்ப கால் முதல் அபின் எனப்படும் கெரோயினுக்கு முக்கிய பொருளாக அமைகின்றதுடன். பொப்பியின் விதையானது கசாகசா எனப்படும் வாசனைத்திரவியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

       அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. ஆகவேதான் கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் மடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இந்த வீர்ர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்கள். என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதைக் காணலாம். மாறாக கடந்த சில ஆண்டுகளாக லண்டனுக்குள் வெளிநாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் லண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடிக்கப்படுகிறது.

 

 

     அத்தோடு போரில் இறந்த வீர்ர்களுக்கு பிரித்தானியாவில் தனித்தனிக் கல்லறைகள் எதையும் அமைக்கவில்லை மாறாக பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரித்தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீர்ர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்த்து உதாரணமாக பிரான்ஸில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், தனிக்கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தானிய 228 வீர்ர்களுக்குத் தனித்தனி கல்லறை அமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

75811_161641847207848_8299985_n.jpg?oh=1

 

         இந்தக்கல்லறைகளை இன்றும் திருகோணமலைக்கு வெளியே திருகோணமலையிலிருந்து நிலாவெளி செல்லும் வீதியில் கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் காணமுடிகின்றது. வேற்று நாட்டுப்படைகள் தம் நாட்டிற்குள் இறந்த்தற்காக கல்லறை அமைப்பதை அனுமதித்திருந்த இலங்கையரசு. தம்நாட்டில் அந்தநாட்டின் விடிவிற்காக வீழ்ந்த எம்புனிதர்களின் கல்லறைகளை அனுமதியாது களைந்திருக்கின்றது இது எந்தவகையில் சரியானது உறவுகளே.

73742_161642080541158_5974235_n.jpg?oh=2

          மேலும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் (postmouth ) என்னும் கடற்கரை நகரத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மியூசியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்து அந்த வீர்ர்களைக் கௌரவித்திருக்கின்றது பிரித்தானிய அரசு.

 

          இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம் இனி இதே கார்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.

 

       இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.   “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.

 

76475_161642403874459_5632766_n.jpg?oh=9

 

          “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்”  

 

என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.

 

“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்”  

என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.

 

 “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” 

 

என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.

 

          இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.  தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

 

      சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களின் 

 

’’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் 

கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’’ 

 

என்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயணம் காணப்படுகின்றது. இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்த்து. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.

 

76773_161648267207206_3156982_n.jpg?oh=9

 

     ஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ  இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது. இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.  

 

       அந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.

 

           வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள்  இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.    

 

       ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

 

       இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும்.

 

      ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதர்ர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோத்தர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா?.

 

 ஆகவே வீரமரணமடையும் மாவீர்ர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.

 

76669_161643083874391_7546152_n.jpg?oh=a

 

    அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

   பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது.

 

முள்ளிவாய்க்காலின் பின்னர். இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 35.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது. 

 

இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை. பௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது. 

 

நன்றி

அ.மயூரன்.

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்பின் அமெரிக்கா ஃபர்ஸ்ட் எனும் கொள்கை!டிரம்ப் என்ற மனிதர் யார்? அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரது தொழில் என்ன? அவரது குடும்பத்தினர் யார்? பல விடயங்கள் எல்லாம் இதுவரை தெரியாது தானே! இதோ டிரம்ப்பின் வாழ்க்கை கதையின் சில பக்கங்கள் ....பார்க்கலாம் டொனால்டு டிரம்ப் தனது வாழ்க்கை வெற்றிகளைப் போலவே சர்வ தேச அரசியல் அரங்கில் அமெரிக்க அதிபராகவும் பெருமைக்குரிய இடத்தை அடைவாரா? என்று!
டிரம்ப் அதிபரானதால் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் உலக அரங்கில் இன்னும் அதிக கவனம் பெறும் என்றும், இதனால் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் செல்வாக்கு சர்வ தேச இஸ்லாமிய செல்வந்தர்களிடையே அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ’ஐ.எஸ், அல் காய்தா ’உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஒரு பக்கம் இவர்கள் டிரம்ப் அதிபரானதை இப்படி எதிர்மறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்க மறுபக்கம் டிரம்ப் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் உயர் பதவியில் அமர்த்தப்படுவார்கள், டிரம்ப் எப்போதுமே திறமையானவர்களை பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பதில் சமர்த்தர். அவரது சிறந்த தேர்வுகளே தொழில் துறையில் அவரது அளப்பறிய வெற்றிகளுக்கு காரணம் என்றூ டிரம்ப்பை உச்சி முகர்ந்து பாராட்டித் தீர்க்கிறார்கள்.

இதுவரையிலான அமெரிக்க அதிபர்களில் ரொனால்ட் ரீகனுக்கு அடுத்தபடியாக டிரம்ப் அமைச்சரவையில் தான் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் பங்கு பெறவிருப்பதாக டிரம்பை வெற்றி பெறச் செய்த ரிபப்ளிகன் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ’ஹர்மீத் கெளர் தில்லான்’ அமெரிக்கச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தேர்தல் காலத்திலும் சரி, வெற்றி பெற்ற பின்பும் சரி டிரம்ப்பைச் சூழ்ந்துள்ள சர்ச்சைகளில் எதுவும் விலகவில்லை. ஹிலாரி டிரம்ப்பின் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளாகட்டும், அடிப்படை முஸ்லிம்கள் எழுப்பும் மத ரீதியிலான ஒடுக்குமுறை குற்றச்சாட்டுகளாகட்டும், இந்திய வம்சாவளியைச் சாராத பிற இந்தியர்கள் எழுப்பும் டிரம்ப் அதிபரானால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்து பூதாகரமாக வெடிக்கவிருக்கும் இமிக்ரேஷன் பிரச்சினகள் ஆகட்டும், எல்லாவிதமான குழப்பங்களும் இன்னனும் அப்படியே தான் நீடிக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறியடித்து அமெரிக்க வாழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். இனி பதவியேற்கப் போவதும் நிச்சயமாகி விட்டது.

பெற்றோர்:

அடிப்படையில் அமெரிக்காவின் வல்லமை வாய்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவரான டிரம்ப் அரசியல்வாதியாகிப் பின் அதிபரும் ஆனது ஒரு வேளை டிரம்ப் சுயசரிதை எழுதுவதாய் இருந்தால் அவரது வாழ்க்கை கதையில் நல்ல ட்விஸ்டாக இருக்கக் கூடும். ஜெர்மன் அப்பாவும், ஸ்காட்டிஷ் அம்மாவும் நியூயார்க்கில் சந்தித்து காதல் கொள்ள அந்தக் காதல் திருமணத்தில் முடிந்ததில் பிறந்தனர் ஐந்து குழந்தைகள், அதில் இரண்டாவது குழந்தை தான் உலக அரங்கில் தற்போதைய அமெரிக்க சூப்பர் ஹீரோவான டொனால்ட் டிரம்ப். டிரம்ப்புடன் பிறந்தவர்களில் இப்போது உயிருடனிருப்பது மூவர். டிரம்ப்பின் மூத்த சகோதரர் தீவிர குடிப்பழக்கத்தால் இளமையிலேயே இறந்து விட்டார். சகோதரரின் மரணம் தன்னையும் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கத்தை வெறுத்து ஒதுக்க வைத்து அதிலிருந்து விடுபடும் முயற்சியை வெற்றி பெறச் செய்தது என டிரம்ப் தன் நெருங்கிய சகாக்களிடம் அவ்வப்போது கூறுவாராம். 

இவரது தாய் வழி, தந்தை வழி தாத்தா, பாட்டிகள் அனைவரும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். தாயும், தந்தையும் தான் நியூயார்க்கில் தொழில் நிமித்தம் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். தந்தை வழியில் தனது ஜெர்மானிய குருதி உறவு முறை குறித்து டிரம் அடிக்கடி நண்பர்களிடம் பெருமையாகச் சிலாகிப்பதுண்டாம்.

பள்ளிக் காலத்தில் நடத்தைக் குறைபாடுடையவர் எனும் குற்றச்சாட்டு:

டிரம்ப் பிறந்தது நியூயார்க் சிட்டியின் அருகிலிருக்கும் ’ஜமைக்கா குயின்ஸ் எஸ்டேட்டில்’. இவர் பிறக்கும் போதே இவரது தகப்பனார் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் டிரம்ப்பிடம் இயல்பிலேயே நடத்தை மற்றும் பழகும் தன்மை சார்ந்த பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இதனால் ஜமைக்கா எஸ்டேட்டில் அவர் படித்துக் கொண்டிருந்த ’கெவ் ஃபாரஸ்ட்’ பள்ளியில் இருந்து 13 வயதில் நடத்தைக் குறைபாடு என்று குற்றப் சாட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார். அதன் பிறகு நியூயார்க் ராணுவப் பள்ளியில் தனது உயர்நிலைக் கல்வியை முடித்த டிரம்ப் 1981 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவருக்களித்த பேட்டியொன்றில் ’இள வயது டொனால்ட் டிரம்ப்’ கொஞ்சம் கடுமையானவனாகத் தான் இருந்தான் என ஒப்புக் கொண்டுள்ளார். 

கல்லூரிப் படிப்பு:
முதலில் ப்ரான்ஸ்கில் இருக்கும் ’ஃபோர்தம் பல்கலைக் கழகத்தில்’ 2 வருடம் கல்வி பயின்ற டிரம்ப் பின்பு அது தனக்கு உகந்த பயிற்சிக் கல்வி அல்ல என்று முடிவு செய்து அங்கிருந்து விலகி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ’வார்டன் ஸ்கூல் ஆஃப் ஃபினான்ஸ் அண்ட் காமர்ஸில்’ சேர்ந்து பொருளாதாரம் பயிலத் தொடங்கினார். வார்டன் ஸ்கூல் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பொருளாதாரக் கல்வி வழங்குவதில் தரமானதாக இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்று. ஒரு பக்கம் படித்துக் கொண்டே மறுபக்கம் தனது தந்தை வழிப்பாட்டியாரான எலிஸபெத்தின் ’எலிஸபெத் & சன்ஸ்” எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராகவும் இயங்கினார். படிப்பு முடிந்து கல்லூரியில் இருந்து வெளியேறியதும் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கவனித்துக் கொள்ளத் தொடங்கினார்.

தொழில்:
ஒரு கட்டத்தில் தந்தையிடம் இருந்து பிரிந்து தானே தனியாக களத்தில் இறங்குவது என முடிவெடுத்து டிரம்ப் தொடங்கியது தான் ‘தி டிரம்ப் ஆர்கனைஸேசன்’ ரியல் எஸ்டேட் நிறுவனம்.
தனியாக நிறுவனம் தொடங்கும் முன்பே டிரம்ப் செல்வாக்கு மிக்கவர் தான். எனினும் தனக்கென தனி அடையாளம் ஏற்படுத்திக் கொண்ட பின் டிரம்பின் வெற்றிகள் அசாத்தியமானவை. டிரம்பின் தொழில் கூட்டாளிகளும், நண்பர்களும் அவரை மிகச் சிறந்த ’நெகோஸியேட்டர்’ எனப் பாராட்டுகிறார்கள். அதாவது பேரம் பேசுவதில் சர்வ வல்லமை படைத்தவராம். தொழிலில் பேரம் படியச் செய்வது தானே வெற்றி என்று கருதப்படுகிறது. அவ்வகையில் டிரம்ப் தனது தொழிலில் பெரும் வெற்றியாளர்.

திருமணம்:
டிரம்ப் மூன்று முறை திருமணமானவர். முதல் இரண்டு திருமணங்களும் சில வருட தாம்பத்ய வாழ்க்கைக்குப் பின் கணிசமான குழந்தைச் செல்வங்களுடன் விவாகரத்தில் முடிந்தன. இப்போது டிரம்புடன் வாழ்வது அவரது மூன்றாவது மனைவி ’மெலானியா’. டிரம்புக்கு மூன்று மனைவிகள் வாயிலாக 5 குழந்தைகளும், 8 பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்து பதவியேற்கப் போகும் டொனால்டு டிரம்பின் வயது 70. இதுவரை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர்களிலேயே டிரம்ப் தான் மிகவும் வயதானவர் என்று கருதப் படுகிறார். முதல் மனைவியுடனான விவாகரத்துக்கு முன்பு சர்ச்சைக்குரிய காலங்களில் டிரம்பின் அதிகாரப்பூர்வ இரண்டாம் மனைவியாக அப்போது ஆகியிராத ’மேப்பிள்’ அளித்ததாகச் சொல்லப்படும் பேட்டியொன்றில் ‘டிரம்ப்பிடம் இருக்கும் அளவுக்கதிகமான செல்வமமும், பெண்களிடம் அவரது அணுகுமுறையும் தான் அதிகமான பெண்களை அவரை நோக்கி ஈர்ப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் மனைவி இவானா செக் குடியரசைச் சார்ந்த ஒரு மாடல், முதல் மனைவி வாயிலாக டிரம்ப்புக்கு டொனால்டு ஜூனியர், இவாங்கா, எரிக் என்று மூன்று வாரிசுகள் உண்டு. டிரம்ப்பின் முதல் திருமணத்தில் கலந்து கொண்டு டிரம்ப்பை பெருமைப்படுத்தியவர்களில் முக்கியமானவர் புகழ் பெற்ற அமெரிக்க மந்திரிகளில் ஒருவரான ’வின்சென்ட் பீலே’ . அந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது.

இரண்டாவதாக டிரம்ப், மேப்பிள்ஸ் எனும் மாடலை மணந்து ‘டிஃபானி’ எனும் மகளுக்குத் தந்தையானார். இந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
மூன்றாவதாகவும் டிரம்ப் ’மெலானியா’ என்ற மாடலைத் தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ’பாரன் வில்லியம் டிரம்ப்’ என்ற மகன் உண்டு. டிரம்ப்பின் திருமண வாழ்வில் மூன்று முறையும் அவர் மணந்தது மாடல்களைத் தான். மாடல்களை மணந்ததோடு மட்டுமல்ல அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் கேமியோ ரோல்களில் நடித்தும் தனது கலையார்வத்தை டிரம்ப் தணித்துக் கொள்வது வழக்கம் தானாம்!

அரசியல் கொள்கை:

மண வாழ்வில் டிரம்ப் அயல்நாட்டுக் கொள்கையைக் கடைபிடித்திருக்கலாம் , ஆனால் அரசியல் வாழ்வு என்று வரும் போது டிரம்ப் எப்போதுமே “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” எனும் கொள்கையைப் பின்பற்றுபவர். இவரது அதிகார எல்லையில் இனி அமெரிக்க அரசாங்கத்தில் ராணுவக் கட்டமைப்புக்காக, உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களுக்கு அதிகத் தொகை செலவிடப்படலாம். மேலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பிற நாட்டவர்களுக்கான குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப் படவும் வலுவான சாத்தியங்கள் உண்டு. அமெரிக்கா பிற அயல்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைக் காட்டிலும் தனது உள்கட்டமைப்பில் பொருளாதாரம், பாதுகாப்பு, அமெரிக்கர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட விசயங்களில் பலம் பெற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டவர் டிரம்ப். டிரம்ப்பின் அமெரிக்கா ஃபர்ஸ்ட் எனும் கொள்கை இந்திய வம்சாவளியினருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம் ஆனால் வேலை நிமித்தம் அமெரிக்கவாசியாகி இருக்கும் பிற இந்தியர்களுக்கு இது பாதகமான அம்சமாகவே பார்க்கப் படுகிறது.
CHILDREN மற்றும் 8 GRAND CHILDREN என வெற்றிகரமாக டிரம்ப் தனது வாரிசுப் பட்டாளங்களோடு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளப் போவதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் காணத் தானே போகிறோம். 

பார்க்கலாம் டொனால்டு டிரம்ப் தனது வாழ்க்கை வெற்றிகளைப் போலவே சர்வ தேச அரசியல் அரங்கில் அமெரிக்க அதிபராகவும் பெருமைக்குரிய இடத்தை அடைவாரா? என்று!

படித்ததிலிருந்து..........Thamilpiraba Thayalan's photo.Thamilpiraba Thayalan's photo.
படித்ததிலிருந்து.......

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு

 
g4.jpg
ஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில் ”படித்தல்”, ”வாசித்தல்” என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான  வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு  மிகவும் அவசியம்.  
 
படிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படி” என்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான்  ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது. ”ஒரு புத்தகத்தை இருவரால் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. அப்படி வாசித்து விட்டால் புதிய வரலாறே பிறக்கிறது” என்கிறார் ஜிப்ரில். இப்படியான மாறுப்பட்ட எழுச்சியை வாசகனுக்குள் கிளர்த்தக் கூடிய வலிமை இருப்பதாலயே படைப்பிலக்கியத்திற்குள் நுழையும் போதே ”படிப்பு” என்பது ”வாசிப்பு” என்ற நிலைக்கு வந்து விடுகிறது.  இந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் முகமாகவே படைப்பிலக்கியம் சாராத நாளிதழ் போன்றவைகளை வாசித்துக் கொண்டிருப்பவரைப் பார்க்கும் போது அனிச்சையாகவே பேப்பர் வாசிக்கிறீர்களா? எனக் கேட்காமால் பேப்பர் படிக்கிறீர்களா? எனக் கேட்கிறோம்.

 
படிப்பைப் போல வாசிப்பை வலிந்த மூர்க்கத்தனமான நிகழ்வின் வழி நிகழ்த்த முடியாது. அது தன்னிச்சையாக நிகழ வேண்டிய விசயம். இந்த இயல்பைக் கட்டுடைக்க எத்தனிக்கும் போது வாசிப்பின் மீது ஒருவித சலிப்பும், அயர்ச்சியுமே மிஞ்சும். புறக்கணித்து விட்டுப் பயணிக்கவே மனம் எத்தனிக்கும். இதன் காரணமாகவே வாசிப்பிற்குச் சூழலும், மனநிலையும் முக்கியம் என அறிவுறுத்துகின்றனர். ஒர் ஆரம்ப கட்ட வாசிப்பாளன் எத்தகைய நூல்களை தன் முதல் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளலாம் என ஆளுமைகள் ஆலோசனைகள் தருகின்றனர். 

 
மிகத் தீவிர, தேர்ந்த வாசிப்பனுவம் கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ”ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்” என்ற சொல்லை இன்று சர்வ சாதாரணமாகப் பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இப்படிச் சொல்லிக் கொள்வது  ஒரு பேஷனாகி (FASHION) வருகிறது. உண்மையில் இப்படியான வாசிப்போடு பகிரப்படும் கருத்துகளும், எழுதப்படும் விமர்சனங்களும் சம்பந்தப்பட்ட படைப்பை இன்னும் சிலருக்கு அறிய வைக்க வேண்டுமானால் உதவுமே ஒழிய படைப்பின் மீது ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்க ஒருநாளும் உதவாது. நுனிப்புல் மேய்ந்து செல்வதை வாசிப்பாகக் கொள்ளாமல் படைப்பை உள்வாங்கி அது தனக்குள் கிளர்த்தியதின் வழி ஏற்றும், முரண்பட்டும் நின்று அதன் பிறகு அந்தப் படைப்பு குறித்துப் பேசுபவனே நல்ல வாசிப்பாளனாகவும், அவன் மூலம் வரும் விமர்சனமே ஏற்கத்தக்கதாகவும் இருக்கும். இருக்க முடியும். அப்படியான வாசிப்பே நல்ல வாசிப்பனுபவத்தையும் அதன் ஊடாகப் புதிய தேடல்களையும் தரும். இவை எதையும் தராத ஒன்றைச் செய்து விட்டு வாசிப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இப்படி நினைப்பதும் முகநூலில் எழுதப்படும் தூள், சூப்பர், அற்புதம், அருமை, டக்கர் என்ற பின்னூட்டங்களும் ஏறக்குறைய ஒன்றே எனலாம்.

 
அச்சிடப்பட்ட எழுத்துக்களை அப்படியே மனதளவில் கடந்து செல்வதற்குப் பெயர் வாசிப்பல்ல. துரதிருஷ்டவசமாக அப்படிக் கடந்து போவதையே வாசிப்பு என நினைத்துக் கொண்டு அதையே செய்து கொண்டும் இருக்கின்றோம். அதனால் தான் அவ்வப்போது படைப்பிலக்கியங்களை வாசிக்கின்ற ஒருவனின் மனநிலையையும், பார்வைக் கோணங்களையும் நாள்தவறாது நாளிதழ்கள் வாசிக்கும் ஒருவனால் பெற முடிவதில்லை, வாசிப்பு நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. அப்படி இட்டுச் செல்வதன் வழி நம்மை உடைத்து மறுகட்டுமானம் செய்கிறது. அவநம்பிக்கையோடு  துவங்கும் நடையை நம்பிக்கையோடு கூடிய ஓட்டமாக மாற்றித் தருகிறது. அறுதியிட்ட கற்பனா சக்தியின் வழியாக இழந்த காலத்தை எதிர்காலத்தில் மீட்டெடுக்கச் செய்கிறது. இவையெல்லாம் வாசிப்பின் பலம். வாசிப்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதாலயே வாசிப்பு இயக்கங்களை அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன. 

 
எழுத்துக்களின் வழியாக பின்னப்பட்டிருக்கும் நாம் அறிந்த – அறிந்திராத உலகத்திற்குள், மாந்தர்களுக்குள், வாழ்வியலுக்குள் நம்மை நுழைத்துக் கொள்ளும் வாசலாக இருக்கும் வாசிப்பை படிப்பின் வழியாக ஒருநாளும் பெற முடியாது. உணர்ந்தும், கலந்தும், காட்சிப்படுத்தியும், முரண்பட்டும், சிலாகித்தும் பயணிக்க வேண்டிய ஒரு வாசிப்பனுபவத்தை எழுத்துக்களுடன் நிகழ்த்தும் வெறும் உரையாடல்கள் வழியாகப் பெற முடியாது. வாசிப்பை அத்தனை எளிதான விசயமாக நினைத்துக் கொண்டதன் விளைவு வாசிப்பவர்களை விட எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி விட்டதைப் போல எழுத்தை விடவும் அதிக உழைப்பைக் கோருவது வாசிப்பு என்ற எதார்த்த நிலையால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது. 

 
வாசிப்பின் வழியாக மட்டுமே படைப்பாளியாக உருவாக முடியும் என்பதாலயே இளம் மற்றும் ஆரம்ப காலப் படைப்பாளிகளுக்குத் தரப்படும் பல அறிவுரைகளில் அச்சரம் பிசகாமல் ”நிறைய வாசியுங்கள்” என்ற அறிவுரை நிச்சயம் இருக்கும். சமீபத்தில் புதிய எழுத்தாளர்களுக்கென நடந்த பயிலரங்கில் நாவல் என்ற படைப்பிலக்கியத்தை வாசிப்பின் வழியாக அணுகக் கூடிய முறை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினேன். ”வாசிப்பதற்கு என்ன வழிமுறை வேண்டியிருக்கு”? என்ற தொனியிலேயே பலரும் எதிர் கேள்வியைக் கேட்டனர். ”புத்தகத்தைப் பிரித்து வாசிக்க வேண்டியது தானே” என்பதாகவே அவர்களின் பதில்கள் இருந்தது. உண்மையில் இது ஆரோக்கியமற்ற வாசிப்பின் அறிகுறி எனலாம். வெறுமனே நிறைய வாசியுங்கள் என்று சொல்வதை விடவும் எப்படி வாசிப்பின் வழியாக ஒரு படைப்பை அணுக வேண்டும்? என்று சொல்லித் தருவது முக்கியம். வாசிப்பின் வழி நாம் எதை எல்லாம் கண்டடைய முடியும்? எதையெல்லாம் கண்டடையத் தவறுகிறோம்? என்பதைச் சுட்டிக்காட்டி அதை எப்படி கைக் கொள்ளலாம் என்பதைக் கற்றுத் தரும் வழிமுறைகளின்றி வெறுமனே வாசித்தால் போதுமென்பது சிறந்த வாசிப்பாளனாய் ஆக்கிக் கொள்ள ஒரு நாளும் உதவாது. 

 
இப்படித் தான் படிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல இப்படித் தான் வாசிக்க வேண்டும் என்று எந்த வரைமுறைகளையும் யாரும் எவருக்கும் சொல்ல முடியாது. அதை வாசகனின் மனநிலையே முடிவு செய்கிறது. ஆனால், வாசிப்பின் போது சில விசயங்களைக் கவனத்தில் கொள்ளச் செய்வதன் மூலமாக நல்லதொரு வாசிப்பனுபவத்தைப் பெற வைக்க முடியும். அப்படிப் பெறுவது என்பது 

 
  • வாசிப்பிற்கு முந்தைய முன் முடிபுகள் ஏதுமின்றியும் -
  • வாசகனுக்காகப் படைப்பில் இட்டு நிரப்பத் தரப்பட்ட இடங்களை கண்டறிந்து அதில் நிரப்பிக் கொண்டும் –
  • வாசிப்பிற்காகக் கூடுதல் உழைப்பைப் படைப்பு கோரும் பட்சத்தில் அதற்கான நேரத்தைக் கொடுத்தும் –
  • வாசிப்பின் வழியாக ஊடேறும் நிகழ்வுகளின், சம்பவங்களின் தாக்கங்கள் மீது அறுதியிட்ட வகையில் இல்லாமல் ஒட்டு மொத்த பார்வையைச் செலுத்தியும் -   
  • வாசித்துச் செல்லும் போதே முரண்பட்டு நிற்காமல் வாசிப்பிற்குப் பிந்தைய மனநிலையில் அந்த முரண்பாடுகளின் மீது உள்முகமாக மீள் உரையாடல்களை நிகழ்த்தியும் –
  • ஒப்பீட்டளவில் இல்லாமல் தனித்தன்மை உணர்ந்தும், ஈடுபாட்டோடும் - 
 
வாசிப்பை முன் நகர்த்திச் சென்றால் மட்டுமே சாத்தியமாகும். ஆரம்பக்கட்டத்தில் இது கொஞ்சம் சிக்கலான விசயமாகத் தெரியலாம். மனம் உடன்படாமல் முரண்டு பிடிக்கலாம். ஆனால் அதைக் கைவரப் பெற்று விட்டால் அதன் பின் வாசிப்பு உங்களை தனக்குள் இருத்தி வைத்துக் கொள்ள ஆரம்பித்து விடும். இந்த நிலையில் தான் தன்னுடைய கற்றலின் வழியாகவும், வாசிப்பனுபவத்தின் துணையோடும் வாசிப்பாளனாக இருப்பவன் எழுத்தாளன் என்ற புதியதொரு பரிணாமத்தை எடுக்க ஆரம்பிக்கிறான். அதன் தொடர்ச்சியாக வாசிப்பு – எழுத்து என்ற சக்கரம் அவனுக்குள் நிகழ்த்தும் சுழற்சியில் தனக்குரிய இடத்தைத் தானே கண்டடைந்தும் கொள்கிறான்.

 
வாசிப்பின் சுவை அறியாத, வாசிப்பனுபவம் இல்லாத ஒருவரால் ஒருநாளும் சுமாரான படைப்பாளியாகக் கூட உருவாக முடியாது என்ற எதார்த்த நிலையையும் –

 
கற்றுக் கொடுத்தலின் மூலம் படைப்பாளிகள் உருவாக்கப்படுவதில்லை மாறாக, அவர்கள் சரியான நிலைகளில் இருந்து பயணப்பட வைக்கப்படுகிறார்கள் என்ற நிஜத்தையும் - உணர்ந்து பயணிக்கும் போது மட்டுமே சராசரி வாசகன், தேர்ந்த வாசிப்பாளனாகவும், தேர்ந்த வாசிப்பாளன் ஒரு படைப்பாளியாகவும் பரிணாமம் செய்து கொள்வது இயல்பாக நடக்கும்.. இயல்புக்கு மீறிய எதுவுமே வளர்ச்சிக்குக் கேடு என்பது விதி. அந்த விதி படைப்பிலக்கியத்திற்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். 

 
நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

68 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வானில் தோன்றுகிறது ‘சூப்பர் நிலா’

2.jpgநிலா பூமிக்கு அருகில் வரும் நாள்தான் சூப்பர் நிலவு என்று கூறப்படுகிறது. அதன்படி 68 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில்.தோன்றுகிறது.  இந்த நிகழ்வின் போது நிலா 
வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும்  தோன்றும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடைசியாக கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியுள்ளது. அதன்படி நாளை காலை 6.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்றும், 8.52 மணிக்கு முழு நிலவையும் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. 221, 523 மைல்கள் தொலைவில் நிலா வருவதால் நாளைய நிகழ்வு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவாக இருக்கும் என்கின்றனர். நாளை தோன்றும் சூப்பர் நிலவு அடுத்ததாக 2034-ஆம் ஆண்டுதான் வருமாம்..

 

http://payanakatturai.blogspot.com/2016/11/68.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

பூமி உருவாகி முதன் முதலில் சமுத்திரங்கள் தோன்றி இருந்த காலப்பகுதியில் சமுத்திரங்கள் மிக அதிகமான வெப்பநிலையில் காணப்பட்டன என்றே இதுவரை கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு முடிவு வேறுவிதமாகக் கூறுகின்றது. அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.

இந்த ஆய்வின் படி, பூமியானது கடந்த 3.5 பில்லியன் வருடங்களுக்கு உயிரினம் உருவாக மற்றும் வாழத் தேவையான வெப்பநிலை அளவிலேயே காணப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

நோர்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் Harald Furnes, மற்றும் தென்னாபிரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் Maarten de Wit ஆகிய இரு ஆய்வாளர்கள், தென்னாபிரிக்க Barberton Greenstone Belt பகுதியில் உள்ள பாறைப் படிமங்களை ஆய்வு செய்ததிலேயே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. இவர்கள் ஆறு வருடங்களாக இந்தப் பாறைப்படிமங்களை ஆய்வு செய்துள்ளனர்.

022516_bg_early-ocean_feat_free

தென்னாபிரிக்காவில் உள்ள Barberton Greenstone Belt பகுதி.ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கான chert எனப்படும் எரிமலை வெடிப்பினால் உருவான கரிய சிலிக்காப்பாறை மாதிரிகளை Barberton பகுதியில் இருந்து எடுத்துள்ளனர், இவை 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் கடலின் ஆழத்தில் உருவானபாறைகளாகும். மேலும் இவர்கள் இந்த சிலிக்கா பாறைகள் உருவான பின்னர் 30 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் உருவாகிய எரிமலைப் பாறைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்தப் பாறைகளை ஆய்வுசெயததில் ஆக்ஸிஜன்-18 எனப்படும் சமதானி(isotope) செறிவாகக் காணப்படுவது எப்படியான வெப்பநிலை அந்தக்காலப்பகுதியில் நிலவியிருக்கலாம் என்று கணிக்க உதவுகிறது. மேலும் சற்று இளமையான, கடற்கரையில் இருந்த பாறைகளில், களித்தன்மையுள்ள வறண்ட பாறைகளின் தன்மையும் காணப்படுகின்றன, இது பனிப்பாறைப் பிரதேசத்தில் உருவாகும் ஒருவிதமான பாறையாகும். அதேபோல மிகவும் வயதான பாறைகளில் ஜிப்சம் அதிகளவில் காணப்படுகின்றது, 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், குளிர்ச்சியான ஆழமான கடல்ப்பகுதியில் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகவே 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சமுத்திரங்களின் மேற்பரப்பு மற்றும் ஆழமான பகுதிகள் அண்ணளவாக 0 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் காணப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

மேலும் தற்போதைய சமுத்திர வெப்பநிலையான 0 பாகை செல்சியஸ் தொடக்கம் 16 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலையைவிட முன்னைய ஆய்வுகளின் படி ஆதிகால சமுத்திர வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் தொடக்கம் 80 பாகை செல்சியஸ் வரை இருந்திர்க்கவேண்டும் என்று ஏன் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர் என்றும் Furnes மற்றும் Wit கண்டறிந்துள்ளனர். முன்னைய ஆய்வுகளின் படி, எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து ஆக்ஸிஜன் சமதானியின் அளவைக் கொண்டே வெப்பநிலை கண்டறியப்பட்டது, ஆனால் அதற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் அந்தந்தப் பிரதேசக்கடலில் இருந்த வெப்பநிலையைக் குறிப்பவையாக இருந்ததே தவிர, மொத்த சமுத்திரத்தின் வெப்பநிலையை அது குறிக்கவில்லை. Barberton பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் துல்லியமான ஆதாரங்கள் கடலடியில் இருக்கும் எரிமலை செயற்பாடுகள் காரணமாக அவை உருவாகியிருக்கவேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன.

இதனடிப்படையில், கடலடியில் இருந்து எரிமலை பிளவுகள் மூலம் வெளிவந்த வெப்பம், குறித்த பிரதேசத்திற்கு மட்டுமே சார்பானதாக இருந்தது, அவை மொத்த உலக சமுத்திரத்தின் வெப்பநிலையின் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பது, Wit மற்றும் Furnes நடத்திய பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்தப் புதிய ஆய்வு, எப்படி உயிரினங்கள் பூமியில் தோன்றியிருக்கலாம் என்று நாம் இதுவரை கருதிய முறைகளை சற்றே குழப்பத்திற்கு உள்ளாக்கலாம். இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, குளிர்ச்சியான சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும் எரிமலை பிளவுகள் மூலம் உருவாகிய வெப்பநிலை, அங்கு பாக்டீரியாக்கள் உருவாகவும், பல்கிப்பெருகவும் தேவையான கனிப்பொருட்களைக் கொண்டிருக்கலாம்.

பல்வேறு புவியியல் விஞ்ஞானிகள் இந்த புதிய ஆய்வின் முடிவுகள் முக்கியமானவை என்று கருதுகின்றனர், இது பூமியின் ஆரம்பக்கால சூழலை எமக்கு விளக்கும் ஒரு ஆய்வாகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலுக்கடியில் கோழிக் குஞ்சு
பிச்சு பிச்சு ஊட்டுகிறது
தாய்க்காக்கை.
-வாலிதாசன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

World diabetics day.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய சந்தப்பமும் நிலவுக்கு ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வரும் போது வழமைக்கு மாறாக நிலவின் அளவு பெரிதாகவும் அதன் காரணமாக பிரகாசமாகவும் இருக்கும். இதுவே சுப்பர் நிலவு / பெருமுழுநிலவு (Supermoon) என அழைக்கப்படுகிறது. அதேபோல பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது வழமைக்கு மாறாக சிறிதாக இருக்கும் நிலவு மைக்ரோ நிலவு எனப்படுகிறது.

supermicromoon_paduraru_960

2012 இல் வந்த சுப்பர் நிலவும், மைக்ரோ நிலவும் ஒப்பீட்டுக்காக காட்டப்பட்டுள்ளது. நன்றி: Catalin Paduraru

குறிப்பாக சில தகவல்களைப் பார்த்தால், நிலவின் நீள்வட்ட சுற்றுப் பாதையின் காரணமாக பூமிக்கு மிக அருகில் வரும் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் 363,400 கிமீ ஆகும், அதேபோல பூமிக்குத் தொலைவில் இருக்கும் போது பூமிக்கும் நிலவுக்குமான இடைவெளி 405,500 கிமீ ஆகும். இந்தக் குறைந்தளவு தூரத்தில் நிலவு இருக்கும் போது சுப்பர் நிலவாக அது இருக்கும். முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. நிலவின் நீள்வட்டப் பாதை ஒவ்வொரு முறையும் இந்தளவு தூரத்தில் இருக்கும் என்று கூற முடியாது, அதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசைபோல சூரியனது ஈர்புவிசையும் மேலும் வியாழன் போன்ற பெரிய கோள்களின் ஈர்ப்பு விசையும் நிலவின் சுற்றுப் பாதையில் சற்றே செல்வாக்கு செலுத்துகின்றன. ஆகவே ஒரு குறித்த சுற்றுப் பாதையில் நிலவு பூமிக்கு அருகில் வரும் சந்தர்பத்தை சுப்பர் நிலவு என்று அழைக்கிறோம், இதனைக் கூறக் காரணம் என்னவென்றால், எல்லா சுப்பர் நிலவும் ஒரே தொலைவில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அந்தந்த தடவையில் சுற்றுப் பாதையில் எவ்வளவு மிக அருகில் வர முடியுமோ அப்படி வரும் போதே அது சுப்பர் நிலவாகிவிடும்!

supermoon2

உங்களுக்குத் தெரியுமா? சுப்பர் நிலவு அதாவது Supermoon என்னும் சொல்லை 1979 இல் முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியது ஒரு ஜோதிடராம் (Richard Nolle), அந்தச் சொல்லே நன்றாக இருப்பதால் பின்னர் நாசாவும் அந்தச் சொல்லையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.

சரி ஏன் இப்போது சுப்பர் நிலவைப் பற்றிக் கதைக்கிறோம் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தால், அதற்குக் காரணம் இந்த நவம்பர் 14 இல் ஒரு சுப்பர் நிலவு வருகிறது. அதிலும் 68 வருடங்களுக்கு பிறகு நிலவு மிக மிக அருகில் வரும் சந்தர்பம் இதுவாகும். அப்படியென்றால் 68 வருடங்களில் வந்த சுப்பர் நிலவை விட இது பெரிதாக இருக்கும். இதன் போது பூமிக்கு வெறும் 356,509 கிமீ தொலைவில் நிலவு இருக்கும்! கடைசியாக இவ்வளவு அருகில் நிலவு வந்தது ஜனவரி 26, 1948 இல். இனி அடுத்ததாக இப்படியொரு மிக அண்மிய நிகழ்வு நவம்பர் 25, 2034 இல் தான் இடம்பெறும். ஆகவே இது ஒரு அருமையான சந்தப்பம் அல்லவா?

சுப்பர் நிலவை அவதானிப்பது என்பது விண்ணில் நீங்கள் அவதானிக்கக்கூடிய மிக எளிமையான விடயம் –  நிலவைத் தேடுங்கள் உங்களுக்கு சுப்பர் நிலவு தெரியலாம். வழமைக்கு மாறாக நிலவு 14% பெரிதாகவும் 30% பிரகாசமாகவும் தெரியும். ஆனாலும் சிலருக்கு அதாவது போர்துவாக அடிக்கடி நிலவைப் பார்க்காதவர்களுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியாது. அவர்களுக்கு வழமையான நிலவு எந்தளவு இருக்கும் என்று தெரிந்திருக்காதல்லவா? அடுத்தமுறை பார்க்க 2034 வரை காத்திருக்கவேண்டும்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு கடற்கரையில் தென்பட்ட  சுப்பர் மூன்

வவுனியா

DSC_0567DSC_0568 DSC_0569 DSC_0570 DSC_0572 DSC_0573 DSC_0574 DSC_0575

கிளிநொச்சி

FB_IMG_1479133428870 FB_IMG_1479133431595 FB_IMG_1479133434146 FB_IMG_1479133436362 FB_IMG_1479133438654 FB_IMG_1479133482384 FB_IMG_1479133484546

முல்லைத்தீவு கடற்கரை

vlcsnap-2016-11-14-19h45m44s245 vlcsnap-2016-11-14-19h45m47s20 vlcsnap-2016-11-14-19h45m51s55

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தமிழ் எழுத்தாளரும்,
சோழியான் என்ற புனைபெயரில்
தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும்,
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும்,
பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப்
பிறப்பிடமாகக் கொண்டவரும்
ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான
திரு. இராஜன் முருகவேல் அவர்கள்
15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னாரது இறுதிக்கிரியைகள்
30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.

கிரியைகள் நடைபெறும் இடம்:
GE BE IN Bestattungsinstitut,
Korn Strasse. 217,
28201 Bremen

நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்லிடப் பேசி.
மகன் - 0049 176 20102799

'பிரபல தமிழ் எழுத்தாளரும், சோழியான் என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராஜன் முருகவேல் அவர்கள் 15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்  அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.  கிரியைகள் நடைபெறும் இடம்: GE BE IN Bestattungsinstitut, Korn Strasse. 217, 28201 Bremen  நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை  உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  தொடர்புகளுக்கு: செல்லிடப் பேசி. மகன்    -    0049 176 20102799'
RIP
Sabanathan Kumar's photo.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்பன் மகர மண்டல மாலை அணியும் வைபவம் ..16.11.2016

 

ஆரம்பம்.

Image may contain: 1 person , outdoor
No automatic alt text available.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


உலக சகிப்பு தன்மை தினமாம் இன்று....எதை எல்லாம் எதற்கு எல்லாம் சகிப்பு தன்மை வேணும் என்று நினைக்கிறீங்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது உணர்களையும் மதிக்கின்ற  அனைத்து உறவுகளுக்கும் அனைத்துலக ஆண்கள் தின நல் வாழ்த்துகள்!

Image may contain: text

இது ஆண்களுக்காக.
 

தாத்தாவாக,
அப்பாவாக,
மாமாவாக, 
சித்தப்பாவாக,
அண்ணன்களாக,
தம்பிகளாக,
பள்ளித் தோழர்களாக,
இடையில் வந்த நட்புகளாகவென்று தொடரும்,
பெண்களை மதிக்கும், குழந்தைகளுக்கு மாதிரிகையாகும்,
சமூகத்தை மேம்படுத்தும்.......

அனைத்து ஆண்களுக்கும்
சிறப்பான இத்தினத்தில் நிறைவான வாழ்த்துகள்.

* இப்பிடியே வாழ்த்துகளைக் கேட்டுவிட்டு நின்றுவிடக் கூடாது. தொடரட்டும் கடமைகள். 1f642.png
அல்விற்

:)

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.