Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் என்ன? – பொ.ஐங்கரநேசன் மாணவர்களுக்கு விளக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

022-300x200.jpgபூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டிருக்கிறோம். இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்; பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்குக் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ‘ஆரோக்கிய வாழ்வு’ என்னும் கருப்பொருளில் மூன்று நாள் வதிவடக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இறுதி நாளான நேற்று புதன்கிழமை (17.09.2014) கலந்து கொண்டு ‘சுற்றுச்சூழலும் ஆரோக்கியமும்’ என்ற தலைப்பில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பூமியை நாம் பூமித்தாய் என்றும் அன்னை பூமி என்றும் அழைப்பது பூமியில் நாம் பிறந்து வாழ்வதால் மாத்திரம் அல்ல. பூமியே தன்னளவில் உயிருள்ள ஒரு பேரன்னைதான். நாம் உயிரோடு இருப்பதால் எமது உடலின் வெப்பநிலையை மாறாது பேணுகிறோம். இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவைச் சீராகப் பேணுகிறோம். இந்த ஒரு சீர்த்திட நிலை பூமிக்கும் இருக்கிறது.

எங்களைப் போன்றே பூமியும் தன்மேற்பரப்பின் வெப்பநிலையை, ஒட்சிசனின் சதவீதத்தை, கடல்நீரில் உப்பின் செறிவையெல்லாம் மாறாமல் பேணி வருகிறது. இதனால் பூமியை உயிருள்ள ஒரு பேரன்னையாகக் கருதும் போக்கு சூழலியல் தத்துவவியலாளர்களிடையே உருவாகியுள்ளது. எமது உடலின் உள்ளே எண்ணில் அடங்காத அளவுக்கு நுண்ணங்கிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே போன்றுதான் பூமி என்னும் பேரன்னையின் உடலினுள்ளும் நாங்கள் உட்படக் கோடானுகோடி உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எமது உணவுக்குழாயில் வாழுகின்ற இ. கோலி பக்ரீறியாக்கள் எமக்குத் தேவையான விற்றமின்களைத் தொகுத்துத்தர, நாம் அதற்கு உணவையும் வாழ்வதற்கு இடத்தையும் வழங்கிவருகிறோம். ஒன்றுக்கொன்று கொடுத்து வாழும் ஒன்றியவாழி முறையில் நீடிப்பதாலேயே எமது உடல் ஒருபோதும் இந்த பக்ரீறியங்களை அழிப்பதற்கு நினைப்பதில்லை.

ஆனால், நோய்க்கிருமிகள் உடலினுள் நுழைந்து பல்கிப்பெருகி நச்சுகளைச் சுரந்து எமது உடற்கலங்களைச் சிதைக்க ஆரம்பிக்கும்போது எமது உடல் நோய்க்கிருமிகளை அழிக்கும் முயற்சியில் இறங்குகின்றது. அதேபோன்றுதான், பூமித்தாய்க்குக் கொடுத்து வாங்கி ஒன்றிய வாழ்க்கை வாழந்து வந்த நாம் இப்போது ஏழு பில்லியன்களுக்கும் மேலாகப் பெருகிப் பூமியின் வளங்களையெல்லாம் கண்மூடித்தனமாக அழிக்க ஆரம்பித்துவிட்டோம். பூமித்தாயின் மடியை நஞ்சுகளால் நிரப்பி வருகிறோம். இதனால்தான் பூமி அன்னை எமது எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் எங்களை இயற்கை அனர்த்தங்களால் அழிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

கடற்கோள், மழைவெள்ளம்,

கடும்வரட்சி, இவற்றால் ஏற்படும் கொள்ளை நோய்கள் எல்லாம் எங்களைக் கட்டுக்குள் கொண்டுவருகின்ற இயற்கையின் பேரிடர்கள்தான். எனவே பூமியுடன் கொடுத்து வாங்கும் பழைய உறவுமுறைக்கு நாங்கள் திரும்பப் போகிறோமா அல்லது ஒட்டுண்ணிகளாகத்தான் வாழப்போகிறோமா என்பது தொடர்பாக மாணவர்களாகிய நீங்கள் முடிவெடுக்கவேண்டும் இந்த முடிவில்தான் மனுக்குலத்தின் எதிர்காலம் இந்தப் பூமியில் தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

012.jpg

022.jpg

032.jpg

041.jpg

05.jpg

062.jpg

07.jpg08.jpg

09.jpg

101.jpg

http://tamilleader.com/?p=41353

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐங்கரநேசன் அவர்களே,

 

காலத்தில்தேவை இன்றைய இளைய சமூகத்துக்கு நாம் வாழும்சூழல் எப்படிப்பட்டது என அறிமுகப்படுத்துவதே.

 

அத்தோடு நின்றுவிடாது, இயற்கை விவசாய முறைமைபற்றியும், மழைநீர் சேகரிப்பு பற்றியதானதுமான புரிதலை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லுங்கள்.

 

யாழ் நகரை அண்டியபகுதிகளில் இருந்த குளங்களில் அனேகமானவை குப்பைகளால் இட்டுநிரப்பபட்டு மேடாக்கப்பட்டு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு இயற்கையின் இயல்பு நிலையை மாற்றி அமைத்து நகரின் பாவனைக்கான நீரின் தன்மையையே மாற்றிவிட்டார்கள். அவைகள் அனைத்தும் திரும்பப்பெறல் வேண்டும் அன்றேல் அவற்றுக்கு மாற்றீடாக ஏதாவது செய்திடல்வேண்டும்.

 

சென்னைப் புறநகர்ப்பகுதியில் செய்ததுபோல் யாழ்குடாநாட்டின் மழைநீர் தங்கிநிற்கும் மற்றும் பள்ளமான இடங்களைத் தேர்வுசெய்து, ஆழ்குளாய்களை நிலத்தின் ஆழத்துக்குக் கொண்டுசென்று அவற்ரிற்கான வடிகால்களை ஏற்படுத்தி விபத்துக்கள் நடக்காவண்ணாம் காங்கிறீட் பலகைகளுடன்கூடிய பாதுகாப்பு வடிகால்களை உருவாக்குவதன்மூலம் கூடியவிரைவிலேயே எம்மால் இழந்த நீர்வளத்தை மீண்டும்பெற்றுக்கொள்ளமுடியும்.

 

இது தமிழ்நாட்டின் சென்னைப்புறநகரப்பகுதிகளில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டு வெற்ரியளித்துள்ளது. சென்னை மாநகராட்சி இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி பயன்பெறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

 

ஐங்கரன் தாங்கள் மற்றாஸ் கிரிஸ்ரியன் கல்லூரியின் பழையமாணவராவீர்கள் என்பதை நான் அறிவேன் ஆகவே தற்போது தங்களுக்கு சென்னையில் இது தொடர்பான மேலதிக விபரங்களைத் தெரிந்துகொள்வதில் தடையேதும் இருக்காது என நினைக்கிறேன்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.