Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊவா தேர்தல்: முஸ்லிம் கட்சிகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?

Featured Replies

140922155457_rauf_hakkeem_rishath_badiyu

அரசாங்கத்தை விட்டு விலகுவதில்லை என்ற முஸ்லிம் கட்சிகளின் போக்குதான் இந்தக் கூட்டணியின் தோல்விக்கு காரணமா?

இலங்கையில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கூட்டாக போட்டியிட்டிருந்தும், முஸ்லிம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை நிராகரித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

2009ம் ஆண்டு ஊவா மாகாண சபையில் இழந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ஜனநாயக ஐக்கிய முன்னனியின் இரட்டை இலை சின்னத்தில் இரு கட்சிகளும் தமது வேட்பாளர்களை கூட்டாக நிறுத்தியிருந்தன.

கணிசமான முஸ்லிம் வாக்குகள் பிரதான எதிர்கட்சியான ஐ.தே. கட்சிக்கு கிடைத்திருந்தாலும், அந்தக் கட்சியில் போட்டியிட்ட இரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவாகவில்லை.37 .000 முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட பதுளை மாவட்டத்தில் சுமார் 5000 வாக்குகளையே இக்கட்சிகளால் பெற முடிந்தது. அதனால் அவர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை.

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் தனது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கவில்லை.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருந்தாலும் இரு முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான பிரச்சாரங்களை தேர்தலின்போது முன்னெடுத்தாலும், எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியவில்லை.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம். ரி.ஹசன் அலி, அரசாங்கத்தின் ஆதரவு வழங்கும் கட்சிகள் என்ற காரணத்தினாலே தங்களுக்கு எதிர்பார்த்தவாறு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்றார்.

பதுளை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபைகள் உட்பட பல்வேரு தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் தான் இரு கட்சிகளும் பொதுச் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு வேட்பாளர்கள் சென்றிருந்தபோது வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்ற சந்தேகம் முஸ்லிம் வாக்காளர்களிடம் காணப்பட்டதாக ஹசன் அலி கூறினார்.

இந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் அரசாங்கத்தை ஆதரிக்க மாட்டோம் என அனைத்து வேட்பாளர்களும் உலமாக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்திருந்தும் வாக்காளர்கள் அதனை நம்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஒந்த தேர்தல் முடிவானது அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்ற நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என்ற அழுத்தமாக கருத முடியுமா? என்று அவரிடம் கேட்டபோது, அதனை நிராகரிக்காதவாறு அவரது பதில் இருந்தது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/09/140922_mulimvoteinuvaelection.shtml

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக அரசியல்செய்யப் புறப்பட்டார்களோ அவர்களேயே புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

ராவூப் ஹக்கீம் எனும் அதிமேதை மஹிந்த காலில் பலமுறை சாஸ்டாங்கமாக விழுந்ததை முஸ்லீம்கள் விரும்பவில்லை.

எவ்வளவு காலத்துக்கு அவர்மீது சாட்டப்பட்டுள்ள  கொலைக்குற்றத்துக்காக அனைத்து முஸ்லீம்களும் தண்டனை அனுபவிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கூட்டாக போட்டியிட்டிருந்தும், முஸ்லிம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை நிராகரித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

2009ம் ஆண்டு ஊவா மாகாண சபையில் இழந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ஜனநாயக ஐக்கிய முன்னனியின் இரட்டை இலை சின்னத்தில் இரு கட்சிகளும் தமது வேட்பாளர்களை கூட்டாக நிறுத்தியிருந்தன.

37 .000 முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட பதுளை மாவட்டத்தில் சுமார் 5000 வாக்குகளையே இக்கட்சிகளால் பெற முடிந்தது. அதனால் அவர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை.

கணிசமான முஸ்லிம் வாக்குகள் பிரதான எதிர்கட்சியான ஐ.தே. கட்சிக்கு கிடைத்திருந்தாலும், அந்தக் கட்சியில் போட்டியிட்ட இரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவாகவில்லை.

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் தனது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கவில்லை.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருந்தாலும் இரு முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தை

விமர்சிக்கும் வகையிலான பிரச்சாரங்களை தேர்தலின்போது முன்னெடுத்தாலும், எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியவில்லை.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம். ரி.ஹசன் அலி, அரசாங்கத்தின் ஆதரவு வழங்கும் கட்சிகள் என்ற காரணத்தினாலே தங்களுக்கு எதிர்பார்த்தவாறு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்றார்.

பதுளை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபைகள் உட்பட பல்வேரு தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் தான் இரு கட்சிகளும் பொதுச் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு வேட்பாளர்கள் சென்றிருந்தபோது வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்ற சந்தேகம் முஸ்லிம் வாக்காளர்களிடம் காணப்பட்டதாக ஹசன் அலி கூறினார்.

இந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் அரசாங்கத்தை ஆதரிக்க மாட்டோம் என அனைத்து வேட்பாளர்களும் உலமாக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்திருந்தும் வாக்காளர்கள் அதனை நம்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஒந்த தேர்தல் முடிவானது அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்ற நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என்ற அழுத்தமாக கருத முடியுமா? என்று அவரிடம் கேட்டபோது, அதனை நிராகரிக்காதவாறு அவரது பதில் இருந்தது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/09/140922_mulimvoteinuvaelection.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.