Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வரால் வீடமைப்புத் திட்டம் கைதடியில் நேற்று ஆரம்பிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முதல்வரால் வீடமைப்புத் திட்டம் கைதடியில் நேற்று ஆரம்பிப்பு
2014-09-24 11:04:02
3283.jpg

வடக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டு மாகாண சபை செயற்படத் தொடங்கிய பின்னர்  முதல் தடவை யாக நேற்று வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தினை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தின் கைதடி மத்தியில் தெரிவு செய்யப்பட்ட முற்றாக கண் பார்வை இழந்த பயனாளி கந்தையா வரதரா சன் வீட்;டில் அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

வீடமைப்புத் திட்டத்திற்கான  நிதியாக கட ந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூபா 3 மில்லியன் ஒதுக்கப்பட்டு வந்தது. 2014 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபாவில் முதலமைச்சரின் நல்லெண்ணத்தில் தோன்றிய வறிய மக்க ளுக்கு புதிய வீடு என்ற திட்டம் முதல்தடவை யாக இவ்வருடம் யாழ்ப்பாணம் கைதடியிலி ருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பயனாளிகள் வடக்கு மாகாண சபை முதலமைச்சரிடம் வீடு கட்டு வதற்கு உதவி கோரிய நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பொதுமக்களிலிருந்து பொருத்தமான பயனாளிகள் சரியாக இனங்காணப்பட்டு ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் ஒரு பயனாளிக்கு 6 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. அடுத்து வரும் வருடங்களில் கூடுதலாக நிதி கிடைக்கப் பெற்றால் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இன்னும் வீட்டு வசதி இல் லாத வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்; என முதலமைச்சர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 valampuri     

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் முதலமைச்சர் அவர்களே.......

அடுத்து வரும் வருடங்களில் கூடுதலாக நிதி கிடைக்கப் பெற்றால் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இன்னும் வீட்டு வசதி இல் லாத வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
புலம் பெயர்ந்தவர்களின் கவனத்திற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.