முதல் ஆட்டம் எங்கே, எப்போது? ஐபிஎல் போட்டி அட்டவணை, அணி வீரர்கள் விவரம்
பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP via Getty Images
படக்குறிப்பு,நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026 சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது
22 மார்ச் 2026
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் என்பதால் அவர்களின் சொந்த மைதானத்தில் இந்த சீசனின் முதல் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த புதிய சீசன் பற்றிய சில முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்தப் பதிவில்...
ஐபிஎல் 2026 எந்தெந்த நகரங்களில் நடைபெறுகிறது?
10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது.
டெல்லி (டெல்லி கேபிட்டல்ஸ்), கொல்கத்தா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), லக்னௌ (லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்), சென்னை (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஆமதாபாத் (குஜராத் டைட்டன்ஸ்), ஹைதராபாத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மும்பை (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய 7 நகரங்களில் அந்தந்த அணிகளின் 7 ஹோம் ஆட்டங்களும் (லீக் சுற்று) நடைபெகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் (4 போட்டிகள்) மற்றும் கௌஹாத்தி (3 போட்டிகள்) என இரு இடங்களில் தங்கள் ஹோம் ஆட்டங்களை விளையாடுகிறது. நியூ சண்டிகர் (4 போட்டிகள்) மற்றும் தரம்சாலா (3 போட்டிகள்) ஆகிய ஊர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் ஆட்டங்கள் நடைபெறும். தங்களின் 5 ஹோம் ஆட்டங்களை பெங்களூருவில் விளையாடும் ஆர்சிபி, 2 ஹோம் ஆட்டங்களை ராய்ப்பூரில் விளையாடுகிறது.
மொத்தம் எத்தனை போட்டிகள் நடைபெறும்?
இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும்.
லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும்.
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள்.
ஐபிஎல் 2026 சீசன் அட்டவணை
4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்கள் நடப்பதால் இந்த ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்படவில்லை. தேர்தல் நடக்கும் தமிழ்நாடு (சென்னை சூப்பர் கிங்ஸ்), மேற்கு வங்கம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), அசாம் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் வெளியான அட்டவணை முதல் 20 போட்டிகளுக்கு மட்டுமானதாகவே இருந்தது. முழு அட்டவணையை பிசிசிஐ இனிமேல் தான் வெளியிடும்.
முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை: போட்டி எண் - தேதி - நேரம் - அணிகள் - இடம்
மார்ச் 28 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு
மார்ச் 29 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை
மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுஹாத்தி
மார்ச் 31 - இரவு 7.30 மணி - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - நியூ சண்டிகர்
ஏப்ரல் 1 - இரவு 7.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - லக்னௌ
ஏப்ரல் 2 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா
ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை
ஏப்ரல் 4 - மாலை 3.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி
ஏப்ரல் 4 - இரவு 7.30 மணி - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆமதாபாத்
ஏப்ரல் 5 - மாலை 3.30 மணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 6 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா
ஏப்ரல் 7 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கவுஹாத்தி
ஏப்ரல் 8 - இரவு 7.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி
ஏப்ரல் 9 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - கொல்கத்தா
ஏப்ரல் 10 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கவுஹாத்தி
ஏப்ரல் 11 - மாலை 3.30 மணி - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - நியூ சண்டிகர்
ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை
ஏப்ரல் 12 - இரவு 3.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - லக்னௌ
ஏப்ரல் 12 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை
பட மூலாதாரம்,Getty Images
சென்னையில் நடக்கும் போட்டிகள் எவை?
இந்த முதல் கட்ட அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஹோம் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன அவை ஏப்ரல் 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை
ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியூரில் ஆடும் போட்டிகள் எவை?
மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கௌஹாத்தி
ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு
ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் யார்?
(இது மார்ச் 18 வரையிலான அதிகாரப்பூர்வ நிலவரப்படியான அணிகளின் விவரம்)
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), மஹேந்திர சிங் தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, கார்திக் ஷர்மா, சர்ஃபராஸ் கான், உர்வில் பட்டேல், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், அமன் கான், ஜேக் ஃபோக்ஸ், ஷிவம் துபே, கலீல் அஹமது, நூர் அஹமது, முகேஷ் சௌத்ரி, நேதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், அகீல் ஹொசைன், மேட் ஹென்றி, ராகுல் சஹர்.
டெல்லி கேபிட்டல்ஸ்: கேஎல் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், பென் டக்கெட், பதும் நிசன்கா, சஹில் பராக், பிரித்வி ஷா, அபிஷேக் பொரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுரணா விஜய், மாதவ் திவாரி, ஆகிப் தார், நித்திஷ் ராணா, மிட்செல் ஸ்டார், தங்கராசு நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, லுங்கிசானி எங்கிடி, கைல் ஜேமீசன், குல்தீப் யாதவ்.
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் ஃபிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷர் கான், ஆர் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், ஜேசன் ஹோல்டன், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சூதர், குர்னூர் சிங் பிரார், இஷாந்த் ஷர்மா, அஷோக் ஷர்மா, பிரித்வி ராஜ் யார்ரா, லூக் வுட், ராகுல் தெவேதியா, ரஷீத் கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, டிம் செய்ஃபர்ட், ரோவ்மன் பவெல், அனுகுல் ராய், சர்தக் ரஞ்சன், தக்ஷ் கம்ரா, ரச்சின் ரவீந்திரா, ரமன்தீப் சிங், பிளெஸிங் முசர்பானி, வைபவ் அரோரா, மதீஷா பதிரானா, கார்த்திக் தியாகி, பிரஷாந்த் சோலன்கி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, உம்ரான் மாலிக், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி.
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்: ரிஷப் பன்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கி, முகுல் சௌத்ரி, அக்ஷர் ரகுவன்ஷி, ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷபாஸ் அஹமது, அர்ஷின் குல்கர்னி, வனிந்து ஹசரங்கா, ஆயுஷ் பதோனி, மொஹம்மது ஷமி, ஆவேஷ் கான், சித்தார்த் மணிமாறன், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர், ஆன்ரிக் நார்கியா, நமன் திவாரி, மயங்க் யாதவ், மோசின் கான்.
பட மூலாதாரம்,Debarchan Chatterjee/NurPhoto via Getty Images)
படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரயன் ரிக்கில்டன், குவின்டன் டி காக், டேனிஷ் மலேவார், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சேன்ட்னர், ராஜ் அங்கத் பவா, அதர்வா அன்கொலேகர், மயாங் ராவத், கார்பின் பாஷ், வில் ஜேக்ஸ், ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், மயாங்க் மார்கண்டே, தீபக் சஹர், அஷ்வனி குமார், ராகுல் ஷர்மா, மொஹம்மது இஸார், அல்லா கசன்ஃபார், ஜஸ்ப்ரித் பும்ரா.
பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், பிரியான்ஷ் ஆர்யா, முஷீர் கான், சூர்யான்ஷ் செட்கே, மிட்ச் ஓவன், கூப்பர் கானலி, பென் துவார்ஷுய்ஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், வைஷாக் விஜயகுமார், யஷ் தாக்கூர், ஜேவியர் பார்ட்லெட், பிரவின் துபே, விஷால் நிஷாத், லாக்கி ஃபெர்குசன்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக் (கேப்டன்), ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டானவன் ஃபெரீரா, லுவான்-ட்ரே பிரிடோரியஸ், ரவி சிங், அமன் ராவ் பெராலா, ஷிம்ரன் ஹிட்மெயர், யஷஷ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், யுத்விர் சிங் சராக், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டீ, க்வேனா மஃபாகா, ரவி பிஷ்னாய், சுஷாந்த் மிஷ்ரா, யஷ் ராஜ் புஞ்ஜா, விக்னேஷ் புத்தூர், பிரிஜேஷ் ஷர்மா, ஆடம் மில்ன், குல்தீப் சென், சந்தீப் ஷர்மா, நாந்த்ரே பர்கர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் பட்டிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஃபில் சால்ட், ஜித்தேஷ் ஷர்மா, ஜோர்டன் காக்ஸ், குருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், ஜேக்கப் பெதெல், வெங்கடேஷ் ஐயர், சர்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ் சௌஹான், ஜாஷ் ஹேசில்வுட், ராசிக் தார், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நுவான் துசாரா, அபினந்தன் சிங், ஜேக்கப் டஃபி, யஷ் தயால்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இஷான் கிஷன், அனிகேஷ் வெர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஹெய்ன்ரிக் கிளாசன், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேல், கமிந்து மெண்டிஸ், ஹர்ஷ் துபே, பிரைடன் கார்ஸ், ஷிவாங் குமார், கிரெய்ன்ஸ் ஃபுலேட்ரா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ், அபிஷேக் ஷர்மா, நித்திஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், ஓன்கர் டார்மலே, அமித் குமார், பிரஃபுல் ஹிங், ஷிவம் மாவி.
* காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்திருக்கிறது.
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள் யார்?
கேமரூன் கிரீன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 25.2 கோடி
மதீஷா பதிரனா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 18 கோடி
கார்த்திக் சர்மா - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 14.2 கோடி
பிரஷாந்த் வீர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 14.2 கோடி
லியாம் லிவிங்ஸ்டன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 13 கோடி
இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் எவை?
பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP via Getty Image
படக்குறிப்பு,இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்: 2010, 2011, 2018, 2021, 2023
2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 - மும்பை இந்தியன்ஸ்
2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2015 - மும்பை இந்தியன்ஸ்
2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2017 - மும்பை இந்தியன்ஸ்
2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 - மும்பை இந்தியன்ஸ்
2020 - மும்பை இந்தியன்ஸ்
2021 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2022 - குஜராத் டைட்டன்ஸ்
2023 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cd7071glrn1o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.