Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டிஷ் பிணைக் கைதி தலை துண்டிப்பு: ஐ.எஸ். மீண்டும் அட்டூழியம்

Featured Replies

newPic_372_jpg_2138762h.jpg
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட வீடியோவில், பிரிட்டிஷ் பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்| படம்: ஏ.பி.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் ஆலன் ஹென்னிங். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் வீடியோவை கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர். வீடியோவுக்கு 'அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கு மற்றுமொரு செய்தி' அந்த வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகள் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது.

இதற்கு முன்னர் வெளியான வீடியோக்களில் இருந்த காட்சிகள் போலவே, இந்த வீடியோ பதிவிலும், பிணைக் கைதி ஆலன் ஹென்னிங் ஆரஞ்சு நிற அங்கி அணிந்திருந்தார். தலை துண்டிக்கப்படும் முன்னர் அவர் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், "ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முடிவால், பிரிட்டன் நாட்டின் குடிமகனான என் தலை துண்டிக்கப்படுகிறது. பிரிட்டன் முடிவுக்கான விலை இது" என கூறுகிறார்.

பின்னர், பிரிட்டன் ஆங்கில உச்சரிப்புடன் பேசும் முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர், "ஏற்கெனவே டேவிட் ஹெய்ன்ஸின் ரத்தக் கறை உங்கள் கைகளில் படிந்திருக்கிறது கேமரூன். இப்போது ஆலன் ஹென்னிங்கும் கொல்லப்படுகிறார். இவரது ரத்தம் பிரிட்டன் நாடாளுமன்றம் முழுவதும் படியும்" என பேசுகிறார்.

ஒபாமாவுக்கும் எச்சரிக்கை:

பிரிட்டன் பிரதமர் கேமரூனுக்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ். கிளர்ச்சியாளர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் மிரட்டல் விடுக்கிறார். அதில், "ஒபாமா, நீங்கள் சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்துகிறீர்கள். அதற்குப் பதிலாக நாங்கள் உங்கள் நாட்டு மக்கள் கழுத்தில் கத்தியை வைக்கிறோம்" என எச்சரிக்கை விடுக்கிறார்.

கேமரூன் கண்டனம்:

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலுக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஆலன் ஹென்னிங், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது, கடும் கண்டனத்துக்குரியது. ஆலனின் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ஆலன் அங்கு சென்றிருந்தார். அவரை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என கூறியுள்ளார்.

பிரிட்டன் பிணைக்கைதி தலை துண்டிக்கப்பட்டதற்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5 பேர் தலை துண்டிப்பு:

இதற்கு முன்னதாக அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் ஸாட்லாஃப் மற்றும் பிரிட்டனின் டேவிட் ஹேன்ஸ், பிரெஞ்சுப் பிணைக் கைதி ஹெர்வே கோர்டெல் ஆகியோரது தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது 5-வதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர்.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6470668.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "சேவை செய்ய" வெள்ளைக்காரர்கள் போகிறார்கள்.. தலை வெட்டுப்பட்டுச் சாகிறார்கள்.

ஈழத்தில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.. வெள்ளைக்காரர்கள் (ஐநா) கடையை மூடிக்கொண்டு வெளியேறினார்கள்..! :o

Heartbreaking. Deepest sympathy and prayers to the family and friends of Alan Henning. A true Brit, devoted to charity & humanity; robbed of his life by the inhumane. We must work together, united to destroy this evil organisation from our world. May the good work Alan did never be forgotten.-
Uma Kumaran
1972325_434871573317914_6703271402286040

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.