Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராஜதந்திரிகளின் ரவுடித்தனம், 2009இல் இருந்து தொடர்கிறது! – முன்னாள் இராஜதந்திரி தமரா குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை இராஜதந்திரிகளின் ரவுடித்தனம், 2009இல் இருந்து தொடர்கிறது! – முன்னாள் இராஜதந்திரி தமரா குற்றச்சாட்டு. 
[Tuesday 2014-10-07 07:00]
Tamara-Kunanayakam-150-news.jpg
2009ம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பமான துன்பியல் சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்வதாகவும், அதே வில்லன்கள் அதனை முன்னெடுப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கான தூதுவர் கிறிஸ் நோனிஸை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தாக்கிய சம்பவம் குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர், 2011 மற்றும் 2012ம் ஆண்டிலும் ஜெனீவாவில் இவை இடம்பெற்றன. பாரிசிலும், ரோமிலும் கூட இவை இடம்பெற்றன.
 
இலங்கை இராஜதந்திரிகளின் ரவுடித்தனமான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை குணாதிசயங்கள் குறித்து கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் நாடு அவமானப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு, நாடாளுமன்றமும், கட்சிகளும், மக்களும் முன்வர வேண்டும். நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும், கௌரவத்தையும் காப்பாற்ற இது அவசியமானது.
 
இலங்கையின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அவர்கள் கூட்டாக இணைந்து தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை தொல்லைப்படுத்தும் தந்திரோபாயத்தை கையாண்டனர். தற்போது உடல் ரீதியான தாக்குதல்களில் இறங்கியுள்ளனர். இந்த உயர் இராஜதந்திரிகள் தங்களுடைய நடவடிக்கைகளை தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்கின்றனர். அவர்களுக்கு உயர்மட்ட ஆதரவும், பதவி உயர்வுகளும், பணமும் தாராளமாக கிடைக்கின்றது. அவர்கள் செயற்படும் முறை மாறியிருக்கலாம், ஆனால் அவர்களுடைய நோக்கம் மாறவில்லை.
 
"ஏன் இப்போது?, ஏன் நியூயார்க் சூழலில்?, ஏன் ஐ.நா. பொது சபை சூழலில்?, ஏன் ஜெனீவா மனித உரிமைகள் சபையின் அமர்வின் போது? இலங்கை இராஜதந்திரிகள் நோக்கம் என்ன? " போன்ற கேள்விகளை அனைவரும் கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=118186&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மட்டும் என்ன பெரிய யோக்கியமா?? :unsure: சொல்லுறது முழுக்க பொய்தானே.. :wub::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.