Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் பயணம்: கிளிநொச்சியில் இராணுவத்தினர் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தைச் சோதனைச் சாவடியில் கெடுபிடிகள் அதிகரிப்பு-

 


யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட சிறப்பு படை அணி ஒன்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாழ்ப்பாணம் கிள்நொச்சி ஆகிய நகரங்களில் கடமையாற்றிய பொலிஸாருக்குப் பதிலாக கொழும்பு, மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அங்கு ஏற்கனவே பணியாற்றிய தமிழ் பொலிஸார் பலர் ஜனாதிபதி பயணம் செய்யாத வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட சிறப்பு படை அணி தற்போது யாழ் மற்றும் கிளிநொச்சி நகரங்களில் சிவில் உடைகளில் கடமையாற்றுவதாகவும் கூறப்படுகன்றது. இதேவேளை யாழ் தீவுப் பகுதிகளிலும் கொழும்பில் இருந்து சென்ற விசேட புலனாய்வு பொலிஸார் சிவில் உடைகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.


அதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஓமந்தை சோதனைச் சாவடியில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் பேரூந்துகள் வழமைக்கு மாறாக சோதனையிடப் படுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

மகிந்தவின் பயணம்: கிளிநொச்சியில் இராணுவத்தினர் குவிப்பு:-

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வருகை தரவள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சியில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
கிளிநொச்சி நகரப் பகுதியிலும் நகரிலிருந்து கிராமங்களுக்;குச் செல்லும் வீதிகளிலும் நகரத்தை அண்டிய கிராமங்களிலும் இவ்வாறு இராணுவத்தினர் செறிவாக்கப்பட்டுள்ளனர். 
வீதியில் பயணம் செய்பவர்களின் பெயர் விபரங்கள் பதியப்படுவதுடன் அவர்களிடம் கையொப்பமும் வாங்கப்படுவதாக குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். 
 
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் வீதிகளிலும் வீடுகளுக்கு அருக்காகவும் தரித்து நிற்பதனால் இயல்பான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இதேவேளை வழமைக்கு மாறாக கிளிநொச்சி நகரப் பகுதியிலும் கிராமங்களிலும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.