Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படையினருக்கு- பியர் கம்பனிகளிற்கு- மூங்கில் தோட்டங்களுக்கு- ஆயிரக்கணக்கான ஏக்கர்நிலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணில் நிலம் இன்றிய அனாதைகளாக தமிழ் மக்கள்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

Land%20grab%20north_CI.jpg

வடக்கில் பியர் கம்பெனிகளிற்கும் நிலம் அரசால் ஒதுக்கி வழங்கப்படுகின்றது. இன்னொரு புறம் மூங்கில் தோட்டம் அமைச்சகம் எனவும் சிங்களவர் ஒருவருக்கு வவுனியாவினில் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணி அற்றவர்களாகவும் அகதிகளாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.


வடமாகாணசபையின் காணி சுவீகரிப்பு தொடர்பான காணி விசேட அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவை கட்டடத்தில் இடம்பெற்றிருந்தது. கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் பலரும் தமது மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தினர்.


இராணுவம், காவல்துறை, கடற்படை, விமானப்படையென காணி சுவீகரிப்பு தொடர்கின்றது. இவற்றிற்கு அப்பால் அரச அமைச்சர்கள் தம் பாட்டிற்கு சிங்களவர்களிற்கு காணிகளை தாரை வார்க்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது காணிகளிற்கு இப்போது சிங்களவர்கள் உரிமை கோருகின்றனர்.


மணலாறு தாயகபூமி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வகையில் முல்லைதீவு மாவட்டத்தில் மட்டும் 34 ஆயிரத்து 141 ஏக்கர் எமது நிலம் பறிக்கப்பட்டிருப்பதாக உறுப்பினர் இரவிகரன் புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தினார். வடக்கிற்கு எட்டிக்கூட பார்த்திராத மகாவலி திட்டத்தை காரணங்காட்டி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூட  800 ஏக்கர் காணியை அதாவது விரட்டப்பட்ட தமிழ் மக்களது காணிகளை தனது உறவினர்களிற்கு ஒதுக்கி வழங்கியுள்ளார்.


அதே போன்று மன்னாரில் மட்டும் 22 ஆயிரத்து 247 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு கூட்டமைப்பு உறுப்பினரான சிராய்வா புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தினார். அதே வேளை முஸ்லீம்களது பூர்வீக காணிகளும் இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுவதாக மற்றொரு உறுப்பினரான அஸ்மின் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென 6ஆயிரத்து 300 ஏக்கர் வலி.வடக்கிலும் அதற்கு வெளியே மக்கள் குடியிருப்புக்களிடையே எண்ணூறு ஏக்கரிற்கு மேல் முப்படைகளாலும் காவல்துறையாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் அம்பலப்படுத்தினார்.


இதனிடையே இவ்வாறு புள்ளிவிபரங்களை பேசிக்கொண்டிருப்பதும் சுவீகரிப்பிற்கு எதிராக அங்கும் இங்குமென போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கப் போகின்றோமா அல்லது நிரந்தர தீர்வு காண போராடப்போகின்றோமாவென கேள்வி எழுப்பினார் அனந்தி சசிதரன். நில ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிபரம் இறுதியானதல்ல. இந்த நிமிடமும் அது தொடர்கின்றது. ஆனாலும் உறுப்பினர்கள் தம்மால் இயன்றதை திரட்டி சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை வடக்கு மாகாணசபையின் காணி அமைச்சராகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே உள்ளார். அதனால் அனைத்து நில ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளி விபரங்களையும் திரட்டி சர்வதேச நீதிமன்றை நாடவேண்டுமென கே.சிவாஜிலிங்கம் ஆலோசனையினை முன்வைத்திருந்தார்.  
  

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112425/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.