Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் வைக்கோல் பட்டடைதான் அதை கொழுத்தியதாலேயே இன்று நீங்கள் சர்வதேசத்தின் பிடியில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வைக்கோல் பட்டடைதான் அதை கொழுத்தியதாலேயே இன்று நீங்கள் சர்வதேசத்தின் பிடியில்!
 

cm%20sp%205445421.jpg

நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி, எங்கள் கோரிக்கைகளை ஆராயாது வடக்குமாகாண சபையை வைக்கோல் பட்டடை நாய் என்று விமர்சித்துள்ளார்.

நாங்கள் வைக்கோல் பட்டடை நாய்கள்தான். எங்கள் வைக்கோல் பட்டடையின் ஒரு பகுதியை ஜனாதிபதியின் ஒரு சகோதரர் தீ வைத்துப் பொசுக்கியதால் தான் ஜெனிவாவில் விசாரணை நடக்கின்றது. மற்றைய சகோதரர் வைக்கோல் பட்டடையைப் பராமரிப்போம் பத்தும், இருபதும், முப்பதும் தாருங்கள் என்று கேட்டு வருகின்றார்.

இந்நிலையில் நாங்கள் நாயாக இருந்து வைக்கோல் பட்டடையின் நலம் காக்காது விட்டால் நமக்காக அவரா அல்லது அவரின் குடும்பத்தாரா நன்மை செய்யப் போகின்றார்கள்? நாயாக உழைக்கப் போகின்றார்கள்? இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா தொண்டமனாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு:- இன்று இந்த ஆய்வு மையத்தைத் திறந்து வைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். பல வழிகளிலும் எம்மைக் கட்டுப் படுத்தி செயலற்றதாகச் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கி வருகையில் ஏதோ ஒரு வழியில் மக்கள் சேவையில் நாங்கள் இறங்கக் கூடியதாக இருக்கின்றது என்பது எனக்குப் பெரு மகிழ்வைத் தருகின்றது. எமது கௌரவ அமைச்சர்களே இதன் பொருட்டு பாராட்டுக்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்களின் விடாமுயற்சியும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் அலுவலர்களின் ஆற்றலும் அனுபவமும் எமக்கு அதி விசேட நன்மையைப் பெற்றுக் கொடுத்து வருகின்றது. எம்மைப் பல விதங்களில் அரசாங்கங்கம் குறை கூறி வருகின்றது. தாம் செய்யுந் தவறுகளை மூடி மறைக்க எம்மைச் சாடுகிறது.

 

முதன் முதலில் நேசக்கரம் நீட்டி எனது மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு எனது உறுதியுரையை எடுக்க ஜனாதிபதியிடம் சென்றவன் நான். நாட்டில் சுமூக நிலை ஏற்பட வேண்டும். எமது மக்கள் ஒதுக்கி வைக்கப் படக்கூடாது என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன். அதன் பின்னர் எமக்குத் தேவையான பல விடயங்களை ஜனாதிபதி முன் வைத்தேன். அவர் தருவதாக அன்றே உறுதி மொழி கூறி இன்று இதுவரையில் தரவில்லை. அந்த ஒரு காரணமே போதும் அவரின் வருகையை நாங்கள் புறக்கணிக்க. ஆனால் அதற்கு மேலும் பல காரணங்களைக் கூறியே எம்மால் கலந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்று மனவருத்தத்துடன் கடிதம் அனுப்பி வைத்தேன். கடிதத்தில் குறிப்பிட்டவற்றுக்கு பதில் இறுக்காமல் வைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்துக் கூறியுள்ளார். வைக்கோல் பட்டடை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை. வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார்.

எங்கள் வைக்கோல் பட்டடையின் ஒரு பகுதியை அவரின் ஒரு சகோதரர் தீ வைத்துப் பொசுக்கியதால் தான் ஜெனிவாவில் விசாரணை நடக்கின்றது. மற்றைய சகோதரர் வைக்கோல் பட்டடையைப் பராமரிப்போம் பத்தும், இருபதும், முப்பதும் தாருங்கள் என்று கேட்டு வருகின்றார். இந்நிலையில் நாங்கள் நாயாக இருந்து வைக்கோல் பட்டடையின் நலம் காக்காது விட்டால் நமக்காக அவரா அல்லது அவரின் குடும்பத்தாரா நன்மை செய்யப் போகின்றார்கள்? நாயாக உழைக்கப் போகின்றார்கள்? ஒரு பிரதம செயலாளரை சட்டப்படி நியமிக்க வக்கில்லாதவர் ஒரு ஆளுநரை மக்கள் கோரிக்கைப் படி மாற்ற முடியாதவர் அதிகாரம் தன் வசம் என்ற மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக் கூடாது. 2012இல் நடந்தவற்றிற்கு 2014இல் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வைப்பவர், அதுவும் 2013இல் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்முடன் கலந்தாலோசியாமல் கூட்டம் வைப்பவர் எமக்கு நன்மை செய்ய வருகின்றாரா ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு நன்மை தேட வருகின்றாரா? அவரின் நப்பாசை யாராவது ஓர் உண்மையான வடமாகாணத் தமிழ் மகனோ மகளோ தப்பித் தவறித் தமக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கூடும் என்பதுதான்.

நாம் எமது மக்களுக்குக் கூறியுள்ளோம் - அவர் தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் உங்களுக்குப் பெருவாரியான நட்டஈடு வழங்க வேண்டியுள்ளது. அவர் தற்போது தரப்பார்ப்பது அதில் ஒரு மிகச் சிறு தொகைதான். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தேர்தலில் அவரை வீழ்த்த உங்களால் முடியுமானவற்றைச் செய்யுங்கள் என்று. ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போலத்தான் இருக்கின்றது ஜனாதிபதியின் கூற்று. வட மாகாண மக்கள் மீது கரிசனை இருந்திருந்தால் அவர் எம் மக்களின்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இங்கு வந்திருப்பார். நாங்கள் கேட்ட மிகக் குறைந்த கோரிக்கைகளையாவது கொடுத்து விட்டு வந்திருப்பார். அப்பொழுது நாங்கள் நன்றியுடன் வரவேற்றிருப்போம். நாய்களுடன் அவர் கவனமாக இருக்கட்டும். அடுத்து அமைச்சர் ஒருவர் 'கருடா சௌக்கியமா? என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார்.

மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார். நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக் கொள்கின்றேன். தென் இந்தியாவில் பாதுகாப்பாக ஒரு தனியிடத்தில் இருத்தப்பட வேண்டியவர் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எல்லாவற்றையும் முட்டாள்கள் ஆக்கி அவற்றில் அங்கம் வகித்து தனக்கெதிராக தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிறாந்தில் இருந்து இதுவரையில் அவர் தப்பி இருந்து வருவது அவரின் கெட்டித்தனத்தைக் காட்டுகிறது. அதற்காக அவர் எவரை வேண்டுமானாலும் அடிவருடி, அவர்களுக்கு அடிமையாகச் செயற்பட்டு தனது காரியத்தினைச் சாதித்து வருவதையும் நான் அறிவேன். அது பற்றி தம்பி ஸ்ரீதரன் அவர்கள் கூறியதைப் பத்திரிகையில் வாசித்தறிந்தேன்.

ஆனால் சில நேரங்களில் தம்மைக் கெட்டிக்காரர்களாக அடையாளம் காண்பவர்கள் தாமே முட்டாள்கள் ஆகின்றார்கள். அப்படி ஏதாவது நண்பர் டக்ளஸுக்கு நடந்தால் இந்தியாவிவுக்குக் கொண்டு செல்லப்பட்டால் நான் அவரை முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்க மாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். சிலரை எக்காலமும் ஏமாற்றலாம். பலரை ஒரு சில தருணங்களில் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நண்பர் அறிந்து வைத்திருந்தால் நல்லது. இன்று திறக்கப்படும் ஆய்வு மையபம் எமக்குப் பல விதங்களிலும் நன்மை பயக்கப் போகின்றது. நான் கொழும்பில் என் வீட்டில் உள்ள ஒரு கிணற்று நீரின் தன்மையை அறிய CISIR என்ற நிறுவனத்தை நாடிப் போனபோது 5000 ரூபா கட்ட வேண்டும் என்றார்கள். பின்னர் இவ்வாறான ஒரு அரசாங்க ஆய்வு மையத்தை நாடிய போது வெறும் ரூபா 287 ரூபாவை மட்டுமே அறவிட்டார்கள். இது பல வருடங்களுக்கு முன் நடந்தது. குறைந்த விலையில் உங்களுக்கு சிறந்த ஒரு சேவையாற்ற இந்த மையம் தாபிக்கப்பட்டுள்ளது. இன்று எமது நீர் மாசடைந்து வருவது கண்கூடு. அதற்கான காரணங்களை அறிந்தால் தான் மாற்று நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு வசதியளிப்பதற்காகவே இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. திறம்பட இந்த மையம் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டு என்னை அழைத்ததற்கு நன்றி கூறி அமர்கின்றேன்.- என்றார். - See more at: http://malarum.com/article/tam/2014/10/15/6246/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-.html#sthash.g1hHnRuh.dpuf
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.