Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட ஐ.நாவின் உயர் அதிகாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஓமந்தையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட ஐ.நாவின் உயர் அதிகாரி!

 

 

un.jpgஉலக உணவு தின நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் ஓமந்தையில் வைத்து நேற்று வியாழக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார், என வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான வதிவிடப்பிரதிநிதி குரோபோர்ட் பேர்த் அம்மையார் அவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பபட்டவராவார்.

இலங்கையில் வடமாகாணத்திற்குச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தேவை என்று நேற்று முந்தினம் புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, நேற்று முந்தினம் உலக உணவு தினத்தைக் கொண்டாடும் நிகழ்வொன்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த குரோபோர்ட் பேர்த் அம்மையார், கொழும்பிலிருந்து தரைமார்க்கமாக ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்கு வரமுற்பட்டபோது, அங்கு வீதிச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் அவரைக் கிளிநொச்சி செல்லமுடியாது தடுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

வெளிநாட்டவரான இவர் வடக்குக்குள் நுழைவதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாத காரணத்தாலேயே ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து திருப்அபி அனுப்பப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் சார்பில் எவ்வித பிரதிபலிப்புக்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

1948 ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அங்கத்துவ நாடாக விளங்கி வருகிறது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, விவசாய, மீன்பிடி, வனவளம் மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் பெரும் பங்காற்றிவருகிறது.

இதனைவிட வடக்கு, கிழக்கில் யுத்தத்தினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் மீளக்குடியமர்வு நடவடிக்கைகளிலும் இந்த நிறுவனம் அளப்பரிய தன்னார்வத் தொண்டுப் பணிகளை ஆற்றிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=42923

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பிலிருந்து தரைமார்க்கமாக ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்கு வரமுற்பட்டபோது,
மகிந்தா விட்ட கொச்சியில் வராமல் ,காரில வந்தா விடுவினமாமே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.