Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வரைச் சந்தித்தார் ஜப்பானிய தூதுவர்! - நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
japan-amb-cm-200-news.jpg

வடபகுதி மக்களின் தேவைகள் தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று தற்போது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த கணிப்பின் மூலம் பெறப்படும் அறிக்கை மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் இலங்கைக்கான யப்பான் தூதுவர் நொபுகிடோ கோபு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், நேற்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

   

அந்தச் சந்திப்பின் போது, ஜப்பானியத் தூதுவர், அரசாங்கம் கூறுவது போல, இராணுவம் குறைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வடமாகாண முதலமைச்சர், அவ்வாறு பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அவ்வாறு இராணுவத்தினை குறைப்பது உண்மையாக இருந்தால், எதற்காக மேலும் மேலும் காணிகளை இராணுவ முகாம்களை அமைப்பதற்கு காணிகளை கேட்கின்றார்கள்.காணி கையேர்ப்பு சட்டத்தின் கீழ் காணிகளை எடுக்கின்றார்கள். அது மக்களின் தேவைக்காக அல்ல. இராணுவ முகாம்களை அமைப்பதற்காக, ஒரு இடத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்றுவதாக கூறி, வேறு இடத்தில் நிறுத்துகின்றார்களோ, என்பது தொடர்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும்என்று பதிலளித்துள்ளார்.

எந்தவிதமான தேவைகளை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என யப்பான் தூதுவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கையில், வீதிகள் போடப்பட்டுள்ளன. புகையிரத பாதை போடப்பட்டுள்ளன. கிராமங்களில் மக்களுக்கு எந்த வித நன்மைகளை கிடைக்கவில்லை.வாழ்வாதாரங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கின்றன. பல விதத்திலும் மக்கள் முன்னேற முடியாமல் இருக்கின்றார்கள். மக்களின் காணிகள் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்குதேவையான வற்றினை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றதாக முதலமைச்சர் கூறினார்.

சுன்னாகத்தில் கிணறுகளில் ஒயில் கலக்கின்றது. அதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், யப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பில் தேர்தலில் வெற்றி பெற்ற ஓரிரு மாதங்களில் ஜ.நா பிரதிநிதிகளை சந்தித்திருந்தேன். அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஓரிரு மாதங்களின் பின்னர் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். காரணம் என்னவென கேட்ட போது, அரசாங்கம் தான்தான் இது தொடர்பில் சகல நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். மாகாண சபைக்கு எதுவும் செய்ய முடியாது என்ற தோரணையில், நடவடிக்கை எடுத்ததாக அறிந்தேன் என்று குறிப்பிட்டார்.

அது பற்றி தமக்கு தெரியுமென்றும், அதற்கு தாம் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில், தேவைகள் தொடர்பிலான கணிப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும், அந்த அறிக்கை மிக விரைவில் கிடைக்குமென்றும், அதனால் நன்மை பயக்கும் என்றும் ஜப்பானியத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

 

japan-amb-cm-311014-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=119772&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.