Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில்

Featured Replies

முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில்
2014-10-31 12:26:55

 

7526Spin-legend-Muttiah-Muralidharan-gre

முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார்.

7526World-record-holder-Muttiah-Muralidh


முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மாங்குளம் மைதானத்தில் பெண்களக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

7526karandeniya--players-in-action-again
19 வயதுக்குட்பட்ட 16 ஆண்கள் அணிகள் நான்கு குழுக்களிலும் 8 பெண்கள் அணிகள் இரண்டு குழுக்களிலும் விளையாடுகின்றன.
இறுதிப் போட்டிகள் நவம்பர்  2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7526#sthash.1TVYr5KP.dpuf

  • தொடங்கியவர்

முரளிக்கிண்ண ஆரம்ப தின போட்டி முடிவுகள்
வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014 10:14

 

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்டப் போட்டிகள் வடக்கிலுள்ள மைதானங்களில் நேற்று முன்தினம் புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின.

வடக்கு கிழக்கு அணிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 16 ஆண்கள் அணிகளும் 8 பெண்கள் அணிகளும் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

போட்டிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஐ.ஓ.டி.ஆர் ஆகிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

முரளி ஒற்றுமை வெற்றிக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 2 வருடங்களும் சென்.பீற்றர் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

 

ஆண்கள் போட்டி முடிவுகள்

கரந்தெனிய மத்திய கல்லூரி 84 ஓட்டங்களால் வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் கரந்தெனிய மத்திய கல்லூரியும், பண்டாரவளை சென்.தோமஸ் கல்லூரி அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய கரந்தெனிய மத்திய கல்லூரி 20 பந்துப் பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. ரி.கே.ராஜரட்ண 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.தோமஸ் கல்லூரி அணி, 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

 

சீனிகம இணைந்த பாடசாலைகள் அணி 4 இலக்குகளால் வெற்றி

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் சீனிகம இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி, 19.1 பந்துபரிமாற்றங்களில் 122 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சீனிகம இணைந்த பாடசாலைகள் அணி 14.3 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

றிச்மண்ட் கல்லூரி 5 இலக்குகளால் வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் றிச்மண்ட் கல்லூரி அணியை எதிர்த்து திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த பாடசாலைகள் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த பாடசாலைகள் அணி 16.3 பந்துபரிமாற்றங்களில் 71 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் அணி 10 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி 8 இலக்குகளால் வெற்றி

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முல்லைத்தீவு – கிளிநொச்சி இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு – கிளிநொச்சி இணைந்த பாடசாலைகள் அணி 19.3 பந்துபரிமாற்றங்களில் 82 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பீற்றர்ஸ் அணி 10.5 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பெண்கள் போட்டிகள் முடிவு

சக்தி மகளிர் கல்லூரி அணி 79 ஓட்டங்களால் வெற்றி

மாங்குளம் வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டியில் சக்தி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து குருநாகல் இளம் பெண்கள் கழக துடுப்பாட்ட அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சக்தி பெண்கள் அணி, 20 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு ஆடிய குருநாகல் இளம் பெண்கள் கழக துடுப்பாட்ட அணி 8.5 பந்துபரிமாற்றங்களில் 24 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

மிகுதி போட்டிகள் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (30) நடைபெறவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/131472-2014-10-31-04-57-47.html

  • தொடங்கியவர்

முரளி வெற்றிக்கிண்ணம்; 2ஆம் நாள் போட்டி முடிவுகள்
வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014

 

 

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட போட்டிகள், வட மாகாணத்திலுள்ள மைதானங்களில் கடந்த புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின.

வடக்கு கிழக்கு அணிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 16 ஆண்கள் அணிகளும் 8 பெண்கள் அணிகளும் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

போட்டிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஐ.ஓ.டி.ஆர் (ஒட்டிசுட்டான்) ஆகிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

 

முரளி ஒற்றுமை வெற்றிக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களும் சென்.பீற்றர் கல்லூரி சம்பியனாகியிருந்தது. வடக்கில் பெய்து வரும் பருவமழை காரணமாக சில போட்டிகள் நடைபெறாமல் இருப்பதுடன், சில போட்டிகள் பந்துபரிமாற்றங்கள் குறைக்கப்பட்டும் நடைபெற்றுள்ளன.

அதனடிப்படையில், வியாழக்கிழமை (30) நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் வருமாறு,


ஆண்கள் போட்டி முடிவுகள்

33 ஓட்டங்களால் ஆனந்தா கல்லூரி அணி வெற்றி

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஆனந்தா கல்லூரி அணியினை எதிர்;த்து பிறின்ஸ் ஒவ் வோள்ஸ் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்தா கல்லூரி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. எஸ்.அஸான் 71 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறின்ஸ் ஒவ் வேர்ள்ஸ் கல்லூரி அணி 17.4 பந்துபரிமாற்றங்களில் 114 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

 

மேரிஷ் ஸ்டெல்லா அணி 7 ஓட்டங்களால் வெற்றி

ஓட்டிசுட்டான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போட்டியில் மேரிஷ் ஸ்ரெல்லா கல்லூரி அணியை எதிர்த்து தேவபத்திராஜ கல்லூரி அணி மோதியது.

மழை பெய்த காரணத்தால் 5 பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேரிஷ் ஸ்ரெல்லா கல்லூரி அணி 5 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேவபத்திராஜ கல்லூரி அணி 5 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

 


சீனிகம – சென்.பீற்றர்ஸ் ஆட்டம் சமநிலையில்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் சீனிகம இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி மோதியது. இந்த போட்டியும் மழை காரணமாக 8 பந்துபரிமாற்றங்கள் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சீனிகம அணி 8 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பீற்றர்ஸ் அணி 8 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களையே பெற்றது.

இருந்தும், மேலதிக ஒரு பந்துபரிமாற்றம் கொடுக்கப்பட்டு அதில் சென்.பீற்றர்ஸ் அணி வெற்றிபெற்றது.

 

றிச்மண்ட் கல்லூரி 7 இலக்குகளால் வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் காலி றிச்மண்ட் கல்லூரி அணியை எதிர்த்து கரந்தெனிய மத்திய கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கரந்தெனிய மத்திய கல்லூரி அணி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் கல்லூரி அணி 13.5 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் கே.ஐ.சி.அஷலங்க 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

 

யாழ்ப்பாண இணைந்த அணிகள் 4 இலக்குகளால் வெற்றி

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாண பாடசாலைகள் இணைந்த அணியுடன் சர்வதேச பாடசாலைகள் இணைந்த அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சர்வதேச பாடசாலைகள் இணைந்த அணி 19.2 பந்துபரிமாற்றங்களில் 72 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண பாடசாலைகள் இணைந்த அணி 18 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றி

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்;த்து கிளிநொச்சி முல்லைத்தீவு இணைந்த பாடசாலைகள் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி 19 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி முல்லைத்தீவு இணைந்த பாடசாலைகள் அணி 19 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

மொனராகலை இணைந்த அணிகள் 6 இலக்குகளால் வெற்றி

ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து மன்னார் வவுனியா இணைந்த பாடசாலைகள் அணி மோதியது. மழை காரணமாக 5 பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக இந்த போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மன்னார் வவுனியா இணைந்த பாடசாலைகள் அணி 5 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி 3.5 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த அணி வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த அணியை எதிர்த்து பண்டாரவளை சென்.தோமஸ் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த அணி 19.4 பந்துபரிமாற்றங்களில் 121 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பி.டனிக் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.தோமஸ் அணி 15.1 பந்துபரிமாற்றங்களில் 66 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தெரிவுப்போட்டிகள் நடைபெற்று தொடர்ந்து இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/131516---2----.html

  • தொடங்கியவர்

முரளி கிண்ணத்தை வென்றது ஆனந்தா கல்லூரி
திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014

 

2014ஆம் ஆண்டுக்கான முரளி ஒற்றுமை வெற்றிக்கிண்ணத்தை, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சுவீகரித்து சம்பியன் பட்டத்தை வென்றது.

றிச்மண்ட் கல்லூரி அணியை 5 இலக்குகளால் வீழ்த்தியே? கொழும்பு ஆனந்தா கல்லூரி இந்த சாதனையை நிலைநாட்டிக் கொண்டது.

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட போட்டிகள், வடக்கிலுள்ள மைதானங்களில் கடந்த புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின.

வடக்கு - கிழக்கு அணிகள் உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 16 ஆண்கள் அணிகளும் 8 பெண்கள் அணிகளும் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.

 

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற்றன.

அரையிறுதிப் போட்டிகளில், சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணியை 27 ஓட்டங்களால் கொழும்பு ஆனந்தா கல்லூரி வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவானது. அதேவேளை, அத்துடன், பொலநறுவை பாடசாலைகள் இணைந்த அணியை 73 ஓட்டங்களால் வெற்றிகொண்ட றிச்மண்ட் கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற இறுதிப்போட்டியின் நாணயச்சுழற்சியில், றிச்மண்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

றிச்மண்ட் கல்லூரியை இறுதிப்போட்டி வரையில் அழைத்து வர காரணமாக இருந்த அணித்தலைவர் எஸ்.ஜிம்கான் மற்றும் கே.ஐ.சி.அசலங்க ஆகியோர், இறுதிப்போட்டியில் சோபிக்க தவறினார்கள். இருவரும் முறையே 07, 04 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

றிச்மண்ட் கல்லூரியின் அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் ஆனந்தா அணியின் எஸ்.எஸ்.டி.ஆராய்ச்சிகேவினுடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 4 பந்துப் பரிமாற்றங்கள் வீசிய ஆராய்ச்சிகே, 15 ஓட்டங்களை கொடுத்து அடுத்தடுத்து 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கொண்ட றிச்மண்ட் கல்லூரியால் 18.5 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 68 ஓட்டங்களையே பெறமுடிந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாகவும் ஒரேயொரு இரட்டை இலக்க ஓட்டங்களை பி.பிம்சாரா பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கே.அன்சுல 3, ஏ.சிகேரா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

 

69 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆனந்தா கல்லூரிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் இரண்டு இலக்குகள் வீழ்த்தப்பட்டன. தொடர்ந்து 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 3ஆவது இலக்கும் வீழ்த்தப்பட்டது.

ஐந்தாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஏ.சிகேரா, என்.ஹக்கல்லவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார். சிகேரா 39 ஓட்டங்களை பெற்று இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹக்கல்ல 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆனந்தா கல்லூரி அணி 16.3 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

 

இந்த சுற்றுத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக றிச்மண்ட் கல்லூரி கே.ஐ.சி.அசங்க, தெரிவானார். சிறந்த பந்துவீச்சாளராக ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த ஏ.சிகேரா தெரிவானார். தொடர் ஆட்டநாயகனாக ஆனந்தா கல்லூரியின் எஸ்.அசானும் (139 ஓட்டங்கள், 10 இலக்குகள்) இறுதிப்போட்டியின் நாயகனாக ஆனந்தா கல்லூரியின் எஸ்.எஸ்.டிஆராய்ச்சிகேவும்  தெரிவு செய்யப்பட்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/131814-2014-11-03-06-42-01.html

  • தொடங்கியவர்

சீனிகம பெண்கள் அணி சம்பியன்
திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014

 

 

2014ஆம் ஆண்டுக்கான முரளி ஒற்றுமைக்கிண்ண பெண்களுக்கான இறுதிப்போட்டியில், சீனிகம இணைந்த பாடசாலைகள் பெண்கள் அணி 48 ஓட்டங்களால் பதுளை மகளிர் அணியை வீழ்த்தி சம்பியனாகியது.

8 பெண்கள் அணிகளைக் கொண்ட இந்த சுற்றுப்போட்டிகள், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மைதானங்களில் நடைபெற்று வந்தன.

பெண்களுக்கான இறுதிப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சீனிகம இணைந்த பாடசாலைகள் பெண்கள் அணியும் பதுளை பெண்கள் அணியும் மோதின.

 

நாணயச்சுழற்சியில் வென்ற சீனிகம அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 15 பந்துப் பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 93 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் எல்.டி.மெண்டிஸ் 26, என்.நிலானி 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

94 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பதுளை பெண்கள் அணிக்கு, ஆரம்பம் முதலே சவால் நிறைந்ததாக இருந்தது.

அவ்வணியின் இலக்குகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட 14.3 பந்துப் பரிமாற்றங்களில் 45 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. ரி.மதுவந்தி மட்டும் அதிகபட்சமாக 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் சீனிகம அணி சார்பாக எஸ்.டிசஞ்ஜலி, ஏ.தசுனி ஆகியோர் தலா 3 இலக்குகளை கைப்பற்றினார்கள்.

இறுதிப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக சீனிகம அணியின் எல்.டி.மெண்டிஸ் (26 ஓட்டங்கள், 1 இலக்கு) தெரிவு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/131816-2014-11-03-06-46-15.html

  • கருத்துக்கள உறவுகள்

இரக்கத்திற்கான சிந்தனை, என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்தா வைத்தார்.முரளி

வரவேற்க வேண்டிய போட்டி நன்றி முரளிதரன் என்னும் தமிழனுக்கு .......

 

பிரச்சினையான பெயர் எல்லாம் முரளி ...அல்லது கரன் ..தரன் என்றே முடியுது  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

'சரன்'எண்டும் முடியுது.

  • தொடங்கியவர்

முரளி நல்லிணக்க கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்
2014-11-04 14:55:40

 

7573seenigama-team_zps4e046e95.jpg

வட பகுதியின் ஐந்து மைதானங்களில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை நடைபெற்ற மூன்றாவது முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரியும் மகளிர் பகிரங்க பிரிவில் எவ்.ஓ.ஜீ. சீனிகம அணியும் சம்பியன்களாகின.

ஆண்கள் இறுதி ஆட்டத்தில் றிச்மண்ட் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றது.7573ananda-team_zps38198d0d.jpg
ஆனந்த கல்லூரி 16.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 73 ஓட்டங்களைப் பெற்றது.

பெண்கள் இறுதி ஆட்டத்தில் சீனிகம மகளிர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.
பதுளை மகளிர் அணி 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றது.

7573DSC_2045_zps61ca8489.jpg
ஆண்கள் பிரிவில் நாட்டின் சகல பாகங்களிலுமிருந்தும் 16 அணிகள் பங்குபற்றியதுடன் மகளிர் பிரிவில் எட்டு அணிகள் போட்டியிட்டன.
ஆண்களுக்கான இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் நான்கு குழுக்களிலும் பெண்களுக்கான பதினைந்துக்கு 15 கிரிக்கெட் போட்டிகள் இரண்டு குழுக்களிலும் நடத்தப்பட்டன.

7573rob_zps68b5d84e.jpg
இந்த இரண்டு பிரிவுகளுக்குமான இறுதிப் போட்டிகள் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றன.இறுதிப் போட்டிகளின்போது இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், பிரதான அனுசரணையாளர் ஓவைஓபி நிறுவனத்தின் அதிபர் ஜிட்டோ அருளம்பலம், யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பேரேரா ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்கினர்.

7573DSC_2084_zps6da0925e.jpg
ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்ட நாயகனாக ஆனந்த வீரர் சஹான் ஆராச்சிகே, தொடர் நாயகனாக இதே அணியின் தலைவர் ஷம்மு ஆஷான், தொடரின் சிறந்த பந்துவிச்சாளராக ஆனந்த வீரர் அசேல் சிகேரா, தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக றிச்மண்ட் வீரர் சரித் அசலன்க ஆகியோர் தெரிவாகினர்.

7573fweew_zpsc8d5c352.jpg
மகளிர் பிரிவில் இறுதி ஆட்ட நாயகியாக சீனிகம அணியைச் சேர்ந்த தர்ஷனி மெண்டிஸ் தெரிவானார்.ஆண்களுக்கான இறுதிப் போட்டியின்போது அணி வீரர்கள் அறிமுகம் செய்யப்படுவதையும் சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் இரண்டாமிடம், சம்பியன் அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கப்படுவதையும் வெற்றி அணிகளையும்  படங்களில் காணலாம்.

7573u-19-champion-mg-udaya-perera-ananda

 

7573women-runner-up-Jitto-arulampalam-ba

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7573#sthash.pcNtVtUB.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.