Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தனித்து வாழ தூண்டுகிறது அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

957f111d7d4ba6a19ef92243923009a5.jpg

 இலங்கை அரசினுடைய தொடர்ச்சியான நடவடிக் கைகளும், போக்குகளும் தமிழ் மக்களைப் பிரிந்து தனித்து வாழவே தூண்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 
 
அரசினுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழர்கள் தனித்து வாழ்வதையே ஊக்குவிக்கின்றது. வடக்கு மாகாணத்துக்குப் பிரத்தியேக பாஸ் நடைமுறை, வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்களை மறுத்தல், வடக்கில் பொருளாதார நடவடிக்கைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமை, இராணுவ ஆக்கிரமிப்புகள், படையினரின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இவை யாவும் தமிழ் மக்களைத் தனித்து வாழத் தூண்டும் அரசின் அடக்கு முறைகளை வெளிப்படுத்துகின்றன என்று சுரேஷ் பிரேமச் சந்திரன் குறிப்பிட்டார். 
 
 
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவுdசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார்.
 
 
2015 ஆம் ஆண்டுக்கு முன் வைக்கப்பட்டுள்ள வரவு செல வுத் திட்டம் முழுமையாக ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாளாக்குவதற்கான வரவு செலவுத் திட்டமே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கான வரவு செலவுத் திட்டம் இதுவல்ல.
 
17 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனூடாக நீதிமன்றம், பொதுச் சேவை, பொலிஸ் சேவை, இலஞ்ச ஒழிப்பு, மனித உரிமை, தேர்தல் ஆணையாளர் என்று அனைத்துமே அரசியல் மயமாக்கப்பட்டு ஒரு குடும் பத்தை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் என்று ஆகியுள்ளது. இதன் பின்னர் இவற்றின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் பல ஆயிரம் மில்லியன்களால் மக்களுக்கு என்ன பிரயோசனம்.
 
 
 
பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. வடக்கில் 6 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவம் என்று நிலை கொண்டுள்ளது. தென்பகுதியில் 666 பேருக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் உள்ளது. தமிழ் மக்களை இவ்வளவு மோசமான இராணுவ அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு என்ன அடிப்படை யில் நீங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கேட்பீர்கள்? இல்லையேல் என்ன அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்பீர்கள்?
 
 
பாகிஸ்தான், பர்மா, ஈராக், லிபியா போன்ற நாடுகளைப் போன்று எமது ஜனாதிபதியும் ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி பயணிப்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. இதனால் அந்த நாடுகளில் ஜனநாயகம் எவ்வளவு தூரம் அங்கு கேலிக்குள் ளாக் கப்படுகின்றது என்பதை யும் சிங்கள மக்கள் உணர வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கெதிராகத்தான் இந்த இராணுவம் செயற் படுவதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் யோசிக் கலாம். ஆனால் அது நாளை சிங்கள மக்களுக்கெதிராக வும் மாறும். வெலிவேரியா வில் தண்ணீர் கேட்ட மக்க ளுக்கு இலங்கை இராணு வம் கொடுத்த பரிசு என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
 
 
 
ஜனாதிபதி அம்பாந்தோட்டையை முன்னேற்றுவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்து வருகின்றார். அம்பாந்தோட்டையைத் தலைநகரமாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் யாவுமே சீனா வின் எதிர்கால இராணுவத் தேவைக்களுக்குப் பயன் படுத்துவதற்கே என்பதே பல ஆய்வாளர்களின் முடிவாக இருக்கின்றது.
 
 
இவை ஒருபுறமிருக்க யாழ். மாவட்டத்தின் வலி.வடக்குப் பகுதியில் 6 ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட ஏக்கர் காணியை இராணுவம் கபளீகரம் செய்துள்ளது. இங்கு தான் பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன அமையப் பெற்றுள்ளன. பலாலி விமான நிலையம் 1990 ஆம் ஆண்டு வரையில் கட்டுநாயக்கவிற்கு அடுத்த சர்வதேச விமான நிலையமாக இருந்து வந்தது. 
 
 
இங்கிருந்து தமிழ் நாட்டின் திருச்சிக்கு விமானப் போக்குவரத்து இருந்தது. இன்று புலம்பெயர்ந்திருக்கும் 10 லட்சம் பேர்களில் பெரும்பான்மையினர் வட மாகாணத்தை சேர்ந்தோர். பலாலி விமான நிலையம் ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுமாக இருந்தால் பெரும்பாலான புலம்பெயர் மக்களும், இந்திய மக்களும் பிரயாணம் செய்யும் விமான நிலையமாக இது மாற்றமடையும். 
 
 
இதனூடு வட மாகாணதத்தின் சுற்றுலாத்துறை முன்னேறுவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாரிய முதலீடுகள் இடம் பெறுவதற்குமான சாத்தியப்பாடுகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவ்வாறான வாய்ப்பான, சாத்தியப்படான இடங்களிற்கு தேவையான கட்டுமானங்களை அமைக்காமல் வர்த்தக ரீதியாக பொருத்தமற்ற இடங்களில் பல ஆயிரம் கோடிகளை தேவையற்ற விதத்தில் அரசு செலவு செய்கின்றது.
 
 
 
அரசினுடைய சிந்தனையில் மாற்றம் வேண்டும். அரசு அடக்குமுறைகளை கைவிட வேண்டும். தமிழ் மக்களை கெளரவமாக நடத்தக் கூடிய விதத்தில் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் குடி மக்கள். 
 
 
அவர்களுக்கும் பகிரப்பட்ட அடிப்படையிலான இறையாண்மை உண்டு. அவர்களுக்கு சுய நிர்ணய உரிமையுண்டு, சிங்கள மக்களுடன் சரிசமனாக அரசியல், பொருளாதார விடயங்களை செயற்படுத்தும் உரிமை உண்டு என்ற விடயங்களை முதலில் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் பிரதமர் லீகுவான்யூ சொன்னது போல் மகிழ்ச்சியான இலங்கையை பார்க்க முடியாது. எமது ஜனாதிபதி கூறுவது போன்று ஆசியாவின் அதிசயமாகவும் இதனை மாற்ற முடியாது  என்றார். 

 

http://onlineuthayan.com/News_More.php?id=473883600002178358

இப்போ கூட்டணியினர் என்ன பண்ண வேண்டும் என்றொரு கேள்வி உண்டு.தமிழரொருவரை போட்டியிட வைத்து அவர் பெறும் வாக்குகளை  தமிழர்கள் பிரிந்து சென்று வாழ வழங்கும் அனுமதியாகக் கருதி முழு உலகிற்கும் உணர்த்த வேண்டும் ஆனால் இந்தியாவிடம் கூட்டணி அறிவுறுத்தல் பெறுவதையும் அனுமதிக்க முடியாது.இது தான் சரியான பாதை.அரசியல் பண்ண வந்தால் நீதிபதியாகவோ வழக்குரைஞராகவோ இருக்க முடியாது.ஆகவே நல்ல அரசியல்வாதியாயிருங்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.