Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் இருந்து காப்பாற்றிய மகனை இராணுவத்திடம் பறிகொடுத்தேன்! – ஆணைக்குழு முன் தந்தை புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mullai-missing-witness-300-news.JPG

விடுதலைப் புலிகளிடமிருந்து மகனை பாதுகாப்பதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.ஆனால், விசாரணைக்கென்று பிடித்துச் சென்ற எனது மகனை இராணுவம் இன்னமும் விடுதலை செய்யவில்லை என முல்லைத்தீவு, உப்புமாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த கருப்பன் செல்லத்துரை என்ற குடும்பஸ்தர், இன்று காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்றும் முல்லைத்தீவில் இடம்பெற்ற போது அவர் முலம் சாட்சியமளிக்கையில்-

   

எனது மகனுக்கு அப்போது 26 வயது. படிக்கின்ற காலத்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் எனது மகனை வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள். எனது மகனுக்கு அடிக்கடி சுகமில்லாமல் வரும். தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மகனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகள், மகனுக்கு அடிக்கடி வருத்தம் வருவதால் விட்டுவிட்டார்கள். கொஞ்ச காலம் மகன் எங்களுடன் தான் இருந்தார். மகனை தொடர்ந்தும் முல்லைத்தீவில் இருந்தால் புலிகள் மீண்டும் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் 2005இல் நான் குடும்பத்துடன் மன்னாரிலுள்ள முருங்கன் பிரதேசத்திற்கு சென்றேன். அப்போது முருங்கனில் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட காலிமோட்டை முகாமில் வசித்து வந்தேன். அப்போது எங்களுடன் 100 குடும்பங்கள் வசித்து வந்தன.

கொஞ்ச காலம் முருங்கன் முகாமில் இருந்த நாங்கள் மீண்டும் முல்லைத்தீவுக்கு வரும்போது மகனை கூட்டிவந்தால் புலிகள் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மன்னாரிலேயே நண்பரின் வீடொன்றில் விட்டு விட்டு வந்தோம். அதன்பின்னர், 2009இல் இடம்பெற்ற யுத்தத்தினால் எங்களை செட்டிக்குளம், கதிர்காமநாதர் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது முருங்கனைச் சேர்ந்த எனது நண்பர் என்னைப் பார்ப்பதற்காக செட்டிக்குளம் கதிர்காமர் முகாமுக்கு வந்தார். அப்போது மகன் எங்கே என்று கேட்டதற்கு 'உன்னுடைய மகனை 2008இல் இராணுவம் பிடிச்சுக் கொண்டு போய்விட்டது' என்று கூறினார்.

கடைக்குப் போவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற எனது மகனை மன்னாரிலுள்ள இசைமாலைத்தாழ்வு இராணுவ முகாமுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக நண்பர் கூறினார். குறித்த இராணுவ முகாமில் சென்று விசாரித்த போது அதுபற்ற தெரியாது என்று அலட்சியமாக பதிலளித்தார்கள். இதுபற்றி முருங்கன் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது, நாங்கள் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எமது முறைப்பாட்டை ஏற்பதற்கு மறுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறினார்கள்.

அதன்படி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது எனது மகன் முல்லைத்தீவில் இருக்கவில்லை என்பதால் முறைப்பாடு பதிவு செய்ய முடியாது என அவர்களும் கைவிரித்து விட்டார்கள். எனது மகன் பற்றி எதுவிதமான தகவல்களும் இதுவரையும் கிடைக்கவில்லை. மகன் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் என்னுடைய மனைவி, மகனின் பிரிவை தாங்க முடியாது இறந்து போனார். மகன் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐ.எஸ்.ஆர்.சி உள்ளிட்ட அமைப்புக்களிடமும் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் முறையிட்டிருக்கிறேன்' என அவர் தொடர்ந்து கூறினார்.

அதேவேளை, நாங்கள் எங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என்று தேடி அலைந்து திரிந்து கொண்டு ஆணைக்குழு முன்னால் பொய்யா சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என மகனை காணாத தாயொருவர் ஆணைக்குழுவினரின் கேள்விக்கு விசனத்துடன் பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டிற்குள் இராணுவம் வந்ததும். எங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் இராணுவம் எடுத்துக் கொண்டது. அப்போது எனது மகன் ஜெபநேசன் காயமடைந்த நிலையில் இருந்தார். எங்களை ஓமந்தைக்கு 2009.04.21 ஆம் திகதி இராணுவம் கொண்டு சென்று அங்கு வைத்து மகனை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்றது. அப்போது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே ஏற்றிச் சென்றவர்கள் தான் இன்றுவரை தகவல் எதுவும் மகன் பற்றித் தெரியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் மகனை இராணுவம் கொண்டு சென்றதைக் கண்டீர்களா ? ஏன் பின் தொடரவில்லை? அங்கு என்ன நிலை இருந்தது? என்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டு சென்றனர். அதற்குப் பதிலளித்த குறித்த தாயார், கோபமடைந்தவராய் நாங்கள் பசி , பட்டினியுடன் போய்க் கொண்டிருக்கும் போது எப்படி எல்லாத்தையும் பார்ப்பது. அது ஓமந்தை என்று மட்டும் தெரியும் எப்படி இருந்தது என்று எல்லாம் தெரியாது. அத்துடன் பிள்ளையை எங்களிடம் இருந்து பிரித்து சென்றதும் இராணுவம் கூட்டிச் சென்றதையும் நேரடியாக காணாமலா இங்கு வந்து என்ன பொய்யா சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் என்று மிகவும் விரக்தியுடன் சாட்சியமளித்தார்.

இன்று சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்திற்கு எதிராகவே குற்றம்சாட்டினர். கடற்படை மற்றும் வெள்ளை வானில் கடத்தி சென்றவர்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அத்துடன் இராணுவத்திடம் வட்டுவாகலில் சரணடைந்தவர்கள் , நேரடியாக இராணுவத்திடம் கையளித்தவர்கள், பாதிரியார் பிரான்சிஸ்சுடன் சரணடைந்தவர்கள், மணலாற்றுக்கு சண்டைக்கு சென்ற மகன் காணாமல் போனார், தொழிலுக்கு போகும் போது காணாமல் போனார்கள், இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்ததை உறவினர்கள் கண்டனர் என்றும் வவுனியாவிற்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை என்றும் ஓமந்தையில் வைத்து பிள்ளைகளை பிரித்து எடுத்துச் சென்றனர் போன்ற சாட்சியங்களை உறவினர்கள் ஆணைக்குழு முன் வைத்தனர். மேலும் தங்களுக்கு அரச உதவிகள் எவையும் வேண்டாம் என்றும் தங்களுடைய உறவுகளை தேடித் தருமாறும் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=120013&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.