Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் இங்கிலாந்து ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 7  போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

 

இத் தொடர்  நவம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கி டிசம்பர் மாதம்16 ஆம் திகதி வரை  நடைபெறும்.

                    se_zps2c1acd21.jpg

 

 

7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்­டிகள் கொழும்­பிலும் 2 போட்­டிகள் பள்­ளே­க­லை­யிலும் ஒரு போட்டி அம்­பாந்­தோட்­டை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளன. அந்­த­வ­கையில் நவம்பர் 26 மற்றும் 29ஆம் திக­தி­களில் முதல் இரண்டு போட்­டி­களும் இடம்­பெற 3,4,5,6,7 ஆவது ஒருநாள் போட்­டிகள் முறையே டிசம்பர் 3,7,10,13,16ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

  • தொடங்கியவர்

ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஓய்வு
புதன்கிழமை, 05 நவம்பர் 2014

இலங்கையில் நடைபெறவுள்ள இங்கிலாலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கிண்ண தொடருக்கு அவர் பூரண உடற் தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டு ஓய்வு வழங்கப்பட்டுளளது. அவருடைய இடது முழங்காலில் சிறிய உபாதை ஒன்று ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த உபாதை மேலும் அதிகரிக்காமல் இருக்கவே இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி தமது இரு முன்னணி பந்துவீச்சாளர்களும் இல்லாமலேயே இலங்கையில் விளையாடவுள்ளது. ஸ்டுவோர்ட் ப்ரோட் ஏற்கெனவே சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில் அணியில் இடம்பெறவில்லை. அன்டர்சனின் இடத்திற்கு இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இம்மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து இலங்கைக்கு வரவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/132098-2014-11-05-07-52-37.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை குழாமில் மீண்டும் திலின, டில்ருவன்
2014-11-25 13:19:20

 

 

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 7 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இலங்கை குழாமில் சில வீரர்களுக்கு மீள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் கடைசியாக விளையாடிய தில்லின கண்டம்பிக்கு தெரிவாளர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்.
உள்ள10ர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் கணிசமான ஓட்டங்களை எடுத்துள்ளதனால் இந்த வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.


சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரர்களான ஜீவன் மெண்டிஸ், டில்ருவன் பெரேரா ஆகியோரும் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜீவன் மெண்டிஸ் கடைசியாக ஜூலை மாதம் விளையாடியிருந்தபோதிலும் டில்ருவன் பெரேரா 2008இலேயே கடைசியாக விளையாடியிருந்தார்.

இந்திய கிரிக்கெட் விஜயத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய குசல் ஜனித் பெரேராவை பரீட்சிக்கும் வகையில் தெரிவாளர்கள் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர்.


இலங்கையின் அதி சிறந்த மற்றும் சிரேஷ்ட சுழல்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் மீண்டும் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகர, துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால், சகலதுறை வீரர் ஆஷான் ப்ரியஞ்சன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு மேல் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஷமிந்த எரங்கவும் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


பந்துவீச்சுப் பாணியில் குறைகாணப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ள சச்சித்ர சேனாநாயக்க, இந்தியாவில் விசேட ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாகவும் இன்னும் 14 தினங்களில் அதன் அறிக்கை கிடைக்கும் எனவும் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பகலிரவு போட்டியாக நாளை நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கு நாளை மறுதினம் ஒதுக்கப்பட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல் மூன்று போட்டிகளுக்கான இலங்கை குழாம்:

ஏஞ்சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), திலக்கரட்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, குமார் சங்கக்கார (வி.கா.), மஹேல ஜயவர்தன, லஹிரு திரிமான்ன, ஜீவன் மெண்டிஸ், தில்லின கண்டம்பி, ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, அஜன்த மெண்டிஸ், ஷமிந்த எரங்க, தம்மிக்க பிரசாத், திசர பெரேரா, லஹிரு கமகே.
.....................
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7871#sthash.sflaVV0U.dpuf

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
 

 

இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு 15 பேரடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி நாளை புதன்கிழமை ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையிலேயே 15 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தினேஷ் சண்டிமல் மற்றும் நுவான் குலசேகரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 3 வருடங்களுக்குப் பின்னர் திலின கண்டம்பி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய தொடரில் பங்கேற்காத ரங்கன ஹேரத் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இலங்கை அணியின் விவரம் வருமாறு,

 

மெத்தியூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், குசால் பெரேரா, குமார் சங்கக்காரா, மஹேல ஜெயவர்தன, லஹிரு திரிமான்னே, ஜீவன் மெண்டிஸ், திலின கண்டம்பி, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ், சமிந்த எரங்க, தம்மிக்க பிரசாத், திசர பெரேரா, லஹிரு கமகே.

 

http://www.virakesari.lk/articles/2014/11/25/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • தொடங்கியவர்

இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பிக்க காலநிலை ஒத்துழைக்குமா ?
 

 

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அணி வெற்றியுடன் கணக்கை ஆரம்பிக்க காலநிலை ஒத்துழைக்குமா என ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இரு அணிகளுக்குமிடையிலான 7 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவுப் போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

இந்த தொடருக்கு முன் இடம்பெற்ற இரு பயிற்சி போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. 2 ஆவது பயிற்சிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் காலநிலையின் பங்கு மிக முக்கியமானதாய் அமைந்துள்ளது. இதனால் இப் போட்டி இடம்பெறுமா அல்லது கைவிடப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகின்றது.

அதேவேளை காலநிலை இடம்கொடுக்கும் பட்சத்தில் இலங்கை அணி வெற்றிக் கணக்குடன் தொடரை ஆரம்பிக்கும் எனவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் தருவாயில் அதற்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய எதிர்பார்ப்பில் இரு அணிகளும் இருக்கின்றன.

இலங்கை அணி சமீபத்தில் இந்தியா அணியுடனான தொடரில் 5 போட்டியிலும் தோற்றதில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்க்க இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளது.

இரு அணிகளும் இதுவரை 56 போட்டியில் மோதியுள்ளன. இரு அணிகளுமே தலா 28 போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/11/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா 50 ஓவர்களில் 317/6

  • தொடங்கியவர்

இங்கிலாந்து  292 out

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை
 

 

இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு டில்சான், பெரேரா ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 18.5 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. இலங்கை அணி 22.2 ஓவரில் 120 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது பெரேரா 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். அவர் 2 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

3 ஆவது விக்கெட்டுக்கு டில்சானுடன் ஜெயவர்தன ஜோடி சேரந்தார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களை குவித்தது. 88 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் டில்சான் ஆட்டமிழந்தார்.

ஜெயவர்தன தன் பங்குக்கு 58 பந்தில் 55 ஓட்டங்களை எடுத்தார். அணித் தலைவர் மெத்தியூஸ் 24 பந்தில் 33 ஓட்டங்களையும் மெண்டிஸ் 14 பந்தில் 30 ஓட்டங்களையும் குவிக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.

318 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை எடுத்தது 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொயின் அலி 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்சான் தெரிவுசெய்யப்பட்டார்.

7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/articles/2014/11/27/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சிறீலங்கா வெற்றி

  • தொடங்கியவர்

இங்கிலாந்துடனான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை வெற்றி
 

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

2mids9.jpg
கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்த அணி 43 ஓவர்களில் 185 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

அஜந்த மெண்டிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.  தம்மிக பிரசாத் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திலகரட்ன தில்ஷான் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலங்கை அடைந்தது.
மஹேல ஜயவர்தன 80 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும்   குமார் சங்கக்கார 93 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.


மலேஹ ஜயவர்தன இப்போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார். 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இலங்கை அணி 2:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

இத்தொடரின் 3 ஆவது போட்டி டிசெம்பர் 3 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7919#sthash.WPAiDk6V.dpuf

  • தொடங்கியவர்

எந்த ஒரு சவாலையும் அளிக்காமல் இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வி
121x3jq.jpg

 

கொழும்புவில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எந்த வித போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தாமல் படுதோல்வி அடைந்தது.

45 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் 43 ஓவர்களில் 185 ரன்களுக்கு இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 34.2 ஓவர்களில் 186/2 என்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குசல் பெரெரா, தில்ஷன் ஆகியோர் ஸ்கோர் 37ஆக இருந்த போது அவுட் ஆயினர். ஆனால் அதன் பிறகு சங்கக்காரா (67), ஜெயவர்தனே (77) ஆகியோர் எங்கு அடிக்கட்டும் என்று கேட்டு கேட்டு அடித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சிலும் ஆட்டத்திலும் உடல்மொழியிலும் எந்த வித போராட்டக் குணமும் இல்லை.

15-வது முறையாக சங்கக்காரா, ஜெயவர்தனே ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் சதக்கூட்டணி அமைத்தனர்.

 

சங்கக்காரா சரியான முறையில் ஆடவில்லை. அவருக்கு கிறிஸ் வோக்ஸ் தன் பந்து வீச்சில் கேட்ச் ஒன்றை கோட்டைவிட்டார். அப்போது சங்கக்காரா 36 ரன்களில் இருந்தார்.

ஆனால் ஜெயவர்தனே அபாரமான லாவகத்துடன் விளையாடினார். இருவரும் இணைந்து கடைசியில் 10 ஓவர்களில் 75 ரன்களை விளாசினர்.

டாஸ் வென்ற அலிஸ்டர் குக் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் ஆட முடியவில்லை என்பது இன்னொரு முறை நிரூபணமாகியுள்ளது. 37 பந்துகளில் 22 ரன்களை அவர் மிகவும் வலிநிறைந்த ஒரு ஆட்டமுறையில் எடுத்தார். கடைசியில் தில்ஷன் பந்தை ஒரு மொக்கை ஸ்வீப் அடி டீப் ஸ்கொயர்லெக் திசையில் கேட்ச் கொடுத்தார்.

 

முதல் ஒருநாள் போட்டியில் அபார சதம் கண்ட மொயின் அலி இன்று 2 ரன்னில் தில்ஷன் பந்தில் பவுல்டு ஆனார். மேலேறி வந்து ஆட முயன்றார் பந்து கால்காப்பில் பட்டு ஸ்டம்பிற்கு சென்றது. தில்ஷன் மொத்தம் 9 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியில் அலி, பெல், குக், மோர்கன் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவி பொபாரா 69 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 51 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். ஜோ ரூட் 42 ரன்களை எடுத்தார். மொத்தமே, 185 ரன்களில் இங்கிலாந்து 8 பவுண்டரிகளையே அடிக்க முடிந்தது.

அஜந்தா மெண்டிஸ் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தம்மிக பிரசாத் 2 விக்கெட்டுகளையும், ஹெராத், மேத்யூஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஜெயவர்தனே தேர்வு செய்யப்பட்டார். 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. மொயின் அலி போல் அனைவரும் விளையாடவில்லை எனில் இங்கிலாந்து 7-0 என்று தோல்வியடையவே வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

 

இன்றைய தோல்வியை அடுத்து முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் “டியர் அலிஸ்டர், இந்த சீசனில் இங்கிலாந்தின் வாய்ப்புகள் குறித்து நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், முதலில் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6646690.ece

  • தொடங்கியவர்

இலங்கை - இங்கிலாந்து 3 ஆவது போட்டி இன்று மஹேல ஜயவர்தன விளையாடமாட்டார்

 

ஹம்­பாந்­தோட்­டையில் இன்று நடை­பெ­ற­வுள்ள இங்­கி­லாந்­துக்கு எதி­ரான மூன்­றா­வது ஒருநாள் சர்­வ­தேச போட்­டியில் இலங்கை வீரர் மஹேல ஜய­வர்­தன விளை­யாடமாட்டார்.

ஏழு போட்­டி­களைக் கொண்ட இத்­தொ­டரின் முதல் இரண்டு போட்­டி­களில் அரைச் சதங்­களைக் குவித்து இலங்­கையின் வெற்­றிக்கு முக்­கிய பங்­காற்­றிய மஹேல ஜய­வர்­தன, மூன்­றா­வது போட்­டி­யி­லி­ருந்து விடுகை கோரி­யுள்ளார்.

 

இரண்­டா­வது போட்­டியில் ஆட்ட­நா­ய­க­னான மஹேல ஜய­வர்­தன, தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக விடுகை கோரி­யுள்ளார்.

இதனை உறுதி செய்த ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறு­வ­னத்தின் ஊடகப் பிரிவு, அவ­ருக்குப் பதி­லாக ஹம்­பாந்­தோட்­டையில் இன்று நடை­பெ­ற­வுள்ள (பக­லி­ரவு) மூன்­றா­வது போட்­டிக்­கான குழாமில் 25 வய­தான சக­ல­துறை வீரர் ஆஷான் பிரி­யஞ்சன் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டது.

எவ்­வா­றா­யினும் குழா­முக்கு மீள­ழைக்­கப்­பட்­டுள்ள 32 வய­தான இட­துகை துடுப்­பாட்ட வீரர் தில்­லின கண்­டம்பி இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­பட்சம் இருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

 

எனினும் முன்­வ­ரி­சையில் மஹே­லவின் இடத்தில் துடுப்­பெ­டுத்­தா­டு­வாரா அல்­லது மத்­திய வரி­சையில் இடம்­பெ­று­வாரா என்­பது திட்­ட­வட்­ட­மாகக் கூற­மு­டி­யா­துள்­ளது.

38 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் 870 ஓட்­டங்­களை மொத்­த­மாகப் பெற்­றுள்ள திலின கண்­டம்பி, ஸ்கொட்­லாந்­துக்கு எதி­ராக எடின்­பேர்கில் 2011இல் நடை­பெற்ற போட்­டி­யி­லேயே கடை­சி ­யாக விளை­யா­டி­யி­ருந்தார்.

 

இதே­வேளை, இங்­கி­லாந்­து­டான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்­னிட்டு அறி­விக்­கப்­பட்­டுள்ள இலங்கை குழாம் முதல் மூன்று போட்­டி­க­ளுக்­கா­ன­தாகும்.

நான்­கா­வது போட்­டிக்­கான குழாமில் மஹேல பெய­ரி­டப்­பட் டால் அவர் விளை­யா­டு­வது நிச்­சயம் என இலங்கை அணி முகா­மை­யாளர் மைக்கல் டி சொய்ஸா தெரி­வித்தார்.

முதலிரண்டு போட்­டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­ பெற்றதைப் போன்று இந்தப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற முடி யும் என நம்­பு­வ­தாக அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

இலங்கை குழாமில் தில­க­ரட்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, குமார் சங்­கக்­கார, லஹிரு திரி­மான்ன, ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), திலின கண்­டம்பி, ஜீவன் மெண்­டிஸ், திசர பெரேரா, தம்­மிக்க பிரசாத், ரங்­கன ஹேரத், அஜந்த மெண்டிஸ், டில்­ருவன் பெரேரா, ஆஷான் பிரி­யஞ்சன், ஷமிந்த எரங்க, லஹிரு கமகே ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

ஹம்­பாந்­தோட்­டையில் முதல் தட­வை­யாக இங்கிலாந்து

இலங்கைக்குப் பல தடவைகள் கிரிக்கெட் விஜயங்கள் செய் துள்ள இங்கிலாந்து அணி, ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் விளையாடவிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7971#sthash.TzYvZI6M.dpuf

  • தொடங்கியவர்

18dd7s.jpg

 

இன்று அம்பாந்தோட்டை

  • தொடங்கியவர்

இலங்கைக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து
s4rhwn.jpg

 

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏழு போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று  விளையாடி வருகிறது.
இதில் முதலிரு போட்டிகளில் வெற்றிபெற்ற இலங்கை  அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

ஆட்டம் ஆரம்பமானது முதல் மழையின் குறுக்கீடு காணப்பட்டதால் ஆட்டம் தடைப்பட்டு போட்டி 35 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

 

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைப் பெறாத பட்சத்தில் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அணி 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் பின்னணி துடுப்பாட்ட வீரர்களான சங்கக்கார, திரிமன்னே மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.
35 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது.

 

இலங்கை அணி சார்பாக சங்கக்கார 63 ஓட்டங்களையும் லஹிரு திரிமன்னே 62 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 35 ஓவர்களில் 236 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் குக் 34 ஓட்டங்களையும் மொயின் அலி 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுவான ஆரம்பத்தை அமைத்துக் கொடுத்தனர். இங்கிலாந்து அணியின் மத்தியதர துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர்.

பின்னர், ஜோஸ் பட்லரும், ஜோ ரூட்டும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல, இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

 

ஜோ ரூட் 48 ஓட்டங்களுடனும் பட்லர் 55 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

இத் தொடரின் 3 போட்டிகளின் நிறைவில் இலங்கை அணி 2-1 என முன்னிலைபெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

  • தொடங்கியவர்

4 ஆவது போட்டியில் குக்கிற்கு தடை
 

 

இலங்கை அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 4ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டயர் குக்கிற்கு தடைவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் 20 நிமிடங்கள் தாமதமாக பந்து வீசியதற்காகவே 4 ஆவது போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியமைக்காக குக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://www.virakesari.lk/articles/2014/12/04/4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

4 வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து தற்சமயம் துடுப்பெடுத்தாடுகிறது

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 265 allout

  • தொடங்கியவர்

6 விக்கெட்களால் இங்கிலாந்தை வென்றது இலங்கை
 

இங்­கி­லாந்து அணி­யு­ட­னான 4 ஆவது ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி 6 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

wjz52v.jpg
கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ அரங்கில் இன்று நடை­பெற்ற இப்­போட்­டியில் இலங்கை அணி 266 ஓட்­டங்கள் எனும் தனது வெற்றி இலக்கை 2 பந்­து­வீச்­சுகள் மீத­மி­ருந்த நிலை யில் அடைந்­தது.

 

இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து அணி  50 ஓவர்­களில் 265 ஓட்­டங்­க­ளுடன் சகல விக்­கெட்­க­ளையும் இழந்­தது. ஜேம்ஸ் டெய்லர் 109 பந்­து­களில் 2 சிக்­ஸர்கள் 6 பவுண்­ட­றிகள் உட்­பட 90 ஓட்­டங்­களைக் குவித்தார்.

vqjn6h.jpg

 

இலங்கை அணியின் பந்­து­வீச்­சா­ளர்­களில்  ரங்­கன ஹேரத் 36 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக் ­கெட்­களை வீழ்த்­தினார். அஜந்த மெண்டிஸ் 56 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் தில­க­ரட்ன தில்ஷான் 64 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் வீழ்த்­தினர்.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி 69 ஓட்­டங்­களைப் பெற்ற நிலையில் முதலாவது விக்­கெட்டை இழந்­தது. அதன் பின் குமார் சங்­கக்­கா­ரவும் மஹேல ஜய­வர்­த­னவும் 3 ஆவது விக்­கெட்­டுக்­காக 96 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணியை பலப்­ப­டுத்­தினர்.

 

மஹேல ஜய­வர்­தன 50 பந்­து­களில்  44 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். குமார் சங்­கக்­கார 105 பந்­து­களில் 86 ஓட்­டங்­களைக் குவித்தார். அணித்­த­லைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் 60 பந்­து­களில் ஆட்­ட ­மி­ழக்­காமல் 51 ஓட்­டங்­க­ளையும் வல­ஹிரு திரி­மான்ன 21 பந்­து­களில் ஆட்­ட­மி­ழக்­கா மல் 19 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். இப்­போட்­டியின் ஆட்­ட­நா­ய­க­னாக குமார் சங்­கக்­கார தெரி­வானார்.

7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இலங்கை அணி 3–1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8030#sthash.OWFb6L25.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

http://www.dailymotion.com/video/x2c1xgi_sa4th_sport

 

4 வது ஒரு நாள் போட்டியில் சங்ககாரா அடித்த 86 ரன்கள்

  • தொடங்கியவர்

இலங்கை - இங்கிலாந்து 5 ஆவது ஒருநாள் போட்டி இன்று : களமிறங்குகிறார் சேனாநாயக்க
 

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் பந்துவீச்சுக்கு தடைக்குள்ளான சச்சித்ர சேனாநாயக்க இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.


இப் போட்டி கண்டி பள்ளேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 4 போட்டிகளில் இலங்கை அணி 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதனடிப்படையில் இத் தொடரில் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று இடம்பெறுமம் 5 ஆவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கிமானதொன்றாக அமைந்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடர் இலங்கை வசமாகும். எனவே இங்கிலாந்து அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்து அணியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை. இலங்கை அணியில் ஹேரத்திற்கு பதிலாக பந்து வீச்சு தடை நீக்கப்பட்டுள்ள சச்சிதர சேனாநாயக்க களமிறங்குகிறார்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா 239 ALLOUT

  • தொடங்கியவர்

24fl6yx.jpg

 

கண்டியில் தொடர்ந்து மழை பெய்வதால் போட்டி நாளை நடைபெறும்.

  • தொடங்கியவர்

இலங்கை - இங்கிலாந்து போட்டி மழையால் பாதிப்பு : ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும்
 

35hqys7.jpg

கண்டி பள்ளேகலயில் நேற்று இடம்பெற்ற இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

கொட்டியதால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதையடுத்து விதிமுறைப்படி இந்த ஆட்டம் மாற்று நாளுக்கு (அதாவது இன்று) தள்ளிவைக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 240 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும்.

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 5 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பள்ளேகலயில் நேற்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடாத நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி விதிமுறைப்படி இந்த ஆட்டம் மாற்று நாளுக்கு (அதாவது இன்று) தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 240 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

இதேவேளை முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 91 ஓட்டங்களையும் அணித் தலைவர் மெத்யூஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 47 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே இலங்கை அணிக்கெதிராக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.