Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் - பசில்

Featured Replies

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் தனது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக் ஷ தெரிவித்தார்.

fffffffffffffffffffff.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமென்று நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவை வழங்குவதன் மூலம் தமது நேர்மையை வெளிக்காட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு சாதகமான ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலம் முழுவதும் த.தே. கூட்டமைப்பு தவறான தீர்மானங்களையே எடுத்தது. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆம் ஆண்டு தேர்தலில் அத்தனகெலயை விட வடக்கின் பல இடங்களில் கூடிய சதவீதங்களில் வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு விசேட தன்மை ஆகும். எனினும் அவ்வாறு வெற்றியீட்டிய சந்திரிக்கா அந்த ஆணையின் படி செயற்படாமல் போய்விட்டார். அந்த சந்தர்ப்பத்தை தவிர எந்த ஒரு தேர்தலிலும் த.தே. கூட்டமைப்பு ஜனாதிபதிகளுக்கு உதவி செய்ததில்லை.

கடந்த முறை முன்னாள் இராணுவ தளபதிக்கே அவர்கள் ஆதரவு வழங்கினர். எனவே எதிர்வரும் தேர்தலில் கடந்த காலங்களை போலவே தவறான தீர்மானங்களை எடுக்காமல் கூட்டமைப்பு தீர்க்க தரிசனமான தீர்மானம் ஒன்றை எடுக்குமென நம்புகின்றோம். குறைபாடுகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. குறைபாடுகள் அவர்களிடத்திலும் இருக்கலாம். எம்மிடத்திலும் இருக்கலாம். அவற்றை விடுத்து எதிர்காலத்தை நோக்கி முன்செல்லுவதே முக்கியமானதாகும்.

அந்த வகையில் சிறந்த ஆரம்பம் ஒன்றுக்கு அடித்தளமிடுவதற்கு கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் கூட்டமைப்பு ஒரு நல்ல செய்தியை விடுக்கலாம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு தான் கூட்டமைப்பினர் இதுவரை எவ்விதமான உதவிகளையும் செய்ததில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ உதவியதில்லை. பாராளுமன்ற தெரிவு குழுவிற்கும் வரவில்லை. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும் உதவி செய்யவில்லை. அபிவிருத்தியிலும் பங்கெடுக்கவில்லை.

யாழ்தேவி ரயில் சேவை ஆரம்ப நிகழ்விற்கும் வரவில்லை. வரலாறு இவ்வாறு தான் உள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தி கூட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விற்கு உதவி செய்ய வேண்டும். இந்த மகத்தான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டமைப்பினர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

இம்முறை கூட்டமைப்பு தவறுகளை விடாமல் சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் யதார்த்த பூர்வமான மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான தீர்வு ஒன்றை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளலாம். அந்த சந்தர்ப்பம் உருவாகுவதற்கு ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

 

http://virakesari.lk/articles/2014/11/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தவுக்கு ஆதரவு; பரிசீலிக்கப் போகிறாராம் சம்பந்தன்!

 

 

Sampanthan-Sumanthiran-mahinda-300x229.jஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்‌ச கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

நாங்கள் இதுவரை அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வரவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது தவறானது.

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்தே வந்துள்ளோம்.

எமது மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும், மீள்குடியேற்றம் பற்றியும் தத்தமது பகுதிகளுக்கு எமது மக்கள் திரும்புவது குறித்தும் இராணுவமயப்படுத்தலைத் தவிர்ப்பது பற்றியெல்லாம் எப்போதுமே அரசுடன் பேசி ஒத்துழைத்து இணக்கத் தீர்வு காண நாம் தயாராகவே இருந்து வந்துள்ளோம்.

இவற்றுக்கு மேல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அமைதித் தீர்வு காணுதல் போன்றவை தொடர்பிலும் அரசுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காட்டிச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்து வந்துள்ளோம்.

அதற்கான எமது தற்றுணிபை, பற்றுறுதியை, திடசங்கற்பத்தை நாம் வெளிப்படுத்தியே வந்தோம்.

அதற்காக இந்த அரசுடன் நீண்டகாலமாக பல சுற்றுக்கள் பேச்சுக்களையும் நடத்தினோம். ஆனால் அரசுதான் ஒரு தலைப்பட்சமாக அந்தப் பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டது. எனவே இந்த அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.

இப்போது ஜனாதிபதித் தேர்தலில் எமது ஒத்துழைப்பைக் கோருவது பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாகவே நாம் அறிகிறோம். உத்தியோகபூர்வமாக அத்தகைய அழைப்பு ஏதும் எமக்கு விடுக்கப்படவில்லை.

எனினும் அப்படி ஓர் அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஒரேயடியாக நிராகரித்து விடமாட்டோம். முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன் பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.

http://tamilleader.com/?p=43597

நடுநிலை மனதுடன் அத்தகைய கோரிக்கையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து நாம் ஒரு தீர்க்கமாக முடிவை எடுப்போம் என்றார் இரா.சம்பந்தன் எம்.பி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.