Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இனப் பரம்பலை மாற்றியமைக்கிறது அரசு ; சாடுகிறார் வடக்கு முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fd7d98b309566abe8c0ad6d88d3df774.jpg

 வடமாகாண இனப்பரம்பலையே மாற்றியமைத்துப் பெரும்பான்மையினரை உள்நுழைத்து, கிழக்கு மாகாணம்போல பெரும்பான்மையினரை வடக்கிலும் பெருவாரியாகக் குடியிருத்த இராணுவம் மூலமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசாங்கம் மனமுவந்து எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
 
அங்கு அவர் மேலும் கூறியதாவது 
 
 
இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சார்பாக 1987 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. இதன்படி, அங்கு ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை. அனைத்து அதிகாரங்களும் இலங்கை மத்திய அரசின் கையிலேயே உள்ளது. இதனால், வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக எங்களால் பாடுபட முடியவில்லை. 
 
இப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எங்களை சிங்கள அரசு செயற்பட விடாமல் தடுத்து வருகிறது. இதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோளாகவும் உள்ளது. அதிகாரமில்லாத வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக ஏன் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இது தமிழ் பேசும் மக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர் பகுதியில் சிங்களவர் 5 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்து விட்டது என்றார்.
 
தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் 13வது திருத்தச் சட்டமானது மேலும் திருத்தியமைக்கப்பட்டாலும் அது எமக்கு நன்மை பயக்காது. 
 
யாப்பின் அடிப்படை ஒற்றையாட்சியில் இருந்து மாற்றப்பட வேண்டும். எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோர, கொண்டுவர இந்திய அரசாங்ககத்திற்குத் தார்மீக உரித்து உள்ளது என்பதைக்கூறி வைக்கின்றேன்.
 
 
அரசு மனமுவந்து அதிகாரங்களைப் பகிரமுன் வந்தால் தான் மாகாணங்கள் தம் மக்கள்  நலனுக்காகப் பாடுபடலாம். வடமாகாண இனப்பரம்பலையே மாற்றியமைத்துப் பெரும்பான்மையினரை உள்நுழைத்து, கிழக்கு மாகாணம்போல பெரும்பான்மையினரை வடக்கிலும் பெருவாரியாகக் குடியிருத்த இராணுவம் மூலமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசாங்கம் மனமுவந்து எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க 
முடியாது. அது தான் தற்போதைய நிலை.சிங்கள அரசு எங்களை வடக்கு மாகாணத்தில் செயற்பட விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமின்றி அதிகாரத்தை தம்வசப்படுத்தி தொடர்ச்சியாக எம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கவே அது முயன்று வருகிறது என்றார்.
 
 
vigneshwaran%20speech.jpg

http://onlineuthayan.com/News_More.php?id=567593623410571889

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.