Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NZ 246/5

  • Replies 827
  • Views 43.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

46 ஓவர்களில் 256/ 6 . கோரி அண்டேர்ஸன் இன்னும் நிற்கிறார். 


ரகு, இன்று பங்களாதேஷ் வென்றால் ஸ்ரீலங்கா இந்தியாவோடு கால் இறுதி போட்டியில் விளையாட வேண்டும்


NZ 219/5

 

 

நன்றி நவீனன்,

 

இந்தியாவா தென்னாபிரிக்காவா என்று வந்தால் தென்னாபிரிக்காவே இலங்கைக்கு இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

 

இந்தியாவின் ரோகித்தும், கோலியும் இலங்கை பந்துவீச்சாளர்களைக் கண்டாலேயே போமுக்கு வந்துவிடுவார்கள். தென்னாபிரிக்காவின் டிவில்யர்ஸைக் கழற்றிவிட்டால் அதன்பிறகு இலகு.

 

எப்படிப் பார்த்தாலும் திரிசங்கு சொர்க்கம்தான் இலங்கைக்கு ! அநேகமாக காலிறுதிதான் இலங்கை விளையாடும் இறுதிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

279/7 after 48.1 overs

New Zealand beat Bangladesh by 3 wickets

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் சொதப்பி விட்டார்கள் வங்கப் புலிகள். 

 

நவீனன், 

 

இப்போது சொல்லுங்கள். இலங்கையுடன் யார் காலிறுதியில் விளையாடப் போகிறார்கள் ? தென்னாபிரிக்காவா???

  • தொடங்கியவர்

SL v SA 18 Mar SCG

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா முதன் முதலில் தனது ஆட்டத்தைத் தொடங்கியது தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2000 இல். அன்று இலங்கை தென்னாபிரிக்காவை வீழ்த்தியது.

 

உலக சாதனையான 624 ஓட்டங்களை மஹேலவுடன் சேர்ந்து குவித்தது தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2006 இல்.அன்றும் தென்னாபிரிக்கா தோற்றது.

 

இறுதியாக தன து அட்டத்தை (??? ) முடித்துக்கொள்ளப்போவதும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக!!!

 

என்ன சொல்ல வருகின்றேன் என்று புரிகிறதா எவருக்காவது ???? 

  • தொடங்கியவர்

46 ஓவர்களில் 256/ 6 . கோரி அண்டேர்ஸன் இன்னும் நிற்கிறார். 

 

 

நன்றி நவீனன்,

 

இந்தியாவா தென்னாபிரிக்காவா என்று வந்தால் தென்னாபிரிக்காவே இலங்கைக்கு இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

 

இந்தியாவின் ரோகித்தும், கோலியும் இலங்கை பந்துவீச்சாளர்களைக் கண்டாலேயே போமுக்கு வந்துவிடுவார்கள். தென்னாபிரிக்காவின் டிவில்யர்ஸைக் கழற்றிவிட்டால் அதன்பிறகு இலகு.

 

எப்படிப் பார்த்தாலும் திரிசங்கு சொர்க்கம்தான் இலங்கைக்கு ! அநேகமாக காலிறுதிதான் இலங்கை விளையாடும் இறுதிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

 

இறுதியில் சொதப்பி விட்டார்கள் வங்கப் புலிகள். 

 

நவீனன், 

 

இப்போது சொல்லுங்கள். இலங்கையுடன் யார் காலிறுதியில் விளையாடப் போகிறார்கள் ? தென்னாபிரிக்காவா???

 

இன்னும் எதுவும் திடமாக சொல்லமுடியாது. இப்போ ஸ்ரீலங்கா 8 புள்ளிகளுடன் 2ம் இடத்தில், ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் 3ம் இடத்தில். ஆனால் ஆஸ்திரேலியா v ஸ்கொட்லாந்து மேட்ச் இருக்கு. அதில் ஆஸ்திரேலியா வென்று 2 புள்ளிகளை பெறும்போது ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு போய்விடும் :D  ஸ்ரீலங்கா 7 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு வரும். அப்போ ஸ்ரீலங்கா v தென் ஆப்ரிக்கா தான் கால் இறுதி போட்டி.

 

உங்கள் கருத்துதான் எனதும் அநேகமாக அதுதான் ஸ்ரீலங்காவின் இறுதி போட்டி இந்த உலக கிண்ணத்தில் :o  மோசமான பந்துவீச்சு, களதடுப்பு இது இரண்டும்தான் காரணம். எது எப்படியோ இப்படியான போட்டிகளில் எதுவும் நடக்கலாம்.

 

சங்கா முதன் முதலில் தனது ஆட்டத்தைத் தொடங்கியது தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2000 இல். அன்று இலங்கை தென்னாபிரிக்காவை வீழ்த்தியது.

 

உலக சாதனையான 624 ஓட்டங்களை மஹேலவுடன் சேர்ந்து குவித்தது தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2006 இல்.அன்றும் தென்னாபிரிக்கா தோற்றது.

 

இறுதியாக தன து அட்டத்தை (??? ) முடித்துக்கொள்ளப்போவதும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக!!!

 

என்ன சொல்ல வருகின்றேன் என்று புரிகிறதா எவருக்காவது ???? 

 

வடிவாக விளங்குது :icon_mrgreen::lol: 

 

  • தொடங்கியவர்

பதறவைத்த வங்கதேச அணி: நியூஸி.க்கு 'பரபரப்பு' வெற்றி
 

 

வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், நியூஸிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

49-வது ஓவர் வரை பரபரப்பாக நீண்ட இந்த ஆட்டத்தில், வங்கதேசத்தின் திறமையான பந்துவீச்சையும் மீறி நியூஸிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துவக்க வீரர்களாக கப்தில், மெக்கல்லம் களமிறங்கினர். ஷகிப் அல் ஹசன் வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்க முடியாமல் போனாலும், 3-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியோடு 16 ரன்களைச் சேர்த்தார் கப்தில்.

 

 

ஆனால் 5-வது ஓவரில் மெக்கல்லம், வில்லியம்சன் என நியூஸிலாந்து நம்பிக்கை நட்சத்திரங்கள் இருவரையும் ஷகிப் அல் ஹசன் பெவிலியனுக்கு அனுப்பினார்.

நிலமையை உணர்ந்து ஸ்கோரை நிலைபடுத்தும் வேலையில் கப்தில், டெய்லர் இணை இறங்கியது. வங்கதேசத்தின் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து வீரர்களால் தேவைக்கேற்ற ரன்களைக் கூட சேர்க்க முடியாமல் போனது.

 

விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடிய கப்டில் 88 பந்துகளில் சதத்தை எட்டினார். 105 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் டெய்லர் 82 பந்துகளில் அரை சதம் எட்டினார். கப்திலை தொடர்ந்து வந்த எல்லியட் பவுண்டரி சிக்ஸர்கள் என விளாசினாலும் தேவையான ரன்கள் ஒரு ஓவருக்கு 6-க்கும் அதிகமாக மாறியது.

34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த எல்லியட் 39-வது ஓவரில் ஆட்டமிழக்க, டெய்லர் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆண்டர்சன், ரோஞ்சி இருவருமே அதிரடியாக ஆட முயற்சித்தாலும், அது தேவைக்கு குறைவாகவே இருந்தது.

 

ஆண்டர்சன் நியூஸிலாந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் 20 ரன்கள் தேவையாயிருக்க, களமிறங்கிய வெட்டோரி, அதிரடியாக ஒரு சிக்ஸர் அடித்து பதற்றத்தை தணித்தார்.

 

மறுமுனையில் இருந்த சவுத்தீ, 49-வது ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் அணியை இலக்கை எட்டி வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.

முன்னதாக, டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. வங்கதேச துவக்க வீரர் இம்ருல் 2 ரன்களுக்கும், இக்பால் 13 ரன்களுக்கும் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். பின்பு சுதாரித்து ஆடிய வங்கதேசம், மஹமதுல்லா, சவும்யா சர்க்கார் இருவர் மூலமாக சீராக ரன் சேர்த்தது.

55 பந்துகளில் அரை சதம் எடுத்த சவும்யா, அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த மஹமதுல்லா 63 பந்துகளில் அரை சதம் எட்டினார். பேட்டிங் பவர்ப்ளே எடுத்த ஓவரில், ஷகிப் அல் ஹசன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரஹிமும் 15 ரன்களுக்கு வீழ்ந்தார்.

 

40 ஓவர்களில் 184 ரன்களை மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணிக்கு மஹமதுல்லா தனது அதிரடியான ஆட்டத்தால் நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் சபீர் ரஹ்மானும் அதிரடிக்கு ஈடுகொடுத்து தன் பங்குக்கு பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார்.

 

111 பந்துகளில் மஹமதுல்லா சதத்தை எட்டினார். சென்ற போட்டியில் இவர் எடுத்த சதம் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சதத்தோடு ஓயாமல் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்த வண்ணம் மஹமதுல்லா ரன் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 288 ரன்களைக் குவித்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 128 ரன்களை எடுத்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6990248.ece

  • தொடங்கியவர்

காலிறுதியில் களமிறங்குவார்களா மேத்யூஸ், ஹேராத்?

 

உலகக்கிண்ணத் தொடரில் அசத்தி வரும் இலங்கை அணி, வீரர்களின் காயத்தால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

உலகக்கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 8 புள்ளிகளுடன், நியூசிலாந்துக்கு அடுத்து 2ஆவது இடத்தில் இருக்கிறது.

 

இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் காயமடைந்தார். இருப்பினும் அவர் காலிறுதிப் போட்டியில் களமிறங்குவதில் சிக்கல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவரது காயம் குறித்து ஸ்கான் செய்து பார்த்ததில் பெரிய பிரச்சினை ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் காயம் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடாத முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் 80 சதவீதம் காலிறுதியில் விளையாட வாய்ப்பிருப்பதாக தொடக்க ஆட்டக்காரர் திரிமான்னே தெரிவித்துள்ளார்.

 

வருகின்ற 18ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

 

http://yarlsports.com/?p=1413&cat=16

  • தொடங்கியவர்

Afghanistan 111/7
v
England 101/1 (18.1/25 ov, target 101)

England won by 9 wickets (with 41 balls remaining) (D/L method)

 

ஏனைய போட்டிகள் முடிந்த உடன் போட்டி போட்டு முடிவுகளை தரும் தமிழ் இணையங்கள் இந்த போட்டியை இது வரை கண்டுகொள்ளவில்லை :o:lol:

இங்கிலாந்து கிரிக்கெட்க்கு கிடைத்த கௌரவம் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

40 ஆண்டில் கண்டிராத சோகத்துடன் விடைபெற்ற இங்கிலாந்து
 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 40 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை கண்டிராத சோகத்துடன் இலங்கிலாந்து அணி விடைபெற்றது.

எனினும், 38-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றிருக்கிறது.

 

காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இங்கிலாந்து, தனது கடைசி லீக் ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் 6 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை மட்டுமே வீழ்த்தியது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.

 

40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி, டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு எதிராக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாததோடு, அடுத்த சுற்றுக்கும் முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை என்பது அந்த அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகம் அளிக்கும் அம்சம்.

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 36.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது 3 முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணியின் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபியுல்லா 30 ரன்கள் எடுத்தார்.

 

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான், போபாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 25 ஓவர்களில் 101 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி, 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இயான் பெல் 52, ஜேம்ஸ் டெய்லர் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 

http://tamil.thehindu.com/sports/40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6991007.ece

 

  • தொடங்கியவர்

21awlrk.jpg

  • தொடங்கியவர்

இந்தியா
v
சிம்பாவே
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)

ஆஸ்திரேலியா
v
ஸ்காட்லாந்து
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

ZIM 287

IND 69/2 after 16 overs

SCO 130

AUS 13/1 after 4 overs

  • தொடங்கியவர்

"டெய்லர்"னா தைப்பதோடு நிறுத்திக்கனும்.. இப்படியா "கிழி கிழி"ன்னு கிழிப்பது...!

 

ஆக்லாந்து: ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரன்டன் டெய்லர், இன்று ஆக்லாந்து மைதானத்தில் வைத்து இந்தியப் பந்து வீச்சை கிழி கிழியென்று கிழித்தெடுத்து விட்டார். அவரது அதிரடி, சரவெடி பேட்டிங்குக்கு முன்பு இந்தியப் பந்து வீச்சாளர்கள் பெரும் கலவரமடைந்து விட்டனர். இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடருடன் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டெய்லர் அறிவித்துள்ளார். தனது இன்றைய கடைசிப் போட்டியில் பல சாதனைகளைப் படைத்து விட்டார்.

இன்றைய போட்டியில் டெய்லரின் பேட்டிங் மிகப் பிரமாதமாக அமைந்திருந்தது, ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருந்தது.

 

ஒரு வெற்றி மட்டுமே

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்றுள்ளது. இன்றைய போட்டிதான் அதற்கு கடைசி லீக் போட்டியாகும். இப்போட்டியுடன் அது உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விடைபெறுகிறது.

 

கடைசிப் போட்டியில் களேபரம்

இன்றைய கடைசிப் போட்டியில் களேபரப்படுத்தி விட்டார் டெய்லர்.

இந்தியப் பந்து வீச்சை தவிடுபொடியாக்கிய அவர் கிடைத்த பந்தையெல்லாம் ரன் மழையாக்கி இந்திய பவுலர்களை முதல் முறையாக இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்.

 

அடித்த அடியைப் பார்த்தால்

டெய்லரும், சீன் வில்லியம்ஸும் விளையாடிய விதத்தைப் பார்த்தபோது ஜிம்பாப்வே அணி 300 ரன்களைத் தொட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அந்த அளவுக்கு இந்தியப் பந்து வீச்சைப் பதம் பார்த்து விட்டது ஜிம்பாப்வே.

 

டெய்லர் ருத்ரதாண்டவம்

குறிப்பாக கேப்டன் டெய்லரின் ஆட்டம்தான் பேயாட்டமாக இருந்தது. ஆரம்பத்தில் சற்று கட்டையைப் போட்ட டெய்லர் பின்னர் பிரித்தெடுக்க ஆரம்பித்து விட்டார்.

 

சொல்லிச் சொல்லி அடி

ஜடேஜா மற்றும் அஸ்வின் பந்து வீச்சை அனாயசமாக எதிர்கொண்டு அடித்து ஆடினார் டெய்லர். இதனால் இவர்களது ஓவர்களில்தான் அதி ரன்களை அள்ளினார் டெய்லர்.

 

அராஜக ரன் குவிப்பு

110 பந்துகளைச் சந்தித்த டெய்லர் 138 ரன்களைக் குவித்துத்தான் ஓய்ந்தார் டெய்லர்.

அவர் சந்தித்த பந்துகளை விட அந்த பந்துகளுக்கு நேர்ந்த கதிதான் முக்கியமானது. ஒவ்வொரு பந்தையும் ரசித்து ரசித்து அடித்து வெளுத்தார் டெய்லர் (எந்த வேலையையும் ரசித்துச் செய்தால் அது பல சாதனைகளுக்கு வித்திடும் என்பது இங்கு முக்கியமானது).

 

8வது சதம்

டெய்லருக்கு இது 8வது ஒரு நாள் சதமாகும். ஜிம்பாப்வே வீரர்களிலேயே அதிக அளவில் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்தவரும் டெய்லர்தான். அந்த வகையில் இது புதிய சாதனையாகும்.

 

கடைசிப் போட்டியில்

கலக்கல் டெய்லருக்கு இது கடைசிப் போட்டி என்பதும், அது உலகக் கோப்பைப் போட்டியாக அமைந்ததும், அதில் அவர் சதம் அடித்ததும் கூடுதல் சிறப்பாக அமைந்து போனது.

 

தம்பி, ஜடேஜா.. பாவம்ய்யா நீ!

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. டெய்லரின் அதிரடிக்கு இது ஒரு சின்ன உதாரணம்... ஜடேஜாவின் ஒரு ஓவரில் அவர் 25 ரன்களைக் குவித்தார். அதில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடக்கம்.

 

அதே கரட்டாண்டி!

அதே ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அவர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார்.

 

சேம் பிளட்!

இதேபோல அஸ்வினையும் அவர் விடவில்லை. வெளுத்து விட்டார்.

 

பேக் டூ பேக்... பர்ஸ்ட்!

அயர்லாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் டெய்லர் 121 ரன்களை விளாசியிருந்தார். இன்றும் ஒரு சதம். இப்படி உலகக் கோப்பப் போட்டியில் அடுத்தடுத்து சதம் போட்ட ஒரு ஜிம்பாப்வே வீரர் டெய்லர்தான்.

 

இந்தியாவுக்கு எதிராக முதல் சதம்

அது மட்டுமல்ல, உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் போட்ட முதல் ஜிம்பாப்வே வீரரும் டெய்லர்தான். இதுவும் ஒரு புதிய சாதனை.

 

அதிக ரன் குவித்தும் சாதனை

டெய்லர் இந்த உலகக் கோப்பையில் 375 ரன்களைத் தாண்டியுள்ளார். இதுவும் ஒரு சாதனையாகும். அதாவது 1999 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேயின் நீல் ஜான்சன் 367 ரன்களைக் குவித்ததே ஜிம்பாப்வேக்கு சாதனையாக இருந்தது. அதையும் டெய்லர் முறியடித்து விட்டார். அட போங்கப்பா, இவரைப் பத்தி பேசினா இன்னிக்குப் பூரா பேசிட்டே இருக்கலாம்...இத்தோட முடிச்சுக்குவோம்!

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-captain-brendan-taylor-hits-record-ton-222619.html

  • கருத்துக்கள உறவுகள்

INDIA BEAT ZIMBABWE BY 6 WiCKETS

  • தொடங்கியவர்

ஊரு உலகமே பயந்துகிட்டு இருந்த அஸ்வின், ஜிம்பாப்வே சின்ன பசங்ககிட்ட இப்படி வாங்கிகட்டிட்டாரே!

 

ஆக்லாந்து: உலக கோப்பை வரலாற்றிலேயே இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாரி வழங்காத அளவுக்கு ரன்களை, ஜிம்பாப்வேக்கு எதிராக அள்ளிக் கொடுத்துள்ளார் அஸ்வின். உலக கோப்பையில், இந்திய ஸ்பின்னர் அஸ்வின் ஜொலித்து வந்தார். பெரிய அணிகளே, அவரது பந்து வீச்சில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புலம்பின. அஸ்வின் சமத்தான மாணவன் என்று சர்ட்டிபிகேட் கொடுத்தார், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்.

 

சிக்கன பவுலர் நடப்பு உலக கோப்பையில், அஸ்வினின் எக்கனாமி ரேட், 4.91 ரன்களாகத்தான் இருந்து வந்தது. ஆனால், இதெல்லாம், இன்று ஜிம்பாப்பேயிடம் மோதுவதற்கு முன்புவரைதான்.

சுழல்னா அடிப்போம் ஏனெனில், ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, இந்திய சுழற்பந்தை குறிவைத்து துவைத்தெடுத்தனர். அதிலும், அஸ்வின் பந்து வீச்சை கிழித்து காயவிட்டனர்.

அம்மாடியோவ்.. 10 ஓவர்கள் பந்து வீசிய, அஸ்வின் 75 ரன்களை வாரிக் கொடுத்தார். பலனாக, 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது.

 

முதல் ஸ்பின்னர் உலக கோப்பை வரலாற்றில், 10 ஓவர்கள் வீசி, இவ்வளவு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த முதல், இந்திய ஸ்பின்னர் என்ற அவப்பெயர் அஸ்வினுக்கு இன்று கிடைத்துள்ளது.

அஸ்வின் வரலாற்றில் முதல்முறை அஸ்வின் இதுவரை விளையாடியுள்ள, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவ்வளவு அதிக ரன்களை கொடுத்ததும் இதுதான் முதல் முறை.

ஸ்ரீநாத் இருக்காரே.. உலக கோப்பையில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் என்ற கெட்ட பெயர், வேகப்பந்து வீச்சாளர், ஜவகல் ஸ்ரீநாத்துக்கு உள்ளது. 2003 உலக கோப்பை இறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சதம் அடித்த நிலையில், அவரிடம் சிக்கி இத்தனை ரன்களை விட்டுக்கொடுத்தார் ஸ்ரீநாத்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ashwin-is-the-most-expensive-indian-spinner-the-wc-222623.html

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே அச்சுறுத்தலை முறியடித்த ரெய்னா, தோனி: இந்தியா வெற்றி
 

 

ஆக்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மீண்டும் இந்திய அணி எதிரணியினரை ஆல் அவுட் செய்த விதத்தில் 300 ரன்களுக்கும் மேல் அடித்து விடுவோம் என்று அச்சுறுத்திய ஜிம்பாப்வேயை 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி 92 ரன்களுக்கு தவன், ரோஹித் சர்மா, ரஹானே, கோலி விக்கெட்டுகளை இழந்து தோல்வி முகம் காட்டியது.

அத்தருணத்தில் ரெய்னா, தோனி இணைந்து அபாரமாக ஒரு ஜோடியைக் கட்டமைத்தனர். ரெய்னா உலகக்கோப்பையில் தன் முதல் சதத்தை எடுத்ததோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 5-வது சதத்தையும் எடுக்க, தோனி தனது 57-வது ஓருநாள் அரைசதத்தை எடுக்க இந்திய அணி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

ரெய்னா சதம் அடித்த பிறகு 47-வது ஓவரின் 2-வது பந்தில் ஸ்கோர் 257 ஆக இருந்த போது ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது.

கடைசியில் 48.4 ஓவரில் பன்யாங்கரா வீசிய ஷார்ட் பந்தை தோனி டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சருக்குத் தூக்கி அடித்து தனது வழக்கமான பாணியில் வெற்றிக்கான ஷாட்டை ஆடினார். இந்தியா 48.4 ஓவர்களில் 288/4 என்று வெற்றி பெற்றது.

 

ரெய்னா 104 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 110 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கேப்டன் தோனி 76 பந்துகளில் 8 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்தியா தொடர்ச்சியாக 6 வெற்றியை இந்த உலகக்கோப்பையில் பெற்றுள்ளது. லீக் அனைத்திலும் வெற்றி, உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியைப் பெற்று தோனி, கிளைவ் லாய்டைக் கடந்தார்.

 

மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய துரத்தலில் அதிகபட்சமான இலக்கை வெற்றிகரமாக துரத்தியதும் இதுவே முதல் முறை.

ரெய்னா, தோனி இடையே 196 ரன்கள் பார்ட்னர்ஷிப். இதனை இவர்கள் 26 ஓவர்களில் ஓவருக்கு 7.53 என்ற ரன் விகிதத்தில் எடுத்து ஆதிக்கம் செலுத்தினர்.

இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு அடுத்த படியாக இந்திய அணி அனைத்து போட்டிகளையும் லீக் சுற்றில் வென்றது. 2011 உலகக்கோப்பைப் போட்டிகளில் கூட தென்னாப்பிரிக்காவுக்க்கு எதிராக ஒரு தோல்வியை லீக் சுற்றில் இந்தியா சந்தித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் மேலும் முழுமையையும், துல்லியத்தையும் இந்திய அணி காட்டியது.

 

மோசமான ஷாட் தேர்வில் ஒரே ஓவரில் அவுட் ஆன ஷிகர் தவன், ரோஹித் சர்மா

 

விரட்டலின் போது முதல் ஓவரில் ரோஹித் சர்மா, பன்யாங்கராவை முதலில் ஒரு அதிர்ஷ்ட எட்ஜ் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்ததாக அருமையான பேக்ஃபுட் பஞ்சில் பாயிண்டில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். முதல் ஓவரில் 9 ரன்கள். அதன் பிறகு சடாரா அருமையாக ஒரு மெய்டன் ஓவர் வீசினார்.

ரோஹித் 16 ரன்களில் இருந்த போது பன்யாங்கராவின் லெந்த் பந்தை தேவையில்லாமல் ஆன் திசையில் மிகப்பெரிய ஷாட் அடிக்கச் சென்றார், பந்து முன் எட்ஜில் பட்டு கவர் திசையில் உயரே எழும்பியது சிகந்தர் ராசா கேட்ச் பிடித்தார்.

 

அதே ஓவரில் 5-வது பந்தில் தவனும் வெளியேறினார். கட் ஷாட் ஆட போதிய இடைவெளி இல்லாத நிலையில் மெதுவாக வந்த பந்தை கட் ஆட முயன்று மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார் தவன். 7-வது ஓவரில் 21/2 என்று ஆனது.

 

கோலி, ரஹானே அரைசதக் கூட்டணி:

அதன் பிறகு கோலி களமிறங்கி சடாராவின் ஓவரில் மிட் ஆஃபில் ஒரு அருமையான பவுண்டரியையும், பிறகு அவருக்குச் சாதகமான பிளிக் ஷாட்டில் ஒரு பவுண்டரியையும் அடித்துத் தொடங்கினார்.

 

பிறகு ரஹானே, பன்யாங்கரா ஓவரில் இரண்டு அருமையான ஆஃப் திசை பவுண்டரிகளை அடித்தார். 13-வது ஓவரில் இந்தியா 50 ரன்களை எட்டியது.

மீண்டும் ரஹானே, கோலி தலா ஒரு பவுண்டரியை அடிக்க இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தனர். ஸ்கோர் 71 ஆக இருந்த போது 17-வது ஓவரில் ரஹானே, முபரிவா பந்தை ஷாட் கவரில் அடித்துவிட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடி வந்தார். கோலி திருப்பி அனுப்பினார் ரீச் ஆக முடியவில்லை ரன் அவுட் ஆனார். ரஹானே 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 17-வது ஓவரில் 71/3 என்று சற்றே தடுமாற்றம் கண்டது.

 

ரெய்னா களமிறங்கினார். ஸ்கோர் 92 ரன்களுக்குச் சென்ற போது 48 பந்துகளில் 4பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த கோலி, சிகந்தர் ராசா பந்தை ஸ்வீப் ஆடமுயன்றார் ஆனால் பந்து சிக்கவில்லை. கால்களைச் சுற்றி பவுல்டு ஆனார். இந்தியா 23 ஒவர்களில் 92/4 என்று ஜிம்பாப்வேவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால்...

 

ரெய்னா, தோனி அதிரடிக் கூட்டணியில் திக்குமுக்காடிய ஜிம்பாப்வே:

 

24-வது ஓவர் முதல் 29-வது ஓவர் வரை நிதானித்த தோனி, ரெய்னா ஜோடி இந்த 6 ஓவர்களில் 20 ரன்களையே சேர்த்தது. ஒரு பவுண்டரி மட்டுமே வந்தது.

21 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 176 ரன்கள். ஓவருக்கு 8.38 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு லேசான பதட்டம் ஏறப்ட்டிருக்கும்.

ஆனால் பதட்டமடையாத ரெய்னா, சான் வில்லியம்ஸ் வீசிய 30-வது ஓவரின் முதல் பந்தை அவரது பாணி சுழற்றலில் மிட்விக்கெட் மீது சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்து கொஞ்சம் வேகமாக வீசினார், ஆனால் முடிவில் மாற்றமில்லை, இடத்தில்தான் மாற்றம், லாங் ஆனில் சிக்சருக்குப் பறந்தது.அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது.

 

பவுண்டரி எதையும் அடிக்காத தோனி, மிரே வீசிய 32-வது ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக் திசையில் கம்பீர புல் அடித்து முதல் பவுண்டரியை விளாசினார். அடுத்த பந்தை தேர்ட் மேன் திசையில் அபாரமாகத் தள்ளிவிட்டு இன்னொரு பவுண்டரியை அடித்தார். அந்த ஓவரில் 11 ரன்கள். பிறகு தோனி சிகந்தர் ராசாவின் புல்டாஸை பவுண்டரி அடித்தார். 34வது ஓவரின் 2-வது பந்தில் இந்தியா 150 ரன்களை எட்டியது.

 

35-வது ஓவரில் ரெய்னா அரைசதம் எடுக்கும் முன் ஸ்வீப் ஆடி ஒரு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பை ஷார்ட் பைன் லெக் திசையில் ஹேமில்டன் மசகாட்சா கோட்டை விட நொந்து போனார் பவுலர் சிகந்தர் ராசா.

 

பேட்டிங் பவர் பிளே தொடங்கும் முன் இந்தியா 35 ஓவர்களில் 158/4. 36-வது ஓவரில் தோனியின் பவுண்டரியுடன் 5 ரன்கள். 37-வது ஓவரில் ரெய்னா இன்சைட் அவுட் சென்று ஆஃப் திசையில் ஒரு அபாரமான பவுண்டரி அடித்து அரைசதத்தை 67 பந்துகளில் கடந்தார். 38-வது ஓவரில் தோனி, ரெய்னா தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். 39-வது ஓவரில் இந்தியா 184/4. வெற்றிக்குத் தேவையான் ரன் விகிதம் ஓவருக்கு 9.45 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் ரெய்னா மீண்டும் ஒரு அபாரமான ஆன் திசை சிக்ஸரை அடித்தார். அந்த ஓவரில் தோனி, ரெய்னா, 100 ரன் கூட்டணி அமைத்தனர். 40வது ஓவர் முடிவில் ஸ்கோர் 197/4. பவர் பிளேயில் 5 ஒவர்களில் 39 ரன்கள்.

 

பவர் பிளே முடிந்தவுடன் உண்மையில் ரெய்னா, தோனி தங்கள் ஷாட்களை திறக்கத் தொடங்கினர். மசாகாட்சாவை 42-வது ஓவரில் ரெய்னா ஒரு புல்லட் கவர் டிரைவ் அடித்து பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து அவ்வளவாக ஷார்ட் பிட்ச் இல்லையென்றாலும் ரெய்னாவின் மட்டைச் சுழற்றல் வேகத்துக்கு மிட்விக்கெட்டில் சிக்சரானது. மீண்டும் முபரிவாவை மிகவும் சாதுரியமாக விக்கெட் கீப்பர் பின்னால் தட்டி விட்டு ஒரு பவுண்டரியை அடித்தார்.

 

அதே ஓவரில் தோனி 57-வது ஒருநாள் சதத்தை 56 பந்துகளில் எடுத்து முடித்தார். 45-வது ஓவரில் பைலெக்கில் ஒரு சாதுரிய பவுண்டரியை ரெய்னா அடித்து 99 ரன்களுக்கு வந்தார். பிறகு அதே ஓவரில் 1 ரன் எடுத்து 94 பந்துகளில் உலகக்கோப்பையில் முதல் சதம் கண்டார் ரெய்னா. அவரது 5-வது ஒருநாள் சதம்.

47-வது ஓவரில் தோனி களம் புகுந்தார். 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குலசேகராவை அடித்த சிக்சரை நினைவூட்டும் ஒரு சிக்சரை தோனி, முபரிவா பந்தில் அடித்தார். அடுத்ததாக புல்டாஸ், இதனை எதிர்பார்த்த தோனி சரியாக அதனை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார்.

49-வது ஓவரில் 4-வது பந்தை பன்யாங்கரா ஷார்ட் ஆக வீச அதனை கம்பீரமாக புல் ஆடி பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கான ரன்களை எடுத்து ஸ்டைலாக முடித்தார் தோனி. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டார்.

 

இன்று காலை ஜிம்பாப்வே அணியின் பொறுப்பு கேப்டன் பிரெண்டன் டெய்லர் மிக அற்புதமான சதம் ஒன்றை எடுத்து அதிரடி முறையில் 138 ரன்களை எடுத்தார். இது அவர் ஜிம்பாப்வேவுக்காக ஆடும் கடைசி போட்டி. எனவே அவருக்கு இது ஒரு உணர்ச்சிகரமான போட்டியாகும். இதில் கேப்டன்சியிலும் சிறப்பாக பணியாற்றி இந்தியாவுக்கு காலிறுதிக்கு முன்பாக கொஞ்சம் உடல் நல சோதனை செய்துவைத்தார் என்றே கூற வேண்டும்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6993588.ece

  • தொடங்கியவர்

ஆஸி.யிடம் மண்டியிட்டது ஸ்கொட்லாந்து

 

உலகக்கிண்ண போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.

காலை 9 மணிக்கு நியூசிலாந்து கொபாட் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி  25.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது.

131 என்ற இலகு இலக்கை நோக்கி பதிலுக்கத் துடுப்பெடுத்தாடிய  ஆஸி.15.2ஓவர்கள் நிறைவில்  133 ஓட்டங்களுக்கு 3விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அபார வெற்றி பெற்றது.

ஆஸி.அணி சார்பாக மிரட்டலாக  பந்து வீசிய ஸ்ராக் 4 விக்கெட்டுக்களை பெற்றக் கொடுத்தார்.

 

http://yarlsports.com/?p=1429&cat=16

  • தொடங்கியவர்

2 முறை மழை குறுக்கிட்ட போட்டியில், ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸி.!

 

ஹோபர்ட்: ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 2 முறை மழை குறுக்கிட்ட போட்டியில், ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸி.! நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவின் அனல் பறக்கும் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

 

ஸ்காட்லாந்து அணிக்கு கோட்ஜெர், மெக்லியாடு தொடக்கம் கொடுத்தனர். ஸ்டார்க் ‘வேகத்தில்' கோட்ஜெர் ‘டக்' அவுட்டானார். மெக்லியாடு (22), மம்சன் (0), கொலேமென் (0), பெரிங்டன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மாச்சான் (40), கிராஸ் (9) கம்மின்சிடம் சிக்கினர். ஸ்காட்லாந்து அணி 25 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் போட்டி தொடங்கியதும் ஜோஷ் டேவி (26), வார்டுலா (0), ஸ்டார்க் ‘வேகத்தில்' நடையை கட்டினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 25.4 ஓவரில் 130 ஓட்டங்களுக்கு சுருண்டது. மைக்கேல் லீஸ்க் (23) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (20), ஷேன் வாட்சன் (24), அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் (47) கைகொடுத்தனர். அவுஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் போட்டி தொடங்கியதும், டேவிட் வார்னர், ஜேம்ஸ் பால்க்னர் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது.

 

இதனால் ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்க்னர் (16), வார்னர் (21) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆறு போட்டியிலும் தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து அணி பரிதாபமாக வெளியேறியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகளுடன் ‘ஏ' பிரிவில் 2வது இடத்தை உறுதி செய்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/australia-thrash-scotland-7-wickets-222642.html

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்தை ஊதிய ஆஸ்திரேலியா காலிறுதியில் தென்னாப்பிரிக்கா மோதலை தவிர்த்தது
 

 

ஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் 6 போட்டிகளில், 4 வெற்றி, ஒரு தோல்வி ஒரு நோ-ரிசல்ட்டுடன் 9 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்துக்கு முன்னேறி காலிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மோதலை தவிர்த்துள்ளது.

 

ஸ்காட்லாந்து 130 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 15.2 ஓவர்களில் 133/3 என்று வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மைக்கேல் கிளார்க் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். மிட்செல் ஸ்டார்க், ஜான்சன், கமின்ஸ் வேகப்பந்து கூட்டணியில் ஸ்காட்லாந்து என்னதான் செய்ய முடியும். 25.4 ஓவர்களில் 130 ரன்களுக்கு மடிந்தது. ஸ்டார்க் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த உலகக்கோப்பையில் இதுவரை அதிக விக்கெட்டுகள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.

 

ஸ்காட்லாந்து அணியில் 5 வீரர்கள் 0-வில் ஆட்டமிழந்தனர். அன்று சதம் கண்ட குயெட்சருக்கு இன்று பேட்டிங் ஒரு துர்சொப்பனமாக அமைந்திருக்கும். ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் குயெட்சருக்கு நாம் எங்கோ வந்து மாட்டிக் கொண்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும். முதல் பந்து பவுன்சர். அடுத்த பந்து அதிவேகமாக மட்டையைக் கடந்து சென்றது. 4-வது பந்து பாதம் பெயர்க்கும் ஒரு லெக் ஸ்டம்ப் யார்க்கர். கால்களுக்கு இடையில் ஏதோ பாம்பு புகுந்தது போல் இரண்டு கால்களையும் எழுப்பி மட்டையை ஒருவாறாக தரையில் இறக்கி தடுத்தார் அல்லது பந்து மட்டையில் பட்டது. அடுத்த பந்து அதிவேகத்தில் எட்ஜைக் கடந்து சென்றது. இதுதான் அந்த முதல் ஓவர்.

 

இந்த ஆக்ரோஷம் தொடங்கிய பிறகு, ஸ்காட்லாந்து 51/5 என்று ஆனது. குயெட்சர் அந்த முதல் ஓவருக்குப் பிறகே பேட்டிங்கை மறந்து போனார். ஸ்டார்க் பந்தை எட்ஜ் செய்தார். கேப்டன் மோம்சன், ஷேன் வாட்சன் வீசிய மூக்கிற்கு வந்த பவுன்சரை ஹூக் ஆட முயன்று கேட்ச் கொடுத்தார். ஃப்ரெட் கோல்மேன், மிட்செல்ஜான்சன் வீசிய 2 பவுன்சர்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிறகு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான கோணத்தில் வீசிய பந்தை எட்ஜ் செய்தார். ஸ்காட்லாந்து வீரர்கள் 3 பேர் பூஜ்ஜியம்.

மெக்லியாட் (22), மச்சன் (40) ஆகியோர் மட்டுமே முதல் 6 விக்கெட்டுகளில் இரட்டை இலக்கை எட்டினர். 79/7 என்ற நிலையில் 100 ரன்களுக்குள் ஸ்காட்லாந்து கதை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவி (26), லீஸ்க் (23) ஆகியோரது தைரியமான பேட்டிங்கினால் ஸ்கோர் 130 ரன்கள் வந்தது. கடைசியில் டேவி, வார்ட்லா ஆகியோர் மிட்செல் ஸ்டார்க்கின் 2 யார்க்கர்களுக்கு ஸ்டம்பை இழந்தனர்.

 

ஸ்டார்க் 4, கமின்ஸ் 3, வாட்சன், ஜான்சன், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்.

 

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க், பின்ச் தொடக்கத்தில் களமிறங்கினர். அதிரடி முறையில் கிளார்க் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்தார். வார்ட்லா பந்தில் ஆட்டமிழந்தார். முன்னதாக ஏரோன் பின்ச் 10 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளார்க், வாட்சன் இணைந்து 9 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தனர். வாட்சன் 24 ரன்களில் டேவி பந்தில் வெளியேறினார். பாக்னர் 16 ரன்களுடனும் வார்னர் 6 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

 

ஆட்ட நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article6993792.ece

  • தொடங்கியவர்

ஒரு நாள் போட்டிகளில் ரெய்னா-தோனி கூட்டணி: சில புள்ளி விவரங்கள்
 

 

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இன்று 196 ரன்கள் வெற்றிக் கூட்டணி அமைத்த ரெய்னா, தோனி கூட்டணி நிறைய முறை இப்படி வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளனர்.

 

சில புள்ளி விவரங்கள் இதோ:

ரெய்னாவும், தோனியும் இணைந்து ஒருநாள் போட்டிகளில் 66 முறை கூட்டணி படைத்துள்ளனர்.

9 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். 17 அரைசதக் கூட்டணியும் அமைத்துள்ளனர்.

 

கூட்டணி சராசரி 62.14. ஹஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் இது வரை 35 முறை கூட்டணி சேர்ந்து ஆடியுள்ளனர். சராசரி 81.96 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தோனியும், ரெய்னாவும் ஆட்டமிழக்காமல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 196 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் 6-வது சிறந்த ஜோடி சேர்ப்பு ரன் எண்ணிக்கையாகும்.

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் நம்பர் 1 கூட்டணி ரன்களுக்கான சாதனையை திராவிட்-கங்குலி (318 ரன்கள்) வைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் கங்குலி-டெண்டுல்கர் (244), திராவிட்-சச்சின் (237), கோலி-சேவாக் (203), கங்குலி-சேவாக் (202) ஆகியோரது கூட்டணிகள் உள்ளன. 6-வது இடத்தில் தோனி, ரெய்னா (196).

இதற்கு முந்தைய அயர்லாந்து போட்டியில் ஷிகர் தவன், ரோஹித் சர்மா சேர்த்த 174 ரன்களே நடப்பு உலகக்கோப்பையில் அதிகபட்ச இந்திய ஜோடி சேர்ப்பு ரன்களாக இருந்தது. அதனை இன்று ரெய்னா, தோனி முறியடித்தனர்.

 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது விக்கெட்டுக்காக தோனியும், ரெய்னாவும் இன்று சேர்த்த 196 ரன்கள் என்பது 5-வது இடத்தில் உள்ளது. இதே ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்காவின் மில்லர், டுமினி ஜோடி சேர்ந்து எடுத்த 256 ரன்களே சிறந்த 5-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச ரன் சேர்ப்பாகும். இது முதலிடத்தில் உள்ளது.

 

அசாருதீன், ஜடேஜா இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 1997-ல் இலங்கைக்கு எதிராக எடுத்த 223 ரன்கள் 3ஆம் இடத்தில் உள்ளது.

 

கம்பீரும், தோனியும் பிப்ரவரி 2008-இல் பிரிஸ்பன் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இதே 5-வது விக்கெட்டுக்காக 184 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளனர்.

 

இதற்கு முன்பாக ரெய்னா, தோனி கூட்டணி 2011ஆம் ஆண்டு லார்ட்ஸில் 169 ரன்களை சேர்த்திருந்தனர். இன்று இதே விக்கெட்டுக்காக இவர்களது ரன் சேர்ப்பை கடந்துள்ளனர்.

தோனி, ரெய்னா இதே 5-வது விக்கெட்டுக்காக இணைந்து 2014-ல் கார்டிப்பில் 144 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

 

2009ஆம் ஆண்டும் நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி, ரெய்னா ஜோடி சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 136 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

 

தோனியும், ரோஹித் சர்மாவும் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 167 ரன்களை இதே 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.

 

விராட் கோலியும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 2012ஆம் ஆண்டு கொழும்புவில் ஆட்டமிழக்காமல் 146 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6993866.ece

  • தொடங்கியவர்

ஐக்கிய அரபு அமீரகம்
v
மேற்கிந்தியாத்தீவுகள்
(begins in 2h 19m)

 

அயர்லாந்து
v
பாகிஸ்தான்
(14:00 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

மேற்கிந்தியாத்தீவுகள் இன்று கால் இறுதிக்கு முன்னேறுமா


s4osbn.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலே ஒழிய அயர்லாந்து மேலே போவது கஷ்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.