Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுகிய நோக்கத்துக்கான வெளிவிவகார கொள்கையை இலங்கை மாற்றவேண்டும்! சபையில் சம்பந்தன் கோரிக்கை

Featured Replies

sampanthans%2074d3ff.jpg

 

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும். இவ்வாறு எச்சரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்றது.
 
இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:
 
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதன்காரணமாக எதிர்காலத்தில் நாடு பெரும் விபரீதங்களையே சந்திக்க நேரிடும். ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுடனும் இலங்கை உறவு வைத்துக் கொள்வது அவசிம்தான். எனினும் தொன்று தொட்டு இலங்கையுடன் உறவுவை வளர்த்துவந்துள்ள இந்தியாவைப் புறந்தள்ளி - கோபமடையச் செய்து சீனாவுடன் உறவைப் பேணுவது ஆரோக்கியமானதன்று.
 
இன்று போரியல், பொருளாதாரம், அரசியல் போன்ற சகல துறைகளிலும் சீனாவிடம் இலங்கை உதவியை நாடி நிற்கிறது. இதன்காரணமாக இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது. இது நாட்டுக்கு அழகல்ல. இலங்கை அரசு இந்தவிடயத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.
 
இந்தியாவுடனான உறவை பலப்படுத்தவேண்டும். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நேரடியாக இலங்கைக்கு வந்து கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு துறை கடும் சீற்றம் அடைந்துள்ளது. தமது அதிருப்பியை இந்திய பாதகாப்பு துறை இலங்கையிடம் தெரிவித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பிராந்திய நாடுகளுடனான வெளிவிவகார கொள்கைகளை சரியாகக் கடைப்பிடிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் .- என்றார்.
 
 
http://malarum.com/article/tam/2014/11/14/6834/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html#sthash.UmvW3W42.dpuf
 
 

இலங்கையின் நலன்களின் மீது மிகுந்த கரிசனை கொண்டுள்ளார் சம்பந்தன் ஐய்யா...!

இலங்கையில் மோடி மஸ்தான் இரண்டாவது இந்திய தூதரகத்தை தொடங்கிவிட்டாரோ...? நடக்கட்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.