Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்

அடிலெய்டு டெஸ்ட்: எண்கள் சொல்லும் சிறப்புத் துளிகள்
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. கேப்டன் விராட் கோலி (141 ரன்கள்), முரளி விஜய் (99) ஆகியோர் போராடியபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் தோல்வி தவிர்க்க முடியாததானது. இப்போட்டியில் சிறப்புக்குரிய முக்கியத் துளிகள்:

 

256 - முதல் டெஸ்ட் போட்டியில் 256 ரன்கள் (115, 141) சேர்த்ததன் மூலம் கேப்டனாக அறிமுகமான போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை கோலி படைத்தார். முன்னதாக நியூஸிலாந்தின் கிரஹாம் டவ்லிங் 1968-ல் கிறைஸ்ட் சர்ச்சில் இந்தியாவுக்கு எதிராக 244 ரன்கள் குவித்ததே (239, 5) சாதனையாக இருந்தது.

 

12 - இந்தப் போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியர் என்ற பெருமையைப் பெற்றார் நாதன் லயன்.

 

6 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 வீரர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித் துள்ளனர். அதில் 5, அடிலெய்டு மைதானத்தில் அடிக்கப்பட்டுள்ளது.

 

53 - ஆஸ்திரேலிய மண்ணில் நடை பெற்ற டெஸ்ட் போட்டியில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட் டைச் சேர்ந்த வீரர் ஒருவர் ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸ் களிலும் சதமடித்துள்ளார். இதற்கு முன்னர் 1961-ல் இதே அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டி யில் மேற்கிந்தியத் தீவுகளின் ரோஹன் கன்காய் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளார்.

 

2 - கேப்டனாக அறிமுகமான டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த 2-வது நபர் விராட் கோலி. இதற்கு முன்னர் 1975-ல் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுக மான கிரேக் சாப்பல், இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் மேற்கண்ட சாதனையை நிகழ்த்திய முதல் நபர் கோலி ஆவார்.

 

70.75 - 4-வது இன்னிங்ஸில் கோலியின் சராசரி 70.75. இது அனைத்து பேட்ஸ்மேன்களின் (குறைந்தபட்சம் 500 ரன்கள் குவித்தவர்கள்) சராசரியில் 4-வது அதிகபட்ச சராசரியாகும்.

 

10 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10 ஆண்டு களுக்குப் பிறகு ஒரு போட்டியில் 10-க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் லயன். இதற்கு முன்னர் 2004-ல் இலங்கையின் உபுல் சந்தனா 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 

25 - ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடந்த 25 ஆண்டுகளில் 10 விக்கெட்டு களை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய ஃபிங்கர் ஸ்பின்னர் லயன். இதற்கு முன்னர் 1989-ல் சிட்னியில் நடை பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆலன் பார்டர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

99 - 99 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த 2-வது இந்திய வீரர் முரளி விஜய். இதற்கு முன்னர் 1994-ல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சித்து 99 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார். 4 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய தொடக்க வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் (4 சிக்ஸர்கள்) முரளி விஜய். சேவாக் முதலிடத்தில் உள்ளார். அவர் 2003-ல் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

 

24,836 - 5-வது நாளான நேற்று 24,836 பேர் மைதானத்திற்கு வந்திருந்தனர். இதன்மூலம் இதன் மூலம் அடிலெய்டில் 5-வது நாளில் அதிக ரசிகர்கள் வந்த போட்டி என்ற பெருமை இந்தப் போட்டிக்கு கிடைத்துள்ளது.

 

2 - அடிலெய்டில் ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இரண்டு சதமடித்த 2-வது இந்தியர் கோலி. முன்னதாக 1947-48-ல் விஜய் ஹசாரே இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளார்.

 

4 - ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த 4-வது இந்தியர் கோலி. விஜய் ஹசாரே, சுநீல் கவாஸ்கர் (3 முறை), ராகுல் திராவிட் (இரு முறை) ஆகியோர் மற்ற இந்தியர்கள்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6690798.ece

  • Replies 151
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடரிலிருந்து கிளார்க் விலகல்
 

 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பிராட் ஹேடின், எஞ்சிய போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

 

முதல் நாள் போட்டியின் கடைசி நாளான நேற்று 44-வது ஓவரின்போது கிளார்க்கின் வலது தொடைப் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தசைநார் முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனது காயம் குறித்துப் பேசிய கிளார்க், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகலாம். எனினும் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான எல்லாவற்றையும் செய்வேன். எனது ஸ்கேன் சோதனை முடிவுகளை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எவ்வளவு காலம் நான் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரியவில்லை. உலகக் கோப்பை மற்றும் எங்களின் முதல் பயிற்சி ஆட்டம் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். முத்தரப்புத் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article6690790.ece

  • தொடங்கியவர்

வருத்தம் இல்லை, வீரர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்: கோஹ்லி
 

அடிலெய்ட் டெஸ்டில் போட்டியை சமநிலை செய்யும் எண்ணத்தில் விளையாடவில்லை. வெற்றிக்காகவே போராடினோம். எனது இந்த திட்டம் தோல்வி அடைந்ததில் வருத்தம் இல்லை. துணிச்சலாக போராடிய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்,’’ என, என இந்திய அணியின் அணித்தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்டில் வெற்றிக்காக போராடிய இந்திய அணி கடைசி நேரத்தில் வீழ்ந்தது. இதுகுறித்து என இந்திய அணியின் அணித்தலைவர் விராத் கோஹ்லி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

அடிலெய்டு டெஸ்டில் எந்த ஒரு சூழ்நிலையிலும் போட்டியை சமநிலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடவில்லை. அப்படி விளையாடி இருந்தால், 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருப்போம்.

அவுஸ்திரேலிய அணி எங்களை விட சிறப்பானது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, வெற்றியை கொண்டு சென்று விட்டனர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்.
நானும், முரளி விஜயும் களத்தில் இருந்த போது, இந்திய அணியின் கை தான் ஓங்கி இருந்தது. எந்த ஒரு இடத்திலும் வெற்றி இலக்கை தொடும் எண்ணத்தில் இருந்து பின் வாங்கிவில்லை.

 

ஏனெனில், இந்த இலக்கை எப்படியும் எட்டி விடலாம் என, முழு நம்பிக்கையுடன் இருந்தேன். இதனால், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அணிக்காக ஏதாவது செய்து விட வேண்டும் என எண்ணினேன்.
போட்டியில், எந்த ஒரு சாதனையும் படைக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை. எனது நினைப்பெல்லாம் இலக்கை அடைவது எப்படி என்பதில் தான் இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை எட்ட முயற்சித்து விளையாடியது எனக்கு இது தான் முதன் முறை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம்.

நான் அடித்த பந்தை மார்ஷ், விட்டுவிடுவார் என்று நம்பினேன். ஆனால், பிடித்துவிட்டார். இந்த ‘ஷாட்’ அடித்ததற்காக வருத்தப்படவில்லை.
சகா, ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தமை ஏமாற்றம் கிடையாது. ஏனெனில், உங்கள் திறமை மீது நம்பிக்கை இருந்தால், துணிச்சலாக அடித்து விளையாடுங்கள் என, அவர்களிடம் தெரிவித்து இருந்தேன்.
ஒருவேளை இதில் வெற்றி அடைந்திருந்தால், எனது வாழ்க்கையில் மிகவும் முக்கிய தருணமாக இருந்திருக்கும். அதேநேரம், தோல்வியடைந்து விட்டதற்காக வருத்தப்படவில்லை. துணிச்சலாக போராடிய இந்திய வீரர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/14/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

  • தொடங்கியவர்

லியானுக்கு ஆஸி., மீடியா பாராட்டு
டிசம்பர் 14, 2014.

2csia7c.jpg

அடிலெயடு: இந்தியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் ‘சுழலில்’ அசத்திய  நாதன் லியானுக்கு ஆஸ்திரேலிய மீடியாவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.     

இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில், 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பின், நாதன் லியான் ‘சுழலில்’ சிக்கிய இந்திய அணி 315 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட் (5 + 7) கைப்பற்றிய நாதன் லியான் ஆட்ட நாயகனாக தேர்வானார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 1–0 என முன்னிலை பெற்றது.   

  

டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்க வித்திட்ட லியானுக்கு, ஆஸ்திரேலிய மீடியாவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.     

இதுகுறித்து சிட்னி ‘டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வெளியான செய்தியில், ‘ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் ஓய்வுக்கு பின், சுழற்பந்துவீச்சில் ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றிடத்தை நாதன் லியான் பூர்த்தி செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அசத்திய இவர், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள வரலாற்று சிறப்புமிக்க இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இவர் முக்கிய பங்குவகிப்பார். வார்ன் ஓய்வுக்கு பின், 13 சுழற்பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்கள். இதில் லியான் மட்டுமே திறமையை வெளிப்படுத்தி, தன்னை சிறந்த பவுலராக அடையாளம் காட்டினார். இவரது சாதனையை விவரிக்க ஆஸ்திரேலிய மீடியாவில் நிறைய ‘இங்க்’ பயன்படுத்தப்பட்டிருக்கும்,’ என பாராட்டு தெரிவிக்கப்பட்டது.     

 

மெல்போர்ன் ‘தி ஏஜ்’ நாளிதழலில் வௌியான செய்தியில், ‘இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 70.1 ஓவரில் 286 ரன்கள் கொடுத்து 12 விக்கெட் கைப்பற்றிய நாதன் லியானின் செயல்பாடு, தெற்கு ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஜார்ஜ் ஜிப்பனுக்கு நிகராக இருந்தது,’ என தெரிவித்தது.

 

http://sports.dinamalar.com/2014/12/1418577460/NathanLyonAustraliaIndiaTestCricket.html

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்மித் நியமனம்
 

 

அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக அணித் தலைவராக ஸ்டீவன் சுமித் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தலைவராக செயற்படுவார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான போட்டித் தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டில் இடம்பெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இப் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் முதுகு வலியால் அவதிப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். இதனால் அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

 

கிளார்க் காயத்தால் விலகியதையடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு பிராட் ஹாடின் அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மைக்கல் கிளார்க்கும் தனது ஆதரவை தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக அணித் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட 45 ஆவது வீரர் ஸ்மித் ஆவார்.  25 வயது 195 நாட்கள் நிரம்பிய ஸ்மித், இதன்மூலம் இளம் வயதில் அணித் தலைவர் பொறுப்பை ஏற்ற 2 ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 1979ஆம் ஆண்டு சிம்ஹியூக்ஸ் 25 வயது 57 நாட்களில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றார்.

ஸ்மித் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/15/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

கோலி, தவான், வோர்ணர் ஆகியோருக்கு ஐ.சி.சி.அப­ராதம்
 

 

அவுஸ்­தி­ரே­லிய மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் அடி­லெய்டில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் மூன்று வீரர்­க­ளுக்கு சர்­வ­தேச கிரிக்கெட் சபை அப­ராதம் விதித்­துள்­ளது.

அவுஸ்­தி­ரே­லிய அணியின் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் மற்றும் இந்­திய அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் சிஹர் தவான் ஆகி­யோரே அப­ராதம் விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

 

அவுஸ்­தி­ரே­லிய மற்றும் இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் போட்­டியின் நான்காம் நாள் ஆட்­டத்தின் போது இடம்­பெற்ற இரண்டு வெவ்­வேறு சம்­ப­வங்கள் தொடர்பில் இந்த அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச கிரிக்கெட் சபை குறிப்­பிட்­டுள்­ளது.

குறிப்­பாக இந்­திய துடுப்­பாட்ட வீரர் வருண் ஆரோனின் ஆட்­ட­மி­ழப்பு தொடர் பில் சிஹர் தவா­னுக்கும், டேவிட் வோர்­ண­ருக்கும் இடையில் ஏற்­பட்ட வாக்­கு­வா­தத்தை அடுத்து அவர்கள் இரு­வ­ருக்கும் அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஸ்டீவன் ஸ்மித்­துடன் இந்­திய அணித் தலைவர் கோலி வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­ட­தனால் அவ­ருக் கும் அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 

அத­ன­டிப்­ப­டையில் விராட் கோலிக் கும், சிஹார் தவா­னுக்கு 30 சத­வீ­தமும் டேவிட் வோர்ணருக்கு 15 சதவீதமும் போட்டி கட்டணத்தில் அபராதமாக விதிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AA%C2%AD%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

 

  • கருத்துக்கள உறவுகள்

201412151210508988_Thrilled-Smith-promis
பிரிஸ்பேன்,

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்ததால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தள்ளப்பட்டார். இதையடுத்து 25 வயதான ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஸ்மித் கூறுகையில், துரதிருஷ்டவசமான முறையில்  மைக்கேல் கிளார்க்கு ஏற்பட்ட காயத்தால்,  தற்காலிக தீர்வாகத்தான் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இது ஒரு வியப்பான மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலிய கேப்டனாக ஆக்ரோஷமாக செயல்படுவேன்  என்று தெரிவித்துள்ளார்.
 

 

  • தொடங்கியவர்

கைவிடப்படுமா இந்தியா - ஆசிஸ் தொடர்?
 

 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில்  பொது மக்களை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிட்னி கபே விடுதிக்குள் இன்றுகாலை புகுந்த தீவிரவாதிகள் பொதுமக்களை  பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதால் அப்பகுதியெங்கும் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

 

இந்த நிலையில் 4 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும்  அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில்,
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதால் எங்கு எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சமான சூழ்நிலை நிலவுவதால், இந்திய அணி, தாயகம் திரும்ப வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பல ரசிகர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதால் இதை பரிசீலித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லது 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்தின. அப்போது விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் நாங்கள் இலங்கை மண்ணிலேயே காலடி எடுத்து வைக்க மாட்டோம் என்று அறிவித்தது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இலங்கை வரவில்லை அதேபோன்று இந்தியாவும் இப்போது முடிவெடுக்க வேண்டியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

 

இதேவேளை இந்திய வீரர்கள் தங்கியுள்ள பிரிஸ்பேன் நகர ஹோட்டலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளர் என்று தெரியப்படுத்தப்படாவிட்டாலும் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=533593729015754306#sthash.Hk9gkWCG.dpuf

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கு கூடுதல் பாதுகாப்பு
டிசம்பர் 15, 2014.

 

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், வீழ்ந்த இந்திய அணி, 0–1 என, தொடரில் பின்தங்கியுள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை துவங்கவுள்ளது. இதனிடையே, சிட்னி ‘கபே’ ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர், அங்குள்ளவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளான்.

 

இதனால், இந்திய வீரர்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் கூறியது:

நமது வீரர்களின் பாதுகாப்பு, அங்குள்ள சூழ்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பிரிஸ்பேனில் தங்கியுள்ள இந்திய வீரர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை.

இருப்பினும், இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு தேவையான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் (சி.ஏ.,) உயர் நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.

 

அவர்களது நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்தி தருகிறது. ஏற்கனவே உள்ள அட்டவணைப்படி, இந்திய அணியின் போட்டிகள் தொடரும்.

இவ்வாறு சஞ்சய் படேல் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418631747/IndiancricketerssecurityincreasedBrisbane.html

  • தொடங்கியவர்

கேப்டன் விவாதம் வேண்டாம்: கவாஸ்கர்
டிசம்பர் 15, 2014.

 

புதுடில்லி: ‘‘இந்திய அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்ற விவாதம் தற்போது வேண்டாம்,’’ என, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.     

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், உடற்தகுதி காரணமாக ‘ரெகுலர்’ கேப்டன் தோனி விளையாடவில்லை. இவருக்கு பதிலாக கேப்டனாக விராத் கோஹ்லி செயல்பட்டார். பேட்டிங்கில் அசத்திய இவர், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இருப்பினும் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.     

 

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் இருந்து விராத் கோஹ்லியிடம் கொடுக்க இதுதான் சரியான நேரம் என, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்களான இயான் சேப்பல், மார்க் டெய்லர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.     

இதுகுறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியது: இந்திய அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்ற விவாதம் தற்போது அவசியமில்லை. இது, தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கிவிடும். முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் விராத் கோஹ்லி கேப்டனாக இருப்பார், மீதமுள்ள போட்டிகளுக்கு தோனியே கேப்டனாக செயல்படுவார் என, ஏற்கனவே தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.     

 

கேப்டன் குறித்து விவாதிப்பதால், தோனிக்கு மனதளவில் தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படும். இது, டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேவேளையில் கேப்டனாக கோஹ்லியின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சி. நான் எப்போதும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் கேப்டனுக்கு ஆதரவாக இருப்பேன். நிறைய தற்காப்பு கேப்டன்களும் டெஸ்டில் வெற்றி பெற விரும்புவார்கள். ஒருவேளை இவர்களால் வெற்றி பெற முடியாமல் போனால், குறைந்தபட்சம் ‘டிரா’ செய்ய போராடுவார்கள். இதன்மூலம் தொடரில் பின்னடைவை சந்திக்காமல், மீண்டு வர முடியும்.     

 

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், சரியான கேப்டன், பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர் என யாரும் கிடையாது. கோஹ்லி, சரியான கேட்டனாக வேண்டும் என விரும்பினால், அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்க நேரிடும். ஒரு பேட்ஸ்மேனாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ள கோஹ்லி, விரைவில் சிறந்த இந்திய கேப்டனாகவும் இருப்பார்.     

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418662504/SunilGavaskarIndiaCricketCaptainDhoniViratKohli.html

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா தேவையா?
 

 

அதிவேக பிட்ச் கொண்ட பிரிஸ்பன் மைதானத்தில் நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக தோனி திரும்பியுள்ளார். அணியில் ரோஹித் சர்மாவின் இடம் என்ன என்பதை பரிசீலிக்க வேண்டிய நேரம் இதுவே.

7 பேட்ஸ்மென்கள் 4 பவுலர்கள் என்ற அணிச் சேர்க்கையினால் ரோஹித் சர்மா இடம்பெறுகிறார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்டிங் பலப்படுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ரோஹித் சர்மா எந்த அள்வுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

அவர் களமிறங்குவதோ 6ஆம் நிலையில் அவருக்குப் பிறகு தோனி, பிறகு 2 அல்லது 3 பந்துகளே தாக்குப் பிடிக்கும் பவுலர்கள், இந்நிலையில் அவரது ஆட்டம் தோனி எவ்வளவு நேரம் நிற்கிறாரோ அதனைப் பொறுத்து அமையும். தோனி விரைவில் ஆட்டமிழந்தால், நமது டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு அவரால் பெரிதாக பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய முடியாது.

 

ஆகவே 30 அல்லது 40 ரன்கள் மிஞ்சிப்போனால் ஒரு அரைசதத்திற்கு மேல் பங்களிப்பு செய்ய முடியாத ஒருவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் பரிசீலனை செய்வது அவசியம்.

மேலும், அவர் இறங்கும் போது பந்து பழையதாகிப் போன நிலையிலும் அவரால் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை சரியாக விளையாட முடிவதில்லை என்பதை நாம் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய தொடரிலிருந்தே பார்த்து வருகிறோம்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் உண்மையில் விராட் கோலியுடன் அவர் நின்று ஆடியிருந்தால் போதும், இந்தியாவை வெற்றிக்கு அவர் இட்டுச் சென்றிருப்பார். ஆனால், விராட் கோலிக்கு நாம் பக்க வாத்தியமாக இருப்பதா என்ற ‘மும்பை ஈகோ’ அவரை ஆட்டமிழக்கச் செய்ததோ என்ற ஐயம் எழுகிறது.

எனவே அவர் இறங்கும் டவுன் ஆர்டரில் அவரால் பெரிய அளவுக்கு பங்களிப்பு செய்ய முடியாது காரணம் மிக மிக பலவீனமான டெய்ல் எண்டர்கள் இந்திய அணியில் உள்ளனர். 2-வது முக்கிய வீரர் ஒருவர் ஆடிவரும் போது, அவருக்கு பக்க பலமாகவும் அவரால் செயல்பட முடியவில்லை.

 

ஆனால், இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா நம் இந்தியா அணி நிர்வாகத்தினால், இருக்கவே இருக்கிறார், பலிகடா கரன் சர்மா அவரை தூக்கி விட்டு அஸ்வினைக் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று யோசிப்பார்கள். அதுதான் நடக்கும் என்று தோனி போட்டிக்கு முன்னால் பேசிய செய்தியாளர்கள் கூட்டமும் நிரூபித்துள்ளது.

"பின்களத்தில் அஸ்வினைப் போல் ஒரு வீரர் இருப்பது பேட்டிங்கை பலமாக்குவதோடு, ஆஃப் ஸ்பின்னர்களுக்கான ஸ்பாட் கிடைக்கும் போது பயனுள்ளதாக இருப்பார். இந்த இடத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரோ (ஜடேஜா) அல்லது லெக் ஸ்பின்னரோ (கரன் சர்மா) அதிகம் பயனளிக்க மாட்டார்கள்” என்று கூறிவிட்டார்.

 

எனவே பங்கஜ் சிங் கதி கரன் சர்மாவுக்கும் ஏற்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. உண்மையில் ரோஹித் சர்மா எடுக்கும் 30 அல்லது 40 ரன்களை அஸ்வின் எடுப்பார். அப்படியிருக்கையில் கரன் சர்மாவையும் வைத்துக் கொள்ளலாம். அல்லது அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவை அணியில் கொண்டு வந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆஃப் ஸ்பின்னிற்கு அஸ்வின் என்று அணிச் சேர்க்கை கச்சிதமாக அமையும்.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவினால் முன்கள வீரராகக் களமிறங்க முடியாத நிலையில் 6ஆம் நிலையில் அவர் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/article6697440.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய அணியிலிருந்து ரியான் ஹேரிஸ், பீட்டர் சிடில் நீக்கம்
 

நாளை பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரியான் ஹேரிஸ், பீட்டர் சிடில் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரியான் ஹேரிஸ் 100% உடற்தகுதியுடன் இல்லை என்பதாலும், பீட்டர் சிடில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்பதாலும் நீக்கப்பட்டுள்ளனர்.

 

“பீட்டர் சிடிலுக்கு இது பெருத்த ஏமாற்றமாகவே இருக்கும். அவர் நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாக வீசி வந்துள்ளார். இதற்காக அவர் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்று கூறுவதற்கு இடமில்லை. இந்தத் தொடரில் அவர் மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

காயமடைந்த கேப்டன் கிளார்க்கிற்கு பதிலாக அணியில் இடது கை பேட்ஸ்மென் ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

நாளை களமிறங்கும் 11 வீரர்கள்: வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ், வாட்சன், ஸ்மித், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன், ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6697559.ece

  • தொடங்கியவர்

மாற்றம் தருவாரா தோனி *இந்தியா–ஆஸி., 2வது மோதல் ஆரம்பம்
டிசம்பர் 16, 2014.

 

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது.  இதில், கேப்டன் தோனி களமிறங்குவதால் இந்தியாவுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. இவரது அனுபவ வியூகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று பிரிஸ்பேனில் துவங்குகிறது.

 

விஜய் நம்பிக்கை:

இந்திய அணியை பொறுத்தவரை துவக்கத்தில் முரளி விஜய் நம்பிக்கை தருகிறார். கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும்(53, 99) அசத்தினார். ஷிகர் தவான் (25,9) ஏமாற்றுகிறார்.  டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நீண்ட நேரம் விளையாட புஜாரா முயற்சிக்க வேண்டும்.

 

கோஹ்லி துணிச்சல்:

கடந்த போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராத் கோஹ்லி ஜொலித்தார். இரு இன்னிங்சிலும் சதம் அடித்து துணிச்சலாக போராடினார். இவரது அசத்தல் ஆட்டம் தொடரலாம். கை விரல் காயத்தலிருந்து மீண்ட தோனி, இப்போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்குவது பலம். இவரது பதவிக்கு சவால் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் ஆக்ரோஷத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும். இவரது ‘பினிஷிங்’ திறன் நிச்சயமாக அணிக்கு கைகொடுக்கும்.

 

ஐந்து பவுலர்கள்:

கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரகானே அதிக பங்களிப்பை தருவது அவசியம். ஐந்து பவுலர்கள் ‘பார்முலாவை’ பின்பற்றினால், ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது.

 

வருகிறார் அஷ்வின்:

பந்துகள் எகிறும் பிரிஸ்பேன் ஆடுகளத்தில் நமது ‘வேகங்கள்’ அசத்த வேண்டும். ஷமி, ஆரோன், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் எழுச்சி பெறுவது அவசியம். ‘சுழலில்’ கரண் சர்மாவுக்கு பதில் அனுபவ அஷ்வின் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

 

ஸ்மித் தலைமை:

ஆஸ்திரேலிய அணியில் ரோஜர்ஸ், வாட்சன் ஏமாற்றினாலும், வார்னர் துாணாக நிற்கிறார். கடந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த இவர், வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார். கடந்த போட்டியில் சதம் கண்ட இளம் ஸ்டீவன் ஸ்மித், இம்முறை இளம் கேப்டனாக அவதாரம் எடுக்கிறார். காயத்தால் மைக்கேல் கிளார்க் விலகியது பின்னடைவு தான்.

 

லியான் ஜாலம்:

பவுலிங்கில் ‘சுழல்’ வீரர் நாதன் லியான் மிரட்டுகிறார். கடந்த போட்டியில் 12 விக்கெட் வீழ்த்திய இவர், இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தார். ‘வேகத்தில்’ ஜான்சனுடன் சேர்ந்து புதிய வரவுகளான ஹேசல்வுட், ஸ்டார்க் மிரட்ட இருப்பதால், இந்திய அணிக்கு பெரும் தொல்லை காத்திருக்கிறது.

 

மழை வருமா

பிரிஸ்பேனில் வெப்பநிலை அதிகபட்சமாக 39, குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியாக இருக்கும். இன்று மழை வர 20 சதவீதம் வாய்ப்பு உள்ளது. நாளை மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது.

 

ஆடுகளம் எப்படி

பிரிஸ்பேன் ஆடுகளம் எப்போதும் போல வேகப்பந்தவீச்சுக்கு கைகொடுக்கும். புற்கள் அதிகம் காணப்படுவதால், பந்துகள் அதிகமாக எகிறுவது நிச்சயம்.

 

ராசியில்லாத மைதானம்

பிரிஸ்பேனில் இந்தியா வெற்றி பெற்றதே இல்லை. இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோல்வி அடைந்தது. 2003ல்   கங்குலி தலைமையில் ஒரு போட்டியை ‘டிரா’ செய்தது.

 

* ஆஸ்திரேலியாவுக்கு இந்த மைதானம் மிகவும் சாதகமானது. இங்கு சமீப காலமாக தோல்வியே அடையவில்லை. 1988ல் வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது. இதற்கு பின், கடந்த 25 ஆண்டுகளில் நடந்த 24 டெஸ்டில் 18ல் வென்றது. 6 போட்டியை ‘டிரா’ செய்தது.

 

ஹேசல்வுட் அறிமுகம்

இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரியான் ஹாரிஸ், சிடில் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப்பதில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஹேசல்வுட் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.

 

மார்ஷ் சகோதரர்கள்

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக், மார்க் வாக்கிற்கு(2002) பின், ஒரே டெஸ்ட் போட்டியில் விளையாடும் சகோதரர்கள் என்ற பெருமையை ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் இன்று பெற உள்ளனர். இவர்கள் முன்னாள் வீரர் ஜெப் மார்ஷின் மகன்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இயான்– கிரெக் சாப்பல், நெட்–டேவ் கிரெகரி, சார்லஸ்–அலெக் பானர்மென் வரிசையில் 5வது ஆஸ்திரேலிய சகோதரர்களாகின்றனர்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418751840/Indiaaustraliacricketsecondtestbrisbane.html

  • தொடங்கியவர்

ஆஸிக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் இந்திய அணி 311 ஓட்டங்கள் குவிப்பு
 

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவ் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் அடிலெய்டில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 48 ஓட்டங்களால் தோல்வியடைய, அவுஸ்திலேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

அதன்படி களமிறங்கிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்டநேரமுடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைப்பெற்றது. இந்திய அணி சார்பாக முரளி விஜய் 144 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ரஹானே 70 ஓட்டங்களுடனும் சர்மா 26 ஓட்டங்களுடனும் ஆடுகளத்திலுள்ளனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹஸ்லிவூட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/17/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-311-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முரளி விஜய் அபார சதம்: பிரிஸ்பனில் ஆஸ்திரேலிய கோட்டையை முற்றுகையிட்ட இந்தியா

 

1432mus.jpg

பிரிஸ்பன் மைதானத்தில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

ஆட்ட முடிவில் அஜிங்கிய ரஹானே 75 ரன்களுடனும், ரோஹித் சர்மா 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தனர்.

 

பவுன்ஸ் மட்டும் உள்ள ஆனால் எதிர்பார்த்த வேகம் இல்லாத பிரிஸ்பன் பிட்சில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய தயங்காமல் முடிவெடுத்தார். பிரிஸ்பன் மைதானத்தில் இன்று கடும் வெப்பம் நிலவியது. இதில் ஆஸ்திரேலிய பவுலர்கள் போராடினர்.

மொகமது ஷமி, கரண் சர்மா இந்த போட்டியில் இல்லை, பதிலாக அஸ்வின், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடிலெய்ட் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு அவுட் ஆன ரணத்தை உணர்ந்த முரளி விஜய், இன்று மேலும் உத்தரவாதத்துடன் ஆடினார். பந்துகளை அருமையாக ஆடாமல் விட்டார். அதே சமயத்தில் தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அடிப்பதிலும் வெற்றி கண்டார்.

 

ஆனால், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்ட ஷான் மார்ஷ் நிச்சயம் இன்று ஓய்வறையில் விமர்சனங்களைச் சந்திப்பார். தொடக்க ஓவர்களிலேயே முரளி விஜய்க்கு மிட்செல் ஜான்சன் பந்தில் ஸ்லிப் கார்டனில் கேட்ச் ஒன்றை அவர் கோட்டைவிட்டார். அதன் பிறகு ஒருவரும் முரளி விஜய்யை நிறுத்த முடியவில்லை.

ரியான் ஹேரிஸ், பீட்டர் சிடில் ஆகியோரின் அனுபவம் இந்த போட்டியில் இல்லாதது ஆஸ்திரேலியாவை முடக்கியது. ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் கடைசியில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். மிட்செல் மார்ஷும் காயம் அடைந்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் பிரச்சினைகள் அதிகம் என்றே தெரிகிறது.

 

தவானால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. காரணம் அவர் ஷாட் தேர்வு செய்த மைதானத்தின் பகுதி மிகவும் தூரமானது. அருமையாகவே ஆடிவந்தார். 24 ரன்கள் எடுத்து நன்றாக செட்டில் ஆன பிறகு மிட்செல் மார்ஷ் வீசிய ஷாட் பிட்ச் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை தேவையில்லாமல் கட் செய்ய முயற்சித்தார். பந்து எதிர்பார்த்ததை விட எழும்பியது எட்ஜ் ஆகி ஹாடினிடம் கேட்ச் ஆனது. இந்தியா 56/1.

முரளி விஜய் மிட்செல் ஜான்சனை தேர்ட்மேனில் இரண்டு லேட் கட் பவுண்டரிகளையும் மிட்செல் மார்ஷை பாயிண்டிலும் பவுண்டரி கண்டு உணவு இடைவேளையின் போது 46 ரன்களில் இருக்க புஜாரா 15 ரன்களில் இருக்க ஸ்கோர் 89/1 என்று இருந்தது.

 

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா ரன் விகிதத்தை கட்டுப்படுத்தத் தொடங்கியது. விஜய் 79 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார்.

புஜாராவும் எந்த விதப் பிரச்சனையும் இன்றி ஆடி வந்தார். ஆனால் ஹீட் காரணமாக மிட்செல் மார்ஷ் பெவிலியன் சென்றார். ஸ்டார்க்கும் 35 டிகிரி வெயிலில் களைப்படைந்தார். புஜாரா 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹேசில்வுட் வீசிய சற்றே உட்புறமாக வளைந்து வந்த ஷாட் பிட்ச் பந்தை தடுக்க முயன்று பிறகு விலகிக்கொள்ள முயன்றார். ஆனால் பந்து அவரது ஹெல்மெட்டை உரசிக் கொண்டு ஹேடினிடம் சென்றது, அவர் பிடித்துவிட்டு முறையீடு செய்ய நடுவர் இயன் கோல்டு கையை உயர்த்தினார். மோசமான தீர்ப்பில் வெளியேறினார் புஜாரா.

 

இப்போது பலத்த கரகோஷத்துடன் விராட் கோலி களமிறங்கினார். அவர் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்திருந்த போது அடிலெய்ட் பவுன்ஸ் என்று நினைத்து ஹேசில்வுட் பந்தை கட் செய்ய நினைத்தார். பவுன்ஸ் கூடுதல் காரணமாக எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். கிட்டத்தட்ட தவான் ஆட்டமிழந்ததைப் போல்தான் இவரும் அவுட் ஆனார். 137/3 என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் கை கொஞ்சம் ஓங்கும் போல் தெரிந்தது.

 

ஆனால் முரளி விஜய் தேநீர் இடைவேளையின் போது 73 ரன்களுடனும் ரஹானே 13 ரன்களுடனும் இருக்க இந்தியா 151/3 என்று இருந்தது. 52 ஓவர்கள் முடிந்திருந்தன. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 160 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் தனது அனாயாச ஆட்டத்தை தொடர்ந்து 175 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். சதம் அடிப்பதற்கு முன்னரே அடிக்கத் தொடங்கிய விஜய் சதம் அடித்த பிறகு மேலும் 8 பவுண்டரிகளை விளாசி 144 ரன்களை 213 பந்துகளில் எடுத்து நேதன் லயன் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று பிராட் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஹானேயுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்க்கப்பட்டது.

 

ரஹானே அபாரமாக தனது இன்னிங்ஸைக் கட்டமைத்தார். இவர் ஆடிய டிரைவ் ஷாட்கள் அபாரம. அவர் 122 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

சவுரவ் கங்குலி இதே பிரிஸ்பனில் 144 ரன்களை எடுத்த அதே ஸ்கோரில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களமிறங்கி நேதன் லயன் பந்தை லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சரை அடித்து டெஸ்ட் போட்டியின் முதல் சிக்சரை துவக்கி வைத்தார். அவர் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ரஹானேயுடன் ஆடி வருகிறார்.

நேதன் லயன் 20 ஓவர்கள் வீசி 87 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஜான்சன் எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு அச்சுறுத்தலாக வீசவில்லை. ஹேசில்வுட் மட்டுமே நல்ல லைன் மற்றும் லெந்தில் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

1988-ஆம் ஆண்டு விவ் ரிச்சர்ட்ஸ் தலைமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பிரிஸ்பனில் தோற்ற பிறகு ஆஸ்திரேலியா இங்கு தோற்றதில்லை. இப்போது கிளார்க் இல்லாத நிலையில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6700857.ece

  • தொடங்கியவர்

நான் சதம் எடுத்ததை ரஹானேதான் சொன்னார்: முரளி விஜய்
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் முரளி விஜய் சதம் எடுத்ததை அவருடன் ஆடிய ரஹானேதான் அவரிடம் கூறியதாக முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 99 ரன்களில் ஆட்டமிழக்க காரணம் தான் தனது சதத்தில் மிகுந்த கவனம் கொண்டு அதனால் பதட்டமடைந்து ஆட்டமிழந்ததாகவும் இம்முறை ஸ்கோர் போர்டையே பார்க்கக் கூடாது என்று திட்டவட்டமாக இருந்ததாகவும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி விஜய் கூறியதாவது:

 

நான் எந்த ரன் எண்ணிக்கையில் ஆடிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு தெரியாது. நான் அணியின் ஸ்கோர் மற்றும் எனது பேட்டிங்கில் மட்டும் குறியாக இருந்தேன். அஜிங்கிய ரஹானே எதிர்முனையில் இருந்தார். அவர்தான் நான் சதம் எடுத்துவிட்டேன் என்று கூறினார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. இது ஒருவிதத்தில் நல்லது. நான் எனது ஸ்கோரைப் பார்க்க விரும்பவில்லை ஏனெனில் கடந்த போட்டியில் அதில் கவனம் செலுத்திதான் 99 ரன்னில் ஆட்டமிழந்தேன்.

கடந்த போட்டியில் சதம் எடுக்காமல் ஆட்டமிழந்த பிறகே இந்தப் போட்டியில் நான் அதில் கவனம் செலுத்தாமல் சதம் எடுத்தது ஒரு பேருணர்வைத் தருகிறது. கடந்த முறை நான் 99 ரன் என்று அறிந்திருந்தேன் ஆனால் சதம் எடுக்கவில்லை, இந்த முறை என் ஸ்கோர் என்னவென்றே தெரியாது ஆனால் சதம் கிடைத்தது.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எடுப்பதென்பது நமது நம்பிக்கை மட்டத்தை அதிகரிக்கும். மேலும் இன்றைய வெப்பநிலை அவர்களை விட நமக்கு சாதகமாக அமைந்தது.

அவர்களுக்கு மன ரீதியாக இந்த வெயில் பெரும் சவாலாக அமைந்தது. பவுலர்கள் அசதியடைந்ததை நான் பார்த்தேன். அதனால்தான் நான் பொறுமையாக காத்திருந்தேன்.” என்றார் முரளி விஜய்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/article6701474.ece

  • தொடங்கியவர்

பிரிஸ்பன் டெஸ்ட்: ஹேசில்வுட் அபாரப் பந்துவீச்சு; இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளையின் போது இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் 23.2 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

தோனியும், அஸ்வினும் சாதுரியமாக விளையாடி 57 ரன்களைச் சேர்த்ததால் இந்தியா 400 ரன்களைக் கடந்தது. ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அபாரமாக வீசினார். ‘நிச்சயமின்மையின் பகுதி’ என்று ஜெஃப் பாய்காட் அழைக்கும் இடங்களில் அவர் பந்தை பிட்ச் செய்தார்.

81 ரன்களில் ரஹானே சதத்தையும் தாண்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அபாரமான பந்தை வீசினார் ஹேசில்வுட். வானிலையும் சற்றே குளிரடைய, பிட்சும் நன்றாகக் காய்ந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது.

 

ரஹானே அபாரமான ஃபார்மில் இருந்ததால்தான் ஹேசில்வுட்டின் அந்தப் பந்தை தொட முடிந்தது. நிறைய பேட்ஸ்மென்கள் அந்தப் பந்தில் பீட் ஆகியிருப்பார்களே தவிர பந்தை தொட்டிருக்க முடியாது. நல்ல அளவில் ஓரளவுக்கு பவுன்ஸ் ஆன பந்து லேட் ஸ்விங் ஆகி ரஹானேயின் மட்டை விளிம்பைத் தொட்டு ஹேடினிடம் கேட்ச் ஆனது.

தோனி களமிறங்கி முதல் 12 பந்துகளில் பெரும்பாலும் உடம்பில் வாங்கி ஆடினார். ஹேசில்வுட் முனையில் ஷேன் வாட்சன் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் ஒரு சேஞ்ச் பவுலராகவே செயல்பட்டு வந்தார். ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அவர் போதும் போலும். நன்றாக வெளியே, அதாவது 5-6-வது ஸ்டம்பிற்குச் சென்ற பந்தை காலை நன்றாக முன்னே குறுக்காக போடாமல் மட்டையை மட்டும் காற்றில் தொங்க விட்டு எட்ஜ் செய்தார் ரோஹித், ஸ்மித் அதனை அபாரமாக பிடித்தார். ரோஹித் இன்னொரு முறை டெஸ்ட் போட்டிக்கு தான் லாயக்கில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

 

தோனி உடம்பைக் காட்டுவதை நிறுத்தி விட்டு மிட்செல் ஜான்சனை கவர் திசையில் விசாலமான ஒரு பவுண்டரியை அடித்தார். அதன் பிறகு மிட்செல் ஸ்டார்க் வந்தவுடன் புல் ஷாட், ஒரு அபாரமான நேர் டிரைவ் என்று ஆடியதோடு, ஆஃப் ஸ்டம்ப் ஸ்விங்கை மட்டுப் படுத்த நடந்து வந்து ஆடினார் தோனி.

அஸ்வின் வழக்கம் போல் அபாரமான சில ஷாட்களை ஆடினார். குறிப்பாக ஹேசில்வுட்டை பேக்ஃபுட் பன்ச் ஷாட் ஆடியது ரோஹித்தை விட அஸ்வினின் கால் நகர்த்தல் சூப்பர் என்பதை காட்டியது. அவர் ஹேசில்வுட்டையும் ஒரு ஆன் டிரைவ் ஆடினார். மொத்தம் 41 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் என்ற உருப்படியான பங்களிப்பு செய்து ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனியும் ஹேசில்வுட் பந்தை லீவ் செய்ய நினைத்து எட்ஜ் செய்து 33 ரன்களில் வெளியேறினார். உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரை நேதன் லயன் வீழ்த்தினார். லயன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தத் தொடரில் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-408-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article6703281.ece

  • தொடங்கியவர்

உமேஷ் யாதவ், ஸ்மித் அபாரம்: ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள்

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் 88 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்தும், மிட்செல் மார்ஷ் 7 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். உமேஷ் யாதவ் 13 ஓவர்கள் 2 மைடன்கள் 48 ரன்கள் 3 விக்கெட்டுகள்.

 

இஷாந்த் சர்மாவும் வருண் ஆரோனும் பந்து வீசத் தொடங்கினர். ஓவர் த விக்கெட்டில் வீசாமல் இசாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் வீசியது இந்த முறை பயனளிக்கவில்லை.

முதல் ஓவரை ஓவர் த விக்கெட்டில் வீசி பலன் கண்ட இசாந்த் சர்மா 3-வது ஓவரில் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி 2 மோசமான பந்துகளில் 2 பவுண்டரிகளை வார்னருக்கு வழங்கினார். மீண்டும் 5-வது ஓவரும் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி 3 பவுண்டரிகளை வார்னருக்கு கொடுத்தார். வார்னர் அடித்த நேர் டிரைவ் அற்புதமான ஷாட்.

3 ஓவர்களில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சொத்தையாக வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்த இசாந்த் ஓவரை கட் செய்தார் தோனி. 8 ஓவர்களில் ஸ்கோர் 43 ரன்கள் என்றிருந்த போது உமேஷ் யாதவ் மீண்டும் வீச வந்தார். முதல் பந்தை வார்னர் பன்ச் செய்து பவுண்டரி அடித்தார். 3-வது பந்து நல்ல திசையில் ஒரு ஷாட் பிட்ச் பந்தை உமேஷ் வீச புல் ஆட முயன்ற வார்னர் டாப் எட்ஜ் செய்தார். ஸ்லிப்பில் அஸ்வின் கேட்ச் பிடித்தார். வார்னர் 28 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

கிறிஸ் ராஜர்சுக்கு பிரிஸ்பன் பிட்சின் வேகம் பிடித்துப் போக ஆஃப் திசையில் சில அபாரமான ஷாட்களை விளையாடினார். வாட்சன் களமிறங்கி வருண் ஆரோனின் பவுன்சரில் தப்பிப் பிழைத்தார். அதன் பிறகு அவரும் விரைவாக 25 ரன்களைச் சேர்க்க 2வது விக்கெட்டுக்காக 51 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஆட்டத்தின் 20-வது ஓவரில் அஸ்வினின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று தவானின் அபாரமான கேட்சிற்கு ஆட்டமிழந்தார்.

 

அதற்கு அடுத்த வருண் ஆரோன் ஓவரில் 3 அபாரமான பவுண்டரிகளை அடித்தார் கிறிஸ் ராஜர்ஸ். பிறகு அஸ்வினை கட் செய்து பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் கடந்தார் ராஜர்ஸ். 55 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் வீசிய லெக் திசை பந்தை லெக் திசையில் தட்டி விட நினைத்தார் பந்து கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. 121/3 என்ற நிலையில் ஆஸி. சற்றே ஆட்டம் கண்டது.

 

ஆனால் கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் இணைந்து 87 ரன்களை 22 ஓவர்களில் சேர்த்தனர். இதில் ஷான் மார்ஷ் 32 ரன்களை எடுத்திருந்த போது முதலில் ஆரோனின் பவுன்சரை புல் ஆட முயன்றார் பந்து அருகிலேயே ரஹானேயிடம் உயரே இருந்து வந்தது ஆனால் அவர் கோட்டை விட்டார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் உமேஷ் யாதவ்வின் நல்ல வேகமான பந்து அவரது மட்டை விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் அஸ்வினிடம் சரண் அடைந்தது.

 

ஸ்மித் ஆக்ரோஷமாக ஆடினார். 40-வது ஓவரில் அஸ்வின் பந்தை இருமுறை இறங்கி வந்து நேராக சிக்சர் அடித்தார். அவரை வீழ்த்திவிட்டால் இந்தியா முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வாய்ப்பிருக்கிறது. இன்று இந்தியாவின் கடைசி 6 விக்கெட்டுகளை 87 ரன்களுக்கு ஆஸ்திரேலியா கைப்பற்றியதோ அதே போல் நாளை இந்தியாவும் செய்தால் 100 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கலாம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-221-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6704348.ece

 

  • தொடங்கியவர்

பிரிஸ்பனில் 400 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆஸி. வெற்றி பெற்றதில்லை: புள்ளி விவரம் கூறுகிறது
 

 

பிரிஸ்பன் மைதானத்தில் எதிரணியினர் 400 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்த சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ள இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்த மைதானத்தில் 400 ரன்களுக்கு மேல் கொடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.

 

இதற்கு முன்னர் 3 முறை பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி எதிரணியினருக்கு முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளது. இதில் ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1960ஆம் ஆண்டு பிரிஸ்பன் டெஸ்ட் ‘டை’ ஆனது.

இங்கிலாந்து அணி 1986ஆம் ஆண்டு பிரிஸ்பனில் 456 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்த போது ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் ஆஃப் ஸ்பின்னர் ஜான் எம்ப்யூரே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர். இங்கிலாந்து கேப்டன் மைக் கேட்டிங்.

 

பிறகு 2012ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி 450 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்த போது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

இம்முறை இந்தியா 408 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா 221/4 என்று 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் உள்ளது.

ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை என்கிறது புள்ளி விவரங்கள். ஆனால், இம்முறை அது மாறலாம். அல்லது இந்தியா தீவிரமாக, ஆக்ரோஷமாக விளையாடினால் பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் இந்தக் குறைபாட்டைத் தொடரச்செய்யலாம்.

நாளை நடைபெறும் 3ஆம் நாள் ஆட்டம் முடிவு என்ன என்பதை தெரியப்படுத்தும் என்று நம்பலாம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article6704566.ece

 

  • தொடங்கியவர்

பிரிஸ்பன் டெஸ்ட்: மோசமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பின்னடைவு

 

முதல் ஒருமணி நேர அபாரப் பந்து வீச்சு திடீரென மாயமாக, 3ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் மிக முக்கியமான 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் மிக மோசமாக வீசியதால் ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் 505 ரன்களைக் குவித்து 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தன் 2-வது இன்னிங்ஸில் முரளி விஜய் விக்கெட்டை இழந்து 71 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவன் 26 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு காண்பித்த அபார துல்லியம், லைன் மற்றும் லெந்த் ஜான்சன் இறங்கியவுடன் எங்கு சென்றது என்று தெரியவில்லை. பவுண்டரிகளே வரவில்லை. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் 3 பவுண்டரிகள்தான் அடிக்கப்பட்டது. 2 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. ஆஸ்திரேலியா மீது திடீரென ஒரு நெருக்கடி சுமத்தப்பட்டது. ஆனால் அவையனைத்தும் அடுத்த சில நிமிடங்களில் மறைந்து விடும் என்று யாரேனும் நினைக்க முடியுமா? ஆனால் அதுதான் இன்று நடந்தது.

 

221/4 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 மணி நேர ஆட்டத்தில் சுமார் 284 ரன்களை குவித்தது என்றால் பந்து வீச்சின் தரம் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை.

65 ரன்களுடன் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 133 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் (88), மிட்செல் ஸ்டார்க் (52), லயன் (23), ஹேசில்வுட் (32) ஆகியோரை வீழ்த்த இந்திய பவுலர்கள் கண்ணீர் விட்டனர் என்பதோடு இவர்கள் பந்துவீச்சை சற்றும் மதிக்கவில்லை. 109 ஓவர்களிலேயே 505 ரன்கள் என்றால் ஓவருக்கு 4.60 என்ற விகிதத்தில் வெளுத்துக் கட்டும் அளவுக்கு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. நல்ல பந்துகளுக்கு விக்கெட்டுகள் விழவே செய்தன.

இன்று காலை முதல் 1 மணி நேர ஆட்டமே இந்திய பந்து வீச்சுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமைந்தது.

 

மிட்செல் மார்ஷ், இசாந்த் வீசிய இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். பிராட் ஹேடினுக்கு வருண் ஆரோன் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஆக்ரோஷமான பவுன்சரை வீச அவரால் அதனை ஷாட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

247/6 என்று அருமையான நிலையிலிருந்து இந்திய பந்துவீச்சு ஷாட் பிட்ச் பவுலிங் என்பதாக தடம் மாறியது. ஜான்சன், ஸ்மித் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 26 ஓவர்களில் 148 ரன்களை விளாசியது ஆட்டத்தின் போக்கை இந்தியக் கைகளிலிருந்து பிடுங்கிச் சென்றது. முதல் 6 பேட்ஸ்மென்களின் பங்களிப்பை விட கடைசி 4 பேட்ஸ்மென்களின் பங்களிப்பு அதிகமாகிவிட்டது.

 

மிட்செல் ஜான்சனுக்கு ஏகப்பட்ட ஷாட் பிட்ச் பந்துகளை வீசினர். இசாந்த் சர்மா அவரது மித வேகத்திற்கு ஷாட் பிட்ச் உத்தியை கையாண்டிருக்க கூடாது. பவுண்டரிகள் ஆறாக ஓடத் தொடங்கின. மிட்செல் ஜான்சன் அடித்து நொறுக்கத் தொடங்கினார். உணவு இடைவேளையின் போது 83 பந்துகளில் 104 ரன்களை இவர்கள் 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

 

உணவு இடைவேளைக்குப் பிறகு தோனி கொஞ்சம் நெருக்கியதால் ரன் விகிதம் சற்றே மட்டுப்பட்டது. ஆனாலும் மிட்செல் ஜான்சன் 93 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 88 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் 191 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 133 ரன்கள் எடுத்து இசாந்த் பந்தை வாங்கி ஸ்டம்பிற்குள் விட்டுக் கொண்டார். 398/8 என்ற நிலையில் கூட இந்தியா எடுத்த ஸ்கோருக்குள் அல்லது சற்று கூடுதலாக ஆஸ்திரேலியாவை சுருட்டியிருக்கலாம். ஆனால் லைன் மற்றும் லெந்த் காணாமல் போனது இதனால் மேலும் 107 ரன்களை கடைசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்தியா விட்டுக் கொடுத்தது.

டெய்ல் எண்டர்களுக்கு ரன்களை வாரி வழங்குவதில் இந்திய பவுலர்கள் வள்ளலாக திகழ்கின்றனர். 8,9,10-ஆம் நிலை பேட்ஸ்மென்களுக்கு இந்தியா சராசரியாக 84 ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் டெய்ல் எண்டர்களுக்கு எதிரான மிக மிக மோசமான பந்துவீச்சாகும்.

 

வர்ணனையில் இயன் ஹீலி கூறுகிறார், ஜான்சனுக்கு நேராக வரும் ஃபுல் பந்துகளை ஆட வராது என்று ஆனால் இந்திய அணி அவ்வாறான பந்துகளை அவருக்கு வீசவில்லை என்றார்.

கடைசி 4 விக்கெட்டுகள் சேர்ந்து 48.3 ஓவர்களில் 258 ரன்கள்; முதல் 6 விக்கெட்டுகள் சேர்ந்து 61.1 ஓவர்களில் 247 ரன்கள். இந்த ஒரு புள்ளிவிவரம் போதும் மற்றபடி இன்றைய ஆட்டத்தை வர்ணிப்பது வெறும் விவரமாக மட்டுமே தெரியும்.

நாளை முழுதும் இந்தியா விளையாடுவதோடு டெஸ்ட் போட்டியை டிராவாக்க இந்தியா முதலில் முயற்சி செய்யும் என்றே கருதலாம். அல்லது ஆஸ்திரேலியா வெற்றி பெற 270 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா ஒழுக்கமாக, ஆக்ரோஷமாக லைன் மற்றும் லெந்த்தில் வீசி நெருக்கடி கொடுத்தால் ஒரு அரிய வெற்றியைக் கூட பெறலாம்.

எனவே அனைத்தும் முடிந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. இந்தியாவுக்கும் ஒரு புறவயமான வாய்ப்பு உள்ளது என்றே கூறவேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article6708015.ece

 

  • தொடங்கியவர்

இந்திய அணியினரின் வாய்ப்பேச்சுக்கு ஜான்சன் பதிலடி கொடுத்தார்: ஸ்டீவ் ஸ்மித்
 

 

மிட்செல் ஜான்சன் களமிறங்கிய போது இந்திய வீரர்கள் சிலர் அவர் மீது வார்த்தைகளால் பாய்ந்தனர், அது அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சை மிட்செல் ஜான்சன் புரட்டி எடுத்ததற்குக் காரணம் அவரை இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்து தூண்டிவிட்டதே என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

247/6 என்ற நிலையில் இந்தியப் பந்து வீச்சு ஆக்ரோஷமாகக் காணப்பட்டது. இந்நிலையில் ஜான்சன் களமிறங்க அவர் இறங்கியவுடனேயே இந்திய பீல்டர்களின் ஸ்லெட்ஜிங் தொடங்கி விட்டது.

 

குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இசாந்த் சர்மா தனது பார்வை, செய்கை மூலமாகவும் ஜான்சனின் கவனத்தை சிதறடிக்க முயன்றனர்.

ஆனால் அது இந்திய அணிக்கு எதிராகப் போய் முடிந்தது. அப்போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த கேப்டன் ஸ்மித் இது பற்றி கூறுகையில், “ஜான்சன் இறங்கி முதல் பந்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆடினார்.

 

இந்திய அணியினர் அவர் மீது ஆக்ரோஷம் காட்டினர். ஏகப்பட்ட பவுன்சர்களை வீசினர். சிலபல கேலி வார்த்தைகளும் ஜான்சன் காதில் கேட்கும்படியாகப் பேசப்பட்டது.

மிட்செலும் ரோஹித் சர்மாவும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கேலிப் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால் ஜான்சன் இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்தார். நேர்மையாகக் கூறவேண்டுமெனில் ஜான்சனின் பேட்டிங் முன்னால் இந்திய பவுலர்களுக்கு விடை இல்லாமல் போனது.

டெய்ல் எண்டர்கள் இவ்வாறாக பேட்டிங் செய்யும் போது எதிரணியினருக்கு அது ஒரு துர்சொப்பனமாகவே இருக்கும்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/article6708134.ece

  • தொடங்கியவர்

விராட் கோலியாக இருந்திருந்தால் ஆட்டத்தை நழுவ விட்டிருக்க மாட்டார்: ஸ்டூவர்ட் மெகில்
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 247/6 என்ற நிலையிலிருந்து இந்தியா ஆட்டத்தை நழுவ விட்டது. விராட் கோலி தலைமையில் இப்படி நடந்திருக்காது என்று தான் கருதுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் கூறியுள்ளார்.

ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ விவாதம் ஒன்றில் அவரும் அஜித் அகார்க்கரும் தினசரி ஆட்டத்தை அலசி வருகின்றனர், 3ஆம் நாள் பற்றிய விவாதத்தில் ஸ்டூவர்ட் மெகில் தோனியின் கேப்டன்சி பற்றி பேசியதாவது:

 

விராட் கோலியாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கியிருப்பார், பவுலர்களை அழைத்துப் பேசியிருப்பார், ஆட்டத்தை அவ்வளவு எளிதில் நழுவ விட்டிருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். மாறாக தோனி மிக அமைதியான தாக்கம் செலுத்துபவர், ஒரு கட்டத்தில் பவுலர்கள் தங்களது உத்திகளை செயல்படுத்த அவர் கொஞ்சம் கூடுதலாகவே அனுமதித்து விட்டார் என்று எனக்கு தோன்றுகிறது. ஜான்சன் களமிறங்கியவுடன் நாம் பவுன்சர்களை வீசுவோம் என்று தோனி கூறியிருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.

ஏனெனில் அது சிறந்த உத்தியாக இருக்காது என்று நான் கருதுகிறேன். பவுலர்கள் தோனியிடமிருந்து தங்களை துண்டித்துக் கொண்டு செயல்பட்டதாகவே எனக்குப் படுகிறது. தோனி ஒரு கட்டத்தில் போதும் பவுன்சர்கள், லைன் மற்றும் லெந்த்தில் வீசுங்கள் என்று கூறியிருக்க வேண்டும், தோனி எனக்கென்னவோ அவ்வளவாக பவுலர்களிடம் இதனை வலியுறுத்தவில்லை என்றே தோன்றுகிறது” என்று கூறினார்.

 

இதனை மறுத்த அகார்க்கர், “நான் இதனை சற்று மாறுபட்டு பார்க்கிறேன், தோனிதான் பவுன்சர் ஐடியாவை அளித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேலை செய்யவில்லை எனும்போது அவர் விரைவாக உத்திகளை மாற்றும் முடிவை எடுப்பதில்லை என்பதே தோனி மீதான விமர்சனமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக அயல்நாடுகளில். இந்தியாவில் ஸ்பின் பிட்ச்களில் விக்கெட்டுகள் கிடைத்து விடுவதால் அவருக்கு இங்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. பிரிஸ்பன் பிட்ச் பவுன்ஸை அவர் நம்பினார். மேலும் ஒரு ஷாட் தவறாக ஆடினால் கேட்ச் பிடிக்க 2 பீல்டர்களை நிறுத்தியிருந்தார்.

 

ஆனால் அது வேலைக்காகவில்லை எனும் போது அவர் உத்தியை மாற்றுவதில் தாமதம் செய்தார். ஒருநாள் கிரிக்கெட் போலவே ஆட்டம் நம் பக்கம் திரும்பும் என்று அவர் நம்புகிறார். இங்கிலாந்திலும் அப்படித்தான் எது நடக்கிறதோ அதனை அப்படியே விட்டு விட்டார் மாற்ற முயற்சிக்கவில்லை, அல்லது தாமதமாக முடிவு எடுக்கிறார்.” என்று அகார்க்கர் கூறினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6708625.ece

  • தொடங்கியவர்

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸி. வெற்றி: 2-0 முன்னிலை பெற்றது
 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி. முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் 4-ஆம் நாளான இன்றே ஆஸி. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

71 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை இன்று காலை தொடர்ந்தது. குறைந்தது 350 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு என்ற நிலையில், இந்திய பேட்ஸ்மென்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். காயம் காரணமாக நேற்று களத்தில் ஆடிய தவானுக்கு பதிலாக கோலி களமிறங்கினார். ஆனால் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ஆடிய ரஹானே(10), ரோஹித் சர்மா (0), தோனி (0) என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா முன்னிலை பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

 

கடைசியில் களமிறங்கிய தவான் (81) மற்றும் உமேஷ் யாதவின் (30) உதவியுடன் இந்தியா 127 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸி. வீரர் மிட்சல் ஜான்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

128 ரன்கள் என்ற எளிமையான இலக்கோடு களமிறங்கிய ஆஸி. தனது துவக்க வீரர் வார்னர், தொடர்ந்து வந்த வாட்சன் இருவரையும் அடுத்தடுத்து இழந்தது. ரன்கள் வேகமாக சேர்க்கப்பட்டாலும், ஆஸி. வீரர்களின் அவசர கதி ஆட்டத்தால், மேலும் விக்கெட்டுகள சரிந்தன. ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றியும் பெறலாம் என ரசிகர்கள் நம்பிக்கை பெறும் வகையில் ஆட்டம் இருந்தது.

 

முடிவில் ஆஸிதிரேலியா, போட்டி முடிய 1 நாளும், இன்றைய நாள் முடிய 22.5 ஓவர்களும் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளுக்கு 130 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-20-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article6710820.ece

  • தொடங்கியவர்

தவான் காயத்தினால் வீரர்களிடையே அமைதியின்மை: தோல்விக்குப் பிறகு தோனி
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இன்று காலை ஷிகர் தவனுக்குப் பதிலாக திடீரென விராட் கோலி களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஷிகர் தவன் வலைப்பயிற்சியில் காயமடைந்தார் என்பது மட்டும் அரசல்புரசலாக வர்ணனையில் தெரிவிக்கப்பட்டது. தவன் களமிறங்குவாரா மாட்டாரா என்பதில் அணியினரிடத்திலேயே நிச்சயமின்மை இருந்ததாகவும் விராட் கோலியை திடீரென களமிறங்க வைத்ததாகவும் தோனி கூறியுள்ளார்:

"ஷிகர் தவன் இறங்குவாரா இல்லையா என்பது பற்றி ஓய்வறையில் தெளிவான தகவல்கள் இல்லை. அதனால் விராட் கோலி இறங்குவாரா அல்லது தவன் தொடர்வாரா என்பதில் ஒரு இரண்டக நிலை ஏற்பட்டது.

 

நாங்கள் இந்த சூழ்நிலையை சரியாகக் கையாண்டதாக நான் கருதவில்லை. ஆனால் இறங்கும் பேட்ஸ்மென் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்க வேண்டும், அதனை எங்களால் செய்ய முடியவில்லை.

 

ஆம், நாங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம், அந்தப் பிட்ச் நன்றாக இல்லை, தவானுக்கு அடிபட்டது உண்மைதான். ஆனால் அடிபட்டாலும் களமிறங்குவதில் எந்த வித சிரமமும் இருக்காத ஒரு நிலையே எப்போதும் போல் இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் மீண்டும் ஓய்வறைக்கு வந்தபோதுதான் தவன் வலியில் இருக்கிறார் என்பதும் அவர் பேட் செய்ய முடியாது என்றும் தெரியவந்தது. இதனால் விராட் கோலிக்கு களமிறங்க 5 முதல் 7 நிமிடங்களே இருந்தது. இதனால் ஓய்வறையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. அதிலிருந்து நாங்கள் மீளமுடியவில்லை. இதனை இன்னும் நல்ல முறையில் கையாண்டிருக்கலாம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்படி முடிந்து விட்டது” என்றார் தோனி.

 

வலையில் விராட் கோலிக்கும் அடிபட்டது. 26 நாட் அவுட் என்று இருந்த தவன் ரிட்டையர் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. கோலி திடீரென களமிறங்கியதால் அவரால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. 11 பந்துகளில் 1 ரன் எடுத்து மிட்செல் ஜான்சனிடம் பவுல்டு ஆக 71/1 லிருந்து 87/5 என்று இன்னிங்ஸ் தோல்வி கூட ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

பயிற்சிக்கான ஆடுகளங்கள் பற்றி இந்திய அணி நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “கடந்த 2 நாட்களாக பயிற்சிக்கு புதிய பிட்ச்களைக் கேட்டோம் ஆனால் தேய்ந்து முடிந்த பிட்சையே அளித்தனர். இதனால் இன்று காலை வலைப்பயிற்சியில் தவானுக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. கோலிக்கும் அடிபட்டது. இதனால் தவானால் களமிறங்க முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6710980.ece

  • தொடங்கியவர்

இந்திய வீரர்களுக்குள் 'கம்யூனிகேஷன் கேப்' இருந்ததால்தான் தோற்றோம்: டோணி பரபர குற்றச்சாட்டு

 

பிரிஸ்பேன்: இந்திய வீரர்களுக்குள் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததுதான் ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்டில் அணி தோற்றதற்கு காரணம் என்று கேப்டன் டோணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சிக்காக அளிக்கப்பட்ட ஆடுகளம் மிக மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில், நேற்று ஆட்ட நேரம் முடியும்போது, 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது இந்திய அணி. ஆனால் இன்று காலை அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்து 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

 

இதன்பிறகு ஷிகர் தவான் அடித்த 81 ரன்கள் உதவியுடன் ஓரளவுக்கு மீண்டது. ஆஸ்திரேலிய அணியைவிட 127 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா. இந்திய வீரர்களுக்குள் 'கம்யூனிகேஷன் கேப்' இருந்ததால்தான் தோற்றோம்: டோணி பரபர குற்றச்சாட்டு ஆனால் இந்த ரன்களை எட்டிப்பிடிப்பதற்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. இருப்பினும் போராடி அந்த அணி இரண்டாவது டெஸ்டை வென்றது. இந்தியா கூடுதலாக 70 அல்லது 80 ரன்கள் எடுத்திருந்தாலும் ஆஸ்திரேலிய அணியால் 2வது இன்னிங்கிசில் அதை துரத்தி பிரித்திருக்க முடியாது என்றே கிரிக்கெட் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

 

ஆனால் இந்திய பேட்டிங் ஏன் காலையில் அப்படி தடுமாறியது என்பதற்கு டோணி சொன்ன காரணம் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது. போட்டிக்கு பிறகு டோணி கூறியது இதுதான்: பேட்டிங் பயிற்சிக்காக எங்களுக்கு மோசமான பிட்ச் ஒதுக்கப்பட்டது. அதில் பயிற்சி பெற்றபோது பந்துகள் தாறுமாறாக எகிறி வந்தன. சில நேரங்களில் தாழ்வாகவும் சென்றன. பந்துகளை கணிக்க முடியாதபடி பிட்ச் இருந்தது. இதனால் பயிற்சியின்போது, ஷிகர் தவான் கைகளில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. ஆனால் காயம் குறித்து உடனடியாக பிற வீரர்களிடம் ஷிகர் கூறவில்லை. பேட்டிங் செய்ய இந்தியா களமிறங்க வேண்டிய நேரம் நெருங்கும்போதுதான், தன்னால் பேட்டிங் செய்ய களமிறங்க முடியாது என்று ஷிகர் தெரிவித்தார்.

 

எனவே விராட் கோஹ்லியை பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டியதாயிற்று. விராட்டும், புஜாராவும் களமிறங்கினர். ஷிகர் தவான் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால், விராட்டுக்கு பயிற்சி பெற கூட நேரம் கிடைக்காமல் போனது. காலையில் ஏற்பட்ட இந்த குழப்பத்தால்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையை கட்ட வேண்டியதாயிற்று. தகவல் தொடர்பில் இருந்த குறைபாடே இதற்கு காரணம். இவ்வாறு டோணி தெரிவித்தார். வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், வேறு வழியில்லாமல் வலியோடு ஷிகர் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கி அப்போதுதான் 45 நிமிடங்கள் ஆகியிருந்தன. 45 நிமிடங்கள் கழித்து களமிறங்கிய ஷிகர் தவான், முதலிலேயே வழக்கம்போல களமிறங்கியிருக்கலாமே என்ற கேள்வி வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/dhoni-blames-lack-communication-the-dressing-room-217444.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.