Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்

 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களில் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஆனால், பேட்டிங் வரிசையில் இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலிடத் தில் உள்ள ஸ்டீவன் ஸ்மித் 581 ரன்கள் எடுத்த நிலையில் இரண் டாம் இடத்தில் உள்ள கோலி, அவரை விடவும் 82 ரன்கள் குறை வாக எடுத்துள்ளார். டெஸ்ட் தொட ரில் மிகவும் பொறுப்புடன் ஆடிவ ரும் முரளி விஜய்யும் ரஹானேவும் முறையே 402, 348 ரன்கள் எடுத்துள் ளார்கள். இந்திய பேட்ஸ்மேன் களில் மிகவும் ஏமாற்றம் தந்தவர், ஷிகர் தவன். அவர், 3 டெஸ்டு களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்துள் ளார். புஜாரா, 201 ரன்கள்.

 

லயன் அபாரம்

இந்த டெஸ்ட் தொடரில் வேகப் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் டுகள் எடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலை யில் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிகபட்சமாக 19 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஜான்சன் 13 விக்கெட்டுகள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் அஸ்வின் 2 டெஸ் டுகளில் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய பவுலர் களில் இஷாந்த் சர்மா மட்டுமே 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடி, 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6744626.ece

  • Replies 151
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

துணைக் கேப்டனாக ரகானே – அஷ்வின் போட்டி
ஜனவரி 01, 2015.

 

சிட்னி: இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக அஜின்கியா ரகானே அல்லது அஷ்வின் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜன.6ல் துவங்குகிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில், இந்திய அணி 0–2 என தொடரை இழந்தது. இதனையடுத்து இந்திய கேப்டன் தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனால் துணைக் கேப்டனாக இருந்த விராத் கோஹ்லி, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

 

புதிய துணைக் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என பி.சி.சி.ஐ., ஆலோசித்து வருகிறது. அஜின்கியா ரகானே அல்லது அஷ்வின் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ என மூன்று விதமான லெவன் அணியிலும் ரகானே இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ரகானேவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அஷ்வின், அந்நிய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் லெவன் அணியில் இடம் பிடிக்க போராடுகிறார். இதனால் ரகானேவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

கடந்த மாதம் பிலிப் ஹியுசின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கோஹ்லி, ரோகித் உள்ளிட்டோர் சென்ற போது நடந்த பயிற்சி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இதனால் புதிய துணைக் கேப்டன் வாய்ப்பு இஷாந்த் சர்மாவுக்கு கிடைக்கலாம்.     

பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனை தேர்வு செய்வதில், சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள், இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரியுடன் விவாதித்து வருகின்றனர். அஷ்வின், ரகானேவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420122117/RahaneAshwinIndiaTestViceCaptain.html

  • தொடங்கியவர்

ரெய்னாவுக்கு இடம் கிடைக்குமா: சிட்னி டெஸ்டில் எதிர்பார்ப்பு
ஜனவரி 01, 2015.

 

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இந்தியாவின் ரெய்னா, அக்சர் படேலுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.           

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜன.6ல் துவங்குகிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில், இந்திய அணி 0–2 என தொடரை இழந்தது. இதனையடுத்து இந்திய கேப்டன் தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் சிட்னி டெஸ்டில் விளையாடும் இந்திய லெவன் அணியில் நிறைய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

      

சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால், இந்திய அணி இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம். இதனால் அஷ்வினுடன், இளம் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் அறிமுகமாகலாம். இவர், இடது தோள்பட்டை காயத்தால் தாயகம் திரும்பிய ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக தேர்வானவர். இரண்டு சுழலுடன் விளையாடும் பட்சத்தில், வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ் நீக்கப்படலாம்.           

தோனி விலகியதால், விக்கெட் கீப்பராக விரிதிமன் சகா இடம் பிடிப்பதில் சிக்கல் இருக்காது. கடந்த மூன்று டெஸ்டில் 167 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றிய ஷிகர் தவான் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் துவக்க வீரராக களமிறங்கலாம்.           

 

‘மிடில்–ஆர்டரின்’ பலத்தை அதிகரிக்க ரெய்னா அல்லது ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கலாம். முதலிரண்டு டெஸ்டில் விளையாடிய ரோகித், 81 ரன்கள் மட்டுமே எடுத்ததால், மெல்போர்ன் போட்டியில் நீக்கப்பட்டார். இதனால் மூன்று டெஸ்டிலும் விளையாடாத ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஆனால் இவர் ‘ஷார்ட் பிட்ச்’ பந்தில் திணறுவது பின்னடைவான விஷயம்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420122218/RainaIndiaCricketTestSydneyMatch.html

  • தொடங்கியவர்

சிட்னி டெஸ்ட்: இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா - ஆஸ்டன் அகர் அணியில் சேர்ப்பு
 

 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே வென்று விட்ட ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரி கிறது.

அணியில் நாதன் லையன் இருக்கும் நிலையில், ஆஸ்டன் அகர் சேர்க்கப்பட்டுள்ளதிலிருந்து இத்தகவல் உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும்தான் அகர் விளையாடினார். 21 வயதாகும் அகருக்கு அதுதான் முதல் சர்வதேச டெஸ்டும் கூட.

 

அறிமுகப் போட்டியில் 98 ரன்கள் எடுத்து அசத்திய அகர், பந்து வீச்சில் சோபிக்கவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், நான்கு இன்னிங்ஸுகளிலும் சேர்ந்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டிலும் அவர் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதுவும் 45.14 சராசரி வைத்துள்ளார். இதனால், அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுப்பினும், அவர் பிக்பாஸ் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அவரை உலகக் கோப்பை அணிக்குப் பரிசீலிக்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்டில் விளையாடும் பட்சத்தில் லையனுடன் இணைந்து செயல்படுவார். அடிலெய்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு லையனின் சிறப்பான பந்து வீச்சே காரணம்.

 

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறும்போது, “ஆஷஸ் தொடருக்குப் பிறகு அகர் தனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொண்டுள்ளார். அவர் சிறப்பாக பந்து வீசுவதாகவே கருதுகிறேன். அவரின் வருகை அணிக்கு பலமளிக்கும். சிட்னி ஆடுகளத்தைப் பொறுத்து அணித்தேர்வு இருக்கும்.

கடந்த ஆண்டு புற்கள் இருந்தன. அது முன்பு, சுழலுக்கு ஒத்துழைத்தது. எனவே, ஆடுகளத்தின் அமைப்பைப் பொறுத்து, விளையாடும் அணியில் அகர் சேர்க்கப்படுவார்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6747966.ece

  • தொடங்கியவர்

விராட் கோலியை அதிசயமாகப் பாராட்டிய மிட்செல் ஜான்சன்
 

 

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் விராட் கோலி, இந்திய அணியில் ஆக்ரோஷமான அணுகுமுறையை நிரந்தரமாக்குவார் என்று மிட்செல் ஜான்சன் புகழ்ந்துள்ளார்.

‘என்னை நீங்கள் வெறுப்பதை விரும்புகிறேன்’ என்று விராட் கோலி கூறினார். ஆனால் ஜான்சன் தற்போது அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் மிட்செல் ஜான்சனை அவர் நேருக்கு நேர் மட்டையாலும் வார்தைகளாலும் எதிர்கொண்டார். அதில் இதுவரை வெற்றியும் கண்டுள்ளார்.

“விராட் கோலி கேப்டன்சி சுவாரசியமாகவே இருக்கும். ஏனெனில் ஆக்ரோஷமான கிரிக்கெட் அணியாக இந்திய அணி அறியப்பட்டதில்லை. ஆனால், கோலி ஆடத் தொடங்கும் முதலே நான் பார்த்திருக்கிறேன், அவர் ஆட்டத்தில் பொறிபறக்கிறது.

 

எனவே இவர் நிச்சயம் ஒரு ஆக்ரோஷமான, தாக்குதல் தொடுக்கும் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஃபீல்ட் செட் செய்யும் விதம் முதல் அனைத்தும் எதிரணியினரை நெருக்குவதாகவே அமையும், தோனி செய்ததைவிட மிகவும் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்.

அவர் போர்க்குணம் மிக்கவர், மைதானத்தின் அனைத்து விவகாரங்களிலும் தன்னுடைய இருப்பை விரும்புபவர்.

அவர் யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்றெல்லாம் பார்ப்பதில்லை, முகத்துக்கு நேராகவே ஆக்ரோஷம் காட்டுகிறார். அப்படித்தான் அவர் கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட நினைக்கிறார். அதுதான் அவருக்கு பிடித்திருக்கிறது.

 

அவர் ரன்கள் குவித்து வருவதை எப்போதும் எங்களிடம் கூறிவருகிறார், நாங்கள் அவரிடம் 2-0 என்று முன்னிலை வகிக்கிறோம் என்று கூறுகிறோம். இது அவ்வளவுதான். இந்த விவகாரங்கள் ஆட்டத்தின் ஒருபகுதிதான்; இப்போதும் எப்போதும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6748360.ece

  • தொடங்கியவர்

நன்றாக பேட் செய்யும் இந்திய அணி ஒரு வெற்றியையாவது பெற்றிருக்க வேண்டும்: இயன் சாப்பல்
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 400 ரன்களுக்கும் மேல் எடுத்து வரும் இந்திய அணி குறைந்தது ஒரு டெஸ்ட் போட்டியில் இந்நேரம் வென்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயன் சாப்பல்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், தற்போதைய வர்ணனையாளருமான இயன் சாப்பல் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்தில் இது பற்றி கூறியதாவது:

"இந்திய அணி முதல் 3 டெஸ்ட் போட்டிகளை உற்று நோக்கினால் முதல் இன்னிங்ஸ்களில் 400 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இவ்வாறு தொடர்ந்து 400 ரன்களை முதல் இன்னிங்ஸ்களில் எடுப்பது மிகமிகக் கடினம். அதனைச் செய்த பிறகு இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் இருப்பதற்கு பவுலிங்தான் காரணம்.

 

கீழ்வரிசை வீரர்கள் விரைவில் சரிந்தாலும் 400 ரன்களை ஒவ்வொரு முறையும் ஒரு அணி ஆஸ்திரேலியாவில் எடுப்பது கடினம். இதனைச் செய்த பிறகே ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதுதான் நியாயம், ஆனால் நடக்கவில்லை. காரணம் பவுலர்கள் தங்கள் பணியை திறம்படச் செய்யவில்லை. இந்தத் தொடரில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருக்க வேண்டும்.

பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. சீராக நல்ல பந்துகளை அவர்கள் வீசவில்லை. குறிப்பாக அவர்களை இந்திய கேப்டன் செய்யச் சொன்ன காரியங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை குறைத்தது என்றுதான் கூற வேண்டும். ஷாட் பிட்ச் பவுலிங் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அது பலிக்கவில்லையெனில் உடனே நல்ல லைன் மற்றும் லெந்த்திற்கு திரும்புவது கடினம்.

 

கிளென் மெக்ராவைக் கேட்டுப் பாருங்கள். துல்லியமான பந்து வீச்சுக்கு பெயர் பெற்றவர் கிளென் மெக்ரா, ஆனால் அவரே நிறைய முறை கூறியிருக்கிறார், தொடர்ந்து ஷாட் பிட்ச் பந்து வீசி விட்டு நல்ல லைன் மற்றும் லெந்த்திற்கு திரும்புவது கடினம் என்று. அவரைப்போன்ற அனுபவமிக்கவருக்கே அது கடினம் என்றால் இந்தியாவின் அனுபவமற்ற பவுலர்களுக்கு இது ஏறக்குறைய அசாத்தியம்தான் என்றே நான் கருதுகிறேன்.

 

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் என்ற 5 பவுலர் அணிச்சேர்க்கையை செய்து பார்க்க வேண்டும். சிட்னியில் அதுதான் சிறந்த சேர்க்கையாக இருக்க முடியும்.”

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article6751467.ece

  • தொடங்கியவர்

இந்தியா சென்றால் அதிர்ச்சிகரமான பிட்ச்கள்.. இங்கோ பவுன்ஸ் இல்லை: ரயான் ஹேரிஸ் வெறுப்பு
 

 

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா வழங்கிய பிட்ச்கள் மந்தமாக, பவுன்ஸ் இல்லாமல் இருப்பது வெறுப்பாக உள்ளது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரயான் ஹேரிஸ் கூறியுள்ளார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயான் ஹேரிஸ் இது பற்றி கூறும் போது,

“2 வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்பது சரிதான். மெல்போர்னிலும் ஏறக்குறைய வெற்றி பெற்றிருப்போம். அதனால் பிட்ச்களை முழுதும் விமர்சிப்பது சரியல்ல என்றாலும், கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் போடப்பட்டது போல் பிட்ச்கள் இந்தத் தொடரில் இல்லை.

 

இத்தகைய பிட்ச்களில் கிரிக்கெட் ஆட்டம் கடினமே. அதற்காக தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் பிட்ச்களைக் கேட்கவில்லை. நாம் இந்தியாவுக்குச் சென்றால் நம்க்குக் கிடைப்பது முழுமுற்றான அதிர்ச்சிகர பிட்ச்களே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இங்கு நல்ல பசுந்தரை ஆட்டக்களங்களை அவர்களுக்கு வழங்குவதே சிறந்ததாகும்.

நடப்பு டெஸ்ட் தொடரில் பிட்ச்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை. ஒரு பவுலராக பிட்சில் கொஞ்சம் புற்களை விட்டுவைப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். எங்களுக்கு தேவை பவுன்ஸ் விக்கெட்டுகள் என்பதை கூறத் தேவையில்லை.

 

கடந்த ஆஷஸ் தொடரில் பவுன்ஸ் விக்கெட்டுகளில்தான் மிட்செல் ஜான்சன் எழுச்சி பெற்றார். அப்போது சிடில், நான் ஆகியோர் சிறப்பாக செயல் பட முடிந்தது. இந்த முறை பிட்ச்கள் வெறுப்பேற்றுகின்றன என்றே நான் கூறுவேன்.” என்று கூறியுள்ளார் ரயான் ஹேரிஸ்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6751545.ece

  • தொடங்கியவர்

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு மிட்செல் ஜான்சன் சந்தேகம்
 

 

ஜனவரி 6-ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் கடைசி டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

பின் தொடை தசை நார் பிரச்சினை காரணமாக அவர் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. அவர் சனிக்கிழகை ஆஸ்திரேலிய அணியினர் சிட்னியில் பயிற்சி மேற்கொண்ட போது பங்கேற்கவில்லை.

 

எனினும், போட்டி தொடங்கும் முன்னர் அவரது உடல் தகுதி கடைசியாக ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

அடிலெய்ட், மெல்போர்ன் போன்ற மட்டையாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களத்தில் மிட்செல் ஜான்சனின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அவரே குறைந்த ஓவர்கள் கொண்ட ஸ்பெல்களில் தன்னைப் பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சியாளர் டேரன் லீ மேன் மற்றும் கேப்டன் ஸ்மித்திடம் பேசவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஜான்சன் விளையாட முடியாது போனால் பீட்டர் சிடில் அல்லது மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி ஆட்டக்களம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகி நீண்ட நாட்களாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6751429.ece

  • தொடங்கியவர்

சிட்னி டெஸ்ட்: ஜான்சன் விலகல்
ஜனவரி 03, 2015.

 

 

சிட்னி: இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து, வலது கால் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்படும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் விலகினார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வரும் 6ல் துவங்குகிறது. சமீபத்தில் மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சனின், வலது கால் தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. நேற்று சிட்னி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கான பயிற்சியிலும் ஜான்சன் பங்கேற்கவில்லை. இதனால் இவர், சிட்னி டெஸ்டில் பங்கேற்பதில் இழுபறி ஏற்பட்டது.

 

 

இந்நிலையில் இன்று, ஆஸ்திரேலிய அணியின் ‘பிஸியோதெரபிஸ்ட்’ அலெக்ஸ், நான்காவது டெஸ்டில் ஜான்சன் பங்கேற்கமாட்டார் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். கடந்த மூன்று டெஸ்டில் 13 விக்கெட் வீழ்த்திய ஜான்சன் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு. இருப்பபினும், ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2–0 என தொடரை கைப்பற்றியதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் இது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜான்சனுக்கு பதிலாக மிட்சல் ஸ்டார்க் அல்லது பீட்டர் சிடில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாட்சன் சந்தேகம்

இன்று நடந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற ‘ஆல்–ரவுண்டர்’ ஷேன் வாட்சன், வயிற்று பிரச்னை காரணமாக, வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினார். இதனால் இவர், சிட்னி டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர், நாளை மீண்டும் பயிற்சி மேற்கொண்டு, சிட்னி டெஸ்டில் இடம் பெற முயற்சிக்கலாம்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420264851/johnsoncricket.html

  • தொடங்கியவர்

கோஹ்லியின் ஆக்ரோஷம் சரியா
ஜனவரி 04, 2015.

 

சிட்னி: ‘‘களத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இவரது அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரே பாராட்டுகின்றனர்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 0–2 என தொடரை இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி திடீரென ஓய்வை அறிவித்தார். வரும் 6ம் தேதி சிட்னியில் துவங்கும் நான்காவது டெஸ்டில் கேப்டனாக விராத் கோஹ்லி களமிறங்க உள்ளார். இவர், களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷம் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இத்தொடரில் ஜான்சன், ஹாடினுடன் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டார்.

 

இது குறித்து இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியது:

கோஹ்லி ஆக்ரோஷமாக விளையாடுவதாக சொல்கின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த 3 டெஸ்டில் வெறும் 5 ரன் எடுத்து சொதப்பியிருந்தால், நான் ஏதாவது கேள்வி கேட்க முடியும். ஆனால், 499 ரன்கள் குவித்துள்ளார். இது  சரியாகத் தான் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது. களத்தில் ஆக்ரோஷமாக இருப்பதை விரும்புகிறார். இந்த அணுகுமுறை, இவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்த  உதவுகிறது.

 

பாராட்டு:

வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் கூட இவரது ஆக்ரோஷ செயல்பாட்டை புகழ்ந்தார். தவிர, ஆஸ்திரேலிய அணியினரே கோஹ்லியை பாராட்டுகின்றனர். நீண்ட காலத்திற்கு பின் இப்படியொரு ஆட்டத்தை இவர்கள் பார்த்தனர். இளம் கேப்டனான இவர், மிக விரைவில்  முதிர்ச்சியான வீரராக உருவெடுப்பார்.

 

விருப்பம்:

தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெறவே தோனி விரும்பினார். முடிவில், இவர் ஓய்வை அறிவித்துவிட்டார். இவர் தொடர்ந்து விளையாடினால், அணிக்கு போதிய பங்களிப்பு கிடைக்காது என நினைத்திருப்பார். அணியை வழிநடத்த கோஹ்லி தயாராகி விட்டார் எனவும், விக்கெட் கீப்பர் சகாவுக்கு வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்திருப்பார். 

 

முக்கிய காலகட்டம்:

ஒரு இயக்குனராக இந்திய அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை தருவேன். என் பங்களிப்பு இன்னும் தேவைப்படுவதாக, இந்திய கிரிக்கெட் போர்டு விரும்பினால், அவர்கள் முடிவு எடுப்பர். அதன் பின், நான் அதை ஏற்றுக் கொள்வேன். ஆனால், தற்போது அது பற்றி சிந்திக்கவில்லை.  உலக கோப்பை நடக்கவுள்ள அடுத்த சில மாதங்கள் எங்களுக்கு முக்கியமான காலகட்டம். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420390705/kohliindiacricket.html

  • தொடங்கியவர்

நாளைக்கு "தல" ஆடுனாலும் ஆடலாமாம்!

 

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தடாலடியாக கூறி விட்டு அமைதியாகி விட்ட டோணி, நாளை சிட்னியில் தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இருப்பதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியின் இறுதியில் திடீரென்று ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர வைத்தவர் டோணி. இதையடுத்து கோஹ்லி புதிய கேப்டனாக உடனடியாக அறிவிக்கப்பட்டார்.

 

 

டோணியின் ஓய்வு முடிவுக்கு காரணம் என்று பல சமாச்சாரங்கள் வெளியாகி வந்தன. நாளைக்கு இந்த நிலையில் நாளைய போட்டியில் டோணி விளையாடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் கேப்டனாக டோணி செயல்பட மாட்டார் என்றும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அவர் களத்தில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர் விருத்திமன் சாஹா காயமடைந்திருப்பதால், டோணி விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில், சாஹாவின் காயம் சரியாகவிட்டால், டோணி விளையாடுவார் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்திய அணியில் சாஹா தவிர விக்கெட் கீப்பராக டோணி மட்டுமே உள்ளார். எனவே சாஹாவால் நாளை காலைக்குள் விளையாட முடியாத நிலை ஏற்படுமானால், வேறு யாராலும் கீப்பிங்கை செய்ய முடியாத நிலை ஏற்படும். என்னால் நிச்சயமாக அதைச் செய்ய முடியாது என்றார் கோஹ்லி. ஆனால் டோணி இதுகுறித்து இதுவரை கருத்து வெளியிடவில்லை. ஓய்வு முடிவை கைவிட்டு விட்டு அணிக்கு கை கொடுக்க முன்வருவாரா டோணி என்பது நாளை கா்லை தெரிய வரும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ms-dhoni-could-come-of-retirement-play-at-scg-218369.html

  • தொடங்கியவர்

சிட்னி டெஸ்ட்: வறண்ட ஆடுகளம்; கோட்டை விடப்பட்ட கேட்ச்கள்; திருந்தாத பந்து வீச்சு
 

 

சிட்னி டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு பலவிதங்களிலும் மறக்கப் படவேண்டிய தினமாக அமைந்தது. டாஸில் தோல்வி, வறண்ட தார்ச்சாலையாக ஆடுகளம், விடப்பட்ட கேட்ச்கள் என்று இந்திய அணி ஒரு சாதாரணத்திற்கும் கீழான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்த்தது போல் ஜான்சன் இல்லை. இந்திய அணியில் தோனிக்குப் பதில் சஹா என்பது முடிவான விஷயம். ஆனால் மற்ற நீக்கங்களில் அதிர்ச்சி அளித்தது புஜாராவின் நீக்கமே.

 

ஷிகர் தவனுக்கு ஒரு பாடம் கற்பிப்பது நல்லதுதான். அதனால் அவரை அமர வைத்தது ஓரளவுக்கு சரியே. அந்த வாய்ப்பை தொடக்க வீரராகக் களமிறங்கும் ராகுல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஆனால் இந்த இளம் வீரர் தனது பீல்டிங்கில் இன்று கேப்டன் கோலியையும் இந்திய ரசிகர்களையும் வெறுப்பேற்றினார் என்றால் மிகையாகாது. ஆனால் புஜாராவை உட்கார வைத்தது சாரி, கொஞ்சம் ஓவர் என்றுதான் தெரிகிறது. ரெய்னாவின் டெஸ்ட் ஃபார்ம் பற்றி நிர்ணயமில்லா நிலை இருக்கும் போது புஜாராவை உட்கார வைத்தது சரியென்று படவில்லை. வர்ணனையாளர்களும் புஜாராவை நீக்கியது பற்றி மாற்றுக் கருத்துகளையே தெரிவித்தனர்.

 

 

புஜாராவுக்கு பதில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பது புரியாத புதிர்.

அதே போல் இசாந்த் சர்மாவா, உமேஷ் யாதவ்வா என்றால் இசாந்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், ஏனெனில் அவர் குறைந்தது டேவிட் வார்னரின் பேட்டிங் மீது சில சந்தேகங்களை உருவாக்கியிருந்தார். ஓரளவுக்கு லைன், லெந்த்தில் வீசி வந்தார். அவரை உட்கார வைத்ததும் இந்திய பந்துவீச்சுக்கு பின்னடைவு கொடுத்தது. புவனேஷ் குமார் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், ஆனால் அவருக்கு ஸ்விங்கும் இல்லை, பந்தில் வேகமும் இல்லை.

 

 

சிட்னியில் கொளுத்தும் வெயிலில் வேகப்பந்து வீச்சாளர்கள் லைன் மற்றும் லெந்த்தை பிடித்து வீச வேண்டியது போக, ஷாட் பிட்ச், லெக் திசையில் ஓவர் பிட்ச் பந்துகள் என்று பவுண்டரிகளை வாரி வழங்கினர். மொகமது ஷமி மற்ற போட்டிகளை ஒப்பிடுகையில் இன்று தொடக்க ஓவர்களை நன்றாகவே வீசினார்.

கிறிஸ் ராஜர்ஸிற்கு அவர் வீசிய சில பந்துகள் அவரை நிறையவே தடுமாறச் செய்தன. இந்நிலையில்தான் ஏகப்பட்ட பவுண்டரிகள் அடிக்கப்பட்டு 7-வது ஓவர் முடிவில் 46 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்து அதிரடி தொடக்கம் கண்டது.

 

8-வது ஓவரில் மொகமது ஷமி அருமையான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். கிறிஸ் ராஜர்ஸ் அப்போது 19 ரன்களை எடுத்திருந்தார். ஒரு பந்து லெந்த்தில் பிட்ச் ஆகி எழும்பி வெளியே செல்ல ராஜர்ஸ் அதனை ஆட முயன்று பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு நேராக 2-வது ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் மிக எளிதான ஒரு கேட்சாக சென்றது. ஆனால இளம் வீரர் ராகுல் கையை பூமியை நோக்கி விரித்த படியே அவர் கேட்சைப் பிடிக்க முயல பந்து நழுவி விழுந்தது. அடுத்த பந்தே பவுண்டரி ஆஸ்திரேலியா 50 ரன்களை 8-வது ஓவரில் எட்டியது.

 

 

பிறகு வார்னர் 62 ரன்களில் இருந்த போது பாயிண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ராகுல், அஸ்வின் வீசிய பந்தை வார்னர் கட் செய்ய விரைவாக நகராமல் மந்தமாகச் செயல்பட்டு மற்றுமொரு வாய்ப்பைத் தவறவிட்டார்.

இது போதாதென்று ஆட்டம் முடியும் தறுவாயில் வாட்சன், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஸ்வின் ஸ்லிப்பில் கோட்டை விட்டார்.

சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் தினத்தை கேட்சை விட்டு தொடங்கிய இந்திய அணி கேட்சை கோட்டை விட்டே முடித்தது.

ராஜர்ஸ், வார்னர் ஆகியோருக்கு விடப்பட்ட கேட்ச்களால் இருவரும் இணைந்து 200 ரன்களைக் குவித்தனர்.

 

உமேஷ் யாதவ் ஓவருக்கு 6.06 என்ற வீதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்தார். புவனேஷ் குமாரின் பந்து வீச்சில் ஒரு தாக்கமும் இல்லை. அஸ்வின் மட்டுமே இன்று குறைந்த அளவில் வாய்ப்புகளை ஏற்ப்டுத்தினார். ரெய்னா, வாட்சனுக்கும், ஸ்மித்திற்கும் அதிகம் வீசியதால் அவர்கள் இருவரும் நன்றாக செட்டில் ஆகியுள்ளனர்.

இன்று உண்மையில் 400 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருக்க வேண்டும். வாட்சன் கொஞ்சம் மந்தமாக ஆடியதால் 348 ரன்களுடன் முடிந்தது.

நிச்சயம் ஆஸ்திரேலியா நாளை தேநீர் இடைவேளை வரை ஆடி 650-700 ரன்களை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் இந்திய பவுலர்கள் அதிகம் பவுண்டரி பந்துகளை வீசுகின்றனர். அதாவது ஓவருக்கு 2 பவுண்டரி பந்துகள் வீசப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொல்லும் பந்து வீச்சாக இந்திய பந்து வீச்சு உள்ளது. 3 ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

 

இந்திய பவுலிங்கும், பீல்டிங்கும் எந்த வித நம்பிக்கையையும் அளிக்கவில்லை. மீண்டும் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி ஏற்படும் டெஸ்ட் போட்டியாகவே இது அமையும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article6760120.ece

  • தொடங்கியவர்

சிட்னி டெஸ்ட்: 'ஆதிக்க' ஆஸி. நாள் 1-ல் 348 ரன்கள் குவிப்பு
 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெடுகளை மட்டுமே இழந்து 348 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்கள் ராஜர்ஸ் மற்றும் வார்னர் இருவரும் ஒருநாள் போட்டியைப் போலவே ரன் குவித்தனர். இந்திய பந்துவீச்சை இருவரும் சிதறடிக்க, பந்துவீச்சாளர்களை செய்வதறியாது நின்றனர்.

 

அதிரடியாக விளையாடிய வார்னர் 108 பந்துகளில் சதத்தை எட்டினார். ஆனால் 101 ரன்கள் எடுத்த்திருந்த நிலையில் அஸ்வினின் சுழலில் வார்னர் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே ராஜர்ஸும் 95 ரன்களுக்கு ஷமியின் வீச்சில் வெளியேறினார்.

இதற்கு பிறகு ஜோடி சேர்ந்த வாட்சன், ஸ்மித் ஜோடி ரன் குவித்தனர். இந்திய பந்துவீச்சு சொதப்பலாகவே இருக்க 67 பந்துகளில் ஸ்மித்தும், 99 பந்துகளில் வாட்சனும் அரை சதம் எட்டினர்.

 

நாள் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸி. அணி 348 ரன்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தது. வாட்சன் 61 ரன்களுடனும், ஸ்மித் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-1%E0%AE%B2%E0%AF%8D-348-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6759583.ece

  • தொடங்கியவர்

சிட்னி முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா 572/7 டிக்ளேர்; இந்தியா நிதான துவக்கம்

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸி. தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து, 572 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. தொடந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை எடுத்துள்ளது.

நேற்று களத்தில் இருந்த வாட்சன் - ஸ்மித் ஜோடி, இன்றும் தொடர்ந்து இந்திய பவுலர்களை தண்டித்தது. ஸ்மித் 168 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இது இந்தத் தொடரில் அவரது நான்காவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்சன் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்மித் 117 ரன்களுக்கு வீழ்ந்தார். இந்த இணை பார்ட்னர்ஷிப்பில் 196 ரன்களைக் குவித்தது.

 

 

இவர்களின் வேலையை மார்ஷ், பர்ன்ஸ் இணை தொடர்ந்தது. மார்ஷ் 87 பந்துகளிலும், பர்ன்ஸ் 93 பந்துகளிலும் அரை சதம் கண்டனர். ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்து நடை போட்டது. மார்ஷ் 73 ரன்களுக்கு ஷமியின் வேகத்தில் வீழ்ந்தார். பர்ன்ஸும் ஷமியிடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரயான் ஹாரிஸும் அடுத்த ஓவரிலேயே 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை 572 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரன் ஏதும் எடுக்காமல் முரளி விஜய் 3-வது பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா, இளம் வீரர் ராகுலுடன் இணைந்து நிதனமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி ஸ்கோரை நகர்த்தினார். ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்தியா 501 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரோஹித் சர்மா 40 ரன்களுடனும், ராகுல் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

 

முதல் நாள் ஆதிக்கம்

முன்னதாக நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில், காயம் காரணமாக மிட்செல் ஜான்சன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பெற்றார். இந்திய அணியில் 4 மாற்றங்கள். தோனி, தவன், புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோருக்குப் பதிலாக சாஹா, ரெய்னா, ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றார்கள்.

 

 

அதிரடி ஆரம்பம்

ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும் கிறிஸ் ரோஜர்ஸும் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினார்கள். ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது. முகமது சமியின் பந்துவீச்சில் ரோஜர்ஸின் கேட்ச்சை ஸ்லிப்பில் தவறவிட்டார் கேஎல் ராகுல். கிடைத்த நல்ல வாய்ப்பையும் இழந்ததால் இந்திய அணி தொடர்ந்து சிரமத்துக்கு ஆளானது.

13 ஓவர்கள் ஆனபின்பும் விக்கெட் விழாததால் அஸ்வினை பந்துவீச அழைத்தார் கோலி. அஸ்வின் ஒருபக்கம் ரன்கள் கொடுக்காமல் பந்துவீசினாலும் மறுமுனையில் உமேஷ் யாதவ் தொடர்ந்து ரன்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். 45 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார் வார்னர். 20-வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்களை எட்டியது. விக்கெட் எடுக்கவும் முடியாமல் ரன்களைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் இந்திய பவுலர்கள் மிகவும் தடுமாறினார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமாராலும் நேற்று பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

 

 

வார்னர் 63-வது ரன் எடுத்தபோது, ரசிகர்கள் ஹியூஸின் நினைவாக பலமான வரவேற்பு கொடுத்தார்கள். வார்னரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆடுகளத்துக்கு முத்தம் கொடுத்தார். மறுமுனையில், 91 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஜர்ஸ். முதல் டெஸ்டில் சரியாக ஆடாதவர், அதன்பிறகு தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் எடுத்துள்ளார். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா, 28 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

உணவு இடைவேளைக்குப் பிறகு

ஆஸ்திரேலிய அணியின் ஓய்வறைக்கு அருகில் இருந்த ஹியூஸின் உருவம் பொறித்த பலகையைத் தொட்டு வணங்கிய பிறகு களத்துக்குள் நுழைந்தார் வார்னர். வழக்கம்போல தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். அப்போது அஸ்வினும் ரன்கள் கொடுக்க ஆரம்பித்ததால் கோலி செய்வதறியாமல் தவித்தார். ஒருநாள் ஆட்டம்போல வேகமாக ரன்களைக் குவித்த வார்னர், 42-வது ஓவரில் 108 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் ஒருவழியாக அஸ்வினின் 16-வது ஓவரில் விஜயிடம் கேட்ச் கொடுத்து 101 ரன்களில் (16 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.

 

சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரோஜர்ஸ், எதிர்பாராத விதமாக அடுத்த ஓவரிலேயே 95 ரன்களில் (13 பவுண்டரிகள்) சமியின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் திடீர் என இந்திய அணி சுறுசுறுப்பு அடைந்தது. முதல்நாள் முடிவில் எப்படியும் 5 விக்கெட்டுகளையாவது வீழ்த்திவிடலாம் என்று தீவிரமாக பந்துவீசியது. ஆனால் ஸ்மித்தும் வாட்சனும் திறமையாக ஆடி, இந்திய அணியின் திட்டத்தை செயல் இழக்கச் செய்தார்கள்.

 

 

பவுலர்கள் ஏமாற்றம்

இந்த டெஸ்ட் தொடரில் சுமாராக ஆடிவரும் ஷேன் வாட்சன் நேற்று மிகவும் பொறுப்பாக ஆடினார். ஸ்மித் வேகமாக ரன்கள் குவித்துக்கொண்டிருந்தபோது வாட்சன் நிதானமாக ஆடிவந்தார். தேநீர் இடைவேளையின்போது, ஆஸ்திரேலியா 60 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

அதன்பிறகு, மிகவும் சுறுசுறுப்பாக ஆடிய ஸ்மித் 67 பந்துகளில் அரை சதம் (8 பவுண்டரிகள்) எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு வாட்சனும் வேகமாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். அவர், 99 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் (5 பவுண்டரிகள்).

ஆஸி. 80 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து புதிய பந்தைத் தேர்வு செய்தது. ஆனால் அப்போதும் திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை. ஸ்மித்தும் வாட்சனும் சுலபமாக ரன்களை எடுத்தார்கள். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் யாதவ் பந்துவீச்சில் வாட்சனின் கேட்ச்சை அஸ்வின் தவறவிட்டார்.

 

 

முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா, 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 82, வாட்சன் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு முறையும் தனது முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்துள்ளது (517/7, 505, 530). அதனால் இந்த டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்துவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்திய அணியில் கேப்டன் மாறியபின்பும் பவுலர்களிடம் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதிலும் உமேஷ் யாதவ் 16 ஓவர்கள் வீசி, 97 ரன்களை கொடுத்துள்ளார். அஸ்வினும் சமியும் ஓரளவு நன்றாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி னாலும் ஆஸி. அணியின் ஆதிக்கத் தைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5727-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6763372.ece

  • தொடங்கியவர்

முதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம்: சாதனை படைத்த ஆஸ்திரேலிய பேட்டிங்

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான இன்று மொகமது ஷமி, ஷேன் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியடை கொண்டாடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
2015 Getty Images சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான இன்று மொகமது ஷமி, ஷேன் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியடை கொண்டாடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலியா 572/7 என்று டிக்ளேர் செய்தது. அந்த அணியின் முதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம் அடித்து முதன்முறையாக சாதனை படைத்துள்ளனர்.

 

கிறிஸ் ராஜர்ஸ் (95), வார்னர் (101), வாட்சன் (81), ஸ்மித் (117), ஷான் மார்ஷ் (73), ஜோ பர்ன்ஸ் (58) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம் அடிப்பது இதுவே முதல்முறை, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்று 6 முறை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 முறை இந்தியாவுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்டு சாதனை படைத்தார். டான் பிராட்மேன் 6 தொடர் சதங்களையும், நீல் ஹார்வி 4 தொடர் சதங்களையும், மேத்யூ ஹெய்டன் 4 தொடர் சதங்களையும் எடுத்துள்ளனர்.

ஒரே நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் சதங்களை அடித்த வீரர்கள் இரண்டு. ஒன்று ஜாக் காலிஸ் 2002-03 டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 4 சதங்களை எடுத்துள்ளார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் 4 சதங்களை ஒரே தொடரில் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

 

4 இந்திய பவுலர்கள் ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளது இது 24-வது முறையாகும். ஆனால் இதனை இங்கிலாந்து பவுலர்கள் 32 முறை செய்து இந்திய பவுலர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளனர். மற்ற அணிகளில் 4பவுலர்களும் ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது 12 முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொகமது ஷமி 5 விக்கெட்டுகளை இன்று கைப்பற்றியதன் மூலம் இந்தத் தொடரில் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றும் ஒரே பவுலர் என்ற பெருமையை மொகமது ஷமி பெற்றுள்ளார். இதற்கு முந்தைய 2 தொடர்களிலும் ஒரு இந்திய பவுலர்தான் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6763952.ece

  • தொடங்கியவர்

முரளி விஜய்யை மோசமாக வழியனுப்பிய ஸ்டார்க்: ஸ்மித் அதிருப்தி
 

2z71s8n.jpg

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டமான இன்று இந்திய தொடக்க வீரர் முரளி விஜய் விக்கெட்டை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் அவரை நோக்கி சில செய்கைகளைச் செய்தது பற்றி கேப்டன் ஸ்மித் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி இருவரும் அவுட் ஆகிச் செல்லும் பேட்ஸ்மென்களை நோக்கி இழிவான செய்கைகளைச் செய்வது முடிவுக்கு வரவேண்டும், இது அநாகரிகமானது என்று கூறியிருந்தனர்.

 

 

இந்நிலையில் இன்று 3-வது பந்தில் முரளி விஜய், மிட்செல் ஸ்டார்க்கின் பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் செல்லக் கிளம்பிய போது பவுலர் ஸ்டார்க் அவரை நோக்கி சில செய்கைகளைச் செய்தது இப்போது சர்ச்சையாகியுள்ளது.

 

 

இது குறித்து கேப்டன் ஸ்மித் கூறும் போது, “நடுவர்கள் இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆட்டத்தில் இது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன். அவுட் ஆகிச் செல்லும் பேட்ஸ்மெனை நோக்கி இழிவாக செய்கைகளைச் செய்வது முடிக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டார்க் செய்ததை நான் இன்று பார்க்கவில்லை, நான் ஹேடினுடன் விஜய் விக்கெட்டை கொண்டாடிக் கொண்டிருந்தேன். இது தேவையற்றது. இப்போது முதல் விக்கெட்டுகள் விழுந்தால் எங்கள் வீரர்கள் அமைதியாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.” என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6764071.ece

  • தொடங்கியவர்

கோஹ்லி, லோகேஷ் ராகுல் சதம்
ஜனவரி 07, 2015.

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 0–2 என ஏற்கனவே தொடரை இழந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 572 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (31), ரோகித் சர்மா (40) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியாவின் ரோகித் சர்மா, டெஸ்ட் அரங்கில் தனது 2வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த போது, நாதன் லியான் ‘சுழலில்’ ரோகித் (53) போல்டானார். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 110 ரன்கள் எடுத்த போது மிட்சல் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லி, இத்தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.

 

தேநீர் இடைவேளைக்கு பின், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்து, 290 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் விராத் கோஹ்லி (101), அஜின்கியா ரகானே (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க் 2, நாதன் லியான் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

 

http://sports.dinamalar.com/2015/01/1420652792/LokeshRahulcricket.html

  • தொடங்கியவர்

ராகுல், கோலி சதம்: ஆஸி.க்கு ஈடுகொடுத்த இந்தியா 342/5

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் 3-ஆம் நாளான இன்று, ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் லோகேஷ் ராகுல், விராட் கோலி இருவரும் சதமடித்தனர்.

71 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை இந்தியா துவக்கியது. ரோஹித் சர்மா 132 பந்துகளில் அரை சதம் கடந்தாலும் அடுத்த ஓவரிலேயே 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி அணியின் நிலையை ஸ்திரப்படுத்தினார்.

 

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. உணவு இடைவேளை கடந்து ஆடி வந்த இவர்களின் ஆட்டத்தால் ஆஸி. வீரர்கள் சோர்வுறத் தொடங்கினர். தேநீர் இடைவேளைக்கு ஒரு ஓவர் முன்பாக லோகேஷ் ராகுல் 253 பந்துகளில் தனது சதத்தைக் கடந்தார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை ராகுல் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராகுல் 110 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டார் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயல, அது கேட்ச் ஆனது. ராகுல் ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 238 ரன்கள் எடுத்திருந்தது. கோலி - ராகுல் இணை பார்ட்னர்ஷிப்பில் 141 ரன்களைக் குவித்தது. மறுமுனையில் அசராமல் ஆடி வந்த கோலி 162 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். கேப்டன் பொறுப்பேற்ற பின் கோலி அடிக்கும் மூன்றாவது சதம் இது. இந்தத் தொடரில் கோலியின் 4-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வாட்சன் வீசிய 100-வது ஓவரில் ரஹானே 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா, வந்த வேகத்திலேயே முதல் பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய சாஹா கடைசி வரை தனது விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார்.

 

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 342 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கோலி 140 ரன்களுடனும், சாஹா 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 230 ரன்கள் பின்தங்கியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3425/article6767465.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் சதங்கள்: சச்சின் டெண்டுல்கரை நெருங்கும் கோலி

 

 

சிட்னி டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாளான இன்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 140 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார் விராட் கோலி.

 

சிட்னி டெஸ்ட் 3-ஆம் நாள் ஆட்டத்தின் சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

இன்றைய சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 5 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் 6 சதங்கள் எடுத்து இந்திய வீரர் என்ற முறையில் ஆஸ்திரேலியாவில் எடுத்த சதங்கள் எண்ணிக்கைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். சுனில் கவாஸ்கரும் ஆஸ்திரேலிய மண்னில் 5 சதங்களை எடுத்துள்ளார். டேவிட் கோவர், கிளைவ் லாய்ட் ஆகியோரும் 5 சதங்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்:

 

ஜே.பி.ஹாப்ஸ் 1908-29 ஆண்டுகளுக்கு இடையே விளையாடியவர். இவர் 9 சதங்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளார். 2-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் வால்டர் ஹேமண்ட் 7 சதங்களுடன் இருக்கிறார். 3-வது இடத்திலும் இங்கிலாந்து வீரர் சட்கிளிப் 6 சதங்களுடன் இருக்கிறார். லாரா, லஷ்மண், விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோர் 4 சதங்களை எடுத்துள்ளனர். சமகாலத்திய வீரர்களில் வேறு எந்த வீர்ர் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

 

பார்டர்-கவாஸ்லர் டிராபி தொடங்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரராக ராகுல் திராவிட்தான் இருந்து வந்தார். அவர் 2003-04 தொடரில் 619 ரன்கள் எடுத்தார். கோலி தற்போது இந்த இன்னிங்ஸில் ஆட்டமிழக்காத நிலையில் 639 ரன்களை எடுத்து திராவிடை முறியடித்துள்ளார்.

ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதங்களை அடித்த வகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்துள்ளார். ஆனால் சுனில் கவாஸ்கர் தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே (1971) ஹெல்மெட் அணியாமல் பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களை மேற்கிந்திய மண்ணில் சந்தித்து 4 சதங்களை எடுத்தார்.

 

பிறகு 1978-79 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மீண்டும் 4 சதங்களை எடுத்து சாதனையை மீண்டும் நிகழ்த்தினார்.

கேப்டனாக முதல் 3 இன்னிங்ஸ்களில் சதம் எடுத்த ஒரே கேப்டன்/வீரர் கோலிதான். அடிலெய்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் பிறகு சிட்னியில் முழுநேர கேப்டனான பிறகு இன்று முதல் இன்னிங்ஸில் சதம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article6767983.ece

  • தொடங்கியவர்

எல்லாத்தையும் மேல இருக்கிறவன் கெடுத்துட்டான்....ஆஸி. கேப்டன் ஸ்மித் சர்ச்சை குற்றச்சாட்டு

 

சிட்னி: கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு சேனல், மைதானத்தில் தலைக்கு மேல் கேமராவை தொங்க விட்டதால்தான் கேட்சை கோட்டை விட்டதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் குற்றம்சாட்டினார். இது ஸ்பைடர்கேமரா எனப்படும் தலைக்கு மேல் சுற்றும் கேமராக்களின் செயல்பாடு குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் தொடர்களிலும் இப்போது நவீன கேமராக்களை கிரிக்கெட்டை நேரடியாக ஒளிபரப்பும் சேனல்கள் பயன்படுத்துகின்றன. அதில் ஒரு கேமராதான் ஸ்பைடர்கேமரா என்று அழைக்கப்படுகிறது.

108a050.jpg

தலைக்கு மேல் கண்காணிப்பு வழக்கமாக மைதானத்திற்கு வெளியே இருந்தபடி ஜூம் செய்துதான் கேமராமேன்கள், கிரிக்கெட்டை படம் பிடிப்பார்கள். ஆனால் ஸ்பைடர் கேமரா, எனப்படும் புதுவகை கேமராவோ மைதானத்தின் நடு பகுதியில் வீரர்களுக்கு மேலே பறந்தபடி, கீழே நடப்பதை படம் பிடிக்கும். டாப்-ஆங்கிள் படங்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்

 

ராகுல் அடித்த பந்து இந்திய அணியின், ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது வாட்சன் வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டார். ஆனால் பேட்டின் விளிம்பில் பட்ட பந்து ஸ்லிப் பகுதியில் உயர கிளம்பியது. பந்தை பிடிப்பதற்காக சிறிது பின்னோக்கி சென்றார் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்மித்.

 

தட்டிடுச்சி டீச்சர் ஆனால் எளிதாக பிடித்திருக்கப்பட வேண்டிய அந்த கேட்சை கோட்டை விட்டார் ஸ்மித். கோட்டை விட்டு மைதானத்தில் விழுந்த ஸ்மித், மேலே கையை காண்பித்து, கேமராவில் பால் மோதிவிட்டதாக குற்றம்சாட்டினார். கீழே வந்த பந்து இடையில் கேமராவில் தட்டுப்பட்டதால் திசை மாறி விழுந்துவிட்டதாகவும், எனவே தன்னால் பந்தை பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். ஸ்பைடர்கேமரா மீதான சர்ச்சையை இவரது குற்றச்சாட்டு உருவாக்கியுள்ளது.

 

சேனல் மறுப்பு ஆனால் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பிவரும் ஆஸ்திரேலியாவின் சேனல்9 இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த பந்து கேமராவிலோ அல்லது அதோடு இணைந்த வயர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளிலோ படவில்லை என்று சேனல்9 மறுப்பு தெரிவித்துள்ளது.

 

ராகுல் சதம் இந்த சம்பவத்திற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், 110 ரன்கள் குவித்து அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/spidercam-caught-controversy-after-steve-smith-drops-catch-at-scg-218568.html

  • கருத்துக்கள உறவுகள்

இதன்பின்னரும் ஸ்லிப்சில் இன்னொரு பிடியை கோட்டை விட்டவர்தான் ஸ்மித்.. :D

  • தொடங்கியவர்

ஆஸி. டெஸ்ட் தொடரில் 4வது சதம்.. 86 வருட சாதனையை ஊதித் தள்ளிய கோஹ்லி!

 

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பதிவு செய்த நான்காவது சதம் இதுவாகும். சிட்னியில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில், டாசில் வெற்றி பெற்ற ஆஸி. முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 572 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், 2வதாக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. ஓப்பனிங்கில் இறங்கிய முரளி விஜய் டக் அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

 

4வது சதம் இதனிடையே கேப்டன் விராட் கோஹ்லியும் அதிரடியாக விளையாடி சதத்தை கடந்துள்ளார். அவர் இந்த தொடரில் அடித்துள்ள நான்காவது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை சுனில் கவாஸ்கருக்கு மட்டுமே இருந்து வந்தது.

 

86 வருட சாதனை சமன் சுனில் கவாஸ்கர், 1971 மற்றும் 1978-79ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த போட்டிகளில் இந்த சாதனையை செய்திருந்தார். அதன்பிறகு இப்போது விராட் கோஹ்லி அந்த சாதனையை சமன் செய்துள்ளார். அதே நேரம் ஆஸ்திரேலிய மண்ணில் 86 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஒரே டெஸ்ட் தொடரில் 4 செஞ்சுரிகள் அடித்துள்ளார்.

 

முதல் டெஸ்டிலும் சதம் மேலும், கேப்டன் என்ற வகையில் விராட் கோஹ்லிக்கு இது ஹாட்ரிக் செஞ்சுரியாகும். ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக டோணி களமிறங்காததால், தற்காலிக கேப்டனாக இந்திய அணியை கோஹ்லி வழிநடத்தினார். அந்த போட்டியின் இரு இன்னிங்சுகளிலும் கோஹ்லி சதம் அடித்திருந்தார்.

 

கேப்டனாக ஹாட்ரிக் 2வது மற்றும் மூன்றாவது போட்டிகளை டோணி தலைமையில் இந்தியா எதிர்கொண்டது. டோணி திடீரென ஓய்வு முடிவை அறிவித்துவிட்டதால் 4வது டெஸ்ட் போட்டிக்கு கோஹ்லி கேப்டனாக்கப்பட்டார். கேப்டனாகிய பிறகு பேட்டிங் செய்த முதல் இன்னிங்சிலே, சதம் அடித்துள்ளார். எனவே கேப்டனாக கோஹ்லி விளாசிய ஹாட்ரிக் செஞ்சுரி இதுவாகும்.

 

மானம் காத்தால் சரி எப்படியோ... இந்திய அணியின் மானத்தை இந்த ஒரு பேட்ஸ்மேனாவது காப்பாற்றி வருகிறாரே.. அதுவரை சந்தோஷம்.. மகிழ்ச்சி.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/virat-kohli-s-record-breaking-run-australia-continues-with-ton-218572.html

  • தொடங்கியவர்

இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா 348 ரன்கள் முன்னிலை

  

 

சிட்னி டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து மொத்தம் 348 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் அரைசதம் மற்றும் புவனேஷ் குமாரின் 30 ரன்களுடன் 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய முன்னிலையை 97 ரன்களாகக் குறைத்தது.

 

ஆனால், இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியினர் தொடக்கத்தில் அஸ்வினிடம் அதிரடி வீரர் டேவிட் வார்னரை இழந்தாலும், ராஜர்ஸ் (56), வாட்சன் (16), ஸ்மித் (71), ஜோ பர்ன்ஸ் (66 - 39 பந்துகள் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்) பிராட் ஹேடின் (31 நாட் அவுட்) ஆகியோரது அதிரடி ஆட்டத்தினால் ஓவருக்கு 6.27 ரன்கள் என்ற விகிதத்தில் குவித்துத் தள்ளியது. 40 ஓவர்களில் 251 ரன்களை விளாசியது.

 

இந்திய அணியில் உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட உமேஷ் யாதவ் படு மோசமாக வீசினார். மந்தப் பிட்சில் ஷாட் பிட்ச், மற்றும் லெக் திசைப் பந்துகளை அதிகம் வீசி 3 ஓவர்களில் 45 ரன்களை வாரிவழங்கினார். இதில் 10 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் முதல் முறையாக ஆக்ரோஷமாக வீச 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் அவருக்கும் அடி விழுந்தது. 105 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார்.

 

புவனேஷ் குமார் 8 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷமி ஓரளவுக்கு சுமாராக வீசி முக்கியமான விக்கெட்டான ஸ்மித்தை வீழ்த்தினார். இவரும் 6 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்தார். ரெய்னா மட்டுமே சிக்கனமாக ஓவருக்கு 4.50 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

கேப்டன் ஸ்மித் 70 பந்துகளில் 71 ரன்களை எடுத்து இந்தத் தொடரில் 769 ரன்களை 128.16 என்ற சராசரியின் கீழ் குவித்துள்ளார்.

 

ஆனால் இன்றைய ஆட்டத்தின் நாயகன் ஜோ பர்ன்ஸ் என்றால் மிகையாகாது. டி20 பாணியில் அவர் ஆடினார். அஸ்வினை 3 சிக்சர்கள் விளாசினார். 33 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் அடுத்த 6 பந்துகளில் 66 ரன்களை எட்டினார். பிறகு உமேஷ் யாதவ்வை சேதப்படுத்தினார் பிராட் ஹேடின்.

அஸ்வினுக்கு பந்துகள் நன்றாகத் திரும்பின. நாளை இந்திய அணியை காலையில் களமிறக்க ஸ்மித் முடிவெடுத்தால் நேதன் லயன் ஒரு சக்தியாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

 

இன்று தொடக்கத்திலேயே அஸ்வின் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். அத்தகைய ஒரு முடிவை ஸ்மித்தும் முயற்சித்தால் தொடக்கம் முதலே இந்தியாவுக்கு நெருக்கடிதான்.

ஆனால், டிரா செய்வதை விட வெற்றிக்கு ஆடுவதே நல்லது. டெஸ்ட் தொடரில் 0-2 என்ற தோல்விக்கும் 0-3 என்ற தோல்விக்கும் பெரிய வித்தியாசமில்லை.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-348-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article6771513.ece

  • தொடங்கியவர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 1,000 ரன்கள்: சிட்னி புள்ளி விவரங்கள்
 

 

சிட்னி டெஸ்ட் போட்டியில் இன்று நிதானமாக விளையாடி 50 ரன்கள் எடுத்த அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை எட்டினார்.

இதன் மூலம் 100 விக்கெட்டுகள், 1,000 ரன்கள் என்ற 'இரட்டை' -யை சாதித்த 9-வது இந்திய வீரரானார் அஸ்வின். அவரது பேட்டிங் சராசரி 37.3 என்பது 9 வீரர்களில் அதிக சராசரியாகும்.

 

24 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த இரட்டையை சாதித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது அதிவேக இரட்டையாகும் (100 விக். 1,000 ரன்கள்). இதனை 21 டெஸ்ட் போட்டிகளில் சாதித்தவர் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தம், 23 டெஸ்ட் போட்டிகளில் சாதித்தவர் இந்திய ஆல்ரவுண்டர் வினு மன்கட்.

இன்று வார்னரை அஸ்வின் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை 6-வது முறையாக வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அஸ்வினுக்கு எதிராக 10 இன்னிங்ஸ்களில் 115 ரன்களையே அவர் எடுத்துள்ளார். இதனால்தான் கோலி இன்று தொடக்க ஓவர்களிலேயே அஸ்வினை பயன்படுத்தினார் போலும்.

மற்றொரு ஆஸி. தொடக்க வீரர் எட் கோவன் என்பவரை அஸ்வின் 7 முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இன்று ஆஸ்திரேலிய 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியதன் மூலம், 23 ஆண்டுகளில் 4 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றும் 2-வது ஸ்பின்னர் ஆனார் அஸ்வின். இதற்கு முன்னால் அனில் கும்ளே தான் 7 முறை 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவில் கைப்பற்றியுள்ளார். அதாவது 2003-04 மற்றும் 2007-08 தொடர்களில் கும்ளே இதனை நிகழ்த்தினார்.

 

3 ஓவர்களில் 45 ரன்களை வாரிவழங்கிய உமேஷ் யாதவ் ஒரு விசித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது ஒரு இன்னிங்சில் 3 அல்லது அதற்கும் மேல் ஓவர்களை வீசிய பவுலர்கள் எவரும் ஓவருக்கு 15 ரன்களை விட்டுக் கொடுத்ததில்லை.

 

4 போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 769 ரன்களை அடித்ததன் மூலம் 3-வது அதிகபட்ச ரன்களை எடுத்த வீர்ரானார். சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவரது அறிமுக தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்களை எடுத்தார். விவ் ரிச்சர்ட்ஸ் 1976ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 829 ரன்களைக் குவித்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-1000-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6772025.ece

  • தொடங்கியவர்

சிட்னியில் வெற்றிக்குச் செல்வதைத் தடுத்த ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்களின் துல்லியம்
 

 

சிட்னி டெஸ்ட் கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றி இலக்கு 349 ரன்களை துரத்த முடிவெடுக்காததற்குக் காரணம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சின் துல்லியமே.

சிட்னி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் திருப்பு முனைகளுடன் டிரா ஆனது. குறிப்பாக அஜிங்கிய ரஹானே, புவனேஷ் குமார் ஆகியோர் கடைசி 11 ஓவர்களை திறம்பட விளையாடினர்.

 

முதல் நாள் எடுத்த 251/6 என்ற நிலையில் ஸ்மித் டிக்ளேர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவரும் டிக்ளேர் செய்தார். இந்தியாவுக்கு 349 ரன்கள் வெற்றி இலக்கு.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 363 ரன்கள் இலக்கையே விராட் கோலி, முரளி விஜய் ஆட்டத்தினால் துரத்த முடிந்த இந்திய அணி நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றிக்கு விளையாடும் என்றே கருதப்பட்டது. தேநீர் இடைவேளை வரை ஒரு வேளை அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் அதன் பிறகு வெற்றிக்கு முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கலாம்.

 

 

முரளி விஜய்யும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு அப்படித்தான் ஆடினார். நேதன் லயனுக்கு அடிலெய்ட் போலவே ஆஃப் ஸ்பின் இயல்பான லெந்த்தில் நிறைய ஸ்பாட்கள் இருந்தன. அதில் பிட்ச் ஆனால் பந்துகள் திரும்பியதோடு, எகிறவும் செய்தன. ஏற்கெனவே 10-வது ஓவரில் முரளி விஜய் முதல் பந்தை நேராக ஒரு அபார பவுண்டரி அடித்தார், பிறகு மேலேறி வந்து ஒரு மிட்விக்கெட்டில் மேலும் அபாரமான சிக்ஸரை அடித்தார்.

 

ஆனால் அடுத்த பந்து எட்ஜ் வாங்க, கேட்சை பிராட் ஹேடின் கோட்டை விட்டார். இப்படியாக அடித்து ஆடினாலும் விக்கெட் விழாது என்ற உறுதிப்பாடு பிட்சில் இல்லை. அடிலெய்டில் ஒரு முனையில் ஒரு ஸ்பாட்தான் இருந்தது. மற்றபடி பிட்சில் பந்துகள் பேட்டிற்கு அருமையாக வந்தது, அதனால் ஷாட்கள் ஆட முடிந்தது. ஆனால் சிட்னி கடைசி நாள் பிட்ச் இந்திய துணைக்கண்ட பிட்ச் போல் மந்தமாகவும், ஷாட் ஆடினால் கூட சரியாக மட்டையில் சிக்காத ஆட்டக்களமாகவும் மாறியிருந்தது. ஒருவேளை இதில் வெற்றி இலக்கை துரத்த ஆடியிருந்தால் இன்னும் முன்னமேயே கூட ஆட்டத்தை இந்தியா இழந்திருக்கும்.

 

உணவு இடைவேளைக்குப் பிறகு முரளி விஜய்க்கு மீண்டும் ஹாரிஸ் பந்தில் ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது. இம்முறை ஷான் மார்ஷ் விட்டார். தேநீர் இடைவேளைக்கு 10 நிமிடங்கள் முன்னர் முரளி விஜய், ஆட்டத்தின் 54-வது ஓவரில் நேதன் லயன் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்.

 

முதலில் ஒரு ஸ்வீப், பிறகு மேலேறி வந்து புல்டாஸாக மாற்றிக் கொண்டு லாங் ஆனில் ஒரு பவுண்டரி, கடைசி பந்தில் மேலேறி வந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ் என்று அந்த ஓவரில் 16 ரன்களை விஜய் அடிக்க 54 ஓவர்களில் ஸ்கோர் 151/2 என்று இருந்தது. அதாவது 36 ஓவர்களில் 198 ரன்கள் இலக்கு என்பது ஒருநாள் கிரிக்கெட் ரன் விகிதம் போலவே தெரியும். ஆனால் அதில் களவியூகத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உண்டு. இது டெஸ்ட் கிரிக்கெட். இதில் பீல்ட் கட்டுப்பாடுகள் என்பது கிடையாது.

 

முரளி விஜய் ஆடத் தொடங்கியவுடன் வெற்றிக்குத்தான் செல்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆஸி. பவுலர்கள் தொடர்ந்து இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தொடங்கினர். விஜய் தேவையில்லாமல் ஷாட் பிட்ச் பந்து ஒன்றை தொய்வாக கட் செய்து அவுட் ஆனார்.

 

அதன் பிறகு கோலியையும் ஆஸி. பவுலர்கள் நெருக்கினர். அவரும் பாசிடிவ்வாக ஆட முயன்றார் அதில் அவுட் ஆனார். மிட்செல் ஸ்டார்க் ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை உள்ளே கொண்டு வந்து பிறகு லேட் ஸ்விங் செய்தார் அருமையான பந்துக்கு கோலி அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு பதட்டமான ரெய்னாவுக்கு நெருக்கடியை ஆஸ்திரேலியா அதிகரித்தது. லெக் கல்லியில் ஒரு பீல்டரை நிறுத்தி மிட்செல் ஸ்டார்க் வீச ரெய்னா கிரீஸிற்குள் நிற்க பணிக்கப்பட்டார். 2 பந்துகளை ஷாட் பாலாக வீச 3-வது பந்தையும் அதனை எதிர்பார்த்தார். ஆனால் இம்முறை லெந்தில் விழுந்த பந்து இன்கட்டராகி பேடை தாக்க எல்.பி.டபிள்யூ-வின் விளக்கமாகத் திகழ்ந்து அவுட் ஆனார். சிட்னியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி ‘பேர்’ வாங்கினார்.

 

 

சஹா, அஸ்வின் என்று அடுத்தடுத்து ஆட்டமிழக்க 78.2 ஓவர்களில் 217/7 என்று ஆனது. இன்னும் 11.4 ஓவர்களை தாக்குப் பிடிக்க வேண்டும், ரஹானே மட்டும்தான் கிரீசில் உள்ளார். ஆனால் புவனேஷும், ரஹானேயும் சில பதட்டமான தருணங்களை மனபலத்துடன் எதிர்கொண்டு டிரா செய்தனர்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் இருந்தார். அவர் விக்கெட்டுகளை வீழ்த்தப் பணிக்கப்பட்டவர் எனவே அவரது பவுலிங்கில் ரன்களும் வந்தவண்ணம் இருந்தன.

 

ஆனால், இந்தப் போட்டியில் ரியான் ஹேரிஸ், ஹேசில்வுட், வாட்சன், ஸ்டார்க் என்று அனைவருமே துல்லியமாக வீசியதோடு, ரன்கள் கட்டுப்படுத்தும் கள அமைப்புடன் விக்கெட்டுகள் வீழ்த்தும் கள அமைப்பும் கலந்து செய்யப்பட்டது. அதனால்தான் இலக்கைத் துரத்துவது கடினமாகப் போனது. அடிலெய்டில் தேநீர் இடைவேளையின் போது 200 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி, ஆனால் இங்கு 160 ரன்கள்தான் எடுக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் ஆஸி. வேகப்பந்து வீச்சின் சிக்கனம் மற்றும் துல்லியமுமேயாகும்.

 

இந்தியா எடுத்த 252/7-ல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஹேரிஸ், வாட்சன் ஆகியோர் 57 ஓவர்களை வீசி 19 மைடன்களுடன் 123 ரன்களையே விட்டுக் கொடுத்ததோடு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். லயன் 30.5 ஓவர்களை வீசி 110 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் விக்கெட் வீழ்த்தும் பவுலர் என்பதால் ரன்களும் வந்தது, விக்கெட்டுகள் விழும் வாய்ப்புகளும் அதிகமாக உருவாகின.

எனவே. டிரா என்பது ஒரு சிறந்த முடிவாகவே தெரிகிறது. கோலி ஆட்டம் முடிந்தவுடன் கூறியது போல், வெற்றிக்கு ஆடியிருக்கலாம், தேநீர் இடைவேளைக்குப் பிறகு அப்படி ஒரு யோசனை இருந்தது. ஆனால் முரளி விஜய் அவுட் ஆனவுடன் அதற்கான வாய்ப்பு குறைந்தது என்றதோடு, ஆஸி. வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டதால் இலக்கை நோக்கிச் செல்ல முடியவில்லை, என்றார்.

 

அவர் கூறியது முற்றிலும் உண்மைதான். மெல்போர்னில் செய்த டிராவை விட இது சிறந்த டிரா ஏனெனில் இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இத்தகைய துல்லியத்தைக் கொண்டு வந்தால்தான் இந்தியா அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6775355.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.