Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை சொல்லாத செய்திகளும் அரசாங்கம் சொல்லப் போகும் செய்திகளும்...

Featured Replies

pattani%20nakules1_CI.jpg

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு  வெள்ளாங்குளம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் சொல்லாத செய்திகளும் இனி அரசாங்கம் சொல்லப் போகும் செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் கிராம சேவகர் ஜெபநேசன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடன் 6பேர் கைதானதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தடயவியல் ரீதியாக முக்கிய தடயங்களும், சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“இக்கொலைக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.  விசாரணை முடிந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் கொலைகுறித்த தகவல்களை நாங்கள் வெளிவிடுவோம்' எனவும் அஜித் ரோஹண கூறினார்.

கைதான ஏனையவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை....  எனினும் கைதானவர்களின் பெயர் விபரங்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

1)    ஜெபநேசன் – வெள்ளாங்குளம் கிராமசேவையாளர்.

2)   வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் (முன்னாள் புலி)

3)    வவுனியாவைச் சேர்ந்த ராசலிங்கம் (முன்னாள் புலி)

4)    ராசலிங்கத்தின் தம்பி சந்திரகுமார்.

5)    சந்திரகுமாரின் மனைவியின் சகோதரன் சதீஸ்குமார் (மாட்டுக் கண்ணன்)

6)    சசிக்குமார்- உழவுயந்திர சாரதி

இவர்களில் நேரடியான பிரதான சந்தேக நபர்களாக முன்னாள் புலிகள் உறுப்பினர்களான தமிழ்ச் செல்வன் மற்றும் ராசலிங்கம் ஆகியோரே குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். இவர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த கொலைக்கான ஒப்பந்தத்தை மன்னார் மாந்தை பிரதேச செயலர் சிறீஸ்கந்தராசாவே கிராமசேவையாளர் ஜெபநேசன் ஊடாக வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கும் மன்னார் முக்கியஸ்தர் ஒருவர், ரூபா 5 லட்சம் பேசப்பட்டு 35 ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்ட நிலையில் மிகுதி கொலைக்கு பின் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாக தெரிவிக்கிறார்.

இந்தக் கொலையைப் புரிந்த முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் இருவரில் தமிழ்ச் செல்வன் புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர். இவரும் ராசலிங்கமும் புனர்வாழ்வுக்கு உட்பட்ட காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையுடன் ஏற்பட்ட நெருக்கத்தை விடுதலையின் பின்பும் தொடர்ந்தனர்.

இவர்களே கொலைக்கான துப்பாக்கியை பெற்றுள்ளனர். இப்போ கொலையின் முக்கிய சூத்திரதாரியான பிரதேச செயலாளரைக் காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2003 – 2004 காலப்பகுதியில் கிளிநொச்சி பூனகரி பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த சிறீஸ்கந்தராசா அலுவலக முறைகேடுகள் – மற்றும் பெண்களுடனான தவறான தொடர்புகள் காரணமாக புலிகளின் நிர்வாகத் துறைக்கு பொறுப்பான சின்னப்பா மாஸ்ரரின் தண்டனைக்கு உள்ளானவர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போதைய அரச அதிபர் இராசநாயகத்தின் பணிதொடர்பான தண்டனைக்கும் உள்ளானவர். ஏறத்தாள கடந்த 10 வருடங்களாக இவரது சேவை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அரசாங்கத்தில் பெரும் செல்வாக்குடன் வீற்றிருக்கும் குறிப்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் நெருக்கமான உறவைப் பேணும் ( பசில் – ரிசாத் - குருநாகலில் இயங்கும் இரும்புருக்குத் தொழிற்சாலை ஒன்றின் இணைப் பங்காளிகள் எனக் கூறப்படுகிறது) அமைச்சர் ரிசாத்பதியுதீனின் ஆதரவுடன் மன்னாரிலும் தனது அடாவடிகளைத் தொடர்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பிரதேச செயலர் சிறீஸ்கந்தராசாவையும் சிலவேளைகளில் அவரின் உதவியாளரான கிராமசேவகர் ஜெபநேசனையும் தப்பிக்க விட்டு கொலைக்கான முழுப்பொறுப்பையும் முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட மற்றவர்கள் மீது சுமத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் முன்னாள் புலிகள் தற்போதும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள்... புலிகளினால் இன்னும் நாட்டுக்கு ஆபத்து.. எனக் கூறுவதுடன் தமது எதிரிகளை கொலை செய்தபின் முன்னாள் புலிகளிள் மீது பொறுப்பித்து விடுவதுடன், புலிப் பயங்கரவாதம் தொடர்வதாக சர்வதேசத்திற்கும், சிங்கள வாக்கு வங்கியை தக்கவைக்க உள்நாட்டிலும், இந்தக் கொலையை பயன்படுத்த,  அரசாங்கம், படையினர, புலனாய்வாளர்கள், அமைச்சர்கள், தமிழ் அதிகாரிகள் என ஒரு கூட்டுச் சதி தொடர்வதாகவும் பலரும் கூட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரனின் கொலையின் பின்புலத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் - பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளருடன் - அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த 16ஆம் திகதி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இதுதொடர்பாக உரையாடியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மன்னார் - வெள்ளாங்குளம் - கணேஷபுரம் என்ற பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின் இழப்பு மாந்தை பிரதேசத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகவே நான் பார்க்கின்றேன் .

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான நகுலேஸ்வரன் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வும் பெற்று வழமையான தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மாந்தை பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினராக இருந்து - அவரது பிரதேச நலனுக்காக பல்வேறு உதவிகளை  என் மூலமாக பெற்றுச் சென்றிருக்கிறார். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அதிகமாக அவரது பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவே உரையாடுவார்.

இவ்வாறு சகஜ வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்  படுகொலை செய்யப்பட்டதானது  மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அகற்றி இக்கொலைக்கு பின்னணியிலுள்ள சதிகாரர்களைக் கண்டறிந்து உண்மையை  வெளிப்படுத்த வேண்டிய கடமை பொலிசாருக்கு உண்டு.

இது தொடர்பில் உண்மைநிலையை கண்டறிந்து பின்புலத்தையும் அறிந்து உரிய விசாரணையை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

நகுலேஸ்வரன் கொலையால் துயருற்றிருக்கும் ஆசிரியையான அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிக்கை இவ்வாறு இருக்கும் நிலையில் சற்று பினோக்கிய வரலாற்றை இங்கு மீட்டு பார்ப்பது அவசியமாகிறது. புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும்,  சமூகநலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தவருமான  பட்டானி ராசிக் 2010ஆம் ஆண்டு பெப்ரவரி காணமால் போய் 16 மாதங்களின் பின் 2011 யூலை மாதமளவில் கிழக்கில் சடலமாக மீடகப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக புத்தளம் வாழ் முஸ்லீம் மக்கள் அமைச்சர் ரிஸாத்பதியுதீன் மீது குற்றம்சாட்டியதுடன் 5ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு  பாரிய ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இந்தக் கொலை தொடர்பான பல உண்மையான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றும் பலம்வாய்ந்த அரசியல் புள்ளி கொலையில் தொடர்பென்பதால் விசாரணை கிடப்பில் போடப்பட்டது. பட்டானி ராசூக் கொலை தொடர்பாக வந்த செய்திகளை இந்த இணைப்புகளில் பார்வையிடலாம்.

 

BBC தமிழோசை – பட்டானி ராசிக் கொலைமக்கள்

 

காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் - ஐ.நா

 

காணாமல் போனவர்கள் தொடர்பில் 5653 முறைப்பாடுகள்

 

29 ஜூலை 2011 ... பட்டானி ராசீக் தொடர்பில்நீண்ட நாட்களாக மர்மம் நீடித்து வந்ததாகவும்அண்மையில்அவரது சடலம் கண்டு ...

 

தினகரன் – முந்தல் கிராமசேவகரின் சடலம் ஓட்டமாவடி,காவத்தைமுனையில் மீட்பு

 

வீரகேசரி – பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நல்லடக்கம்

 

விடிவெள்ளி – ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்புடன்பட்டாணி ரசிக்கின் ஜனாஸா நல்லடக்கம்

     

அத தெரண – பட்டானி ராசீக் கொலைசம்பந்தம் இல்லைஎன்கிறார் ரிஷாத்

 

தமிழ் Mirror – பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நல்லடக்கம

 

Daily Mirror – Razeek laid to rest amidst calls for justice

இந்த நிலையில் தற்போது இந்த கொலை இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் செயலராக இருந்த சிறீஸ்கந்தராசா மன்னார் நகரத்திற்கு மாற்றப்பட்டு மன்னார் நகரில் இருந்த வசந்தகுமார் அவரது இடத்திற்கு நியமனமாகி உள்ளார்.

 

இங்கும் பாரிய சூழ்ச்சியே இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குளோபலுக்கு தெரிவித்துள்ளனர். இந்த வசந்தகுமாரும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அரசாங்கத்திற்கு  நெருக்கமானவர்.

பூனகரி உதவி அரசாங்க அதிபர் வசந்தகுமார் என்றால் அவரின் முதல் எழுத்தாக வருவது ஊழல் பேர்வளி என்பதாகும் என மக்கள் கூறுகின்றனர். பூனகரியில் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவியிறக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டவர் மீண்டும் பதவி உயர்வோடு மன்னாருக்கு அனுப்பப்படுகிறார் என்றால் அவரது அரசியல் செல்வாக்கு, எப்படி என்பதையும் பலவீனமானவர்கள் அதிகாரிகளாக  இருந்தால் தான் தமது விருப்பம்களை நிறைவேற்றலாம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் புரிய முடியும்.

இங்கே ஒரு உதாரணம் தரப்படுகிறது... பூநகரி வீதி நிர்மாணப் பணியில் அதனை மேற்கொண்ட நிறுவனத்திற்கு கிடைத்த லாபம் 300 மில்லியன் ரூபாய்... அதில் கிளிநொச்சியி அரச அதிபர், பொறியியலாளர் பூனகரி பிரதேச செயலர் என்போரிடம் உங்களுக்கு என்னபரிசு வேண்டும் எனக்  கேட்டார்களாம்.. ஒப்பந்த நிறுவனத்தினர். அதற்கு இவரைத் தவிர்ந்த மற்றவர்கள் சன்மானமாக பணத்தை கேட்டார்களாம்... ஆனால் வசந்த குமார் சீனப் பெண்மணி ஒருவரை தந்து உதவுங்கள் என கேட்டாராம் அதற்கமைவாக இன்றகூலர் வாகனத்தில் கொழும்பில் இருந்து சீனப் பெண் அனுப்பி வைக்கப்பட்டதாக இவருடன் பணிபுரிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கே இந்தச் செய்தி ஆய்வில் தனிப்பட்ட வாழ்க்கையின் பலவீனங்களை ஆராய்வது நோக்கம் அல்ல... (இன்னும் பல ஆதாரங்களை சொல்ல முடியும்.) போருக்கு பின்னரான வடக்கு கிழக்கில் தமிழ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் ஆளும் தரப்பினரால் எவ்வாறு வாங்கப்படுகின்றனர் பலியாக்கப்படுகின்றனர் என்பதனை சில ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுவதே நோக்கமாகும். இவ்வாறு பெண்ணும் பொன்னும் பொருளும் சலுகைளாக அள்ளி வீசி போது சாதாரண மக்களின் வாழ்வை பலியெடுக்குறார்கள்.

நகுலேஸ்வரனின் கொலை சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் பிரதேச செயலக மட்டத்தில் இருந்தோ பிரதேசத்தில் இருந்தோ வெளிக்கிழம்பக் கூடாது என்பதற்காகவே வசந்தகுமாரை அரசாங்கம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது...

இத்தகை சூழலில் தொடரும் வழக்கு விசாரணைகளின் முடிவு ராஜபக்ஸ சாம்ராட்சிய நீதித் துறையில் எப்படி வெளிவரும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113641/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.