Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமன்னிப்பு குடுத்திட்டன்: இனியாவது பாரதரத்ன கிடைக்குமா? யாழ்ப்பாணத் தம்பி

Featured Replies

kkk_CI.jpg

மகிந்த ராஜபக்சவ ஒரு பெரிய மா மனிதராக காட்ட இதைவிடவும் ஒரு சந்தர்ப்பம் வருமோ? பிறகென்ன? இந்திய மீனவர்களுக்கு பொது மன்னிப்புக் குடுத்த மீனவ நண்பன் எல்லோ. இந்தியாவே என்ன மாதிரி? தமிழ் நாடே இனியும் போர்க்குற்ற இனப்படுகொலையாளி தீர்மானம் போடுவியளோ? தனி ஈழம் கேப்பியளோ? 

 
மகிந்த தூக்கு வளையில தொங்கிக் கொண்டு இப்பிடித்தான் கேக்கிறாராம்...
 
மகிந்தவின்ட மனிதாபிமான உள்ளத்தை ஐந்து மீனவர்களின்ட தூக்கு கயறித்தை அறுத்து உயிர் பிச்சை போட்ட விடயத்தில மட்டுமில்ல ஈழத்தில நடந்த மனிதாபிமான யுத்தத்திலயும் நீங்கள் பாக்கலாம்... இது பொதுமன்னிப்பு மாதிரி அது மனிதாபிமான யுத்தம். நம்புங்கோ. எல்லாரும் நம்புவியள் எண்டு தெரியும்...
 
மனிதாபிமான யுத்தத்த நடத்தி ஒன்றரை லட்சம் பேர இனப்படுகொலை செய்தவர் மகிந்த. அது மட்டுமே மனித குலமே நடுங்கிற போர்க்குற்ற துன்புறுத்தல்களை செய்து உலக வரலாற்றில தனக்கெண்டு ஒரு தனி இடம் பிடிச்சு வைச்சிருக்கிறார். அவர்தான் இப்ப பொது மன்னிப்பு குடுத்து உயிர காப்பாற்றியிருக்கிறார்...
 
அப்பாவி மீனவர்கள பிடிச்சு அவையின்ட தலையில போதைப் பொருள் குற்றச் சாட்டப் போட்டு மரண தண்டனை விதிச்சினம். ஈழத்தில வாழுற தமிழ் சனங்களின்ட கையில குண்டச் சொருகி பயங்கரவாதியள் எண்டு பட்டம் குத்தி சிறையில அடைக்கிற மாதிரித்தான் இந்த விளையாட்டும்...
 
இதுவரைக்கும் கடலில வைச்சு தமிழ்நாட்டு மீனவர்கள சுட்டிச்சினம். அடித்து துன்புறுத்திச்சினம். வலையள், படகுகள சேதப்படுத்திச்சினம்.. இப்ப கடலில வைச்சு சுட்டுக் கொல்லாம ஸ்ரீலங்கா நீதிமன்றத்தால கொல்லப் பாத்தினம். இரண்டும் ஒண்டுதானே? ஸ்ரீலங்காவில நீதி எண்டுற ஒண்டு இல்லைதானே. 
அதுவும் இராணுவ சர்வாதிகார மயமாகிட்டுது. 
 
தமிழ்நாடு சிங்கள அரசுக்கு ஒரே அரியண்டம் குடுத்திச்சுது. அதான் ராஜபக்ச தமிழ்நாட்ட அடக்கப் பாத்திருக்கிறார். அவையள் தமிழீழம் வேணும். ராஜபக்ச இனப்படுகொலையாளி, பொருளாதார தடை விதி எண்டு எண்டு ஈழ சனங்களுக்காக கோரிக்கை வைச்சினம். அத தடுக்க ராஜபக்ச இப்பிடி ஒரு வலை... 
 
இந்த வலை தமிழகத்தின் ஈழத் தமிழர் ஆதரவு அலையில எடுபடாது கண்டியளோ!
 
ஏற்கனவே பாரதரத்ன விருது வேணும் எண்டு சுப்புரசாமி மூலமாய் மகிந்த கேட்டவராம்.. இப்ப பொது மன்னிப்பு வழங்கிய மாமனிதருக்கு பாரத ரத்ன விருது குடுக்க வேணும் எண்டு சுப்புரசாமி சொல்லுவார். ராஜபக்சவுக்கு தமிழ்நாடு நன்றிக்கடன் பட்டிருக்குதாம்.. தவறு செய்யாத மீனவர்களை பொய் குற்றச் சாட்டில் தூக்கில போட போனவையள் எப்பிடி அரசியல் செய்யினம் பாத்தியளே? 
 
தமிழ்நாடு நன்றிக்கடன் பட்டிருக்குது என்றதன் மூலம் அவையள் ஒரு தவறும் செய்தாத மீனவர்கள் எண்டுறத சுப்புரசாமி சொல்லுறார் கண்டியளெ? 
 
அதுமட்டுமே ராஜுகாந்தி செத்திட்டாரே என்று அன்றைக்குச் சுப்புரசாமி கேட்ட மாதிரியே மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுக் கொண்டு வருவன் என்று சொன்னார். ராஜபக்சவும் பொதுமன்னிப்பு குடுத்துவிட்டிட்டார். இதுகள பாத்தா எல்லாம் திட்டமிட்ட கூத்து மாதிரி தெரியுது. இதெல்லாம் பாரதரத்னாவுக்கா? 
 
ஆனால்... மோடி வெருட்டின வெருட்டிலதான் மகிந்த மீனவர்கள விட்டவராம் எண்டு பெரிய மட்டங்களில ஒரு கதை அடிபடுது. அது உண்மையோ? ஸ்ரீலங்காவின்ட ராஜபக்சவ ஆசியாவின்ட ராஜபக்ச வெருட்டினால் சும்மாவே? 
 
சரி... மகிந்தவுக்கு இப்ப பாரத ரத்னா வருமா வராதா? 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.