Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

 

தமிழீழ தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை  ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி யேர்மனியில் DORTMUND நகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள்  நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.

germany_maveerarnal_01.png

நண்பகல் 12.45 மணியளவில்  பொதுச்சடர் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து  தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை  ஒலிபரப்பப்பட்டது. 

germany_maveerarnal_02.png

உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க  மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் சகோதரியால் ஏற்றிவைக்கப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும்  தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது. சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டது.  மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக்கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

germany_maveerarnal_03.png

தமிழீழம் இசைக்குழுவினரால்  மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்துகொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர். 

germany_maveerarnal_04.png

எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என்பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிடமுடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்திநின்றது.

germany_maveerarnal_05.png

மண்டபமேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 2 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டன. தொடர்ந்த சிறப்புவிருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடரவேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப்போவதில்லை என்பதையம் விலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.

germany_maveerarnal_06.png

தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக எழுச்சி நடனங்கள் , எமது மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நாட்டியநாடகம், கவிதைகள் என நிகழ்வுகள் அரங்கேறியது.

germany_maveerarnal_08.png

தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம்  என்றும் உறுதிகூறப்பட்டது.

germany_maveerarnal_09.png

இதேவேளை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் இருந்து மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது. எமக்காய் தம்மைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்துகொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்  பாராட்டினர். அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெறவேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் மதிப்பளிப்புக் குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

germany_maveerarnal_10.png

germany_maveerarnal_11.png

 

germany_maveerarnal_15.png

germany_maveerarnal_18.png

germany_maveerarnal_19.png

germany_maveerarnal_20.png

germany_maveerarnal_21.png

germany_maveerarnal_22.png

germany_maveerarnal_21.png

germany_maveerarnal_22.png

germany_maveerarnal_24.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

germany_maveerarnal_25.png

germany_maveerarnal_26.png

germany_maveerarnal_27.png

germany_maveerarnal_28.png

 


germany_maveerarnal_12.png

germany_maveerarnal_14.png

germany_maveerarnal_16.png

germany_maveerarnal_17.png

germany_maveerarnal_29.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடியத் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

 

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு நடாத்திய தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், 2014 வழமை போல் எழுச்சி மிக்க மக்கள் வருகையோடு உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

canada_maveerarnal_02.png

ஒன்ராரியோ மாநிலத்தில். மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட்டில், அகவம், ஒழுங்கு செய்த 27 மாவீரர் நாளின் நான்கு நிகழ்வுகளிலும். எமது மக்கள் இந்த ஆண்டும் பெருந் திரளாக வருகை தந்து, தமது தாயக உணர்வை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

canada_maveerarnal_01.png

காலை 6..30 மணி. மதியம் 12.00மணி, மாலை 4.00 மணி. இரவு 7.00 மணி என்று ஒழுங்கு செய்யக்பெற்றிருந்த நான்கு நிகழ்வுகளும். ஓன்றிணைந்த மக்களது வருகையினால் எழுச்சிபெற்று நடைபெற்றது. எழுச்சி நடனங்கள். வானம் பாடிகளின் தாயக விடுதலைப் பாடல்கள். நாடகம், இளையோரின் நிகழ்ச்சிகள். உரை என்று மாவீரர்களின் நினைவோடு அரங்கம் பேரெழுச்சி பெற்றுத் திகழ்ந்தது.

canada_maveerarnal_03.png

சிவப்பு. மஞ்சள் வர்ணங்களால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அரங்க அமைப்பும், துயிலும் இல்ல வடிவமைப்பும். தேசத்தின் அடையாள அணிவகுப்பும் என கார்த்திகை மாதம் கார்த்திகைப் பூக்களின் ஈகத்தைப் புலப்படுத்தி நிற்க. எமது மக்கள். நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதைச் சரியாகப் புலப்படுத்திய நாள் 27. 11. 14. மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்பத் திடல் ஈழத் தமிழர்களின் தாகத்தைத் தெளிவு படுத்தியுள்ளது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். என்ற இலட்சிய உறுதியை வெளிப்படுத்தியுள்ளது. தமிழர் தேசிய நினைவெழுச்சிநாள் மாவீரரை வணங்கும் நாள் என்பதை எமது மக்கள் தமது வருகையின் மூலம் புலப்படு;த்தியுள்ளனர் என்பது இந்த ஆண்டு மாவீரர் நாளின் மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

canada_maveerarnal_04.png

canada_maveerar_nall_01.png

canada_maveerarnal_05.png

canada_maveerarnal_06.png

canada_maveerarnal_07.png

canada_maveerarnal_08.png

canada_maveerarnal_09.png

canada_maveerarnal_10.png

canada_maveerarnal_11.png

canada_maveerar_nall_02.png

canada_maveerarnal_12.png

canada_maveerarnal_13.png

canada_maveerarnal_14.png

canada_maveerarnal_15.png

canada_maveerarnal_16.png

canada_maveerarnal_17.png

canada_maveerarnal_18.png

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள்

 

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

siwss%20maaveerar%20naal-1.JPG

இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில்  தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது.

siwss%20maaveerar%20naal-2.JPG

இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

siwss%20maaveerar%20naal-3.jpg

சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் உள்ள போறூம் மண்டபத்தில் 27.11.2014 பிற்பகல் 13:00 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து, காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு, அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.

siwss%20maaveerar%20naal-5.jpg

தொடர்ந்து தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசை ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட்டு, அகவணக்கத்துடன் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டு, நிகழ்வுகள் யாவும் வழமையான மரபு முறைப்படி உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

siwss%20maaveerar%20naal-4.JPG

சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றது.

siwss%20maaveerar%20naal-6.JPG

நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு 'தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்“ இனால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதுடன், மாவீரர் குடும்ப உறவுகளுக்கான மாவீரர் நினைவு சுமந்த நினைவுப் பேழைகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

siwss%20maaveerar%20naal-7.JPG

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளரும், தமிழீழ விடுதலைக்கு  ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ந்தும் பெரும் பங்காற்றி வருபவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான திரு. கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையை வழங்கினார்.

siwss%20maaveerar%20naal-8.JPG

 அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சமகால நிகழ்வுகளைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகமானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியாகவும் இருந்ததுடன் சுவிஸ் வாழ் கலைஞர்களின் உணர்வு மிக்க மாவீரர் காணிக்கை நிகழ்வுகள்; சிறப்பாக நடைபெற்றன.

siwss%20maaveerar%20naal-9.JPG

 இறுதி நிகழ்வாக 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் இனிதே நிறைவுபெற்றன.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

siwss%20maaveerar%20naal-10.JPG


siwss%20maaveerar%20naal-11.JPG


siwss%20maaveerar%20naal-12.JPG


siwss%20maaveerar%20naal-14.JPG


siwss%20maaveerar%20naal-15.JPG


siwss%20maaveerar%20naal-16.JPG


siwss%20maaveerar%20naal-17.JPG


siwss%20maaveerar%20naal-18.JPG


siwss%20maaveerar%20naal-19.JPG


siwss%20maaveerar%20naal-20.jpgsiwss%20maaveerar%20naal-21.jpg
 
siwss%20maaveerar%20naal-22.JPG
siwss%20maaveerar%20naal-23.jpg
siwss%20maaveerar%20naal-24.JPG
siwss%20maaveerar%20naal-25.JPG

தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!

 

இத்தாலி பலெர்மோ மானகரில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகளும் எழுச்சிகலை நிகழ்வுகளும் மிகவும் உணர்வுéர்வமாக நடைபெற்றது.


italy_palarmo_maveerarnal_02.png

ஆரம்ப நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியினை சிறப்புரையாற்ற வருகை தந்த கலாநிதி முரகர் குணசிங்கம் ஐயா அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொதுச்சுடர் ஈகச்சுடர் மலர்மாலையினை அணிவித்தனர் தொடர்ந்து மாவீரர் எழுச்சி கானங்கள் மாலதி கலைப்பள்ளி மாணவிகளின் விடுதலை நடனங்கள் திலீபன் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்கள் மாவீரர் பேச்சுக்கள்.

italy_palarmo_maveerarnal_02.png

மற்றும் கலாநிதி முருகர் குணசிங்கம் ஐயா சிறப்புரையாற்றும் போது மிகவும் உணர்வுéர்வமாக சமகால அரசியல் விடயங்கள் மாவீரர்களுடைய தியாகங்கள் தமிழர் தாயகத்தின் தற்போதைய நிலமைகள் தமிழீழ விடுதலையின் அவசியம். புலம் பெயர் அமைப்புக்கள். புலம் பெயர் தமிழ் மக்களின் வரலாற்றுக் கடமையின் அவசியம் பற்றியும் இன்னும் பல அறிவியல் வரலாறுகள் பற்றியும் மிகவும் உணற்ச்சியோடு உரையாற்றினார்.

italy_palarmo_maveerarnal_03.png

இன்னும் மாவீரர் நிகழ்வை சிறப்பிக்க ஜேர்மனியில் இருந்து வருகை தந்த வாணி வானதி நர்த்தனாலய அதிபர் ஆசிரியை கலாநிதி வானதி தேசிங்குராஜா அவர்களும் உணர்வுéர்வமாக உரைநிகழ்த்தி மாணவிகளிர்கான சான்றிதளும் வழங்கினார்.

italy_palarmo_maveerarnal_04.png

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் மிகவும் உணர்வோடு கலந்து கொண்டு மாவீரர்களிற்கான தமது அஞ்சலியை செலுத்தினார்கள் இறுதியில் உறுதி மொழி எடுத்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது.

italy_palarmo_maveerarnal_05.png

italy_palarmo_maveerarnal_06.png
italy_palarmo_maveerarnal_07.png
italy_palarmo_maveerarnal_08.png
italy_palarmo_maveerarnal_09.png
italy_palarmo_maveerarnal_10.png
italy_palarmo_maveerarnal_11.png
italy_palarmo_maveerarnal_12.png
italy_palarmo_maveerarnal_13.png
italy_palarmo_maveerarnal_14.png
italy_palarmo_maveerarnal_15.png
italy_palarmo_maveerarnal_16.png
italy_palarmo_maveerarnal_17.png
italy_palarmo_maveerarnal_18.png
italy_palarmo_maveerarnal_19.png
italy_palarmo_maveerarnal_20.png




 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

italy_palarmo_maveerarnal_24.png

italy_palarmo_maveerarnal_26.png

 

 


italy_palarmo_maveerarnal_27.png

italy_palarmo_maveerarnal_28.png


நியூசிலாந்து எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவரீர் நாள்!

 

மாவீர் நாள் தமிழீழ கனவைச் சுமந்து விடுதவை வேள்வித்தீயில் விவதயாகிப் போன வீரமறவர்கவை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாள் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகிப்போன மாவீரர்களுக்காக நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள்.


newzealand_maveerarnal_02.png
newzealand_maveerarnal_01.png
newzealand_maveerarnal_03.png
newzealand_maveerarnal_04.png
newzealand_maveerarnal_05.png
newzealand_maveerarnal_06.png
newzealand_maveerarnal_07.png
newzealand_maveerarnal_08.png
newzealand_maveerarnal_09.png
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனில் நடைபெற்று முடிந்த மாவீரர் நாள்

 

சுவீடனில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்று முடிந்துள்ளது. நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

sweedan_maveerarnal_01.png

sweedan_maveerarnal_06.png

sweedan_maveerarnal_02.png

sweedan_maveerarnal_03.png

sweedan_maveerarnal_04.png

sweedan_maveerarnal_05.png

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

 

இன்று முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் மிகவும்  சிறப்பாக நடை பெற்றது மாவீரர் நாள் நிகழ்வு . இவ் நிகழ்விற்கு உலத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் மாவீரர்கள்  குடுபங்களும் தமிழ் உணர்வாளர்களும் சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

maaveerar%20naal%20mullivaikkal-0.JPG
maaveerar%20naal%20mullivaikkal-1.JPG
maaveerar%20naal%20mullivaikkal-2.JPG
maaveerar%20naal%20mullivaikkal-3.JPG
maaveerar%20naal%20mullivaikkal-4.JPG
maaveerar%20naal%20mullivaikkal-5.JPG
maaveerar%20naal%20mullivaikkal-6.JPG
maaveerar%20naal%20mullivaikkal-7.JPG

maaveerar%20naal%20mullivaikkal-8.JPGmaaveerar%20naal%20mullivaikkal-9.JPGmaaveerar%20naal%20mullivaikkal-10.JPG

maaveerar%20naal%20mullivaikkal-11.JPGmaaveerar%20naal%20mullivaikkal-12.JPGmaaveerar%20naal%20mullivaikkal-13.JPGmaaveerar%20naal%20mullivaikkal-14.JPG

maaveerar%20naal%20mullivaikkal-15.JPGmaaveerar%20naal%20mullivaikkal-16.JPGmaaveerar%20naal%20mullivaikkal-17.JPGmaaveerar%20naal%20mullivaikkal-18.JPG

maaveerar%20naal%20mullivaikkal-23.JPG

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ அவர்களின்   லண்டன் மாவீரர் உரை

 

மாவீரர் நாள் தொகுப்புகளை தரும் அனைவருக்கும் நன்றி.

லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி அடேல் பாலசிங்கம்.

10808_10154930229560637_5374548545249898

(Facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

 

ஸ்கொட்லாந்தில்தேசிய  மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வுகள் மிகச்நிறப்காக நடைபெற்றுள்ளது.தேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்தவரின் புனித நாளில் ஒன்று கூடிய மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு கலைவெளிப்பாடுகளையும் மாவீரமணிகளுக்கு காணிக்கையாக்கினர்.

maaveerar%20naal-2014%20sland-4.jpg
maaveerar%20naal-2014%20sland-5.JPG
maaveerar%20naal-2014%20sland-6.JPG
maaveerar%20naal-2014%20sland-7.JPG
maaveerar%20naal-2014%20sland-8.JPG
maaveerar%20naal-2014%20sland-9.JPG
maaveerar%20naal-2014%20sland-10.JPG
maaveerar%20naal-2014%20sland-11.JPG
maaveerar%20naal-2014%20sland-12.JPG
maaveerar%20naal-2014%20sland-13.jpg
 
maaveerar%20naal-2014%20sland-15.jpg
maaveerar%20naal-2014%20sland-16.JPG
 

http://www.pathivu.com/news/35716/57/d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி மேற்பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்

 

 

தேசிய மாவீரர் நாள் 2014 இத்தாலி மேற்பிராந்திய மாநகரான ரெச்சியோ எமிலியாவில் 30.11.2014 அன்று வெகு எழுச்சியாக இடம்பெற்றது. இத்தாலி மேற்பிராந்திய மாநிலங்களான ரோம், மிலான், பொலோனியா, யெனோவா, பியல்லா, மாந்தோவா மற்றும் ரெச்சியோ எமிலியா நகரங்களில் வாழும் புலம் பெயர் ஈழத்தமிழ் மக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 

italy_melpirathiyam_maveerarnal_01.png

மாலை 2.30 மணியளவில் யெனோவா பிரதேச பொறுப்பாளர் பொதுச்சுடர் எற்றிவைக்க இத்தாலி கொடியை தமிழ் இளையோர் அமைப்பு இணைப்பாளரும் தமிழீழத்தேசியக்கொடியை இத்தாலி மேற்பிராந்திய பொறுப்பாளரும் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் 2014 ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் உரை ஒலிபரப்பட்டது.

italy_melpirathiyam_maveerarnal_02.png

பின் அகவணக்கத்தை தொடர்ந்து ரெச்சியோ எமிலியா பிரதேச பொறுப்பாளர் பிரதான ஈகைச்சுடரையும் மாவீரர் குடும்பத்தினர் தம் உறவினர்களின் கல்லறைகளுக்கான ஈகைச்சுடரையும் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க சம நேரத்தில் ஏற்றி வைத்தனர்.

பொது மக்களின் மலர்வணக்கநிகழ்வைத் தொடர்ந்து இத்தாலி மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் தாயகப்பாடல்களுக்கான நடனங்கள் இபேச்சுக்கள் இடம்பெற்றன இவ்வாண்டிற்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

italy_melpirathiyam_maveerarnal_03.png

இந்நிகழ்விற்காக 2009 இறுதிக்கட்டம் வரை தமிழ்த்தேசியப்பணியாற்றிய தேசப்பற்றாளர் சிறப்பு விருந்தினராக யெர்மன் நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டு உணர்ச்சி மிகுந்ததும் தமிழினப்படுகொலை துரிதமாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரபடவேண்டிய அவசியம் போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள் பொதுமக்கள் மறுவாழ்விற்கான புலம்பெயர் மக்களின் பணிகள், ஒட்டு மொத்தமான தமிழ்மக்களின் விடுதலைக்கான காலத்தின் தேவையையுணர்ந்து புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய அவசியபணிகள் உள்ளடங்கலான சிற்ப்பான விளக்கவுரையினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

italy_melpirathiyam_maveerarnal_04.png

இறுதியாக மாவீரர் நாள் உறுதிமொழியுடன் நம்புங்கள தமிழீழம் பாடல் ஒலிக்கப்பட்டு தேசியக் கொடி இறக்கப்பட்டு இந்நிகழ்வு முடிவுற்றது.

italy_melpirathiyam_maveerarnal_05.png

italy_melpirathiyam_maveerarnal_06.png

italy_melpirathiyam_maveerarnal_07.png

italy_melpirathiyam_maveerarnal_08.png

italy_melpirathiyam_maveerarnal_09.png

italy_melpirathiyam_maveerarnal_10.png

italy_melpirathiyam_maveerarnal_11.png

italy_melpirathiyam_maveerarnal_13.png

italy_melpirathiyam_maveerarnal_14.png

italy_melpirathiyam_maveerarnal_15.png

italy_melpirathiyam_maveerarnal_16.png

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.