Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்!

Featured Replies

அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்!

03-philhughes-test-600_zps31ac3e4c.jpg

மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது.

03-phillip-hughes-funeral6_zps2610bbed.j

அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச் சடங்கின்போது கிளார்க குரல் தழுதழுக்க இரங்கல் குறிப்பை வாசித்தார். அதிலிருந்து... நீ எங்கே போனாய் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு இடத்திலிருந்து நீயும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாய். மீண்டும் அவன் என்னுடன் பேசுவானா என்று இப்போதும் கூட நான் ஆவலாக உள்ளேன். அவனது முகத்தை மீண்டும் காண ஆசைப்படுகிறேன். மைதானத்தில் அவனை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! அவனது ஆன்மா எங்கும் போகவில்லை.

என்னுடனேயே இருக்கிறது. அது என்னை விட்டுப் போகாது என்றே நான் நம்புகிறேன்.

03-phillip-hughes-funeral5_zps2fa6324f.j

சிட்னி மைதானத்தின் புல்வெளிப் பரப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு நான் நடந்தேன். அந்த புல்வெளியில் நானும் ஹியூக்ஸும் செலவிட்ட நேரங்கள் என்னை அலைக்கழித்தன. அவனது கனவுகள் அந்த புல்வெளியோடு போய் விட்டன. அந்த மைதானத்தில்தான் அவன் ரசிகர்களைக் கவர்ந்தான். அந்த மைதானத்தின் எல்லைகதளைத் தாண்டித்தான் அவன் பவுண்டரிகளை விளாசினான். அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! அந்த மைதானத்தில்தான் அவன் கடைசியாகவும் வீழ்ந்தான். அருமையான இந்த விளையாட்டுக்காக கடைசி வரை துடித்த இதயம் அவனுடையது.

 

அவனது வாழ்க்கையில் எல்லாமே கிரிக்கெட்தான். அவனது ஆத்மா கிரிக்கெட்டை அந்த அளவுக்கு நேசித்தது. அவன் ஏற்படுத்தி வைத்துள்ள அந்த அடையாளத்தை சிட்னி மைதானம் என்றுமே மறக்காது. நானும் மறக்க மாட்டேன். நாம் அவனை என்றுமே நினைவு கூர்வோம். தம்பி, அமைதியாக உறங்கியிரு. நானும் ஒரு நாள் உன்னைத் தேடி வருவேன் என்று பேசினார் கிளார்க். பேச்சின்போதும், பேச்சின் இறுதியிலும் கிளார்க்கால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/phillip-hughes-funeral-watch-australian-captain-michael-clarke-tearful-tribute-216238.html

  • தொடங்கியவர்

போய் வா பில் ஹியூக்ஸ்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலியா!

 

மாக்ஸ்வில்லி, ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸ் இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஹியூக்ஸுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வேகமாக வந்த பவுன்ஸர் பந்து தலையில் மோதியதில், படுகாயமடைந்த பில் ஹியூக்ஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் ஆஸ்திரேலியர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் உலுக்கியுள்ளது.

 

03-1417597049-philip-hughes-funeral-cere

 

மாக்ஸ்வில்லி கிராமத்தில் ஹியூக்ஸின் இறுதிச் சடங்குகள் இன்று அவர் பிறந்த ஊரான மாக்ஸ்வில்லி கிராமத்தில் நடந்தது.

03-1417597370-macksville344-600_zpsd3f85

ஹியூக்ஸ் பிறந்த ஊர் அழகிய எழில் கொஞ்சும் கடலோர கிராமம்தான் மாக்ஸ்வில்லி. அங்குதான் ஹியூக்ஸ் பிறந்தார்.

 

03-1417597087-philip-hughes-funeral-cere

 

இறுதி ஊர்வலம் மொத்தமே 3000 பேர் வரைக்கும்தான் இந்த சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். இங்குள்ள பள்ளி ஒன்றில்தான் ஹியூக்ஸின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பின்னர் இறுதி ஊர்வலம் கிளம்பியது

 

03-1417597118-phillip-hughes-funeral5_zp

 

கிரிக்கெட் வீரர்கள் ஹியூக்ஸின் இறுதி ஊர்வலத்தில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி 5000க்கும் மேற்பட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஹியூக்ஸின் இறுதி ஊர்வலத்தின்போது கிராமத்தினர் மொத்தமாக திரண்டு வந்து இரு பக்கமும் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

 

03-1417597108-phillip-hughes-funeral6_zp

மைக்கேல் கிளார்க் ஹியூக்ஸின் சிறந்த நண்பரும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனுமான மைக்கேல் கிளார்க் பெரும் சோகத்துடன் ஹியூக்ஸின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஹியூக்ஸின் சவப் பெட்டியையும் அவர் சுமந்து சென்றார்.

 

03-1417597049-philip-hughes-funeral-cere

ஆரோன் பின்ச் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச், மாக்ஸ்வில்லியைச் சேர்ந்த கோரி அயர்லாந்து உள்ளிட்டோரும் சவப் பெட்டியைச் சுமந்து சென்றவர்களில் சிலர்.

 

03-1417597087-philip-hughes-funeral-cere

தந்தை கிரகோரி ஹியூக்ஸின் தந்தை கிரகோரி ஹியூக்ஸ் உள்ளிட்டோரும் சவப் பெட்டியை சுமந்து சென்றவர்களில் அடக்கம்.

 

03-1417597077-philip-hughes-funeral-cere

தாயார் விர்ஜீனியா ஹியூக்ஸின் தாயார் விர்ஜீனியா ஹியூக்ஸ், பெரும் சோகத்துடன் தனது மகனின் இறுதிச் ச"ங்கில் கலந்து கொண்ட சோகக் காட்சி.

 

10341668_918213961531034_827331907986725

 

http://tamil.oneindia.com/news/international/phillip-hughes-funeral-ceremony-216240.html

  • தொடங்கியவர்

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு: பவுலர் சான் அபாட்டிற்கு கடினமான நாள்
1zqrgpe.jpg
பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கிற்கு வருகை தந்த பந்து வீச்சாளர் சான் அபாட்.

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கிற்கு பவுன்சர் வீசிய நியூசவுத்வேல்ஸ் பவுலர் சான் அபாட் தனது அணியினர் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார்.

அவர் இறுதி அஞ்சலி நடைபெறும் பள்ளிக்கு நடந்து வருகையில் புகைப்படக்காரர்கள் அவரை படங்கள் எடுத்துக் குவித்தனர்.

சாதாரணமாக தெருவில் சான் அபாட் நடந்தால் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று யாரும் கருத மாட்டார்கள், ஆனால் பிலிப் ஹியூஸ் மரணத்திற்குப் பிறகு அவர் தற்போது ஆஸ்திரேலியா முழுதும் அனைவராலும் அறியப்பட்ட, அனுதாபத்திற்குரிய வீரராகியுள்ளார்.

பேருந்தில் அவர் ஜோஸ் ஹேசில்வுட் பின்புறம் அமர்ந்திருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹேசில்வுட்டுடன் சான் அபாட் நிறைய ஓவர்களை சேர்ந்து வீசியுள்ளார்

 

காமிராக்கள் தன்னையே மொய்க்கும் என்பதை உணர்ந்த அபாட், இறுகிய முகத்துடன், துயரத்துடன் தனது அணி வீரர்களுடன் அவசரம் அவசரமாக இணைந்து கொண்டார்.

ஆனால், பிலிப் ஹியூஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பலரும் சான் அபாட்டைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் நேராக சான் அபாட்டிடம் சென்று அபாட்டின் கையைப் பிடித்துக் கொண்டார். ஆனால், அவர் தனது அணியினருடன் இணைவதில் முனைப்பு காட்டினார்.

சான் அபாட்டின் தாய் ஜார்ஜினா, தந்தை நேதன் ஆகியோர் அபாட்டின் துயரத்தை பெரிதும் தாங்கியதாக கூறப்படுகிறது.

 

சான் அபாட்டின் வருகையைக் காண்பிக்க சானல் 9 முயலவில்லை. சானல் 9-ன் இந்தச் செய்கை மிகவும் நியாயமாக அங்கு பார்க்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கிற்கு சான் அபாட் வந்ததே அவரது தைரியத்தைக் காட்டுவதாக பலரும் கருதுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடும் பெரும் கனவுடன் விளையாடி வரும் 22 வயதான சான் அபாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் துயரமே. வக்கார் யூனிஸ் கூறுவது போல் அவர் இனி எப்படி விளையாட முடியும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஆனால், அவர் ஓரளவுக்கு இதிலிருந்து மீண்டுள்ளார் என்று அவரது நண்பர்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article6658323.ece

  • தொடங்கியவர்

பிலிப் ஹியூஸின் ஆன்மா என்னுடனேயே இருக்கிறது: கிளார்க் உருக்கம்

 

மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கை தனது இறுதி அஞ்சலி உரையால் தலைமையேயேற்று நடத்தினார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.

இறுதிச் சடங்கு ஆஸ்திரேலிய தொலைக்காட்சி, வானொலியில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. தவிரவும் சிட்னி கிரிக்கெட் மைதானம், பெர்த், அடிலெய்ட், ஹோபார்ட் மைதானம் ஆகியவற்றில் திரையில் ஒளிபரப்பப் படுகிறது.

 

ஹியூஸிற்கான புகழாஞ்சலியை அவரது சகோதரர் ஜேசன், சகோதரி மீகன், அவரது உறவினர் நினோ ரமுனோ ஆகியோர் செலுத்தினர்.

கிளார்க் தனது அஞ்சலி உரையை நிகழ்த்தும் முன் கண்ணீரை அடக்க படாத பாடுபட்டார்.

அவர் பேசும்போது, “வியாழக்கிழமை இரவு சிட்னி மைதானத்திற்குச் சென்றிருந்தேன். அதே புல் இதழ்களின் மீது நானும், பிலிப் ஹியூஸ், மற்றும் அவரது சகாக்களும் எத்தனையோ முறை ஜோடி சேர்ந்து ஆடியுள்ளோம். சிறுவர்களாக எங்களது தலையில் நாங்கள் வரைந்து கொண்ட கனவினை இங்கு வாழ்ந்தோம்.

இதே மைதானத்தில் ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்துள்ளனர். இதே எல்லைக்கோட்டிற்கு அவர் எத்தனை முறை பந்துகளை அடித்திருப்பார்? ஆனால் இதே இடம்தான் அவரை இனி எழுந்திருக்க முடியாமல் வீழ்த்தியது. நான் முழங்காலிட்டு புற்களைத் தொட்டேன். அவர் என்னுடன் இருக்கிறார். நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன், அவர் தேநீர் இடைவேளைக்கு முன் நாம் சிறிது நேரம் ஆடவேண்டும் என்கிறார். ஒரு தளர்வான ஷாட்டை நான் ஆடியதை எனக்கு அவர் அறிவுறுத்துகிறார். அன்று இரவு என்ன சினிமா நாம் பார்க்கவேண்டும் என்று பேசுகிறோம்.

 

இந்த மைதானத்தில் அவரது ஆன்மா இருக்கிறது. எனக்கு இந்த மைதானம் எப்போதும் புனிதமானது. அவருக்கு கிரிக்கெட் உலகிலிருந்து வரும் அஞ்சலிகள் என்னை நெகிழச்செய்கின்றன.

இதுதான் கிரிக்கெட் உணர்வு என்பதா? கராச்சியில் ஒரு சிறுமி மெழுகுவர்த்தியுடன் அஞ்சலி செலுத்துகிறார். கிரிக்கெட் ஆட்டத்தின் மாஸ்டர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, வார்ன், ஆகியோர் தங்களது துயரத்தை உலகிற்குக் கூறுகின்றனர். கிரிக்கெட் உணர்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கவர் டிரைவின் த்ரில் நமக்கு இத்தகைய உணர்வைக் கொடுக்கும்.

 

நமக்குத் தெரியாத பலர் லார்ட்ஸ் மைதானத்தில் மலரஞ்சலி செலுத்துகின்றனர். இதுதான் நமது விளையாட்டை உலகின் மிகப்பெரிய விளையாட்டாக உருவாக்கியுள்ளது. பிலிப் ஹியூஸின் ஆன்மா எப்போதுமே இனி நமது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாம், அவர் நேசிக்கும் இந்த ஆட்டத்தின் பாதுகாவலர்களாக செயல்படுவோம்.

நாம், ஆட்டத்தின் உணர்வைக் கேட்டறிய வேண்டும், நாம் அதனைக் கொண்டாட வேண்டும். நாம் அதிலிருந்து வாழ்க்கைப்பாடத்தைக் கற்க வேண்டும்.

என் சகோதரனே! அமைதியாக ஓய்வெடு! நான் உன்னை மைதானத்தில் சந்திக்கிறேன்”

இவ்வாறு கிளார்க் உருக்கமாக பேசினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6658220.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.