Jump to content

இஞ்சி குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவையானவை:

துவரம் பருப்பு -2 ஸ்பூன்
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சாம்பார் பொடி -2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறிதளவு
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.

கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் விடவும்.

புளி கரைத்த தண்ணீர் சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .

நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

 

1417702882iji%20poondu.jpg

http://samayalkurippu.com/Cookery_details.php?/இஞ்சி/குழம்பு/&id=34883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை சமைக்க, நல்ல ஆரோக்கியமான குழம்பு போலுள்ளது.
சாம்பார் பொடியை தவிர,  செய்முறைக்கு தேவையான எல்லாப் பொருட்களும், குசினியில் உள்ளது.
சாம்பார் பொடிக்கு பதிலாக, மிளகாய்த்தூள் போட்டு செய்து பார்க்கலாம் என்று, யோசிக்கின்றேன்.
சமையல் குறிப்புக்கு.... நன்றி உடையார். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.