Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்க அணிதிரண்டுள்ளனர் - டட்லி சிறிசேன

Featured Replies

IMG_2195.JPG

 

'மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப, கொடுர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இன,மத,மொழி வேறுபாடின்றி மக்கள் அணிதிரண்டுள்ளனர்' என எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் வியாழக்கிழமை(12) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005 ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவனாக, வீரனாக மக்களின் மனங்களில் நிறைந்திருந்தார்.  அதன் பின்னர் அவருடைய குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியதால் ஆணவமிக்கவராக மக்களையும் மதங்களையும் மதிக்காமல் மக்களை சூரையாடுகின்ற  ஒரு கொடூர குடும்ப  ஆட்சியை நடத்தி வருகின்றார். மக்களுக்கு தொடர்சியான சுமைகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இந்த கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனங்களில் திடமாக எழுந்துள்ளது. இதனாலேயே எந்தவொரு விளம்பரமுமின்றி மக்கள் மனங்களில் மைதிரிபால சிறிசேன இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதி மைதிரிபால சிறிசேன அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் சகல இன மக்களுக்குமான ஜனாதிபதியாக தெரிவாவார். 

இந்த வெற்றிக்காக எந்தவொரு எதிபார்புகளுமின்றி ஒன்று திரண்டுள்ள இந்த மக்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கின்றேன்.

இன்று அபிவிருத்தி என்ற மாயையைக்காட்டி பாலங்களையும் பாதைகளையும் அமைத்து அதன் மூலம் கோடிக்கணக்கான பணங்களை கொள்ளையிட்டு வருகின்றனர். 

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளினால் வழங்கப்பட்ட பணத்தை வைத்துகொண்டு அபிவிருத்தி என்ற மாயை மூலம் இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகின்றது.

இந்த மாயைக்கும் மஹிந்த குடும்பத்தின் கொடிய ஆட்சிக்கும் சரியான பாடத்தை மக்கள் புகட்டவுள்ளனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய மேல் மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, 

'இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களும் தமிழர்களும் பாரிய துன்பங்;களை  அனுபவித்து வருவகின்றனர். இந்நிலையை உணர்ந்து முஸ்லிம்களும் தமிழர்களும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க அணியணியாக முன்வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அனைத்து மக்களும் இணைந்துகொள்ள வேண்டும்' என அழைப்புவிடுத்துள்ளார்.
 


இக்கூட்டத்தில், மேல் மாகாண சபை உறுப்பினர் அஷhத் சாலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரதாச கலபதி, ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஹசன் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
IMG_2184.JPG

 

IMG_2194.JPG

 

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/135803-2014-12-12-06-16-22.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.