Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியிட்ட குடுக்காமல் சிங்கத்திட்ட குடுத்திட்டன்! – மகனைத் தொலைந்த தந்தை குமுறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
missing-witness-350-news5.JPG

காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு வவுனியாவில் நேற்று நடத்திய இரண்டாம் நாள் சாட்சியப்பதிவில் இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களே அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்வில் 47 பேர் சாட்சியமளித்தனர். மேலும் 46 பேர் புதிய விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். சாட்சியமளித்தவர்களுள் 90 வீதமானவர்கள் இராணுவத்தின் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

   

அவர்களுடன் விடுதலைப்புலிகள் மற்றும் சீ.ஐ.டி, வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்கள் மற்றும் கருணாகுழு ஆகியோர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டில் வைத்து இரவு வேளைகளில் இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் வேலைக்கு சென்ற வேளையில் வீடு திரும்பவில்லை என்றும் தங்களுடைய தேவைகளின் நிமிர்த்தம் வெளியில் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயரும் போது பிள்ளைகளைக் காணவில்லை என்றும் இராணுவக்கட்டுப்பாடு மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடி வரை வந்தவர்கள் வீட்டிற்கு இதுவரை வரவில்லை என்றும் சாட்சியங்கள் வழங்கப்பட்டன.

1983 ஆம் ஆண்டு கலவர காலம் முதல் 1990, 1995, 2006, 2005, 2007 , 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பிலேயே முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் கைது, கடத்தல் சம்பவங்கள் 2008 ஆம் ஆண்டு அதிகளவில் இடம்பெற்றுள்ளது என உறவுகளின் சாட்சிகள் மூலம் தெளிவாகின்றது. அதேவேளை, பணத்திற்கு ஆசைப்பட்டு இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்கப்பட்ட சம்பவங்கள் இரண்டும் பதிவாகியுள்ளது.

* சீ.ஐ.டி எனக்கூறி மகனை பிடித்துச்சென்றனர்

யாழ்.பல்கலைக்கழக மாணவனாக எனது மகனை சீ.ஐ.டி என்று தம்மை அடையாளப்படுத்தியவர்கள் வீட்டிலிருந்து பிடித்துச் சென்றனர். நான் எல்லா இடமும் தேடிவிட்டேன். மகனை பார்க்கவில்லை. இருப்பினும் 4ஆம் மாடியில் உள்ளதாக அறிகின்றேன். எனது மகன் விடுதலைப்புலிகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.

* இனக்கலவரத்தில் தப்பியது நான் மட்டும் தான்- சிவகுமார் சாட்சியம்

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் , சிங்கள கலவரத்தின் போது மதவாச்சிக்கு சென்ற எனது அப்பா இராமசாமி , அம்மா செல்லம்மா, அண்ணா யோகராசா , அக்கா பத்மாதேவி மற்றும் எங்கள் உறவினர் ஒருரான ஜெயவள்ளி ஆகியோர் பேருந்தில் இருந்து இறங்கியபோது இராணுவத்தால் பிடித்து சென்றுவிட்டார்கள். அதன்பின்னர் என்ன நடந்தது என்றும் தெரியாது என்றார்.

* கடைக்குச் சென்ற பிள்ளைகள் திரும்பி வரவில்லை

1990 ஆம் ஆண்டு பெரியதம்பனையில் உள்ள கடைக்கு சென்ற மகன்மாரான சதானந்தன், சந்திரன் ஆகிய இருவரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என தந்தையொருவர் சாட்சியமளித்தார்.

* வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைப் பிடித்துச் சென்றனர்

2008.04.29 அன்று கணவரும் மகனும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வெளியில் வந்து நின்று கூப்பிட்டார்கள். மகனும் கணவரும் வெளியில் சென்று பார்த்தபோது அங்கு நின்றவர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து கறுப்புதத்தணியால் கண்களைக் கட்டி கொண்டு சென்றனர். நாமும் பின்தொடர்ந்து செல்லும்போது 6பேர் சிவில் உடையுடன் சென்றவர்கள் எங்களை வரவேண்டாம் என்று கூறிவிட்டு துவக்கை எனது தலையில் வைத்து வெருட்டினார்கள். கடத்திச் சென்றது இராணுவம் தான். ஏனெனில் கடத்தப்பட்ட அன்று இரவு எங்கள் வீட்டைச்சுற்றி இராணுவம் நின்றுள்ளது. பொலிஸ் , இராணுவ முகாம் ஆகிய இடங்களில் சென்று கேட்டோம் இல்லை என்று கூறிவிட்டனர் என்றார்.

* கதவை உடைத்து வந்து மகனைப் பிடித்துச் சென்றனர்

நாங்கள் சின்னத்தம்பனையில் வசிக்கின்றோம். எனது மகன் செல்வகுமார் வேலைக்கு சென்று வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டுக்கதவை உடைத்து உள்ளுக்கு வந்த இராணுவம் பிடித்து சென்றுவிட்டது. நாங்கள் காலையில் செட்டிகுளம் பொலிஸ் மற்றும் இராணுவ முகாமிலும் தேடினோம். இல்லை என்று கூறி விட்டனர். பின்னர் சி.ஐ.டி அஸ்லம் என்பவர் எனக்கு தொலைபேசி எடுத்து மாங்குளம் இராணுவ முகாமில் மகனை வைத்திருக்கின்றார்கள் 20 இலட்சம் தந்தால் எடுத்து விடலாம் என்றார். ஆனாலும் எங்களுக்கு அவ்வளவு கொடுக்க வசதியில்லை என்றேன். ஆனால் இன்றுவரை வீடு திரும்பவில்லை எனது மகன் என்றார்.

* எனது கணவரை இராணுவம் சுட்டுக்கொன்றது

எனது கணவரான சுந்தரலிங்கத்தை 1995 ஆம் ஆண்டு பூவரசங்குளம் மில் பகுதியில் வைத்து இராணுவம் சுட்டுக் கொலை செய்தது. இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்போது இராணுவத்தினர் இருவர் சுட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர் என்றார்.

* தொலைபேசி மிரட்டலால் இந்தியாவிற்கு சென்றுவிட்டோம்

எனது மகன் ரவீந்திரன் முகத்தான்குளத்திலிருந்து வேலைக்குச் சென்றவேளை குதறிக்குளம் பகுதியில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டார். அவருடன் சென்ற மேலுமொருவரும் காணாமல் போயுள்ளார். இராணுவ கட்டுப்பாடு தான் குறித்த பகுதி. இவ்வாறு மகன் கடத்தப்பட்டதில் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்தபடியே இருந்தது. பயத்தினால் இளையமகனையும் கூட்டிக் கொண்டு இந்தியாவிற்குச் சென்றுவிட்டேன் கடந்த 2013 ஆம் ஆண்டே ஊருக்குவந்துள்ளேன் என்றார்.

* பொறாமையிலும் காட்டிக்கொடுப்பு

எனது மகன் கனகலிங்கம் வீட்டிலிருந்த வேளை அவரது மைத்துனரான அமரசிங்கம் வந்து மகனை அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் சென்று சீ.ஐ.டியினரிடம் ஒப்படைத்து விட்டார். பின்னர் மகன் வரவில்லை. துசார, சாந்த என்பவர்கள் என்னை இராணுவ முகாமிற்கு வர கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களிடமே எனது பிள்ளையினை பிடித்துக் கொடுத்திருக்கிறார். மேலும் அமரசிங்கம் என்பவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என்றார்.

* மகனை புலியிட்ட குடுக்காமல் சிங்கத்திட்ட குடுத்திட்டன்

எனது மகன் தில்லைராஜன் 2008.09.30 அன்று கடைக்கு சென்றவேளை காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்டவர். இன்னும் தகவல் இல்லை.ஊரில் உள்ள தனஞ்சயன் என்பவர் வெறும் 10 ஆயிரம் ரூபாக்கு மகனைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார். எனது மகன் விடுதலைப்புலிகளுடன் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு சாப்பாடு கொண்டுபோகும் போதும் பிடிக்கப்படவில்லை. புலியிட்ட குடுக்காமல் சிங்கத்திட்ட குடுத்திட்டன் எனது மகனை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

* பாண் கொண்டு போகும் போது கணவரை இராணுவம் பிடித்தது

நாங்கள் 'பேக்கரி' வைத்திருக்கின்றோம். 2008.11.07 அன்று கணவரான துரைசிங்கம் ஆட்டோவில் கடைகளுக்கு பாண் கொடுப்பதற்கு சென்றவேளை தட்டாங்குளம் இராணுவ முகாமில் வைத்து பிடித்துவிட்டனர் என்றார் பெண் ஒருவர். மகனையும் இராணுவம் தான் கடத்திச் சென்றது எனவும் அவர் சாட்சியமளித்தார்.

நேற்றைய சாட்சியத்தில் வவுனியா மாவட்டத்தில் குறித்த காலப்பகுதியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. மேலும் தங்களுடைய உறவுகள் காணாமல் போனதற்கு யார் காரணம் என்றும் எந்த படைமுகாம் சார்ந்த இராணுவம் என்றும் அவர்களுடைய பெயர்விபரங்களையும் அச்சமின்றி ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர். அத்துடன் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.அதனால் எமக்கு மரணச்சான்றிதழ் தேவையில்லை என்றும் ஆணைக்குழுவிடம் பலர் தெரிவித்திருந்தனர்.

 

missing-witness-vavuniya-161214-seithy%2

 

 

missing-witness-vavuniya-161214-seithy%2

 

http://seithy.com/breifNews.php?newsID=122771&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.