Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மக்கள் முன்னணிக்குள் குழப்பம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

316353019mmm.jpg

மலையக மக்கள் முன்னணிக்குள் குழப்பம்?

 

அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் இணைந்து கொண்ட மலையக மக்கள் முன்னணிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

எதிர்கட்சியில் இணையும் தீர்மானத்தை கட்சியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்து எடுத்த நிலையில் கட்சியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் நுவரெலிய பிரதேச சபை தலைவர் சதாசிவன் ஆகியோர் அதற்கு மாறாக செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. 

இந்த இருவரும் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இருக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளதால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

எதிரணியில் இணைந்த மலையக மக்கள் முன்னணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெ.சந்திரசேகரன் மறைந்த பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பு அவரது மனைவி சாந்தினிதேவி சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிராக புரட்சிகர அலையுடன் எழுச்சி பெற்ற மலையக மக்கள் முன்னணி அதன் தலைவர் பெ.சந்திரசேகரனின் மறைவின் பின்னர் மோசமான வீழ்ச்சியை கண்டது. 

இப்படி இருந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு அதன் அரசியல்துறை தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்திச் சென்ற நிலையில் தற்போது கட்சி ஓரளவு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முதலில் ஆதரவு அளித்த மலையக மக்கள் முன்னணி பின்னர் ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்தது. அதன்பின் அரசாங்க தரப்பை சந்தித்து மலையக மக்கள் முன்னணி பேசியபோது மலையக மக்களின் தனி வீடு, காணி பிரச்சினைக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்பின்னர் எதிரணியோடு பேசி ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் மலையக மக்கள் முன்னணி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. 

அதன்விளைவாக வீ.இராதாகிருஷ்ணன் தனது பிரதி அமைச்சர் பதவியையும் அரவிந்தகுமார் ஜனாதிபதி இணைப்பு பணிப்பாளர் என்ற பதவியையும் இராஜினாமா செய்தனர். 

ஆனால் சாந்தினிதேவி சந்திரசேகரன் இன்னும் தனது ஜனாதிபதி ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என தெரியவந்துள்ளது. அதற்கு காரணம் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு வழங்குவதால் என்று கூறப்படுகிறது. 

அத்தோடு மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா பிரதேச சபை தலைவர் சதாசிவனும் சாந்தினிதேவி சந்திரசேகரனின் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆனாலும் இவ்விருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூற கட்சியின் செயலாளர் நாயகம், அரசியல்துறை தலைவர் உள்ளிட்ட குழுவினர் கடும் முயற்சி எடுத்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி பிரசுரிக்கப்படும் இந்த நேரத்தில்கூட வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்கள் முன்னணிக்குள் குழப்பம்?

 

தமிழேண்டா...... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.