Jump to content

கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்


Recommended Posts

கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்

 

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

6fwend.jpg

தேவையான பொருட்கள்:

 

ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்

 

கேரமலுக்கு...

 

சர்க்கரை - 1 கப்

 

தண்ணீர் - 1 கப்

 

கேக்கிற்கு..

 

 மைதா - 2 1/2 கப்

 

இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்

 

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

 

பட்டை தூள் - 1 டீஸ்பூன்

 

கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்

 

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

 

ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

 

உப்பு - 1/4 டீஸ்பூன்

 

உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்

 

நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்

 

முட்டை - 5

 

வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்

 

கேரமல் - 1 கப்

 

ஊற வைத்த பழங்கள் - 3 கப்

 

ரம் - 2 டீஸ்பூன்

autesz.jpg

செய்முறை

 

கேரமல் செய்ய...

 

முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம்.

 

* சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

 

* சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்க வேண்டும்.

 

 கேக் செய்ய...

 

* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

 

* பின்னர் 2, 8x2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

 

* அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

 

 * பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

 

* அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து உற்றி நன்கு அடிக்க வேண்டும்.

 

* பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

 

 * பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு சேர்த்து கிளறி விட வேண்டும். * பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

 

 * இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும் போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.

 

* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.

 

* பின் கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

 

http://tamil.boldsky.com/recipes/sweets/christmas-fruit-cake-plum-cake-004694.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சுத்தமான,நொன் அட்ககோலிக்:D

Link to comment
Share on other sites

நாங்கள் சுத்தமான,நொன் அட்ககோலிக் :D

 

ஒரு நாளைக்கு பரவாயில்லை :lol:  கண்ணை மூடிகொண்டு சாப்பிடுங்கோ :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில பியர் குடிச்சுப் பார்க்கோனும் என்று நினைக்கிறது ஆனால் இது வரை குடிக்கேல்ல:)

Link to comment
Share on other sites

சில நேரங்களில பியர் குடிச்சுப் பார்க்கோனும் என்று நினைக்கிறது ஆனால் இது வரை குடிக்கேல்ல :)

 

நெடுக நினைத்து போட்டு விடாமல், இந்த கிறிஸ்துமஸ்க்கு ஒரு பியரை குடிச்சு பாருங்கோ :lol::D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.