Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு - ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னம்

Featured Replies

mahindha-rajapakshe.jpg
 
மக்­களின் எண்­ணங்­களை பிர­தி­ப­லிக்­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை ஒரு வருட காலத்­துக்குள் நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். இதற்­காக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டைய மக்கள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட முழுப்­பா­ரா­ளு­மன்­றத்தையும் சட்­ட­வாக்க பேர­வை­யாக மாற்­றுவேன் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற முறையில் உள்ள பல­வீ­னத்தைக் கருத்­திற்­கொண்டு சட்­ட­வாக்கப் பேர­வையின் தீர்­மா­னத்­துக்கு அமைய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை திருத்தம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன்.
 
 
பிர­தே­ச­ பிரதி நி­தித்­துவ மற்றும் தொகுதி முறையை கொண்ட கலப்புத் தேர்தல் முறை­மைக்கு செல் வேன் என்றும் ஜனா­தி­ப­தியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
 
பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக சந்­தே­கத்­தின்­பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தற்­போது வழக்கு தொட­ரப்­ப­டா­துள்ள அனைத்து வடக்கு இளைஞர் யுவ­திகள் தொடர்பில் ஆராய்ந்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மையில் அனைத்து அதி­கா­ரங்­க­ளுடன் குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
மலை­ய­கத்தில் தோட்­டப்­ப­கு­தியில் உள்ள அனைத்து குடும்­பங்­க­ளுக்கும் 7 பேர்ச்சர்ஸ் காணியும் வீடும் அமைத்­துக்­கொ­டுக்­கப்­படும் என்றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.மஹிந்த சிந்­தனை உலகை வெல்லும் வழி எனும் தொனிப்­பொ­ருளில் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
 
அந்த வகையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் வரு­மாறு,
 
01. தேசிய பாது­காப்பு
 
தேசிய பாது­காப்பு தொடர்பில் இது­வரை தொடர்ச்­சி­யாக எமது அர­சாங்கம் முன்­னெ­டுத்து வந்த உயர்­மட்ட அவ­தானம் தொடர்ந்தும் செலுத்­தப்­படும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கிறோம்.
 
இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு நப­ரையும் இனம்,மதம்,மொழி ரீதி­யாக பிரித்­துப்­பார்க்க மாட்டேன்.
ஒற்­றை­யாட்சி முறையை தொடர்ந்து பாது­காப்பேன். மீண்டும் பிரி­வி­னை­வா­தத்­துக்கும் ஸ்திர­மற்ற நிலைமை ஏற்­ப­டு­வ­தற்கும் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன்.
 
யாரையும் சர்­வ­தேச நீதி­மன்றம் போக­வி­ட­மாட்டேன்
 
மனி­தா­பி­மான நட­வ­டிக்கை மேற்­கொண்ட இரா­ணுவ வீரர் உள்­ளிட்ட எந்­த­வொரு பிர­ஜை­யையும் சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்ல விட­மாட்டேன். உயிரை தியாகம் செய்து அவர்­களை பாது­காப்பேன்.
 
உள்­ளக நட­வ­டிக்கை
 
மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யின்­போது இலங்­கையில் வாழும் எந்த பிர­ஜை­யி­னா­வது மனித உரிமை மீறப்­பட்­டி­ருந்தால் நாட்டில் நடை­மு­றை­யி­லுள்ள சட்ட கட்­ட­மைப்­புக்கு உட்­பட்டு உள்­ளக செயற்­பாடு ஒன்­றி­னூ­டாக வெளிப்­படைத் தன்­மை­யுடன் கட்­ட­மைப்பு ஒன்றின் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
அணி­சேரா உறவு
 
ஏனைய நாடு­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மான வகையில் அர­சியல் முன்­னு­தா­ர­ணத்தைக் கொண்ட நாடு ஒன்றை உரு­வாக்­குவேன். அணி­சேரா வெளி­வி­வ­கார கொள்­கையை தொடர்ந்து முன்­னெ­டுப்பேன்.
 
எம்மை தண்­டிப்­ப­தற்கு பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் சர்­வ­தேச நாடு­க­ளு­டனும் கூட நான் நட்­பு­ற­வான கொள்­கையை பின்­பற்­றுவேன். இந்­தியா பாகிஸ்தான் உள்­ளிட்ட சார்க் நாடு­க­ளு­ட­னான உறவு மேலும் பலப்­ப­டுத்­தப்­படும். இந்­தியா சீனா ரஷ்யா ஜப்பான் ஆகிய நாடு­க­ளு­ட­னான அர­சியல் பொரு­ளா­தாரம் தொழில்­நுட்ப உற­வுகள் பல­ம­டையும்
 
சமா­தான தூதுவ நாடாக...
 
மத்­திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெ­ரிக்க நாடு­க­ளுடன் உறவு வலுப்­ப­ப­டுத்­தப்­படும். பிராந்­திய மற்றும் உலக மோதல்­களில் சமா­தானத் தூது­வரின் பணியை எனது நாடு மேற்­கொள்ளும்
உணவு பாது­காப்பை மேற்­கொள்­வ­தற்­காக உணவு பாது­காப்பு சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ருவேன்.
 
02. அர­சி­ய­ல­மை­பபு மாற்றம்
 
மக்­களின் எண்­ணங்­களை பிர­தி­ப­லிக்­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை ஒரு வருட காலத்­துக்குள் நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். இதற்­காக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டைய மக்கள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட முழுப்­பா­ரா­ளு­மன்­றத்­தையும் சட்­ட­வாக்க பேர­வை­யாக மாற்­றுவேன்.
 
ஆலோ­சனை சபை
 
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு யோச­னை­களை பெறு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தாத அர­சியல் கட்­சிகள், இளைஞர் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள், அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணர்கள் தொழில்சார் நிபு­ணர்கள், ஆகி­யோரைக் கொண்ட ஆலோ­சனை சபை ஒன்­றையும் உரு­வாக்­குவேன்.
 
சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு
 
இவ்­வாறு உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு வரைபை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்பேன். அதன்­பின்னர் மக்­களின் அபிப்­ரா­யத்தைப் பெற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­துவேன்.
 
நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை
 
தற்­போ­தைய நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை, தேர்தல் முறை, சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல் மற்றும் நல்­லாட்சி போன்ற அனைத்து விட­யங்­களும் புதிய அர­சியல் அமைப்பில் உள்­ள­டங்கும்.
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை பாரா­ளு­மன்ற முறையில் உள்ள பல­வீ­னத்தைக் கருத்­திற்­கொண்டு சட்­ட­வாக்கப் பேர­வையின் தீர்­மா­னத்­துக்கு அமைய திருத்தம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன்.
 
தேர்தல் முறை மாற்றம்
 
பிர­தே­ச­நி­தித்­துவ மற்றும் தொகுதி முறையை கொண்ட கலப்புத் தேர்தல் முறை­மைக்கு செல்வேன்.மதத் தலை­வர்கள் தொழில் நிபு­ணர்கள், இளைஞர் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள், தொழிற்­சங்க பிர­தி­நி­திகள், சமூகத் தலை­வர்­களை உள்­ளிட்ட பிர­ஜைகள் சபை­யொன்றை உரு­வாக்­குவேன்.
 
பெண்­களின் பங்­க­ளிப்பு
 
மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தில் பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்பு அர­சி­ய­ல­மைப்பு ரீதியில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பு மற்றும் இர­க­சிய தன்­மையை பாது­காப்­பது அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான பொறுப்­பாக மாற்­றுவேன்.
 
இளைஞர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற ஆலோ­சனைக் குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
எமது தாய்­நாட்­டுக்கு பொருத்­த­மான உண்­மை­யான நல்­லாட்சி முறை­யொன்றை உரு­வாக்­குவேன் என உங்­க­ளிடம் உறு­தி­ய­ளிக்­கிறேன்.
 
ஊட­கத்­துறை சதந்­திரம்
 
ஊட­கத்­து­றையில் சுதந்­திரம் மற்றும் சுயா­தீ­னத்­தன்­மையை நீடிப்­ப­தற்கு தொடர்ந்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கத்­து­றைக்கு தொழில்­நுட்பப் பயிற்சி வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
ஊட­க­வி­ய­லா­ளரை தொழில்சார் நிபு­ண­ராக மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஊட­க­வியல் பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை உரு­வாக்­குவேன். ஊட­வி­ய­லா­ளர்­க­ளுக்­காக கொழும்பை அண்­மித்த பகு­தியில் வீட­மைப்புத் திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்பேன். புதிய ஊடக கலா­சாரம் ஒன்றை உரு­வாக்­குவேன்.
 
03.பண்­பான சமூகம்
 
மதங்­களை போஷிக்க நட­வ­டிக்கை பௌத்த சாச­னத்தை பிர­தா­ன­மாகக் கொண்டு ஏனைய அனைத்து சம­யங்­க­ளையும் போஷிப்­ப­தற்கு முழு­மை­யான அர­சாங்க அனு­ச­ர­ணையை பெற்­றுக்­கொ­டுப்பேன். அனைத்து மதங்­க­ளி­னதும் முன்­னேற்­றத்தை உறு­திப்­ப­டுத்த தேவை­யான சட்ட கட்­ட­மைப்பை மதத் தலை­வர்­களின் ஆலோ­ச­னைப்­படி உரு­வாக்­குவேன்.
 
சிறுவர் மற்றும் மகளிர் பாது­காப்பு
 
சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் சித்­தி­ர­வ­தை­க­ளையும் தடுப்­ப­தற்­காக கடு­மை­யான சட்­ட­திட்­டங்­களை குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையில் இணைப்பேன். பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தடுப்­ப­தற்­காக புதிய சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வ­ருவேன். இதற்­காக புதிய நட­மாடும் பொலிஸ் அணியை உரு­வாக்­குவேன்.அனைத்து கிரா­மங்­க­ளிலும் சிறுவர் மற்றும் மகளிர் பாது­காப்புக் குழு உரு­வாக்­கப்­படும்.
 
வீடு­களில் பாட­சா­லை­களில் பிள்­ளைகள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­வ­தையும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளா­வ­தையும் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.அனைத்து அரச நிறு­வ­னங்­க­ளிலும் பிர­தேச செய­ல­கங்­க­ளிலும் மன­நல ஆலோ­ச­கர்­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
பிள்­ளை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மருந்­து­களை விற்­பனை செய்யும் மருந்து விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கக்­கூ­டிய சட்­ட­திட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­படும்.
 
பாதாள உலகம், போதைப்­பொருள்
 
போதைப்­பொருள் வியா­பாரம் மற்றும் அவற்­றுடன் தொடர்­பு­டைய குற்­றங்­களை தடுப்­ப­தற்­காக இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் விசேட பாது­காப்பு செய­லணி ஒன்றை உரு­வாக்­குவேன்.குற்­றங்­களை விசா­ரித்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வ­தற்­காக விசேட குற்­ற­வியல் நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்­குவேன்.
எமது நாட்டு மண்­ணிலும் கடல் பகு­தி­யிலும் போதைப்­பொருள் வியா­ப­ரத்­துக்கு எந்த வகை­யிலும் இட­ம­ளிக்க மாட்டேன்.
 
04. அரச சேவை
 
அரச ஊழி­யர்­க­ளுக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் சம்­பள உயர்வு செயற்­பாடு தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும்.
ஓய்­வு­தியம், ஊழியர் சேம­லாப நிதியம் என்­பன மேலும் பலப்­ப­டுத்­தப்­படும். அரச ஊழி­யர்கள் தமது சேவையை சுயா­தீ­ன­மாக முன்­னெ­டுப்­ப­தற்­காக புதிய ஒழுக்­க­வியல் கோவை­யொன்றை அரச சேவைக்­காக அறி­மு­கப்­ப­டுத்­துவேன்.பட்­ட­தா­ரிகள் மற்றும் அபி­வி­ருத்தி அதி­கா­ரி­க­ளுக்­காக சேவை யாப்பு ஒன்றை உரு­வாக்­குவேன். முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்கள் மற்றும் பட்­ட­தாரி அல்­லா­தோ­ருக்­காக இலங்கை அபி­வி­ருத்தி நிர்­வாக நிறு­வ­னத்­துடன் இணைந்து பட்­டப்­ப­டிப்பைப் பெற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.அரச ஊழி­யர்­க­ளுக்­காக வீட்டுத் திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்பேன். சட்­ட­வி­ய­லா­ளர்கள் மற்றும் நொத்­தா­ரிஸ்­மார்­க­ளுக்­கான உறுதி எழுதும் உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஆவணம் பதிவு செய்யும் சட்­ட­மூ­லத்தை திருத்­தி­ய­மைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
இரா­ணு­வத்­தினர் விலக்­கப்­ப­ட­மாட்­டார்கள்
 
பொலிஸ் துறைக்கு குற்­றங்­களை விசா­ரிப்­பது தொடர்­பாக விஞ்­ஞான ரீதி­யான நவீன உப­க­ர­ணங்கள், தொழில்­நுட்ப வச­திகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.
எதிர்­கா­லத்தில் எந்­த­வொரு இரா­ணுவ வீரர்­களோ மேல­திக இரா­ணுவப் படை­களோ தொண்டர் சிப்­பாய்­களோ சிவில் பாது­காப்பு வீரர்­களோ நிரந்­தர சேவை­யி­லி­ருந்து விலக்­கப்­பட மாட்­டார்கள்.எந்­த­வொரு இரா­ணுவ அதி­காரி மற்றும் வீரர் தமது பத­வி­ய­லி­ருந்து நீக்­கப்­பட மாட்­டார்கள்.அங்­க­வீ­ன­முற்­றுள்ள இரா­ணுவ வீரர்கள் தற்­போது கிடைக்­கின்ற அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் வாழ்நாள் முழு­வதும் பெறு­வார்கள்.
 
தனி­ப­பட்ட பிரச்­சினை
 
ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பைப் பெற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
பொலிஸார் தமது கட­மையை சுயா­தீ­ன­மாக மேற்­கொள்ள அவர்­க­ளுக்குத் தேவை­யான தங்­கு­மிட வச­திகள், வாகன வச­திகள் குறை­வின்றி வழங்­கப்­படும்.
அரச இரா­ணுவம் பொலிஸ் மற்றும் சிவில் பாது­காப்பு படை உள்­ளிட்ட அனைத்து அரச ஊழி­யர்­க­ளுக்கும் அவர்­களின் தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் கவ­னிக்­கப்­பட்டு அவற்றை தீர்ப்­ப­தற்கு ஆலோ­சனை சபை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.
 
தனியார் ஊழி­யர்கள்
 
தனி­யார்­துறை ஊழி­யர்­களின் ஊழியர் சேம­லாப நிதியம் பாது­காக்­கப்­படும். தனியார் துறைக்­காக மிகப் பல­மான மருத்­துவ காப்­பு­றுதி முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். நீண்­ட­காலம் வெளி­நா­டு­களில் பணி­பு­ரிந்­து­விட்டு இலங்கை வரு­வோ­ருக்கு வரிச்­ச­லு­கை­யுடன் கூடிய வாகனம் கொள்­வ­னவு செய்ய நட­வ­டிக்­கை­வெ­ளி­நாட்டில் வேலை செய்­யும்­போது அங்­க­வீ­னர்­க­ளாகி இலங்கை வரு­வோ­ருக்கு மாதாந்த நிவா­ரண கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­வோ­ருக்கு வீடு­களை கட்­டிக்­கொ­டுக்கும் பணி பலப்­ப­டுத்­தப்­படும்.
 
வெளி­நா­டு­களில் தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்கள் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்­கான உரிமை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். ஆறு வரு­டங்­க­ளுக்கு மேலாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்­க­ளுக்கு ஓய்­வு­திய சம்­பளத் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.
 
05.வள­மான நாடு
 
2020 ஆம் ஆண்டு 7 வீத பொரு­ளா­தார வளர்ச்­சியைப் பேணுவேன். தனி­நபர் வரு­மா­னத்தை 7 ஆயி­ரத்து 500 டொலர்­க­ளாக உயர்த்­துவேன். 20 மில்­லியன் மக்­க­ளையும் செல்­வந்­தர்­க­ளாக உரு­வாக்­குவேன். வவு­னி­யா­வி­லி­ருந்து மழை நீரினால் போசிக்­கப்­படும் ஆணை­யி­றவு குளத்­துக்கு 90 கிலோ மீற்றர் தூரத்­துக்குச் சென்று கன­க­ராயன் ஆறு­ஓ­யவை விரி­வு­ப­டுத்தி யாழ்ப்­பாண ஆற்றை நிர்­மா­னிப்பேன். இதன்­மூலம் வடக்கு மக்­களின் நீர்ப் பிரச்­சி­னையை தீர்த்­து­வைப்பேன்.
 
30 ஆயிரம் குளங்கள் புன­ர­மைப்பு
 
2014 ஆம் ஆண்டில் தெதுறு ஓய திட்­டத்தை மேலும் விரி­வு­ப­டுத்தி வடமேல் மாகாண நீர்த் தேவையை முழு­மைப்­ப­டுத்­துவேன்.திவி­நெ­கும திட்­டத்தின் கீழ் 30 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான குளங்­களை மறு­சீ­ர­மைக்க நட­வ­டிக்கை எடுப்பேன்.
 
350 ரூபா­வுக்கு உரம்
 
விவ­சா­யியின் விதை உரிமை மற்றும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் புதிய சட்­டடக் கட்­ட­மைப்பின் கீழ் தேசிய வேலைத்­திட்டம் முன்­வைக்­கப்­படும்.விவ­சாய இர­சா­யன பாவ­னையை குறைத்து இயற்கை விவ­சாய முறைக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும். 50 கிலோ கிராம் உரம் தொடர்ந்தும் 350 ரூபா­வுக்கு வழங்­கப்­படும்.
 
தேயிலை
 
பாரிய அள­வி­லான தேயிலை உற்­பத்­தியை அதி­க­ரிக்க அர­சாங்கம் தலை­யிடும். தேயிலை உற்­பத்தி செலவைக் குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சிறு தேயிலைத் தோட்ட உரி­மை­யாளர் அமைப்பை பலப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
இரப்பர்
 
இரப்பர் விலை வீழ்ச்­சிக்குத் தீர்­வாக செஸ் வரித் திருத்தம் செய்­யப்­படும். உத்­த­ர­வாத விலை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும்.
மொன­ரா­கலை, அம்­பாறை, வவு­னியா, முல்­லைத்­தீவு, அம்­பாந்­தோட்டை ஆகிய பகு­தி­களில் இரப்பர் உற்­பத்தி செய்­யப்­படும்.
 
கடற்­ப­ரப்பு
 
எமக்கு சொந்­த­மான கடற்­ப­ரப்­பா­னது இலங்­கையை போன்று 23 மடங்கு பெரி­தாகும். அந்த கடற்­ப­ரப்பில் காணப்­ப­டு­கின்ற கனி­ய­வளம், கேஸ், போன்­ற­வற்றை பெறு­வ­தன்­மூலம் எமது பொரு­ளா­தாரம் பல­ம­டையும்.
மன்னார் கடற்­ப­ரப்பில் தற்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள கேஸ் வளத்தை வர்த்­தக ரீதியில் முன்­கொண்டு செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
துறை­முக நகரம்
 
கொழும்பு மற்றும் அம்­பாந்­தோட்­டையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட இரண்டு துறை­முக நக­ரங்கள் அமைக்­கப்­படும். தற்­போது அமைக்­கப்­பட்­டு­வரும் ஒலுவில் துறை­முகம் மற்றும் நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­படும் காங்­கேசன் துறை மற்றும் திரு­கோ­ண­மலை துறை­மு­கங்­களை பயன்­ப­டுத்தி வட, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் மக்­களின் உற்­பத்­தி­களை கொழும்­புக்கு கொண்டு வரு­வ­தற்­காக கடல் போக்­கு­வ­ரத்து சேவை ஆரம்­பிக்­கப்­படும். இதன்­மூலம் 3 இலட்சம் பேருக்கு தொழில்­வாய்ப்பு கிட்டும். ஆறு வரு­டங்­களில் இதனை முடிப்பேன். இத­னூ­டாக இலங்­கைக்கு அடுத்த 6 வரு­டங்­களில் 10 பில்­லியன் டொலர் வெளி­நாட்டு முத­லீ­டுகள் கிடைக்கும்.
 
மீனவர் பிரச்­ச­னைக்கு தீர்வு
 
மீன­வர்கள் கட­லுக்கு சென்­றதும் அவர்கள் திரும்பி வரும்­வரை மனை­விமார் கவ­லை­யுடன் இருப்பர். எனவே தொடர்­பாடல் மற்றும் களஞ்­சிய வசதி கொண்ட குறு­கிய பட­கு­களை நிர்­மா­னிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இளை­ஞர்கள் நவீன தொழில்­மு­றைக்கு ஏற்ப கடற்­றொ­ழிலில் ஈடு­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
06. கைத்­தொழில்
 
சுற்­று­லாத்­து­றையை முன்­னேற்றும் நோக்கில் 80 ஆயிரம் ஹோட்டல் அறை­களை நிர்­மா­ணிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இதன்­மூலம் 1 இலட்சம் தொழில்­வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­படும்.
 
கற்­பிட்டி,குச்­ச­வெளி யால மற்றும் பாசிக்­குடா ஆகிய பிர­தேச கடல்­ப­ரப்­பு­களில் கடல் விளை­யாட்­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­ற­வ­கையில் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.
இலங்கை வரும் சுற்­றுலாப் பய­ணி­களை சிறப்­பாக கவ­னிப்­பதன் மூலம் இலங்­கையின் புகழை உலகில் ஔிரச் செய்வோம். சுற்­று­லாத்­து­றை­யுடன் தொடர்­பு­பட்ட சிறி­ய­ள­வி­லான வியா­பா­ர­க­ளுக்கு 500000 ரூபா கடன் வழங்­கப்­படும்.
 
நிர்­மா­ணத்­துறை
 
தேசிய நிர்­மா­ணத்­து­றையை முன்­னேற்றும் நோக்கில் புதிய நிர்­மாண அபி­வி­ருத்தி சட்­ட­மூ­லத்தின் கீழ் தேசிய வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும்.
உலக நாடு­களின் மத்­தியில் சவால்­களை எதிர்­கொண்டு முன்­னேறிச் செல்­வ­தற்­காக தேசிய நிர்­மாண கைத்­தொழில் கொள்­கை­யொன்று உரு­வாக்­கப்­படும்.
இந்தத் துறையில் சேவையில் ஈடு­படும் 6 இலட்சம் பேருக்கு சிறந்த பயிற்­சிகள் வழங்­கப்­படும்.நிர்­மா­ண­வி­ய­லா­ளர்­க­ளுக்­கு­வெ­ளி­நா­டு­களில் தொழில்­பெற சந்­தர்ப்பம் வழங்­கப்­படும்.தேசிய நிர்­மாண தகவல் வலை­ய­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­படும்.
 
ஆடை
 
தர­மான ஆடையை உற்­பத்தி செய்து சர்­வ­தேச சந்­தையை தேடிக்­செல்லும் ஆடைக் கைத்­தொ­ழிற்­சாலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தேசிய ஆடை உற்­பத்தி கைத்­தொ­ழிலை நவீன தொழில்­நுட்­பத்தின் ஊடாக முன்­னேற்­று­வ­தற்கு இளம் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு மூல­த­னமும் அறிவும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.
 
பாற்­பண்ணை
 
2020 ஆம் ஆண்டில் இலங்­கையை பால் உற்­பத்­தியில் தன்­னி­றைவு நாடாக மாற்­றி­ய­மைக்­கப்­படும். 9 மாகா­ணங்­க­ளிலும் பால் கைத்­தொ­ழிற்­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­படும்.
 
மாணிக்கம்
 
நீல மாணிக்க கற்­க­ளுக்கு உலக சந்­தையில் சிறந்த புகழ் காணப்­ப­டு­வதால் இலங்­கையை உலகின் முத­லா­வது நீல மாணிக்க வர்த்­தக மத்­திய நிலை­ய­மாக மாற்­றி­ய­மைக்­கப்­படும். மாணிக்க கைத்­தொ­ழி­லுடன் சம்­பந்­தப்­பட்ட சிறிய வர்த்­தக முயற்­சி­யா­ளர்­களின் வரு­மா­னத்தை உயர்த்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும்.
 
07. அபி­வி­ருத்­தியின் பயன் கிரா­மத்­துக்கு
 
அனைத்து குடும்­பங்­க­ளுக்கும் நிரந்­தர கூரையை கொண்ட வீடு அமைக்­கப்­படும். திவி­நெ­கும திட்­டத்தின் கீழுள்ள 25 ஆயிரம் கிரா­மங்­களில் பொது­வ­ச­தி­களை செய்து மக்­களை முன்­னேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அனைத்து வீடு­க­ளுக்கும் மின்­சாரம், சுத்­த­மான குடிநீர், சுகா­தார வச­திகள் வழங்­கப்­படும்.
 
18 வயதின் பின்னர் அனை­ருக்கும் தேவை­யான அர­சாங்க ஆவ­ணங்கள் வீடு­க­ளுக்கே வரும் வகையில் முறை­மை­யொன்று உரு­வாக்­கப்­படும். அனைத்து கிரா­மங்­க­ளிலும் பிள்­ளைகள் விளை­யா­டு­வ­தற்கு முழு­மை­யான சிறுவர் பூங்­காக்கள் நிர்­மா­ணிக்­கப்­படும்.
 
எந்­த­வொரு வீட்­டிலும் அரிசி வேகாமல் இருக்க அனு­ம­திக்க மாட்டோம்.குடும்­பத்தில் ஒரு­வ­ரா­வது தொழி­லுக்கு செல்­வதை உறு­திப்­ப­டுத்­துவோம். இதற்­காக சட்ட கட்­ட­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும்.
 
இணையம் ஊடாக வரு­மானம்
 
பெண் வர்த்­தக முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும். இளைஞர் யுவ­திகள் வீட்­டி­லி­ருந்­த­வாறு பணம் உழைப்­ப­தற்­காக இணைய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா இல­கு­வாக உழைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
சுய­தொழில்
 
நாடு முழு­வதும் உள்ள சுய­தொ­ழி­லா­ளர்­களின் பாது­காப்­புக்­காக சுய­தொழில் பணி­யகம் உரு­வாக்­கப்­படும்.நென­சல ஊடாக இல­வ­ச­மாக கணனிக் கல்வி பயிற்­சிகள் வழங்­கப்­படும்.
முச்­சக்­கர வண்­டிகள், பட்ஜெட் டெக்ஸி, பாட­சாலை வேன், சுற்­றுலா வேன்கள் உள்­ளிட்ட அனைத்­தையும் தனியார் போக்­கு­வ­ரத்து அமைச்சின் கண்­கா­ணிப்பின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும்.
 
கடன் வசதி
 
முச்­சக்­கர வண்டி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு பிணை­யின்றி 6 வீத வட்­டியில் 50 ஆயிரம் ரூபா கடன் பெற வசதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். அது­மட்­டு­மன்றி 20 வரு­டங்­களில் செலுத்தக் கூடிய வகையில் 50 இலட்சம் ரூபா வரையில் பெறு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும்.
 
8. தேசிய பெரு­மைக்­கு­ரிய கல்வி
 
பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வினால் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள புதிய கல்விக் கொள்­கையை இந்­த­வ­ருடம் நடை­மு­றைப்­ப­டுத்தல் அனைத்துப் பிள்­ளை­க­ளுக்கும் ஆரம்ப பாட­சாலை உரிமை கட்­டா­ய­மாக்­கப்­படும். அனைத்துப் பாட­சா­லை­க­ளிலும் ஆரம்ப பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­படும்.கல்வி அமைச்சின் கீழ் ஆரம்ப பாட­சாலை பயிற்சி நிறு­வ­னங்கள் ஆரம்­பிக்­கப்­படும். 2020 ஆம் ஆண்­டாகும் போது 25 மாவட்­டங்­க­ளிலும் ஒரு மாவட்­டத்­துக்கு 1 தேசிய பாட­சாலை என்ற ரீதியில் 25 தேசிய பாட­சா­லைகள் அமைக்­கப்­படும்.2015 ஆம் ஆண்டில் நுவ­ரெ­லி­யாவில் முத­லா­வது பாட­சாலை அமைக்­கப்­படும்.
 
விசேட தேவை­யு­டையோர்
 
25 மாவட்­டங்­க­ளிலும் பல்­க­லைக்­க­ழக கல்விப் பீடங்கள் உரு­வாக்­கப்­படும். அனைத்து பாட­சா­லை­க­ளிலும் தகவல் தொடர்­பாடல், தொழில்­நுட்ப பாடங்­களை கற்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
விசேட தேவை­யு­டைய மாண­வர்­களின் கல்வித் தேவையை நிறை­வேற்ற அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட வள நிலையம் கொழும்பில் நிறு­வப்­படும்.
அடுத்த 6 வரு­டத்தில் 500 அர­சாங்க பாட­சா­லை­களில் விசேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்­கான வள நிலை­யங்கள் உரு­வாக்­கப்­படும்.
 
பகி­டி­வதை இல்லை
 
2020 ஆம் ஆண்டில் 1 இலட்சம் மாண­வர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழக அனு­மதி வழங்­கப்­படும்.பகி­டி­வதை இல்­லாத மாண­வர்கள் சுதந்­தி­ர­மாக கல்­விக கற்கும் சூழல் உரு­வாக்­கப்­படும். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகும் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் தங்­கு­மிடம் மற்றும் புல­மைப்­ப­ரிசில் நிதி­யு­தவி வழங்­கப்­படும்.
 
தெரிவு செய்­யப்­பட்ட 7 பல்­க­லைக்­க­ழ­கங்­களை ஆசி­யாவின் சிறந்த 20 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குள் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.பல்­க­லைக்­க­ழக சேவைக்­காக தனி­யான சேவை யாப்பு உரு­வாக்­கப்­படும். பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழகம் அமைந்­துள்ள பிர­தே­சங்­களில் வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­கப்­படும்.
ஆசி­ரியர் பிரச்­சினை தீர்க்­கப்­படும்
 
2015 ஆம் ஆண்டில் ஆசி­ரி­யர்­களின் பிரச்­சி­னை­க­ளான பதவி உயர்வு, சம்­பள முரண்­பாடு தீர்க்­கப்­படும்.அனைத்து ஆசி­ரி­யர்­க­ளுக்கும் இலகு விலையில் மடிக்­க­ணனி பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.
 
ஜப்பான், மலே­சியா, கொரியா போன்ற நாடு­களில் ஆசி­ரி­யர்கள் பயிற்சி பெறு­வ­தற்கு தேவை­யான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.
 
9. ஆரோக்­கியம்
 
ஆயுள் எதிர்­பார்ப்பை 80 வரு­டங்­க­ளாக உயர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்2020 இல் சிசு தாய் மரணம் இல்­லாத நாடு உரு­வாக்­கப்­படும். அனைத்து மாகா­ணங்­க­ளிலும் ஒவ்­வொரு சிறுவர் வைத்­தி­ய­சாலை உரு­வாக்­கப்­படும்.
 
டெங்கு நோய் கட்­டுப்­ப­டுத்­தப்­படும்
 
டெங்கு நோயை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க விசேட வேலைத்­தி­டடம் முன்­னெ­டுக்­கப்­படும் இதற்கு முன்னர் இருந்த சுகா­தார அமைச்சர் பாது­காக்க முடி­யாத தேசிய மருந்­து­கொள்­கையை மீண்டும் மீளாய்வு செய்து விரை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்­கப்­படும் கண்டி யாழ்ப்­பாணம் பதுளை அம்­பாறை கரா­பிட்டி ரத்­தி­ன­புரி குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லை­களில் புற்­றுநோய் பிரி­வு­க­ளுக்கு நவீன வசதி அளிக்­கப்­படும் அனைத்து கிரா­ம­சே­வை­யாளர் பிரி­வு­க­ளிலும் சமூக சுகா­தார மத்­திய நிலையம் உரு­வாக்­கப்­படும். தோட்­டப்­ப­கு­தி­களில் தமிழ் மொழி பேசு­கின்ற, மக்கள் சுகா­தார பரி­சோ­த­கர்கள் மற்றும் குடும்ப சுகா­தார பரி­சோ­த­கர்கள் 500 பேரை இணைத்­துக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தோட்ட மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு தேவை­யா­ன­அம்­பி­யுலன்ஸ் வண்­டிகள், நவீன மருத்­துவ உப­க­ர­ணங்கள், மருந்­துகள் போது­மா­ன­ளவு தொடர்ச்­சி­யாக வழங்­கப்­படும்.
 
10. விளை­யாட்டு
 
ஆறு விளை­யாட்டுத் துறை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி 46 பிரி­வு­களின் கீழ் குறு­கிய நடுத்­தர கால, நீண்­ட­கால அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.
 
தேசிய விளை­யாட்டுக் கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். விளை­யாட்டு மைதா­னங்கள் இல்­லாத அனைத்துப் பாட­சா­லை­க­ளிலும் தர­மான விளை­யாட்டு மைதா­னங்கள் வழங்­கப்­படும். சர்­வ­தேச தரத்தில் விளை­யாட்டுப் பயிற்சிப் பாட­சா­லை­யொன்று ஆரம்­பிக்­கப்­படும். தேசிய சாத­னை­களை புரிந்து சர்­வ­தேச தளத்­துக்கு வந்து நிற்­கின்ற அனைத்து விளை­யாட்டு வீர, வீராங்­க­ணை­க­ளுக்கும் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வழங்­கப்­படும். பிர­தேச செய­லக அலு­வ­ல­கங்­களில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விளை­யாட்டுத் துறை அதி­கா­ரி­க­ளுக்கு நிவா­ரண விலையில் மோட்டார் சைக்­கிள்கள் வழங்­கப்­படும். குறைந்த வச­திகள் கொண்ட அனைத்து விளை­யாட்டு மைதா­னங்­களும் நவீன மயப்­ப­டுத்­தப்­படும்.அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் உள்­ளக விளை­யாட்டு அரங்கு, நீச்­சல்­த­டாகம் உள்­ளிட்ட மைதா­னங்கள் அமைக்­கப்­படும். விளை­யாட்டுத் துறைக்­காக ஒழுக்­க­வியல் கோவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.
 
11. வள­மான நாளை
 
பெண் வர்த்­தக முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு பிர­தேச வங்­கிகள் ஊடாக வரு­ட­மொன்­றுக்கு 50 ஆயிரம் ரூபா கடன் வழங்­கப்­படும். பயிற்­சி­யற்ற பெண்­களை வௌிநா­டு­க­ளுக்கு அனுப்­பு­வதை நிறுத்தி ஆண்­களை அதி­க­ளவில் வௌிநா­டு­க­ளுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 
12. இளை­ஞர்­க­ளுக்­கான நாளை
 
3 இலட்­சத்து 40 ஆயிரம் பிள்­ளைகள் வரு­டந்­தோறும் பாட­சா­லைக்கு சேர்­கின்­றனர். இவர்­களில் 25 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு செல்­கின்­றனர். ஏனை­யோரின் எதிர்­கா­லத்தை நான் பொறுப்­பேற்­கின்றேன். அரச சார்­பற்ற துறை­யி­ன­ருடன் இணைந்து வரு­ட­மொன்­றுக்கு 25 ஆயிரம் பேருக்கு தொழில்­கல்வி வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.கல்­வியை தொடர்­வ­தற்கு பொரு­ளா­தார பிரச்­சி­னையால் தவிக்கும் மாண­வர்­க­ளுக்­காக இளைஞர் அபி­வி­ருத்தி நிதியம் உரு­வாக்­கப்­பட்டு உதவி வழங்­கப்­படும்.2020 ஆண்டில் கணனி எழுத்­த­றிவு வீதத்தை 90 ஆக உயர்த்­துவோம்.
 
ஹொட்ஸ்பொட்
 
எதிர்­வரும் 5 வரு­டங்­களில் முழு நாட்­டையும் தென்­கொ­ரி­யாவைப் போன்று இணை­யத்­துக்குப் பிர­வே­சிக்க "ஹொட்ஸ்பொட்" ஆக மாற்­றுவோம்.
எதிர்­வரும் 5 வரு­டங்­களில் இளைஞர் யுவ­தி­க­ளுக்­காக 5 இலட்சம் தொழில்­வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­படும்.
 
பிர­தேச செய­லாளர் அலு­வ­ல­கங்­களில் தொழில்­வங்கி உரு­வாக்­கப்­படும். 18 வய­தி­லி­ருந்து 35 வய­துக்கு உட்­பட்ட இளைஞர் யுவ­தி­க­ளுக்­காக இளைஞர் வங்கி முறைமை உரு­வாக்­கப்­படும். இவற்றின் கீழ் வர்த்­தக முயற்­சி­யா­ளர்­க­ளுக்கும் தொழில்­ப­யிற்­சிக்கும் 10 இலட்சம் ரூபா வரையில் கடன் வழங்­கப்­படும்.
 
கலை­ஞர்கள்
 
இசை கலை­ஞர்கள் இளம் சினிமா கலை­ஞர்கள் மேடை நாடக கலை­ஞர்கள் தமது படைப்­பு­களை வௌிக்­கொண்­டு­வர 10 இலட்சம் ரூபா வரை கடன் வழங்­கப்­படும். இளம் சினிமா கலை­ஞர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்க புதிய சினிமா கலை­ய­ரங்கு உரு­வாக்­கப்­படும். முல்­லைத்­தீவில் தகவல் தொழில்­நுட்ப நகரம் அமைக்­கப்­படும். இதன்­மூலம் வடக்கு இளைஞர் யுவ­தி­களின் தகவல் தொழில்­நுட்ப அறிவு வளர்க்­கப்­படும்.
 
13. போக்­கு­வ­ரத்து
 
2018 ஆம் ஆண்டில் கொழும்­பி­லி­ருந்து கதிர்­கா­மத்­துக்­கான மின்­சார சொகுசு ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­படும். யாழ்ப்­பாணம் நல்லூர் ஆலயம் திரு­கோ­ண­மலை கோணேஸ்­வரர் ஆலயம் சிலாபம் முன்­னேஸ்­வரர் ஆலயம் மற்றும் தெவுந்­தர உப்­புல்வன் ஆலயம் ஆகி­ய­வற்­றுக்கு செல்லும் வகையில் கதிர்­காம ரயில் பாதை திரு­கோ­ண­மலை வரை நீடிக்­கப்­படும். குரு­நா­கலில் இருந்து சிலாபம் வரை ரயில் பாதை அமைக்­கப்­படும். மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து பொத்­துவில் வரை ரயில் பாதை நீடிக்­கப்­படும்.கொழும்­பி­லி­ருந்து கட்­டு­நா­யக்க விமான நிலையம் வரையும் மாத்­த­றை­யி­லி­ருந்து மத்­தள விமான நிலையம் வரையும் எந்த நேரத்­திலும் செல்லும் வகையில் நவீன ரயில் சேவை ஸ்தாபிக்­கப்­படும். பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­படும்.
 
எமது நாட்டில் பஸ் வண்­டி­களை உற்­பத்தி செய்ய ஆர்­வ­முள்­ள­வர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கப்­படும். கொட்­டாஞ்­சேனை - மட்­டக்­குளி ஊடாக மால­பே­யி­லி­ருந்து கள­னிக்கு மொனோ ரயில் சேவை அடுத்த 3 வரு­டங்­களில் உரு­வாக்­கப்­படும்.
 
மொறட்­டு­வை­யி­லி­ருந்து கொழும்பு வரை பஸ் போக்­கு­வ­ரத்­துக்­காக இரண்டு வீதித் தளங்கள் உரு­வாக்­கப்­படும்.
 
14. சுற்­றாடல்
 
இலங்­கை­யி­லுள்ள அனைத்து காடு­க­ளையும் மீண்டும் அள­விட்டு எல்­லைகள் அடை­யா­ள­மிட்டு நட­வ­டிக்கை மேற்­கொள்ள ஆணைக்­குழு நிறு­வப்­படும். அரச மற்றும் தனியார் காணி­களைப் பயன்­ப­டுத்தி 3 இலட்­சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பில் புதி­தாக காடு உரு­வாக்­கப்­படும். பாது­காப்­பற்ற பிர­தே­சங்­க­ளுக்கு யானை­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்பு பெற வேலிகள் அமைக்­கப்­படும்.
 
15. உறையுள்
 
அனைத்து நக­ரங்­க­ளிலும் குடி­சை­களில் வாழு­கின்ற மக்­க­ளுக்­காக அடுத்த 6 வரு­டங்­களில் 60 ஆயிரம் வீடுகள் அமைக்­கப்­படும். மலை­ய­கத்தில் தோட்­டப்­ப­கு­தியில் உள்ள அனைத்து குடும்­பங்­க­ளுக்கும் 7 பேர்ச்சர்ஸ் காணியும் வீடும் அமைத்­துக்­கொ­டுக்­கப்­படும்.2015-2016 ஆம் ஆண்டில் தோட்­டப்­ப­கு­தியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணித்­துக்­கொ­டுக்­கப்­படும்.
 
அபாயம் நில­வு­கின்ற பகு­தி­களில் வாழு­கின்ற அனைத்து குடும்­பங்­க­ளுக்கும் பாது­காப்­பான பிர­தே­சங்­களில் உட­ன­டி­யாக வீடுகள் கட்­டிக்­கொ­டுக்­கப்­படும். நடுத்­தர வரு­மானம் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு அலங்­கார வீட்­டுத்­திட்டம் முன்­வைக்­கப்­படும். இதற்­காக 30 வருட கடன்­திட்­டமும் வழங்­கப்­படும்.
 
16. உட்­கட்­ட­மைப்பு
 
2020 ஆம் ஆண்டில் கொழும்பு நக­ர­மா­னது தெற்­கா­சி­யாவில் சிறந்த நக­ர­மாக உரு­வாக்­கப்­ப­டு­வ­துடன் ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர பகுதி படிப்­ப­டி­யாக நிர்­வாக நக­ர­மாக மாறும். தெரிவு செய்­யப்­பட்ட 75 நக­ரங்­களில் பொது வர்த்­தக சந்­தைகள் நிர்­மா­ணிப்­பப்­படும்.
 
அதி­வேக பாதை
 
தெற்கு அதி­வேக வீதி மத்­தளை விமான நிலையம் மற்றும் அம்­பாந்­தோட்டை நகரம் வரை நீடிக்­கப்­படும்.
தெற்கு அதி­வேக வீதி­யி­லி­ருந்து இரத்­தி­ன­பு­ரிக்­கான வீதி நிர்­மா­ணிக்­கப்­படும். வடக்­குக்­கான அதி­வேக வீதி நிர்­மா­ணிக்­கப்­படும். 2020 ஆம் ஆண்டு மத்­தள விமான நிலை­யத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு அதி­வேக வீதியில் பய­ணிக்கும் புரட்­சியை உரு­வாக்­குவேன்.
 
நீர் வழங்கல்
 
அடுத்த இரண்டு வரு­டங்­களில் அனைத்து நகர வீடு­க­ளுக்கும் நீர்­வ­ழங்கல் இணைப்பு வழங்­கப்­படும்.
2015 ஆம் அண்டில் 4 இலட்சம் நீர் வழங்கல் இணைப்­புகள் வழங்­கப்­படும்.
 
மின்­சாரம்
 
குறைந்த வரு­மானம் கொண்ட குடும்­பங்­க­ளுக்­காக மின்­சார இணைப்பு வழங்­கும்­போது 6 வரு­டங்­க­ளுக்­கான குறைந்த வட்­டிக்­கடன் வழங்­கப்­படும். இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் மின்­சக்தி வர்த்­தகம் மேற்­கொள்ள எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
 
தொடர்­பாடல் சேவை
 
தொடர்­பாடல் மற்றும் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி மக்­க­ளுக்கு வழங்கும் சேவைகள் விரி­வு­ப­டுத்­தப்­படும்.தொடர்­பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்காக தொழில்சார் நிறுவனம் உருவாக்கப்படும்.
 
17. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
 
தேசிய விஞ்ஞான மத்திய நிலையமொன்று உருவாக்கப்படும். இலங்கையை விஞ்ஞான அபிவிருத்தி தொடர்பான ஆசிய கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
 
18. கலைத்துறை
 
சிறுவர் மற்றும் இளைஞர்களின் இலக்கிய துறையை பாராட்டுவதற்காக விசேட அரச கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.
கலை இலக்கிய படைப்புகளுக்காக கலைஞர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை
சிறுகதை, கவிதை புத்தகங்கள் ஆகியவற்றுக்கான கேள்விகள் குறைவடைந்துள்ளதால் இலக்கிய புத்தகங்களை அச்சிடுவதை அதிகரிக்க அச்சு கைத்தொழிலளர்களுக்கு
 
வரிச்சலுகை
 
நீண்டகாலமாக மௌனமாக மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எழுத்தாளர்களுக்கும் இத்திட்டம் உள்ளடக்கப்படும்.
 
19. சமூக பாதுகாப்பு
 
அரச மற்றும் தனியார் துறைகளிலிருந்து ஓய்வுபெற்றோரின் சேவையை மீண்டும் பெறுவதற்கு அபிவிருத்தி செயலணியை உருவாக்கவுள்ளேன். இவர்களுடைய அறிவு அனுபவம் பல வேலைத்திட்டங்களுக்கு தேவைப்படும்.ஓய்வுதியம் மற்றும் சமூக பிரச்சினைகள் கண்டறியப்பட்டு தீர்வுகள் பெறப்படும்.
 
20. சமாதானமும் நல்லிணக்கமும்
 
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தற்போது வழக்கு தொடரப்படாதுள்ள அனைத்து வடக்கு இளைஞர் யுவதிகள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அனைத்து அதிகாரங்களுடன் குழுவொன்று நியமிக்கப்படும்.
 
வாகனங்கள் தங்க நகைகள்
 
மனிதாபிமான நடவடிக்கைகளின்போது மக்கள் விட்டுச்சென்ற வாகனங்கள் தங்க ஆபரணங்கள் உறுதிப்படுத்தல்களின் பின்னர் மீண்டும் மக்களுக்கு வழங்கும் செயற்பாடு இவ்வருடத்துக்குள் முடிவடையும்.
 
காணிகள் மீளளிக்கப்படும்
 
பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்ட போது பாதுகாப்பு படைகளினால் பயன்பாட்டுக்குப் பெறப்பட்ட காணிகள், கட்டிடங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் மீள வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும்.
 
அபிவிருத்தில் வடக்கு கிழக்கு
 
பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக அபிவிருத்தியில் பங்கெடுக்காதிருந்த வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளை தேசிய அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்காக நல்லிணக்க செயற்பாடுகள் விரைவுபடுத்தப்படும். இவை வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும்.
 
தேசத்துக்கு மகுடம் வடக்கு கிழக்கில்
 
அடுத்த வருடங்களில் தேசத்து மகுடம் கண்காட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும்.
நாட்டில் எந்தப் பகுதியினாலும் பயங்கரவாத்தினால் பதிக்கப்பட்ட மக்கள் இதுவரை நட்டஈடு பெறாமல் இருந்தால் உடனடியாக வழங்க நடவடிக்கை
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள்( சிங்களம், தமிழ் , முஸ்லிம்) மீள்குடியேற்றி விரைவான செயற்பாடு மேற்கொள்ளப்படும்.தமது வீடுகளில் குடியேறும் அவர்களின் உரிமை உறுதிப்படுத்தப்படும்.
 
மதவாதம் அனுமதிக்கப்படாது
 
சில மதவாத இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட சமூக மோதல் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான மோதல்களில் சிக்கிய சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் பாதுகாப்பதையும் மதங்களை பின்பற்றும் உரிமையை உறுதிப்படுத்துகிறோம்.
தோட்டப்பகுதிகளில் கிராம சேவை பிரிவுகள் மிகவும் பெரிய அளவில் இருப்பதால் வாழ்கின்ற மக்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வது கடனமாக உள்ளது. எனவே அந்த கிராமசேவை பிரிவுகளை மீண்டும் எல்லையிட நடவடிக்கை எடுக்கப்படும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.