Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திவெளியிலுள்ள மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்

Featured Replies

சந்திவெளியிலுள்ள மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்
 
25-12-2014 05:07 AM
 
a(13).JPG

-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரியூட்டப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

20 இற்கும்  மேற்பட்டோரைக் கொண்ட  ஆயுதம் தாங்கிய  கும்பல் இந்த அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (25)  அதிகாலை வந்ததாகவும் அவர்கள்  அலுவலகத்துக்கு  பெற்றோல் குண்டு வீசியதுடன் அங்கிருந்தவற்றை அடித்து உடைத்ததாகவும் அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறினர். 

இந்தச் சம்பவத்தின்போது,   அலுவலகத்தில்  இருந்த 11 பேரும் தப்பியோடியதாகவும் அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை   மேற்கொண்டுள்ளனர்.

 b(5).JPG

c(3).JPG

 

 http://www.tamilmirror.lk/136392#sthash.k12wpQUI.dpuf

 

மைத்திரியின் மேடைக்கு துப்பாக்கிப்பிரயோகம்: இருவர் கைது

 
25-12-2014 04:31 AM
 
handcuffs1.jpgபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால கலந்துகொள்ளவிருந்த கூட்டத்துக்காக வெல்லம்பிட்டிய உமகிலிய  பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு, துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராஜகிரிய மற்றும் வெல்லம்பிட்டிய பிரிண்டியாவத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தார்.

துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொள்வதற்காக சந்தேகநபர்கள் மூன்று வாகனங்களில் வருகைதந்தந்ததாகவும் அதிலொரு  வாகனம், வெல்லம்பிட்டிய பிரிண்டியாவத்தை பகுதியிலுள்ள வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள இன்னும் அறுவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 http://www.tamilmirror.lk/136388#sthash.5xmggGkM.dpuf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.