Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கை அனர்த்தம் மகிந்தவிற்கு சாதகமாக அமையுமா?

Featured Replies

பல பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அதனை மறுத்துள்ள தேர்தல் ஆணையாளர் மழைவெள்ளத்திற்காக தேர்தலை பிற்போடப்போவதில்லை என  தெரிவித்திருக்கின்றார்.
 
நாட்டின் அனர்த்தமுகாமைத்துவ பிரிவு 21 மாவட்டங்களை சேர்ந்த 11060386 பேர் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. ஊவா, வடமத்தி மற்றும் மத்திய கிழக்கு மாகாணங்களே அதிகளவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.30 பேர்வரை பலியாகியுள்ளதுடன் 6 பேர்காணமற்போயுள்ளனர்.
 
இந்த சூழ்நிலையில் தேர்தலை பிற்போடுமாறு பல தரப்புகள் வேண்டுகொள் விடுத்துள்ளன. எனினும் அவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு பரிசுத்த பாப்பரசரின் விஜயம் உட்பட பல விடயங்கள் தடையாக இருப்பதாக தேர்தல்திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தேர்தல் திணைக்களம் இது குறித்து சிந்திக்கவில்லை என அதன் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
எனினும் உடனடி நடவடிக்கையாக எதிர்பாரத இயற்கை அனர்த்தத்தினால் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு தற்காலிக ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு தேர்தல் ஆணையாளர் நிலைமையை மதிப்பிடவுள்ளார்.
 
நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக இடம்பெற்றுள்ள இந்த இயற்கை அனர்த்தம் தேர்தல் முடிவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலரது கேள்வியாவுள்ளது.
 
பொதுவேட்பாளரி;ன்,கோட்டை என கருதப்படும் பல இடங்களில் மழைவெள்ளம் கடும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது போல தோன்றுகின்றது.
 
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மைத்திரிக்கு சாதகமான நிலை காணப்படும் ஒரு பகுதி,இதுதவிர அவரின் சொந்த ஊரான பொலனறுவவும் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் கிராமங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமான சூழ்நிலையை கருத்தில் கொள்ளும் போதும், நாட்டின் பல பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளும்போதும் எந்த வேட்பாளரும் இந்த இயற்கை அனர்த்தத்தால் பலனடையமுடியாது என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.
 
அதேவேளை இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் மக்கள் மத்தியில் பொதுவாகவே ஒரு அதிருப்தியை உண்டுபண்ணுவது இயல்பு, அரசியல்நம்பிக்கைகளை தாண்டிஎழும் இந்த அதிருப்தி உணர்வு எதிர்கட்சிக்கே சாதகமாக அமையும். பதுளை மற்றும் பொலனறுவையில் காணப்படும் நிலைமையால் ஜனாதிபதிக்கு ஏதாவது சாதகநிலை உருவாகுமானால், மழைவெள்ளத்தினால் உருவாகியுள்ள அதிருப்தி எதிhகட்சிக்கே சாதகமாக அமையும.
 
அதேவேளை அடையாள அட்டைகள், வாக்காளர்அட்டைகள் தொலைந்துள்ளமை காரணமாக தேர்தல் மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கும், கண்காணிப்பு அமைப்புகளுக்கும் உள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.