Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்!

Featured Replies

சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்!

 

 

மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி அறிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தலைமையேற்பார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் டோணி களமிறங்காததால் விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா களம் கண்டது. ஆனால் போராடி தோற்றது. 2வது மற்றும் இன்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்டில் டோணி கேப்டனாக செயல்பட்டார். 2வது டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில் 3வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. சாய்ந்தது இந்த போட்டித்தொடரில் கோஹ்லி பேட்டிங்கில் ஜொலித்தார்.

opvbfd.jpg

ஆனால் டோணி சுத்தமாக ஏமாற்றிவிட்டார். முக்கியமான கட்டங்களில் குறைந்த ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களை கடுப்பேற்றினார். எனவே டோணிக்கு பதிலாக விராட் கோஹ்லி டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கின. சவுரவ் கங்குலியும் இரு தினங்கள் முன்பு இதேயே வலியுறுத்தினார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக டோணி தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சிட்னியில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் டோணிக்கு பதில் கோஹ்லி அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே நேரம் ஒருநாள் மற்றும் டி20க்கான இந்திய அணிக்கு டோணியே கேப்டனாக தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 33வயதான டோணி, 90 டெஸ்டுகளில் விளையாடி 4876 ரன்கள் எடுத்துள்ளார்.

2eem0k7.jpg

 

அதில் 33 அரை சதங்களும், 6 சதங்களும் அடங்கும். இதில் 60 டெஸ்டுகளில் டோணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகள் டிரா ஆன நிலையில், 18 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. அதிக வெற்றிகளை ஈட்டிய இந்திய அணி கேப்டன் என்ற பெருமையும் டோணிக்கு உண்டு. டோணி கேப்டனாக இருந்தபோதுதான், டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா நம்பர்-1 இடத்தை பிடித்தது. அதே நேரம் 2011 முதலே, வெளிநாட்டு போட்டிகளில் டோணி தலைமையிலான டெஸ்ட் அணி சறுக்கல்களை சந்திக்க தொடங்கியது. இக்காலகட்டத்தில் டோணி தலைமையில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா, அதில் 15 போட்டிகளை தோற்றது. 6ல் மட்டுமே வெற்றி பெற்றது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/mahendra-singh-dhoni-retires-from-test-cricket-218039.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோனியின் ஓய்வு முடிவை மதிக்கிறோம்: பிசிசிஐ

2pzzj7l.jpg

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றதையொட்டி, பிசிசிஐ தன் அதிகாரபூர்வ வலைதளத்தில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு அறிவித்துள்ள மகேந்திர சிங் தோனியின் முடிவை மதிப்பதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருக்கிறது என்ற காரணத்தினால், டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருப்பதாகக் கூறி அவர் ஓய்வு அறிவித்திருந்தார். இவரது தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 நிலையை எட்டியது.

 

உடனடியாக அவர் ஓய்வு அறிவித்ததை அடுத்து, அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். அவரது இந்த முடிவை பிசிசிஐ மிகவும் மதிக்கிறது.

மேலும், தோனியின் பெரும் பங்களிப்புக்காகவும், இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் கொண்டு வந்து சேர்த்த புகழுக்காகவும் பிசிசிஐ நன்றி தெரிவித்துக் கொள்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக பணியாற்றுவார்" என்று பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90/article6738617.ece

  • தொடங்கியவர்

தோனி ஓய்வு: ட்விட்டரில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பதிந்த கருத்துகள்
68ae5k.jpg

 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு அறிவித்ததையடுத்து பல முன்னாள், இந்நாள் வீரர்கள் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி செவ்வாய்க்கிழமை ஓய்வு அறிவித்தார். 3 வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருப்பதாக அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

சில முன்னாள் வீரர்கள் தோனியின் இந்த முடிவு குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு:

 

சச்சின் டெண்டுல்கர்: வெல் டன்! டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான பங்களிப்பு. சேர்ந்து விளையாடியதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அடுத்த இலக்கு 2015 உலகக் கோப்பைதான் மை பிரெண்ட்.

 

"மிகவும் சவாலான, போட்டி மனோபாவம் உள்ள மனிதர். இந்திய கிரிக்கெட் அவருக்கு நிறைய கடன் பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

சுரேஷ் ரெய்னா: “தலைமையாற்றும் போதும் துணிவு, ஓய்வு பெறும் போதும் துணிவு. ரெஸ்பெக்ட் தோனி.” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்: அவர் ஆட்டத்தை விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலி வழிநடத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்ல இதுவே சரியான நேரம்.

 

இலங்கை முன்னாள் வீரர் ரசல் ஆர்னால்ட்: புத்தாண்டு பிறக்கும் போது இந்தியாவுக்கு புதிய யுகம் ஆரம்பிக்கிறது. எனக்கு இன்னமும் ஆச்சரியம் விலகவில்லை. ஆனால் சரியான முடிவு. வெல் டன் எம்.எஸ்.டி.

 

வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே: எந்த கோணத்தில் பார்த்தாலும், அருமையான ஒரு கிரிக்கெட் கரியர் அவருடையது. அவருக்கு பலமான வடிவங்களில் விளையாட அவர் முடிவெடுத்துள்ளார்.

 

வினய் குமார்: உங்களது கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் இன்மை நிச்சயம் உணரப்படும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6738712.ece

 

  • தொடங்கியவர்

டெஸ்டில் இருந்து தோனி திடீர் ஓய்வு
டிசம்பர் 29, 2014.

 

மெல்போர்ன்: இந்திய அணி கேப்டன் தோனி, டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 ‘டுவென்டி–20’ (849) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்திய அணிக்கு ‘டுவென்டி–20’(2007), 50 ஓவர் (2011) என இரண்டு முறை உலக கோப்பை வென்று தந்தார். தவிர, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பை வென்று காட்டினார்.

 

இந்நிலையில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இவரது தலைமையிலான இந்திய அணி தோல்வி கண்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0–2 என. இழந்துள்ளது.

இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.

 

பங்களிப்புக்கு நன்றி:

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:

 

ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, கேப்டன் தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

மிகச்சிறந்த கேப்டனான இவரின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நன்றி.

வரும் ஜன.,6ல் சிட்னியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓய்வு ஏன்:

கடந்த 2005, டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான சென்னை டெஸ்டில் அறிமுகம் ஆனார் தோனி. கடந்த 2008ல் கும்ளே ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனார். 1967-–68க்குப் பின், அதாவது 41 ஆண்டுகள் கழித்து, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தினார்.

இவர் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி உலகின் ‘நம்பர்–1’ இடத்தை பெற்று அசத்தியது.

 

2011 முதல் இவரது டெஸ்ட் வீழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து இங்கிலாந்த, ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணிலும் தோல்வி துரத்த, ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

 

இதுவரை கேப்டனாக பங்கேற்ற 60 டெஸ்டில், 27 வெற்றி, 15 ‘டிரா’ செய்த தோனி அணிக்கு, 18 தோல்விகள் கிடைத்தது. தவிர, அன்னிய மண்ணில் அதிக தோல்விகளை (15) சந்தித்த முதல் இந்திய அணி கேப்டன் தோனி தான்.

 

இவருக்கு அடுத்த இடத்தில், மன்சூர் அலிகான் பட்டோடி, அசார், கங்குலி ஆகியோர், அன்னிய மண்ணில் கேப்டனாக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் தலா 10 தோல்விகள் பெற்றனர்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419871420/DhoniCricketIndiaWicketKeeping.html

  • தொடங்கியவர்

டிசம்பர் மாதம் ஆரம்பித்த டோணியின் டெஸ்ட் வாழ்க்கை டிசம்பரிலே முடிந்தது

 

மெல்போர்ன்: டிசம்பர் மாதம் ஆரம்பித்த டோணியின் டெஸ்ட் ஓட்டம், டிசம்பர் மாதத்திலேயே முடிவடைந்துள்ளது. டிசம்பர் மாதம் ஆரம்பித்த டோணியின் டெஸ்ட் வாழ்க்கை டிசம்பரிலே முடிந்தது 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் டோணி முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

 

முதல் மூன்று நாட்கள் மழையால் ஆட்டம் நடைபெறாத நிலையில், டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் 2 நாள் மட்டுமே அந்த டெஸ்ட் போட்டி நடந்தது. எனவே எதிர்பார்த்தபடி போட்டி டிராவில் முடிந்தது. அப்போட்டியில் 54 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார் டோணி. அப்போது அவருக்கு 24 வயது. 9 வருடங்கள் கடந்த நிலையில் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று முடிவடைந்த டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த போட்டியும் டிராவிலேயே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/dhoni-s-test-run-starts-end-with-december-218049.html

  • தொடங்கியவர்

பெட்டிங் சர்ச்சையில் சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்ததால் டோணி ஓய்வு அறிவிப்பு?

 

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல். பெட்டிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்ததால்தான் இப்படி ஒரு முடிவை டோணி எடுக்க நேரிட்டதோ என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் படுமோசமாகத்தான் விளையாடியது.

 

இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பெட்டிங் சர்ச்சையில் சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்ததால் டோணி ஓய்வு அறிவிப்பு? இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென டோணி, தாம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டோணியின் இந்த அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் தீவிரமாக 'ஆராய்ந்து' வருகிறன்றனர். இந்த 'ஆராய்ச்சிகளில்' ஒன்றுதான், பெட்டிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 'குட்டு' வைத்ததாலேயே டோணி ஓய்வுபெற்றுவிட்டார் என்பதும்! 6வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பெட்டிங், பிக்சிங் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

 

 

அந்த அறிக்கையில், பெட்டிங் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், நாள்தோறும் டோணியின் அறைக்க் சென்று திரும்பியதை பதிவு செய்துள்ளது. இந்த சந்திப்புகளின் போது சென்னை அணியின் வியூகங்கள் குறித்து குருநாத் மெய்யப்பனிடம் டோணி விளக்கியிருக்கலாம் என்றும் முட்கல் அறிக்கை கூறியிருந்தது. இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் டோணிக்கும் குட்டு வைத்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என். சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் டோணி இருப்பது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

 

முன்னர் முட்கல் கமிட்டியிடம் டோணி சாட்சியம் அளித்த போதே அவர் கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என்று கூறப்பட்டது. தற்போது பெட்டிங் மற்றும் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் ரத்தாகும் நிலை உள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில்தான் டோணி தமது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/has-mudgal-report-something-do-with-ms-dhoni-s-untimely-retirement-from-test-cricket-218052.html

  • தொடங்கியவர்

ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு டோணிக்கும்- பிசிசிஐக்கும் நடுவே என்ன பேச்சுவார்த்தை நடந்தது?

 

மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் டோணி கூறியதும், உங்களுக்கு ஏதேனும் காயம் பட்டுள்ளதா என்பதுதான் பதில் கேள்வியாக இருந்ததாம். இதுகுறித்து சஞ்சய் பட்டேல், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு டோணிக்கும்- பிசிசிஐக்கும் நடுவே என்ன பேச்சுவார்த்தை நடந்தது?

 

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்ததும், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டோணி, நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று கூறினார். நான் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளது போலும் என்று நினைத்து, காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கேட்டேன். அவர் அமைதியாக "நன்மைக்காகவே ஓய்வு முடிவு எடுக்கிறேன்" என்று தெரிவித்தார். இதுதான் உங்கள் இறுதி முடிவா என்று நான் கேட்டேன். அதற்கு, சக வீரர்களிடம் இந்த முடிவை கூறிய பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள் என்று டோணி என்னிடம் கூறினார். இதன் நடுவே நான், தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் மற்றும் சிவலால் யாதவுக்கு இத்தகவலை தெரிவித்தேன்.

 

 

இருவருமே, டோணியின் விருப்பத்தை மதித்து நடப்பதுதான் நல்லது என்று தெரிவித்தனர். நானும் அதே எண்ணத்தில்தான் இருந்தேன். எனவே டோணி மீண்டும் அழைத்தபோது, அவரது முடிவுக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை என்று கூறிவிட்டேன். டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பே ஓய்வு பெறும் யோசனையை டோணி கூறியிருந்தார். மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர் ஒருவரே கேப்டனாக இருப்பதால் ஏற்பட்ட சுமையை உணர ஆரம்பித்ததால் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அதே நேரம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக டோணியே தொடருவார். அதில் சிறிதும் மாற்றமில்லை. இவ்வாறு சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/test-retirement-discussions-between-dhoni-bcci-revealed-218054.html

  • தொடங்கியவர்

தோனி ஓய்வு: ஒரு வீரராக இந்திய அணிக்கு இழப்பு- சுனில் கவாஸ்கர்
 

 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெற்றது ஆச்சரியமான முடிவாக இருக்கிறது என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.

கவாஸ்கர்: இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கேப்டன் பொறுப்பை உதறலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு வீரராகவே அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

 

ஒரு வீரராக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் திறமை அவரிடம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு கேப்டனாக சுமை அதிகம்தான். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முயற்சிகளை மேற்கொண்டு அது பயனளிக்காமல் போயிருக்கலாம். எனவே தோனி இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கலாம். ஒருவீரராக தோனியை இந்தியா இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் சென்னை சேப்பாக்கத்தில் எடுத்த 224 ரன்களை யார் மறக்க முடியும்? ஆனால், ஒரு வீரராக இந்தியா அவரை நீண்ட நாட்களுக்கு இழக்கும் என்றே கருதுகிறேன்.

 

கோலி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை காலம்தான் கூற வேண்டும்”

என்று தனியார் தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தார்.

 

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் ‘இந்த அணிக்கு இது கற்றுக் கொள்ளும் காலம்’என்று தோனி கூறியுள்ளது பற்றி கவாஸ்கர் கூறுகையில், “ஒண்ணாவதில் பாஸ் செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக போராடும் மாணவர் கூற்றுபோல் உள்ளது. நீண்ட நாட்களாக கற்றுக் கொண்டேயிருந்தால் எப்படி? முடிவுகள் சாதகமாக வேண்டாமா? குறிப்பாக பவுலர்கள். பவுலர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமாக பொறுமை காத்து விட்டோம்.” என்றார்.

 

வெங்சர்க்கார்: தோனி ஒரு நல்ல உடல்தகுதி உடைய வீரர். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆடியிருக்கலாம். எனக்கு அவரது முடிவு ஆச்சரியமாக உள்ளது. ஆனால், கோலியிடம் தலைமையைக் கொடுக்க இது நல்ல தருணம் என்று தோனி நினைத்திருக்கலாம். என்றார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article6738883.ece?homepage=true

  • தொடங்கியவர்

டெஸ்ட்டுக்கு விடைகொடுத்த தோனி!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான முகங்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சிலர் இது வரவேற்கதக்க முடிவு என்று கூறியுள்ளார்கள். டெஸ்ட் போட்டிகளில் தோனியின் ஆட்டத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்கள் சில இங்கே...

 

dhoni_-_wins_2262150g_zpsc3e7e0cc.jpg

 

dhoni6_2262157g_zps5f811330.jpg

இலங்கைக்கு எதிராக சென்னையில் 2005-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியே தோனியின் முதல் டெஸ்ட் போட்டி.

 

dhoni2_2262156g_zps53305622.jpg

 

90 டெஸ்ட் மேட்ச்களை ஆடியுள்ள தோனி, அதில் 60 போட்டிகளில் அணிக்கு தலைமையேற்றுள்ளார்.

dhoni3_2262153g_zps17bd91c3.jpg

மொத்தம் 4876 டெஸ்ட் ரன்களை குவித்துள்ளார்.

 

dhoni4_2262154g_zpsd5bcbcdf.jpg

 

இந்தியாவின் அதிக வெற்றி விகிதம் உள்ள கேப்டனாக கருதப்படும் தோனி, தான் தலைமையேற்ற 60 போட்டிகளில் 27 போட்டிகளில் அணியை வெற்றிக்கு வழிநடத்தியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்திலிருக்கும் கங்குலி மொத்தம் 21 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

 

dhoni_chennai_2262152g_zps3a1a2ca0.jpg

டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 224. 2013-ஆம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த இந்த இரட்டை சதம், இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தது.

dhoni_cup_2262163g_zpsf7a68dc8.jpg

தோனி, தன் தலைமையில் இந்திய அணியை சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கச் செய்தார். 18 மாதங்கள் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது. இதே போல தோனி தலைமையில் ஒரு நாள் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

dhoni_mcg_2262159g_zpsc886b110.jpg

நடந்த முடிந்த மெல்போர்ன் டெஸ்ட் போடியில், 8 கேட்சுகள், 1 ஸ்டம்பிங்க் என, ஒரு டெஸ்ட் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் விழக் காரணமாக இருந்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6738828.ece?homepage=true&ref=slideshow#im-image-0

 

 

  • தொடங்கியவர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவரங்கள்
 

 

டெஸ்ட் கிரிக்கெட்டை தோனி தனது 24 நாட் அவுட்டுடன் முடித்து கொண்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய சில சுவையான புள்ளி விவரங்கள்:

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் ஒரு கேப்டனாக 10,000 ரன்களை எடுத்துள்ள முதல் இந்திய பேட்ஸ்மென் தோனி. ரிக்கி பாண்டிங் 15,440 ரன்களையும், கிரேம் ஸ்மித் 14,878 ரன்களையும் ஸ்டீபன் பிளெமிங் 11,561 ரன்களையும், ஆலன் பார்டர் 11,062 ரன்களையும் ஒரு கேப்டனாக எடுத்த பேட்ஸ்மென்கள் ஆவர்.

60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஒரு விக்கெட் கீப்பராக இதுவே அதிகமானதாகும், இவருக்கு அடுத்த படியாக முஷ்பிகுர் ரஹிம் 19 போட்டிகளில் விக்கெட் கீப்பர்/கேப்டனாக இருந்துள்ளார்.

 

டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுகளை வீழ்த்த தோனி விக்கெட் கீப்பராக பங்களித்துள்ளார். இது விக்கெட் கீப்பர்களில் 5-வது சிறந்த பங்களிப்பாகும். மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட், இயன் ஹீலி, ராட்னி மார்ஷ் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களை தோனி எடுத்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக 3-வது சிறந்த பங்களிப்பாகும். ஆடம் கில்கிறிஸ்ட் 5570 ரன்களையும் மார்க் பவுச்சர் 5,515 ரன்களையும் எடுத்துள்ளனர்.

 

தோனி 60 டெஸ்ட்களில் கேப்டனாக செயலாற்றி 27 முறை வெற்றி கண்டுள்ளார். இதில் உள்நாட்டில் வென்றது 21. அயல்நாட்டில் 30 டெஸ்ட்களில் தோனியின் கீழ் 6 டெஸ்ட் போட்டிகளில்தான் இந்தியா வென்றுள்ளது. 15 போட்டிகளில் தோற்றுள்ளது. ஆனால் கங்குலி தலைமையில் 28 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு அயல்நாட்டில் தோனி தலைமையில் விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் இந்தியா தோல்வி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் தோனி எடுத்த 224 ரன்கள் ஒரு விக்கெட் கீப்பராக 3-வது பெரிய ஸ்கோராகும். ஜிம்பாவேயின் ஆண்டி பிளவர் 232 ரன்களையும், குமார் சங்கக்காரா 230 ரன்களையும் எடுத்துள்ளனர். தோனி இந்த இரட்டைச் சதம் எடுக்கும் முன்னர் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 192 ரன்கள். இதனை சாதித்தவர் புதி குந்தரென் என்ற இந்திய விக்கெட் கீப்பர். இது 1964 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சாதிக்கப்பட்டது.

 

ஆசியாவைத் தாண்டி தோனி டெஸ்ட் சதம் எடுத்ததில்லை அவரது அதிகபட்ச ஸ்கோர் ஓவலில் 2007ஆம் ஆண்டு எடுத்த 92 ரன்களே.

டெஸ்ட் கேப்டனாக தோனி 2871 ரன்களை எடுத்துள்ளார். இது இந்திய கேப்டனாக அதிகபட்ச பங்களிப்பு, சுனில் கவாஸ்கர் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 4449 ரன்களை எடுத்துள்ளார். இதே 47 டெஸ்ட்களில் அசாருதீன் 2,856 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் தோனி 78 சிக்சர்களை அடித்துள்ளார். முன்னணியில் இருப்பவர் விரேந்திர சேவாக். இவர் 90 சிக்சர்களை அடித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6739123.ece

 

  • தொடங்கியவர்

தோனி திடீர் ஓய்வு ஏன் *கிளம்பும் சந்தேகங்கள்
டிசம்பர் 29, 2014.

 

மெல்போர்ன்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடியாத நிலையில் அவசர அவசரமாக விடைபெற்றது குறித்து பங்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அனுபவ வீரரான இவர் இல்லாதது இந்திய டெஸ்ட் அரங்கில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணிகளுக்கும் கேப்டன் தோனி, 33. இதுவரை, 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 ‘டுவென்டி–20’ (849) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

 

கடந்த 2007ல் இந்தியாவுக்கு ‘டுவென்டி–20’ உலக கோப்பை பெற்றுத் தர, 2008ல் கும்ளேயிடம் இருந்த டெஸ்ட் கேப்டன் பொறுப்பு தோனியை தேடி வந்தது.

இவரது தலைமையில் 1967-–68க்குப் பின், அதாவது 41 ஆண்டுகள் கழித்து (2009), நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. தென் ஆப்ரிக்க மண்ணில் ‘டிரா’ (2010--–11) செய்தார். 2011ல் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சாதிக்க, 28 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவுக்கு உலக கோப்பை கொண்டு வந்தார்.

2013ல் ‘மினி உலக கோப்பை’ (சாம்பியன்ஸ் டிராபி) வென்று காட்டினார். அதேநேரம், 2011 முதல் அன்னிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை.

 

கேப்டனாக பங்கேற்ற 60 டெஸ்டில், 27 வெற்றி தான் (15 ‘டிரா’, 18 தோல்வி) கிடைத்தன. இதில் அன்னிய மண்ணில் மட்டும் 15 தோல்வி பெற்றார்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் (0–2) இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக, திடீரென அறிவித்தார்.  ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார்.

 

தாமதமான முடிவு:

தோனியை பொறுத்தவரை 2013ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். தற்போது ஒரு ஆண்டு தாமதமாக ஓய்வை அறிவித்துள்ளார். இதற்கு அன்னிய மண்ணில் டெஸ்ட் அரங்கில் சோபிக்க முடியாதது முக்கிய காரணம். அணியில் சுமையாக இருக்க இவர் விரும்பவில்லை. கோஹ்லி வசம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க இதுவே சரியான தருணம் என நினைத்துள்ளார்.

 

கோஹ்லி புதிய கேப்டன்:

இது குறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, டெஸ்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவது என, தோனி முடிவெடுத்துள்ளார்.

இவரது முடிவுக்கு மதிப்பு தருகிறோம். பல்வேறு டெஸ்டில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த தோனிக்கு நன்றி.

வரும் ஜன.,6ல் சிட்னியில் துவங்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்டில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார். விக்கெட் கீப்பராக சகா களமிறங்குவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடந்தது என்ன:

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறியது:

தோனி எதையும் வெளிப்படையாக பேசுவார். மெல்போர்ன் டெஸ்ட் முடிந்ததும் என்னை அழைத்த அவர், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்தார். ‘ஏன், என்ன நடந்தது, காயம் ஏதும் அடைந்து விட்டீர்களா,’ என்றேன்.

இதற்கு தோனி,‘ அப்படி எதுவும் இல்லை, டெஸ்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்,’ என, அமைதியாக கூறினார். இதுதான் இறுதி முடிவா, என்றதற்கு ‘சக வீரர்களிடம் தெரிவித்த பின், அதிகாரபூர்வமாக அறிவியுங்கள்,’ என்றார். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான தோனியின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு தர வேண்டும்.

இவ்வாறு சஞ்சய் படேல் தெரிவித்தார்.

 

பற்றி எரியும் கேள்விகள்

விராத் கோஹ்லியின் எழுச்சியை தொடர்ந்து இந்திய அணியின் ‘டிரஸ்சிங் ரூமில்’ சுமுக உறவு காணப்படவில்லை. கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில், அவரது தலைமையில் விளையாட விருப்பம் இல்லாததால் தோனி ஓய்வு பெற்றாரா* நேற்று செய்தியாளர் சந்திப்பில் எதுவும் தெரிவிக்காத தோனி, ‘டிரஸ்சிங் ரூம்’ சென்ற பிறகு திடீரென ஓய்வை இப்படி அறிவித்தது ஏன்,

 

 

* ‘டிரஸ்சிங் ரூமில் ’ மோதல் எதுவும் நடந்ததா?

* சச்சினுக்கு அடுத்து சிறந்த வீரராக கருதப்படும் தோனி, அன்னிய மண்ணில் ஓய்வு பெற்றது ஏன்?

* டெஸ்டில் வழிநடத்த முடியாத தோனி, ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டியில் மட்டும் கேப்டன் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்

* ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணியை அப்படியே கைகழுவியது ஏன் என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

 

 

இது நியாயமா தோனி

இந்திய டெஸ்ட் வரலாற்றில் கேப்டன் நீக்கப்பட்டுள்ளனர். சச்சின், கங்குலி போன்றோர் ஓய்வை முன்கூட்டியே அறிவித்தனர். தோனி மட்டும் தன்னிச்சையாக ஓய்வை அறிவித்து சர்ச்சை கிளப்பியுள்ளார். கேப்டன் என்பவர் தொடர் முழுவதற்கும் அணியை வழி நடத்த வேண்டும். மாறாக பாதியில் மற்றவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது சரிதானா தோனி.

* தோனியின் ஓய்வை பி.சி.சி.ஐ., ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஏற்கனவே மறைமுக உடன்பாடு ஏதும் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/12/1419871420/DhoniCricketIndiaWicketKeeping.html

  • தொடங்கியவர்

வார்த்தைகளால் விவரிக்க முடியாது *கவாஸ்கர் சோகம்
டிசம்பர் 30, 2014.

 

புதுடில்லி: ‘‘டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,’’ என,  இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ‘கவாஸ்கர்–பார்டர்’ கோப்பைக்கான நான்கு போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் 0–2 என, இந்திய அணி  தொடரை இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெறுவதாக, தோனி திடீரென அறிவித்தார்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

 

இந்திய கிரிக்கெட்டுக்காக வியக்கத்தக்க சாதனைகள் பல படைத்தவர் தோனி. இவர் தேடித்தந்த  வெற்றிகளையும், இந்தியாவுக்கு அளித்த பங்கையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இவர் உடலளவில்  இல்லாமல், மனதளவில் சோர்ந்து விட்டார். தோனியிடம் இருந்து பெரியளவில்  ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இது அவருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.

அன்னிய மண்ணில் ஒவ்வொரு போட்டிகளிலும் 500க்கும் அதிகமான ரன்கள் விட்டுத் தருவது,  பவுலர்கள் 100 ஓவர்களுக்கும் மேல் பவுலிங் செய்தவது போன்றவைகள் இவரது மனதை  வருத்தியிருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் கேப்டன் நன்றாக இருந்தால் தான், அணிக்கும் நன்றாக இருக்கும்.  இதனால், கோஹ்லியிடம் கேப்டன் பொறுப்பைத் தர இது தான் சரியான தருணம் என்று  நினைத்துள்ளார்.

 

 

இப்போதைய நிலையில் ஒவ்வொறு இன்னிங்சிலும் அரைசதம் அடிக்கும் கோஹ்லிக்கு, கேப்டன்  பொறுப்பு ஒரு சுமையாக இருக்காது. வரும் முத்தரப்பு, உலக கோப்பை தொடரில் சாதிக்க, இந்த  இடைவெளி தோனியின் மனதுக்கு புத்துணர்ச்சி தரும்.

மற்றபடி இவரது திடீர் ஓய்வு பெரும் ஆச்சரியமாக உள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பின்,  கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால், டெஸ்டில் இருந்தே  ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419963200/DhonicontributionscannotbemeasuredinwordsGavaskar.html


அதிக தோல்வியை சந்தித்த கேப்டன் * சுவாரஸ்ய புள்ளி விவரங்கள்
டிசம்பர் 30, 2014.

 

புதுடில்லி: இந்திய டெஸ்ட் கேப்டன்களில் அதிக தோல்வியை சந்தித்த கேப்டன் தோனி தான். அதேநேரம், அதிகமான டெஸ்ட் வெற்றி பெற்றுத் தந்த கேப்டனும் இவர் தான்.

அன்னிய மண்ணில் தோனி தலைமையில் இந்திய அணி 30 டெஸ்டில் பங்கேற்றது.

இதில் 15 ல் தோல்வி கிடைத்தது. இதையடுத்து, அதிக தோல்விகள் பெற்ற இந்திய டெஸ்ட் அணி கேப்டன் வரிசையில் முதலிடத்தை பெற்றார் தோனி. அடுத்த இடத்தில் அன்னிய மண்ணில் தலா 10 தோல்வி அடைந்த மன்சூர் அலிகான் பட்டோடி, அசார், கங்குலி உள்ளனர்.

 

* சர்வதேச அளவில் தோனி, மூன்றாவது (30 டெஸ்டில், 15 தோல்வி) இடம் பெற்றார். முதல் இரு இடங்களில் தலா 16 தோல்வியடைந்த நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் பிளமிங் (42 டெஸ்ட்), வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் லாரா (20 டெஸ்ட்) உள்ளனர்.

 

அதிக வெற்றி:

அதேநேரம் இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமை இவருக்கு உள்ளது. மொத்தம் 60 டெஸ்டில் கேப்டனாக இருந்து, 27 டெஸ்டில் வெற்றி பெற்றுத் தந்தார். அடுத்த இடத்தில் கங்குலி (21) உள்ளார்.

* சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (53), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (48), ஸ்டீவ் வாக்  (41), வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (36), ஆஸ்திரேலியாவின் பார்டர் (32), நியூசிலாந்தின்  பிளமிங் (28) முதல் 6 இடங்களில் உள்ளனர்.

 

 

மேலும் பல சுவாரஸ்ய புள்ளி விவரங்கள்:

 

2

டெஸ்ட் அரங்கில் மொகாலி (2008), சென்னை (2013) போட்டிகளில், ஆட்டநாயகன் விருது வென்றார்.  இந்த இரண்டும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கிடைத்தது.

 

 

 

9

ஒரு டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக (8 ‘கேட்ச்’ 1 ‘ஸ்டம்டு’–மெல்போர்ன்) இருந்த  முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் தோனி. இதற்கு முன் பெர்த் (2008, ஆஸி.,),  தாகா (2010, வங்கதேசம்), மும்பை (2011, வெ.இண்டீஸ்) டெஸ்டில்  தலா 8 வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

* நயன் மோங்கியா இரு முறை (டர்பன்–1996, கோல்கட்டா–1999) இந்த இலக்கை எட்டியுள்ளார்.

 

11

கேப்டனாக களமிறங்கிய முதல் 11 டெஸ்டில் 8 வெற்றி, 3 ‘டிரா’ செய்து சாதித்தார். இதில் ஒரு  தோல்வியை கூட தோனி சந்தித்தது கிடையாது.

21

சொந்தமண்ணில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்களில் இந்திய அளவில் முதலிடம், சர்வதேச  அளவில் 4வது இடம் தோனிக்குத் (21) தான். அடுத்த இடத்தில் அசார் (13) உள்ளார். உலகளவில் தென்  ஆப்ரிக்காவின் ஸ்மித் (30), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (29), ஸ்டீவ் வாக் (22) முதல் மூன்று  இடத்தில் உள்ளனர்.

 

22

டெஸ்ட் அரங்கில் தோனி மற்ற வீரர்களுடன் சேர்ந்து ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து, 22 முறை 100 அல்லது  அதற்கும் மேலான ரன்கள் எடுத்துள்ளார். இதில் லட்சுமணுடன் இணைந்து 27 இன்னிங்சில் 1,361  ரன்கள் எடுத்தார்.

 

38

டெஸ்ட் அரங்கில் இதுவரை தோனி 38 ‘ஸ்டம்டு’ செய்தார். இந்திய அளவில் சையது கிர்மானியின்  சாதனையை சமன் செய்த தோனி, உலகளவில் ஓல்டு பீல்டு (52), ஈவன்ஸ் (46) முதல் இரு இடத்தில்  உள்ளனர்.

 

 

60

இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த பெருமை தோனிக்கு (60) உண்டு.  அடுத்த இடத்தில் கங்குலி (49) உள்ளார்.

*டெஸ்ட் அரங்கில் அதிக டெஸ்டில் கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பரும் இவர் தான்.  வங்கதேசத்தில் முஷ்பிகுர், இரண்டாவது இடத்தில் (19) உள்ளார்.

 

 

78

டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சேவக்கிற்கு (90) அடுத்து, தோனி (78)  உள்ளார்.

 

224

டெஸ்ட் அரங்கில் மிக வேகமாக சதம் (93 பந்தில்) அடித்த இந்தியர், டெஸ்டில் இரட்டை சதம் (224  ரன்) அடித்த இந்தியர் என்ற பெருமை தோனிக்கு உள்ளது.

* உலகளவில் ஜிம்பாப்வேயின் ஆன்டி பிளவர் (232), இலங்கையின் சங்ககரா (230) முதல் இரு  இடத்தில் உள்ளனர்.

 

285

பேட்டிங் வரிசையில் 7வது இடத்தில் களமிறங்கி, சதம் அடித்த ஒரே கேப்டனான தோனி, மூன்று  வகை போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக இருந்து அதிக விக்கெட் சரிவுக்கு (டெஸ்ட்–285, ஒருநாள்– 306, ‘டுவென்டி–20’–36) காரணமாக இருந்த இந்தியர் என்ற சாதனையும் பெற்றுள்ளார்.

 

 

294

டெஸ்ட் போட்டிகளில் தோனி அதிக (294) விக்கெட் சரிவுக்கு காரணமாக இருந்த இந்திய விக்கெட்  கீப்பர் இவர் தான். இவருக்கு அடுத்த இடத்தில் சையது கிர்மானி (88 டெஸ்ட், 198 ‘அவுட்’) உள்ளார்.  உலகளவில் இது 5வது இடம்.

தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (555), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (416), இயான் ஹீலே  (395), ராடு மார்ஷ் (355) முதல் 4 இடத்தில் உள்ளார்.

 

 

2,871

இந்திய அணிக்கு 7வது இடத்தில் களமிறங்கி, அதிக ரன்கள் எடுத்த வீரர் தோனி (2,871) தான். அடுத்த  இடத்தில் கபில்தேவ் (2,861) உள்ளார். இந்த இடத்தில் களமிறங்கிய எந்த இந்திய வீரர்களும் 800  ரன்னுக்கும் மேல் எடுத்தது கிடையாது.

 

3,454

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த டெஸ்டில் (60), மொத்தம் 3,454 ரன்கள் எடுத்த தோனி, இந்திய  அளவில் முதலிடம் பெற்றார். கவாஸ்கர் (3,449, 47 டெஸ்ட்) அசார் (2,856, 47 டெஸ்ட்)  அடுத்த இரு  இடத்தில் உள்ளனர்.

 

 

4,876

டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியர், சர்வதேச அளவில் மூன்றாவது விக்கெட்  கீப்பர் தோனி (4,876) தான். முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (5,570), தென்  ஆப்ரிக்காவின் பவுச்சர் (5,515) உள்ளனர். இந்தியாவின் சையது கிர்மானி 2,759 ரன்கள் தான்  எடுத்துள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419963061/MostlosestestCaptaininindiancricket.html

  • தொடங்கியவர்

சகாக்களிடம் ஓய்வு முடிவை கூறுகையில் கண்ணில் தண்ணீர் வச்சுண்ட டோணி

 

சிட்னி: டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இந்திய கிரிக்கெட் அணியிடம் தெரிவித்தபோது கண்கலங்கிவிட்டாராம். மஹேந்திர சிங் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி புதிய கேப்டனாக ஆகியுள்ளார். டோணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று தனது சகாக்களிடம் ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார். அப்போது அவரையும் அறியாமல் கண்கலங்கியுள்ளார். சக வீரர்கள் டோணியை கட்டிப்பிடித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

 

டோணி ஓய்வு பெறும் முடிவை சக வீரர்களிடம் தெரிவிக்கையில் டோணி கண்கலங்கினார் என வீரர்கள் உடைமாற்றும் அறையில் இருந்த ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.

 

ஓய்வு உடைமாற்றும் அறைக்குள் டோணி வந்தபோது அவர் என்ன சொல்லப் போகிறார் என்று எங்களுக்கு தெரியாது. எந்தவித நாடகமும் இன்றி அவர் தனது முடிவை பளிச்சென தெரிவித்தார் என்றார் அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி.

 

டெஸ்ட் என்னால் அனைத்து வித கிரிக்கெட்டையும் இனியும் விளையாட முடியாது, அதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று டோணி தெரிவித்ததாக சாஸ்திரி கூறினார்.

 

நேர்மை என்னால் அனைத்து வித கிரிக்கெட்டையும் விளையாட முடியாது என்பதை தெரிவித்துள்ளார் என்றால் அதில் இருந்தே டோணியின் நேர்மை தெரிகிறது என்றார் ரவி சாஸ்திரி.

2637up0.jpg

A pic uploaded by Raina immediately after Dhoni's retirement! Notice the tears in Dhoni's eyes?

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/dhoni-got-emotional-after-breaking-news-team-218088.html

  • தொடங்கியவர்

வார்த்தையால் அல்ல... செயலால் வழிநடத்தியவர் தோனி: திராவிட் புகழாரம்

 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, வெறும் வார்த்தைகளால் மட்டும் தலைமையேற்று வழிநடத்துபவர் அல்ல, செயல்களால் வழிநடத்தியவர் என்று முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.

“தோனியின் தலைமையின் கீழ் விளையாடியதில் எனக்கு அவரிடம் பிடித்த ஒன்று, அவர் செய்ய முடியாததை மற்றவர்களிடம் எதிர்பார்க்க மாட்டார், அதனைச் செய்யச் சொல்லி வலியுறுத்த மாட்டார்.

 

உண்மை நிலை என்னவெனில் ஒரு இளம் அணியை அவர் கட்டமைக்க வேண்டும். ஒரு விதத்தில் பார்த்தால் தொடர்பு படுத்துவதில் அதிக நாட்டம் இல்லாத கேப்டன்களில் ஒருவர் என்று தோனியை கூறலாம். ஆனால், அவர் அனைவரிடமும் சகஜமாக பேசியே தன் மீதான மதிப்பை அதிகரித்துக் கொண்டவர். எப்போதும் பின்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டார். அவர் ஒரு உதாரணமாகத் திகழ்ந்தது அவரது செயல்களால், வெறும் வார்த்தைகளால் அல்ல.

சிறிய ஊர்களிலுள்ள இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தவர் தோனி. அவர்களுக்கு ஒரு விதத்தில் ஊக்கமளித்துள்ளார் அவர். ராஞ்சி என்ற ஒரு சிறிய நகரிலிருந்து வந்து இந்திய அணியளவில் முன்னேறி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒருநாள், டி20 கேப்டன்சி என்று உயர்வு பெறுவது சாதாரணமானதல்ல.

கேப்டன்சி என்ற பொறுப்பிற்கு நிறைய மரியாதையை ஏற்படுத்தியவர் தோனி.

 

இந்தியாவில் அவர் கேப்டன்சி செய்த போது அவர் தற்காப்பு முறையில் செய்யவில்லை. ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது அவர் ஆக்ரோஷமான கேப்டனாகவே செயல்பட்டார். அயல்நாடுகளில்தான் கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக அவர் ஆக்ரோஷமாக செயல்பட பவுலர்கள் அவரிடம் இல்லை. எதிரணியினரின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்கள் இல்லை. இதனால் தடுமாறினார்.

 

தோனியை நான் அறிந்தவரையில் ஒரு தொடரின் நடுவில் இப்படிப்பட்ட முடிவை அவர் எடுக்க கூடியவரல்ல. ஆனால் தொடர் ஏற்கெனவே இழக்கப்பட்ட பிறகு அவர் தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடுவித்துக் கொள்வதென்றால் இதுவே சரியான தருணம் என்று முடிவெடுத்திருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியே. புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது” என்றார் ராகுல் திராவிட்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6741815.ece

  • தொடங்கியவர்

தோனிக்கு ‘சிக்கல்’ கொடுத்த கூட்டணி: ஓய்வின் பின்னணி என்ன
டிசம்பர் 31, 2014.

 

சிட்னி: டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென ஓய்வு பெற்றதற்கு, விராத் கோஹ்லி–ரவி சாஸ்திரி கூட்டணியே காரணம் என கூறப்படுகிறது. இவர்களது ஆதிக்கம் அதிகரிக்க, தோனி ஓரங்கட்டப்பட்டுள்ளார். வேறுவழியின்றி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.

இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பை பெற்று தந்த பெருமைமிக்கவர் தோனி. டெஸ்டில் மட்டும் சறுக்கினார். அதிலும் அன்னிய மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இவருக்கு விராத் கோஹ்லி கூடுதல் தொல்லை தந்தார்.

 

 

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் காயம் காரணமாக தோனி பங்கேற்வில்லை. அப்போது அணிக்கு முதல் முறையாக தலைமை ஏற்ற கோஹ்லி, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இது, இந்திய அணியின் இயக்குனரான முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து இவருக்கு ஆதரவு தந்துள்ளார்.

பின் விரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது டெஸ்டுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்போட்டியின் பயிற்சியில் காயமடைந்த தவான் களமிறங்க மறுக்க, கோஹ்லி முன்னதாக களமிறக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, தவானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சை கிளப்பினார்.

தொடர்ந்து மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டிலும் கோஹ்லியின் ஆக்ரோஷம் நீடித்தது. ஆஸ்திரேலியாவின் ஜான்சன், ஹாடினுடன் வார்த்தை போரில் ஈடுபட்டார்.

 

 

கேப்டன் போலவே செயல்பட்டார். இது களத்தில் அமைதியை விரும்பும் ‘கேப்டன் கூல்’ தோனிக்கு அதிருப்தியை தந்தது. ரன் மழை பொழிந்து நல்ல ‘பார்மில்’ இருந்த கோஹ்லியை இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பயிற்சியாளர் பிளட்சரின் ஒத்துழைப்பு மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி, கோஹ்லிக்கு ஆதரவாக இருந்துள்ளார். அணி தேர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளில் பிளட்சர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தனக்கு ஒத்துவராத ரவி சாஸ்திரி–கோஹ்லி ‘அரசியலை’ சமாளிப்பதை காட்டிலும் ஓய்வு பெறுவதே சிறந்தது என தோனி நினைத்துள்ளார். இந்த பனிப் போர் காரணமாக தான், தோனி ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

 

தவிர, ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கில் தோனியின் பெயரும் உள்ளது. இதில், சுப்ரீம் கோர்ட் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்ப்பு அளிக்க இருக்கிறது. இதனையும் மனதில் வைத்து தான் டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி விடைபெற்றதாக தெரிகிறது.

 

http://sports.dinamalar.com/2014/12/1420043068/ravishastricricket.html

  • தொடங்கியவர்

தாயகம் திரும்புகிறார் தோனி
டிசம்பர் 31, 2014.

 

சிட்னி: டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த தோனி, விரைவில் சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி தொடரை இழந்தது. இந்நிலையில் இந்திய கேப்டன் தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார்.

 

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 6ல் சிட்னியில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று சிட்னி சென்றனர். இவர்களுடன், டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனியும் சென்றுள்ளார். ஆனால் இவர், மீடியாவுக்கு பேட்டி எதுவும் அளிக்கவில்லை.

சிட்னி டெஸ்ட் (ஜன. 6–10)  போட்டிக்கு பின், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வரும் 16ல் துவங்குகிறது. இதற்கு இன்னும் 16 நாட்கள் இருக்கிறது. டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனிக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை ஒன்றும் இல்லை. எனவே இவர், விரைவில் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் வெளியாகும் ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு’ நாளிதழில், ‘டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சி தந்த தோனி, இந்திய அணியினரோடு சிட்னி வந்துள்ளார். இவர், அணியினரோடு தொடர்ந்து இருப்பது குறித்து பி.சி.சி.ஐ., இன்னும் முடிவு செய்யவில்லை,’ என, செய்தி வெளியிட்டது.

 

கங்குலி காட்டம்

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் தோனி விலகியிருக்கலாம். ஓய்வை அறிவித்தது தவறான முடிவு. தொடர் முழுமையாக முடியாமல், பாதியில் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. இவர், சிட்னி போட்டிக்கு பின் விலகியிருக்கலாம். இவர், தவறான முடிவை எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை,’’ என்றார்.

 

கும்ளே வழியில் தோனி

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி, இங்கிலாந்தின் பிளிண்டாப், பாகிஸ்தானின் முகமது யூசுப், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, இந்தியாவின் அனில் கும்ளே, தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் போல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்தபின், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினர்.

 

http://sports.dinamalar.com/2014/12/1420043821/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

டோணியின் திடீர் ஓய்வு பின்னணியில் சதி: ரசிகர்கள் போராட்டம்

 

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதன் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம்சாட்டும் அவரது ரசிகர்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் என்று வர்ணிக்கப்படும் டோணி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் பாதியிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்தது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இந்த சந்தேகம் டோணி ரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

 

 

டோணியின் திடீர் ஓய்வு பின்னணியில் சதி: ரசிகர்கள் போராட்டம்  டோணியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், டோணி ரசிகர் மன்றம் இயங்கிவருகிறது. அந்த மன்றத்தினர் ராஞ்சியில் நேற்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ரசிகர் மன்றத்தின் தலைவரான, ஜிதேர்ந்திர சிங் நிருபர்களிடம் கூறுகையில், டெஸ்ட், ஒன்டே, டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வந்தவர் டோணி. அப்படியிருக்கும்போது திடீரென அவர் ஓய்வு பெற்றுள்ளதை எங்களால் நம்ப முடியவில்லை. இந்த முடிவின் பின்னணியில் சதித் திட்டம் உள்ளது. டோணி தனது முடிவை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். ராஞ்சிக்கும், ஜார்கண்ட்டுக்கும் பெயர் வாங்கி தந்தவர் டோணி. எனவே நாங்கள் போராடுகிறோம் என்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/fans-protest-against-dhonis-retirement-calls-it-conspiracy-218126.html

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் டோனி வாழ்க..! ::D

  • தொடங்கியவர்

டோணி ஓய்வு பற்றி மூச்சு விட மறுக்கும் சேவாக், யுவராஜ்சிங்!

 

டெல்லி: டோணியின் டெஸ்ட் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்க சேவாக், யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். டோணி ஓய்வு பற்றி மூச்சு விட மறுக்கும் சேவாக், யுவராஜ்சிங்!

 

அதிரடி ஆட்டக்காரர்களான சேவாக், யுவராஜ் சிங், முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா போன்றோர் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். இதற்கு கேப்டன் டோணிதான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், டோணியின் ஓய்வு முடிவு குறித்து நிருபர்கள் சேவாக்கிடம் கேட்டதற்கு, உலகத்துக்கே தெரிந்த விசயத்தை பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது என்று பதிலளித்தார்.

 

ஆனால் நெஹ்ரா, யுவராஜ், ஹர்பஜன்சிங் ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sehwag-nehra-refuse-comment-on-dhoni-s-retirement-218110.html

  • தொடங்கியவர்

டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... விடை கிடைப்பது எப்போது?

 

டெல்லி: டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அவரே விலக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு டெஸ்ட் பாக்கியிருக்கும்போதே டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்குள் புகைச்சல் அதிகமாக இருப்பதை அவரது முடிவு காண்பிக்கிறது. இதனிடையே டோணியின் ரசிகர்கள் சில கேள்விகளை அவரிடம் முன்வைக்கின்றனர்.

 

 

அதற்கு டோணியே பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... விடை கிடைப்பது எப்போது? 

இந்தியா அடுத்ததாக ஆறு மாதங்கள் கழித்துதான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. அப்படியிருக்கும்போது இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவித்திருக்கலாமே? எதற்காக பாதியில் வெளியே வந்தார்?

 

ஒரு வீரர் ஓய்வு பெறுவதை அந்த வீரரே பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடத்தி சொல்வதுதான் வாடிக்கை. அப்படியிருக்கும்போது, ஏன் பிசிசிஐ அந்த அறிவிப்பை வெளியிட்டது? ரவி சாஸ்திரி கோஹ்லிக்கு நெருக்கமாக இருப்பதுதான் டோணியின் இந்த முடிவுக்கு காரணமா? என்பது போன்ற விடை தெரியாத கேள்விகள் தொக்கி நிற்கின்றன. விடை சொல்வாரா டோணி?

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/dhoni-s-retirement-shrouded-with-mystery-218109.html

  • தொடங்கியவர்

எடுபடாத கோஹ்லி சமாதானம்: ஓய்வு முடிவில் தோனி உறுதி
ஜனவரி 01, 2015.

 

சிட்னி: ‘‘டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’’ என, தோனியிடம் கேட்ட கோஹ்லி, அவரை சமாதானம் செய்ய முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கு 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டார்.      

 

2011 உலக கோப்பை தொடருக்கு முன் 24 டெஸ்டில் 14 வெற்றி, 7 ‘டிரா’ செய்த தோனிக்கு 3 போட்டிகளில் மட்டும் தான் தோல்வி. இதன் பின் களமிறங்கிய 36 டெஸ்டில், 13 வெற்றி, 15 தோல்வி (8 ‘டிரா’) கிடைத்தது.      

இதனால் தான் டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ‘டிரசிங் ரூமில்’ ஏற்பட்ட பல சர்ச்சைகளும், இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.      

 

இதனிடையே தோனியின் முடிவை மாற்ற, கோஹ்லி முயற்சித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் கோஹ்லி கூறியது:     

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த அன்று ‘டிரசிங் ரூம்’ வந்த தோனி, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களையும் அழைத்தார். எதற்கும் கவலைப்படாத வழக்கமான பாணியில், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.       

ஓட்டலுக்கு சென்ற பின் தோனியிடம் சென்று,‘ ஓய்வு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’ என்று கூறி, சமாதானம் செய்ய முயற்சித்தேன். இருப்பினும், அவரது முடிவை யாராலும் தடுக்க முடியவில்லை. இது தான் உண்மை.      

இவ்வாறு கோஹ்லி கூறியதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.     

 

எடுபடாத முயற்சி:  கோஹ்லியை போல, இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) தோனியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளது. பி.சி.சி.ஐ., உயரதிகாரி ஒருவர் கூறியது:     

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஓய்வு பெறுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தோனி. அதேநேரம், மெல்போர்ன் டெஸ்டில் எப்படியும் வென்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இது நடக்கவில்லை என்றதும், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.      

 

தோனியின் இம்முடிவை பி.சி.சி.ஐ., ஏற்க இல்லை. இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் டெஸ்டில் பங்கேற்க வேண்டும் என, நினைத்தோம். ஆனால் விருப்பம் இல்லாதவரை எத்தனை நாளைக்கு தாங்கிக் கொண்டிருப்பது. இவ்விஷயத்தில் தோனி தான் பிடிவாதமாக இருந்தார்.     

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420122344/ViratKohliDhoniCricketIndiaRetirement.html

  • தொடங்கியவர்

வெறுப்பில் வெளியேறினாரா தோனி
ஜனவரி 02, 2015.

 

புதுடில்லி: ‘‘ஐ.பி.எல்., சூதாட்ட விவகாரத்தில் தனது பெயர் வீணாக அடிபடுவதால், மிகவும் வருத்தப்பட்ட தோனி, டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்,’’ என, தோனியின் சிறுவயது பயிற்சியாளர் சஞ்சால் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இந்தியாவுக்கு 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கத்தில் அணிக்கு வெற்றி தேடித்தந்த போதும், கடந்த 3 ஆண்டுகளாக அன்னிய மண்ணில் 15 தோல்வி கிடைத்தது. லார்ட்சில் மட்டும் தான் வெற்றி கிடைத்தது.

 

இதனிடையே, திடீரென டெஸ்ட் அரங்கில் இருந்தே தோனி ஓய்வு பெற்றார். இதுகுறித்து சஞ்சால் பட்டாச்சார்யா, 51, கூறியது:

இந்திய அணியின் அனைத்து கேப்டன்களும், அன்னிய மண்ணில் மோசமாகத் தான் சொதப்பினர். அப்படி இருக்கையில், தொடர்ந்த தோல்விகளால் தான் தோனி விலகினார் என்ற செய்தி தவறானது.

வரும் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு, இதை தக்க வைக்கத் தேவையான வேலைகளில் கவனம் செலுத்தும் வகையில் தான், இப்படிச் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

 

தோனி வருத்தம்:

மற்றபடி, சூதாட்ட விவகாரத்தில் தோனியின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதாகத் தான் உணர்கிறேன். இது தோனியை மிகவும் பாதித்துள்ளது.

கிரிக்கெட்டுக்காக தேவையான அனைத்தையும் தோனி தந்துள்ளார். ஆனால், கடைசியில் எல்லோரது கைகளும் இவரை நோக்கி நீளுகிறது. இதனால் தோனி பெரிதும் காயமடைந்துள்ளார்.

 

ஏதோ நடந்துள்ளது:

இவரது சிறுவயது பயிற்சியாளராக இருந்தவன் என்ற முறையில் கூறுகிறேன், தோனி கட்டாயம் இதிலிருந்து விடுபட்டு வருவார். ஒருவேளை ஏதாவது தவறு செய்திருப்பதாக உணர்ந்தால், மூன்று வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகி விடுவார். ஏன், டெஸ்டில் இருந்து மட்டும் விலக வேண்டும்.

அங்கு ஏதோ நடந்துள்ளது, இது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுகுறித்து அவரிடம் பேசவில்லை. இந்தியா திரும்பியதும் கட்டாயம் காரணம் என்ன என, கேட்பேன்.

 

ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவரிடம் பேசிய போது, ஓய்வு பெறப் போகிறேன் என, ஒருமுறை கூட சொல்லியது இல்லை. கடைசியில், தொடரின் இடையில் ஓய்வு பெற்றது ஆச்சரியமாக உள்ளது.

இருப்பினும், சரியான நேரத்தில் தோனி எடுத்த இந்த முடிவுக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு சஞ்சால் பட்டாச்சார்யா கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420217660/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

விளையாட்டு

Published: January 3, 2015 19:10 IST Updated: January 3, 2015 19:10 IST

தோனிக்கு ஒரு சராசரி ரசிகனின் கடிதம்

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனிக்கு ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனின் கடிதம்.

அன்புள்ள தோனி,

நான் விளையாட்டைப் பற்றி அலசும் பத்திரிகையாளன் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் விளையாட்டை அவ்வளவாக பார்த்தவன் அல்ல. கங்குலி, அசாருதீன் ஆகியோருடன் உங்களை ஒப்பிட்டுப் பேசவும் எனக்குத் தெரியாது.

ஆனால், உங்களைப் பற்றி எழுத இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் தலைமையேற்ற இந்திய அணி அயல் நாட்டில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பார்க்க அதிகாலை எழுந்து டிவி முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் ஆட்டத்தை முடிக்கும் விதத்தைப் பார்ப்பதற்காகவே நிறைய செலவழித்து, பலரிடம் டிக்கெட்டுகளுக்காக கெஞ்சியுள்ளேன். உங்களது இரண்டாவது வீடான சென்னையில், பறக்கும் ரயிலில் தொங்கிக் கொண்டு, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்களின் கர்ஜனையை கேட்க விரைந்துள்ளேன்.

இந்த அனுபவங்களால் தான், நீங்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது என்ற உங்கள் முடிவு துணிவானது எனச் சொல்ல விரும்புகிறேன். கடந்த காலத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் இருந்துள்ளார்கள். நான் தனியொருவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. ஆனால் பலர் தங்கள் இருப்பை நீட்டித்து காலம் கடந்து அணியில் இருந்துள்ளனர். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. போதுமான காலம் இருந்து, செய்ய முடிந்தவற்றை செய்தாகிவிட்டது என்று உங்களுக்கு தெரிந்துள்ளது. அதான் நீங்கள் விலகிவிட்டீர்கள். இந்த ஓய்வு அறிவிப்பு உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும். என்னைப் போன்ற ரசிகர்கள் அந்த முடிவில் தலையிடவிடாமல் செய்தது கடுமையாக இருந்திருக்கும்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த ஃபார்மை விராட் கோலி திரும்பப் பெற்று தயாராகி வரும் வேளையில், கிரிக்கெட்டின் முக்கிய வடிவமான டெஸ்ட் போட்டியிலிருந்து நீங்கள் ஓய்வினை அறிவித்திருப்பது புத்திசாலித்தனமானதாகத் தெரிகிறது. கண்டிப்பாக தொடரின் நடுவில் நீங்கள் ஓய்வு அறிவித்ததால், விமர்சகர்கள் உங்களை தாக்கக் கூடும். ஆனால் கோலி தயாராக இருப்பதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்று உங்கள் ரசிகர்களான எங்களுக்கு தெரியும்,

இதுதான் உங்கள் சிறப்பு, கேப்டன். எப்போது எதைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். 2007-ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கடைசி ஓவரை வீச ஜோகிந்தர் சர்மாதான் சரியான ஆள் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது. யாரும் மறக்க முடியாத, தரம்ஷாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் இர்ஃபான் பதானின் ஓவரில் அடித்து வெற்றி பெற முடியும் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது, இலங்கைக்கு எதிரான கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நீங்கள் வழக்கமாக ஆடும் நிலைக்கு மாறாக, முன்னரே வந்து ஆடினால் வெற்றி பெறலாம் என உங்களுக்குத் தெரிந்துள்ளது.

மைதானத்தில் ரசிகர்க் கூட்டத்தின் நடுவிலிருந்து உங்களைப் பார்க்கும் போது, சில சமயம் உங்கள் செயல்கள் எங்களுக்குப் புரிகிறது. நடப்பதை யூகிக்கும் வகையில் உங்களுக்கு ஏதோ ஒரு முன்னுணர்வு இருப்பது போலத் தெரிகிறது. உங்கள் ஃபீல்டிங் மாற்றங்கள் அப்படித்தான் தெரிகின்றன. ஒரு ஐபிஎல் போட்டியில் நடந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. பந்துவீச்சாளருக்கு அருகில் சென்று, ஏதோ பேசிவிட்டு, ஒரு வீரரை இடம் மாற்றி நிற்க வைத்தீர்கள். அந்த காலத்து ஆட்கள் அதைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த பந்திலேயே விக்கெட் விழுந்தது.

ஒரு பத்திரிகையாள ரசிகனாக உங்களிடம் சில வார்த்தைகள் பேசச் சொல்லி அணுகியபோது, "மன்னிக்கவும் நண்பா. நீங்கள் அணியின் மேனஜரிடம் தான் பேச வேண்டும்" என்றீர்கள். எவரும் அணுகலாம் என்ற நிலையில் நீங்கள் இருப்பது வெகுவாக ஈர்த்தது. நாம் நம் நண்பர்களிடம் விளையாடுவதைப் போல, நீங்கள் அஸ்வினுக்குப் பின்னால் சென்று மெதுவாக அவரை பயமுறுத்திய விதத்தில் உங்கள் எளிமை பிரமிக்க வைத்தது.

ஒரு வேளை சிறு நகரத்திலிருந்து வந்ததால் உங்களிடம் இந்த குணங்கள் இருக்கின்றன என நினைக்கிறேன். சர்வதேச அளவில் புகழ், பணம், மரியாதை வந்தும் அந்த குணங்களை நீங்கள் இழக்கவில்லை. இல்லையென்றால் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு தொடரின் நடுவில், வாகன நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் நீங்கள் ஏன் பைக் ஓட்ட விரும்ப வேண்டும்? இல்லையென்றால் ஏன் யாருக்கும் தெரியாமல் பைக்கில் நகரத்தைச் சுற்றி பார்க்கப் புறப்பட்டு, சக்கரம் பழுதானதால் ஒரு நெடுஞ்சாலையில் காத்திருக்க வேண்டும்?

உங்களிடம் இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் ரசிகர்களாகிய எங்களுக்குப் பிடித்தது. அவை தான் தோனி என்ற மனிதனை, தோனி என்ற கிரிக்கெட் வீரனை விட உயர்ந்த இடத்தில் வைக்கிறது.

அன்புடன்

ஒரு ரசிகன்

பி.கு - வருடம் முடிய சில நாட்கள் மட்டுமே இருந்த போது, நீங்கள் முடிவெடுத்த தருணமும், அது எதிர்பாராத வகையில் எங்களை வந்து சேர்ந்த விதமும். எங்களுக்குப் பிடித்துள்ளது. வெள்ளை உடையை விடுத்து வண்ண உடையை அணியுங்கள் தோனி. உங்களுக்காக விசில் அடிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

- © தி இந்து ஆங்கிலம், தமிழில் - கா.கி

  • தொடங்கியவர்

டோணியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது... முதல்முறையாக மவுனம் கலைத்த விராட் கோஹ்லி

 

 

சிட்னி: மகேந்திர சிங் டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது எதிர்பார்க்காதது என்றும், அதிர்ச்சியளிக்கிறது என்றும் புதிய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்தியா. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். 4வது போட்டியில் கூட தன்னால் களமிறங்க முடியாது என்று பிசிசிஐ வாயிலாக டோணி அறிவிப்பை வெளியிட்டார். டோணியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது... முதல்முறையாக மவுனம் கலைத்த விராட் கோஹ்லி டோணியின் திடீர் முடிவுக்கு, துணை கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் அவருக்கு ஆதரவாக உள்ள பிசிசிஐ நிர்வாகிகள்தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

 

 

ஆனால் கோஹ்லி இதுவரை, டோணியின் ஓய்வு குறித்து கருத்து எதையும் சொல்லாமல் மவுனமாக இருந்து வந்தார். சிட்னியில் நாளை, ஆஸி.க்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இன்று நிருபர்களுக்கு கோஹ்லி பேட்டியளித்தார். அப்போது டோணி ஓய்வு குறித்தும், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப்போவது எப்படி என்பது குறித்தும் கோஹ்லி கூறினார். கோஹ்லி கூறியதாவது: டோணி தனது ஓய்வு முடிவை அறிவித்ததும் ஒரு நிமிடம், நாங்கள் திணறிவிட்டோம். ஏனெனில் அணி வீரர்கள் யாருமே டோணி இதுபோன்ற முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. டோணியின் முடிவு குறித்து எங்களில் யாரிடமும் பதில் இருந்திருக்கவில்லை. எனவே, டோணியின் முடிவு எங்கள் அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

 

டோணியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, நெருக்கடியான சந்தர்ப்பங்களில், வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து டோணியிடமிருந்து பாடம் கற்க வேண்டும். நெருக்கடியான நேரங்களில் டோணி எடுக்கும் முடிவுகள் அபாரமாக இருக்கும். இவையெல்லாம் விலைமதிப்பில்லாத குணநலன்களாகும். எந்த ஒரு கேப்டனாக இருந்தாலும், டோணியை போல திட்டமிட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். ஆஸ்திரேலியாவுக்கு நாம் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்ற எண்ணம் இந்திய அணி வீரர்களுக்கு வந்தால் வெற்றி எளிதாகிவிடும். நேர்மறையான எண்ணங்களுடன் சிட்னி டெஸ்ட் போட்டியை இந்தியா அணுக வேண்டும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/dhoni-s-retirement-came-as-shock-says-virat-kohli-218339.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தோனி முடிவுக்கு கபில் பாராட்டு
ஜனவரி 13, 2015.

 

கோல்கட்டா: ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என, சரியான நேரத்தில் தோனி முடிவு எடுத்தார்,’’ என, கபில்தேவ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தொடரில், மெல்போர்ன் போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்றார் கேப்டன் தோனி. இதுகுறித்து இந்தியாவுக்கு 1983ல் உலக கோப்பை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியது:

தோனி மிகச்சிறந்த வீரர். இந்தியாவுக்காக பல்வேறு பெருமை தேடித் தந்துள்ளார். அவர் நினைத்திருந்தால் சாதாரணமாக 100 டெஸ்டில் பங்கேற்று இருக்க முடியும்.

பல்வேறு தரப்பிலும் இதைத் தான் தெரிவித்தனர். ஆனால், ஓய்வு பெறுவது என, தோனி முடிவு செய்த பின், நாம் என்ன செய்ய முடியும்.

‘என்னால் முடிந்ததை செய்து விட்டேன். அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு விலகுகிறேன்,’ என, இம்முடிவு எடுத்துள்ளார்.

இப்போதுள்ள வீரர்கள் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி விடாமல், முடிந்தவரை நீண்ட ஆண்டுகள் விளையாடும் நிலையில், தோனியின் முடிவு துணிச்சலானது.

 

 

புதிய எண்ணங்கள்:

இவரது ஓய்வு நமக்குள் புதிய எண்ணங்களை விதைத்துள்ளது. அதாவது, வாழ்க்கை முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. போதும் என்ற எண்ணம் எப்போது தோன்றுகிறதோ, அப்போதே இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்று விட வேண்டும்.

 

நல்ல பாடம்:

கிரிக்கெட்டில் 30 ஆண்டுகள் மற்றும் வாழ்க்கை முழுவதும் நிர்வாக பதவியில் நீடிக்க விரும்புபவர்கள், தோனியின் ஓய்வு முடிவில் இருந்து, பாடம் கற்றுக் கொள்வர் என, நம்புகிறேன்.

 

நம்பிக்கை உள்ளது:

வரும் உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை இம்முறை தவற விட்டால், இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும். இது மனதுக்கு மிகவும் வலியை தரும்.

 

வேண்டும் 3 கேப்டன்:

டெஸ்ட், ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனித் தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு டெஸ்ட் வீரரும், சிறந்த ‘டுவென்டி–20’ கேப்டனாக இருக்க முடியாது. அதேபோல, ஒவ்வொரு ‘டுவென்டி–20’ கேப்டனும், டெஸ்ட் அணிக்கு சிறப்பான முறையில் தலைமை ஏற்க முடியாது.

 

ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக யோசனை செய்ய வேண்டும். எனது தேசமும், கிரிக்கெட் போர்டும் இதைப் புரிந்து கொண்டு 2 அல்லது 3 தனித்தனி கேப்டன்களை நியமிக்கும் என, நம்புகிறேன். இது நமது கிரிக்கெட் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமாக உதவும்.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1421171130/kapildevhailsDhoniretirementtiming.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.