Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னன் என்ற மமதையில் செயற்படும் மகிந்த ராஜபக்ஷ; மன்னாரில் மைத்திரிபால சிறிசேன

Featured Replies

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக நீங்கள் எல்லோரும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளீர்கள் என்பதனை நான் அறிகின்றேன்.இந்த வேளையில்  எதிர்வரும் 8 ஆம் திகதி எங்களுடைய அன்னச்சின்னம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன் என  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ;

 

 இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் ஏன் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர் என்ற விடயத்தை நான் சுருக்கமாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.  இரண்டு தடவைகள்   மகிந்த ராஜபக்ஷ  ஆட்சிபீடம் ஏறியது உங்களின் வாக்குகளினால் என்பதனை நீங்கள் அறிவீர்கள். இன்று மகிந்த ராஜபக்ஷவின் நினைப்பு என்னவென்றால் தான் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெறவில்லை என்பதே. ஒரு மன்னன் என்ற மமதையில் அவர் செயற்பட்டு வருகின்றார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக அவர் மாறிவிட்டார்.பலதரப்பட்டவர்களை அவர் அச்சுறுத்தி வருகின்றார்.பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் ஆலோசனைகளை அமுல்படுத்தாது அச்சுறுத்தி வருகிறார்.  நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவையும் அச்சுறுத்தியுள்ளார்.

 

அதனால் இன்று நீதியரசர்கள்கூட அச்சப்படுகின்றனர். இந்த நாட்டில் பொலிஸார்  ராஜபக்ஷவின் குடும்பத்தினரின்  கோரிக்கைகளின்படி செயற்பட கட்டளை பிறப்பித்துள்ளார். அதேபோன்றுதான் முப்படைகளுக்கும் அவர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். வியாபாரிகளையும், பெரிய தொழில் அதிபர்களையும் அச்சுறுத்தி கப்பம் பெற்று ராஜபக்ஷவின் குடும்பம் செயற்பட்டு வருகின்றது.மக்களுக்கான நிதிகளிலும் அவர்கள் மோசடி செய்து வருகின்றனர்.

 

இந்த நாட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாவில் அரைவாசிகூட செலவு செய்யப்படாமல் அவர்களின் பைகளுக்குள் செல்கின்றது. இந்த நாட்டில் பலர் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் பலர் வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகள், மீனவர்களுக்கு அதிக பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளின் பிரச்சினை குறித்து இந்த அரசு எவ்வித அக்கறையும் எடுப்பதில்லை. நாட்டில் சிறுநீரக நோய் அதிகரித்துள்ளது.இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளிநாட்டில் இருந்து விவசாயத்திற்கு பசளை,கிருமி நாசினி ஆகியவற்றைக் கொண்டு வருவதாலேயே   விவசாயிகள் இன்று இந்த சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

நான் விவசாய அமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளில் இருந்து பசளைகள்,கிருமி நாசினிகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் எனக் கூறினேன்.ஆனால் எதனையும் அவர்கள் செவிமடுக்கவில்லை. இவற்றிற்கு அதிகமான பணத்தைக் கொடுப்பதினால் விவசாயிகள் செத்து மடிந்தால் என்ன என்று அவற்றைக் கணக்கில் எடுக்காது செயற்படுகின்றனர். விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது அவர்களுக்குச் செய்த மாபெரும் துரோகமாகும். நாங்கள் உங்களுக்கு தெளிவாகச் சொல்லுகின்றோம், நாம் அமைக்கும் எமது ஆட்சியில் விவசாயிகளுக்கு அதிகமான ஓய்வூதியத்தை பெற்றுத்தருவதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

 

இந்த நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்காது இறக்குமதியை ஊக்குவித்து எமது விவசாயிகளை மிகவும் வதைக்கின்றது. நாம் உருவாக்கும் இந்த ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பழ வகைகள், மரக்கறி  வகைகள் ஆகியவற்றின் இறக்குமதிக்குத்  தடை விதித்து எமது நாட்டு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் விவசாய,உற்பத்தி நடவடிக்கைகளை  ஊக்கப்படுத்துவோம். இந்த அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பார்ப்பதில்லை. மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மீன்பிடி அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னவுக்கு இந்த அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை. மீனவர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளோம்.

 

மீனவர்களுக்கும் ஓய்வூதியத்திட்டத்தை நாங்கள் அமுல்படுத்துவோம்.அதே போன்று  தேசிய  ரீதியில்  மீன்பிடித்துறையை ஊக்குவித்து அவர்களின் தொழில் துறையை வளப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த நாட்டு மீனவர்களுக்கு வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் படகுகள், வள்ளம், வலைகள் போன்றவற்றிற்கான வரிகளை முழுமையாக நீக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களுக்காக நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எவ்வளவுதான் இந்த நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் மனித வளங்களை ஒரே இடத்தில் ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வதற்கு வெறுமனே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மாத்திரம் போதுமானவையல்ல. ஒரு துப்பாக்கியில் இருந்து வரும் சத்தத்தை இன்னொரு துப்பாக்கியின் சத்தத்தினால் நிறுத்த முடியும். ஆனால் மனிதர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள அச்சத்தை  நிறுத்த முடியாது. யுத்தம் முடிவடைந்தபோது அந்த மக்களை ஒரே இடத்தில் அமரச்செய்வதற்கு முடியாமல் போயுள்ளது. நாங்கள் உருவாக்கப்போகும் புதிய அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை ஒற்றுமைப்படுத்துகின்ற பணியினை செய்வோம் என்பதனைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த மக்களின் குரல் வளைகளை வெடிச்சத்தங்களினாலும்,துப்பாக்கியினாலும் ஒரு போதும் நிறுத்த முடியாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

 

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு போதனைகள் உள்ளன. அந்த வகையில் பௌத்த மதம் போதித்தது எவ்வாறு எல்லா மதங்களையும் ஒற்றுமைப்படுத்துவது என்று.அதேபோன்று முஹம்மது நபி  மனித இதயங்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்துவது எனக் கூறியுள்ளார். அதே போன்று இயேசு கிறிஸ்து  மனித இதயங்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்துவது எனக் கூறியுள்ளார். எனவே நாங்கள் தெளிவாகச் சொல்லுகின்றோம்  மக்களை ஒற்றுமைப்படுத்துவது துப்பாக்கியினாலோ அல்லது வெடிச்சத்தங்களினாலோ அல்ல. மனிதர்களின் உள்ளங்களினால் மாத்திரமே.  நான் இந்த மக்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்து வேன்? ஏற்கனவே கூறியது போன்று மதங்கள் எதைச் சொல்லுகின்றனவோ அந்த மத கலாசாரத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்துவேன்.

 

http://thinakkural.lk/article.php?article/sgkxalhx4c5205fea16e782b10971fwmunc1b1240e4b3c797012e289tczrc#sthash.6FPf54Y3.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.