Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் பேசும் கொள்கையுடையவன் நானல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
    “வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் பேசும் கொள்கையுடையவன் நானல்ல

யாழ். ஐ.ம.சு.மு பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி

 

 

வடக்கின் அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய்களை வடமாகாண சபைக்கு ஒதுக்கியுள்ளபோதும் அவற்றில் 50 வீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகள் வடமாகாண சபையால் மேற்கொள்ளப்படவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

வடக்கில் ஒன்றை பேசுவது, தெற்கில் ஒன்றைப் பேசுவது என்ற வேறுபட்ட கொள்கை தம்மிடம் கிடையாது எனச் சுட்டிக்காட்டிய அவர், வடமாகாணத்திற்கு வீதி, புகையிரதப் பாதை உள்ளிட்ட உட்கட்டுமான வசதிகள் மாத்திரமன்றி கல்வித்துறையிலும் பாரிய வளர்ச்சியைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. யாழுக்கு வந்த ஜனாதிபதிக்கு வடமாகாணத்தின் கலாசாரத்துக்கமைய மேள, தாளங்கள் முழங்க

அமோக வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலு மிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் துரையப்பா விளையாட்டரங்கில் கூடியிருந்தனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி துரையப்பா விளையாட் டரங்கிற்குள் நுழைந்ததும் கைகளைத் தட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த், குமார வெல்கம, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ வித்தாரண, டி.யூ.குணசேகர, பாராளுமன்றக் குழுக் களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்டர் அலன்டின் எம்.பி. வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா, மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப் பாளருமான அங்கஜன் ராமநாதன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன், வெகுஜன ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந் தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கஜன் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து ஜனாதிபதியை வரவேற்றனர்.

மக்கள் வெள்ளத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடமாகாண சபைக்கு நாம் பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளோம். ஆனால் அவற்றில் 50 வீதமான பணமே செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபை உங்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை நீங்களே சொல்ல வேண்டும். வடமாகாண சபையில் செலவு செய்யப்பட்ட பணத்தைக் கொண்டே எவ்வாறான அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்துகொள்ள முடியும்.

வடக்கில் உட்கட்டுமான அபிவிருத்தி மட்டுமன்றி கல்வித் துறையிலும் நாம் பல்வேறு அபிவிருத்திகளை மேற் கொண்டுள்ளோம். அண்மையில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட் சையில் கணிதப் பிரிவில் உங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவனே முதலாவ தாக வந்துள்ளார். வடமாகாணத் தில் கல்வித்துறையை மீண்டும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வர நாம் எடுத் திருக்கும் நடவடிக்கைகளை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும்.

எனினும், மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை. மாறாக கல்வியை தனியார் மயப்படுத்தும் பணத்துக்கு விற்கும் திட்டங்களே உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் இலவசக் கல்வியிலோ அல்லது இலவச சுகாதார சேவையிலோ எவரும் கைவைப்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.

நாம் நாட்டை அபிவிருத்தியில் முன்கொண்டு சென்றுள்ளோம். நாடு இன்னும் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமா மீண்டும் பின்னோக்கிச் செல்ல வேண்டுமா என்பதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும். நான் வடக்கிற்கு ஒன்றையும் தெற்கிற்கு ஒன்றையும் சொல்பவன் அல்ல. எந்தப் பகுதியிலும் ஒன்றையே சொல்லும் தைரியம் எனக்கு உண்டு.

தமிழர்களின் பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் பேச்சுக்கு வராவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும்? வடமாகாண சபைக்குத் தேர்தலொன்றை நடத்த முற்பட்டபோது பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன் என்ற ரீதியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் செல்லும் என்று தெரிந்தும் தேர்தலை நடத்தியிருந்தேன்.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத் துக்கு நீரை வழங்குவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனினும் யார் எதிர்த்தாலும் யாழ். மாவட்ட மக்களுக்கு நாம் தண்ணீரை நிச்சயமாக வழங்குவோம்.

நான் சிறுவயது முதல் வடபகுதியில் தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டவன். பாடசாலைக் காலத்திலும் சரி, பல்கலைக்கழகத்தில் படித்த போதும் சரி அதன் பின்னர் பாராளு மன்ற உறுப்பினரான பின்னரும் சரி பல தடவைகள் வடக்கிற்கு வந்து சென்றுள்ளேன்.

ஜனாதிபதியான பின்னர் 11 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன். ஆனால் மைத்திரிபால சிறிசேன எத்தனை தடவைகள் வடக்கிற்கு வந்தார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவரை உங்களுக்குத் தெரியுமா என்பது கூட எனக்குத் தெரியாது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசே சிறந்தது என்ற பழமொழியொன்று உள்ளது. எனவே நடைபெறவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி, நிம்மதியாக வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். உங்கள் பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள். அவர்களுக்கு வளமான எதிர்காலம் ஏற்படுத்தப்பட வேண்டும். இனவாத அரசியல் வேண்டாம். உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்குவதற்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

http://thinakaran.lk/2015/01/03/?fn=n1501034

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.