Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதற்கும் சோரம் போனவர்களல்ல - அரியநேத்திரன்

Featured Replies

Ariyanethiran-mp_3.jpg

 

 வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதற்கும் சோரம் போனவர்கள் அல்லர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் நின்று அதன் தீர்மானத்தை ஏற்று செயற்படுபவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
 
இந்த நாட்டிலே 6 தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை. இரண்டு தடவைகள் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்தும் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காது அதனைத் தட்டிக் கழித்திருக்கிறார். அவர்  நினைத்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அதனைச் செய்திருக்க முடியும். இவ்வாறான நிலையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கூடி ஆராய்ந்த போது மூன்று விதமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஒருவரை வேட்பாளராக நிறுத்துதல் மற்றையது தேர்தலை பகிஸ்கரித்தல் இறுதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தல் என்பதாகும்.
 
வட கிழக்கு மக்களின் கருத்தும் இதுவாகவே இருந்தது. ஆதலால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க முன்னரே வடகிழக்கு மக்கள் மைத்திரி பாலவை ஆதரிப்பதாக தீர்மானித்து விட்டார்கள். அதன் பிற்பாடுதான் நாங்கள் சொல்ல வேண்டிய கருத்தை அறிவித்து இருக்கின்றோம்.
 
இந்தத்தேர்தலில் வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தமையால் தென்னிலங்கை மக்களிடையே இனவாதம் விதைக்கப்படலாம்  என்ற கருத்துக்களையும் பலர் எங்களிடம் கூறியிருந்தார்கள். இருந்தும் வெளிப்படையாக எமது நிலைப்பாட்டை அறிவித்ததால் இந்த தேர்தலின் பிற்பாடு சர்வதேச அரங்கிற்கு எமது பிரச்சினைகளை கொண்டு செல்லும் போது இது எமக்கு சாதகமாக அமையும். 
 
இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை. முன்னாள் போராளிகள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத நிலை வட கிழக்கில் எத்தனையோ விதவைகள் இருக்கின்றனர். வட கிழக்கில் அத்து மீறிய குடியேற்றங்கள் இடம்பெறுகிறது. இவற்றையெல்லாம் செய்து விட்டு தமிழர்களிடம் இன்று வாக்குக் கேட்டு வருகிறார் மஹிந்த ராஜபக்ஷ இந்த அட்டூழியங்களை செய்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார்.
 

தமிழரின் பிரச்சனைகள் தமிழரின் கைகளில்தான் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.