Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்
ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு மீதான விசாரணை மார்ச் 15-க்கு ஒத்திவைப்பு- ஆஜராகிறார் ஆச்சார்யா!
 
 

 டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டதால் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

  இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி தொடங்க இருந்தது. ஆனால் இதை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடர்பான வழக்கை விசாரிப்பதால் ஜெயலலிதா தரப்பு வழக்கை ஒத்திவைக்க கோரியது. இதை ஏற்று பிப்ரவரி 23-ந் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Jayalalithaa case adjourned to march 15

பிப்ரவரி 23-ந் தேதியன்றும் ஜெயலலிதா தரப்பு மேலும் ஒரு வார காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியது. ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் இதனை நிராகரித்து கர்நாடகா அரசு தரப்பு தம்முடைய இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்தார். அவர் 2-வது நாள் வாதத்தை நிறைவு செய்த போது, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 10-ந் தேதி(இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

 

இன்று மூத்த வழக்கறிஞர் தவே தம்முடைய இறுதிவாதத்தை நிறைவு செய்தார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை வரும் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களுக்கு எதிரான வாதத்தை கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா முன்வைக்க இருக்கிறார்.

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வழக்கை இழுத்தடிக்க ஜெ. எதையும் செய்வார்: அப்பீல் மனு மீதான விசாரணையில் ஆச்சார்யா அதிரடி
 

 

 டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதையும் செய்வார் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா சுட்டிக்காட்டினார்.

 

வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டதால் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் பெங்களூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

 

இம்மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி தொடங்க இருந்தது. ஆனால் இதை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடர்பான வழக்கை விசாரிப்பதால் ஜெயலலிதா தரப்பு வழக்கை ஒத்திவைக்க கோரியது. இதை ஏற்று பிப்ரவரி 23-ந் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 23-ந் தேதியன்றும் ஜெயலலிதா தரப்பு மேலும் ஒரு வார காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியது. ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய பெஞ்ச் இக்கோரிக்கையை நிராகரித்து கர்நாடகா அரசு தரப்பு இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்தார். அவர் 2-வது நாள் வாதத்தை நிறைவு செய்த போது, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

பின்னர் மார்ச் 10-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையில் தவே, தம்முடைய இறுதிவாதத்தை நிறைவு செய்தார். தவே தம்முடைய வாதத்தில் பெங்களூரு விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவிக்கப்பட்டது எப்படி என்பதை விரிவாக தம்முடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) கண்ணைமூடிக் கொண்டு அந்த தீர்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதை கூட தெரிவிக்காமல் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகளை பிழையாக மதிப்பிட்டு விடுதலை செய்திருக்கிறார் என விவரித்திருந்தார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு வைக்கப்பட்டது.

 

ஆஜரானார் ஆச்சார்யா

இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் தம்முடைய வாதத்தின் தொடக்கத்திலேயே, இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக எதையும் ஜெயலலிதா செய்வார். அவர் 2 முறை முதல்வராக இருந்த காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் 76 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

ஆச்சார்யா முன்வைத்த வாதம்:

இந்த வழக்கின் கீழ்நீதிமன்ற விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் அவருக்கு ரூ1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் இருந்தே இந்த வழக்கை நடத்துவதில் ஜெயலலிதா ஆர்வம்காட்டவில்லை என்பது வெளிப்படும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் கர்நாடகா அரசு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை நடத்தியது.

ஆகையால் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வதை ஜெயலலிதா தரப்பு கேள்விக்குள்ளாக்க முடியாது. இது வழக்கை இழுத்தடிப்பதற்காகத்தான். பெங்களூர் கீழ் நீதிமன்றம் சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான வாதங்களை முன்வைக்க கர்நாடகா அரசு தரப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

கர்நாடகா அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தை முறையாக பரிசீலித்திருந்தால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கணக்குப் பிழையே ஏற்பட்டிருக்காது. கீழ்நீதிமன்றம் ஜெ. உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்து அளித்த முறையான தீர்ப்பை எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் கர்நாடகா உயர்நீதிமன்றம் மாற்றியிருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ1 கோடி சொத்து முறைகேடாக குவிக்கப்பட்டிருந்தாலும் அது முறைகேடானதுதான். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த வழக்கின் போக்கே மாறிவிட்டது.

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் வங்கிக்கடன் ஆவணங்கள் எங்கே?: உச்ச நீதிமன்றம்

 

sup.jpgபுதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்ற வங்கிக் கடன்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேரை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவாராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி, ''தமிழக முதல்வராக ஜெயலலிதா 1991-1996 ஆம் ஆண்டுகளில் இருந்தபோது 66 கோடி ரூபாய் வரை வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2001-ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றபோது இந்த வழக்கை இழுத்தடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அதனால் இந்த வழக்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.

அரசின் சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் நீக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலேயே ஒரு வழக்கு தொடரப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராக தவறியதற்கு கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்ததும் நடந்தது.

அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராக வேண்டும் என்றருச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது விசாரணை முடிவடைந்துவிட்டது. எழுத்து வடிவில் வாதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஒரு நாள் அவகாசம் மட்டுமே இருந்த நிலையில் நாங்கள் 50 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தோம். அதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

அத்துடன் வங்கியில் பெற்ற கடனையும் வருமானமாக கர்நாடக உயர் நீதிமன்றம் கருதி, அவரது சொத்துகளை கணக்கிட்ட செயல் தவறானது. அதை கணக்கில் எடுத்திருந்தால் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணிதப்பிழையே வந்திருக்காது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "வங்கிகளிடம் இருந்து ஜெயலலிதா பெற்ற கடன் தொகைக்கான ஆவணங்கள் உள்ளனவா?' எனக் கேள்வி எழுப்பினர். மேலும், வங்கிகளின் ஆவணங்கள் இன்றி, இதனை எவ்வாறு கீழ் நீதிபதி குன்ஹா கணக்கில் எடுத்துக் கொண்டார் என்றும் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஆச்சார்யா, "பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த ஆவணங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வெறும் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எவ்வாறு ஆவணங்களின் விவரங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டது. எந்த தேதியில் எவ்வளவு தொகையினை ஜெயலலிதா கடனாக பெற்றார் யார் அனுமதி வழங்கியது என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து கர்நாடக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்றும், இல்லையெனில் சிரமம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

http://www.vikatan.com/news/india/60649-where-jayalalitha-bank-loan-documents-sc.art

  • தொடங்கியவர்

கிருஷ்ணகாந்த் வழக்கை காரணம் காட்டி ஜெ. உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது: மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா தரப்பு வாதம்

 
 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.

கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி ஜெயலலிதா உள்ளிட்டோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்ய முடியாது என கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. நேற்று கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிடும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2004-முதல் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகா நடத்தி வருகிற‌து. எனவே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடகாவுக்கு முழு உரிமை இருக்கிறது. எங்களுடைய மேல்முறையீட்டை ஜெயலலிதா தரப்பு ஆட்சேபிக்க‌ முடியாது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையில், நீதிபதி குமாரசாமி கூறியபடி, கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கை காரணம் காட்டி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மதிப்பு ரூ. 1 கோடிக்கு அதிகம். மாதம் ரூ. 1 சம்பளம் பெற்ற ஜெயலலிதாவால் எப்படி ரூ. 1 கோடி சொத்துக்குவிக்க முடியும்?. சட்டத்துக்கு புறம்பாக குவிக்கப்பட்ட சொத்துக்கு வருமான வரி தாக்கல் செய்தால், அவை சட்டப்பூர்வமான சொத்துக்களாக மாறிவிடுமா''என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பினாகி சந்திரகோஷ், “ ஜெயலலிதா தேசிய, தனியார் வங்கிகளில் பெற்ற மொத்த கடன்கள் எவ்வளவு என்பதை புதன்கிழமை தாக்கல் செய்யுங்கள்''எனக்கூறி, வழக்கை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

திமுக கோரிக்கை

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞ‌ர் அந்தியர்ஜூனா, திமுக தரப்பு வாதிட உரிமையுள்ளது எனக் கூறி, அனுமதி கோரினார்.

அதற்கு நீதிபதி பினாகி சந்திர கோஷ், “முதலில் கர்நாடக அரசு, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பு, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடையட்டும். அதன் பிறகு உங்களது மனு குறித்த விசாரணையை வைத்துக்கொள்ளலாம்''என்றார்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8359815.ece?homepage=true&relartwiz=true

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, கோழி, பிக்பக்கட் என்று ஐந்தும் பத்தும் திருடுகிறவந்தான்  சிக்குப் பட்டு சின்னாபின்னமாகி வாழ்க்கையத் தொலைக்கின்றான். மில்லியன், பில்லியன் என்று கொள்ளை அடிக்கிறவங்கள் சமூகத்தில் கௌரவமானவர்களாகக் காட்டிக் கொண்டு தனது ஏழு தலைமுறைக்கும் சொத்துகள் சேர்த்துவிட்டு சுகபோக வாழ்வு வாழ்ந்து போகின்றார்கள். தீர்ப்புகளை அவர்களின் கல்லறை கேட்டுக் கொண்டிருக்கின்றது....!

சாதாரணமாக ஒருத்தர் தேர்தலில் நிக்கப் போனால் "நீ ஏதாவது குற்றம் செய்தாயா , உன்மீது வழக்குகள் உள்ளனவா , உன் தந்தை, தாத்தா, குடும்ப உறுப்பிணர்கள் குற்றம் செய்தார்களா என்று ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கிடக்கு. ஆனால் இன்று தேர்தலில் நிற்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றெல்லோரும் ஊழல், கொலை, போன்ற பலதரப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளாகத்தானே இருக்கின்றார்கள். தேர்தல் அலுவலகத்தில் நுழையவே அருகதையற்ற இவர்கள் எல்லாம் எப்படி தேர்தலில் நிக்கின்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை....!

  • தொடங்கியவர்
ஜெயலலிதா தனது சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?: சுப்ரீம்கோர்ட்டில் ஆச்சார்யா
 
 
டெல்லி: அரசு ஊழியர் நடத்தை விதிகள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
 
 
 இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தமது இறுதி வாதங்களை முன்வைத்தார். அப்போது அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்குப் பொருந்தாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியிருப்பது தவறானது. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள் என்பது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு பொருந்தும். இதனடிப்படையில் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியர். தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை.
 
ஆனால் ஏன் ஜெயலலிதா தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்தார்?. ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களை வைத்து அவரை விடுவித்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்படும் வழக்குகளில், எப்படி வருமானம் வந்தது என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் தெளிவாகவே கூறியுள்ளது. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அப்படி விவரிக்கப்படவில்லை.
 
இதற்கு மாறாக வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்களை காட்டியிருக்கிறார்கள். வருமான வரித்துறை ஒருவருக்கு எப்படி வருமானம் வந்தது என்பதை பார்ப்பதில்லை. இதனால் வருமான வரி ஆவணங்களைக் காட்டிவிட்டு இப்படித்தான் வருமானம் வந்தது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வருமான வரி ஆவணங்களை சொத்துக்கான ஆதாரமாக கருதவே முடியாது என்றார் ஆச்சார்யா.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-failed-declare-assets-249092.html
  • தொடங்கியவர்
நமது எம்ஜிஆர் மூலம் வருமானம் வந்ததா?- சொத்து குவிப்பு வழக்குக்கு பின்னரே சந்தாவே வந்தது...ஆச்சார்யா
 
 
 டெல்லி: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். சந்தாக்கள் மூலமாகவும் தமக்கு வருமானம் வந்ததாக ஜெயலலிதா கூறுகிறார்... ஆனால் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்ட பின்னரே நமது எம்.ஜி.ஆர். நாளேட்டுக்கு சந்தா திட்டமே அறிமுகம் செய்யப்பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தமது இறுதி வாதத்தில் சுட்டிக்காட்டினார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.
 
இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 23-ந் தேதி நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் தொடங்கியது. கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தவே தமது வாதங்களை 2 நாட்கள் வைத்திருந்தார். இதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று தமது இறுதிவாதத்தை தவே நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் தொடங்கிய விசாரணையின் போது கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் தம்முடைய வாதத்தில், இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடிக்க முயற்சிக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.
 
அத்துடன் அரசின் சிறப்பு வழக்கறிஞர் (பவானிசிங்) நீக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலேயே ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராக தவறியதற்கு கண்டனம் தெரிவித்து அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது விசாரணை முடிவடைந்துவிட்டது. எழுத்து வடிவில் வாதங்களை தாக்கல் செய்ய கர்நாடகா அரசு தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
ஒரு நாள் அவகாசம் மட்டுமே இருந்த நிலையில் நாங்கள் 50 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தோம். அதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. அத்துடன் வங்கியில் பெற்ற கடனையும் வருமானமாக கர்நாடக உயர் நீதிமன்றம் கருதி, அவரது சொத்துகளை கணக்கிட்ட செயல் தவறானது. அதை கணக்கில் எடுத்திருந்தால் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணிதப்பிழையே வந்திருக்காது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வாங்கிய வங்கிக் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; அப்படி தாக்கல் செய்யவில்லை எனில் வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது சிரமம் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதாவின் கடன் விவரங்களை விரிவாக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தாக்கல் செய்தார்.
 
 
பின்னர் அவர் முன்வைத்த வாதம்: 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை தொடங்கிய பின்னர் 1998-ம் ஆண்டுதான் வருமான வரியை அவர் தாக்கல் செய்தார். நமது எம்.ஜி.ஆர். சந்தா மூலம் வருமானம் கிடைத்ததாக ஜெயலலிதா தரப்பு கூறுகிறது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கும் வரையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆருக்கு சந்தா செலுத்தும் திட்டம் என்பது எதுவும் இல்லை. இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய பின்னரே நமது எம்.ஜி.ஆருக்கு சந்தா செலுத்தும் திட்டமே அறிமுகப்படுத்தப்பட்டது. தம்முடைய பிறந்த நாளன்று தொண்டர்களிடம் இருந்து ரூ2.15 கோடி பரிசுப் பொருட்கள் வந்ததை ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டார். ஆனால் ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட்ட கர்நாடகா உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) ரூ1.5 கோடி என குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
 
எதற்காக ஜெயலலிதாவே ஒப்புக் கொண்ட ரூ2.15 கோடி பரிசுப் பொருட்கள் மதிப்பில் ரூ75 லட்சத்தை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்? அதேபோல் ஜெயலலிதா தரப்பின் கடன்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் வருமானமாக மதிப்பீடு செய்தது முழுவதும் தவறானதாகும். கடன்களை எப்படி வருமானமாக கருத முடியும்? இவ்வாறு ஆச்சார்யா தமது வாதத்தை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆச்சார்யா தமது இறுதிவாதத்தை நாளை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதிவாதங்களை முன்வைக்க உள்ளனர்.
  • தொடங்கியவர்

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் பெறப்பட்ட ரூ.14 கோடியும் முறைகேடானது: ஆச்சார்யா

ach.jpgபுதுடெல்லி: நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் பெறப்பட்ட ரூ.14 கோடியும் முறைகேடானது தான் என்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 23–ம் தேதியன்று இறுதி விசாரணை தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது வாதத்தை கடந்த 10–ம் தேதியன்று நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து 7–வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை மீண்டும் தொடர்ந்தார்.

அப்போது, ''ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் சார்பில் கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக மொத்தம் 52 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 48 அபிராமபுரம் இந்தியன் வங்கி கிளையின் கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளது. அந்த 52 கணக்குகளில் இருந்து பணத்தை சிறிது சிறிதாக எடுத்து பல சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் கணக்கு காட்டும் ரூ.14 கோடியும் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் காண்பிக்கப்பட்டவையாகும்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பான செலவு 6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 ரூபாய் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. தனி நீதிமன்றம், திருமணத்துக்கான செலவை ரூ.3 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டது. இதனை வெறும் 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக உயர் நீதிமன்றம் கணக்கில் கொண்டது. முதலில், இந்த திருமணத்துக்கு தான் செலவு ஏதும் செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறினார். பிறகு இந்த திருமணத்துக்கான அனைத்து செலவையும் சசிகலா செய்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் மொத்தம் ரூ.28 லட்சத்து 68 ஆயிரம் செலவு செய்ததாக காண்பிக்கப்பட்டது" என்று வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், திங்கட்கிழமையில் இருந்து ஹோலி பண்டிகை விடுமுறை ஒரு வாரத்துக்கு உள்ளதால் வழக்கின் மீதான விசாரணை வருகின்ற 29–ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடரும் என்றனர். இதற்கு .ஆச்சார்யா, ‘திருமணம் தொடர்பான செலவுகள் குறித்து எங்கள் தரப்பில் மேலும் வாதங்கள் உள்ளன. இதுதவிர அசையும், அசையா சொத்துக்கள் பற்றி எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க மேலும் ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. அது முடிந்த பிறகு மற்ற சொத்துக்கள் பற்றிய வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்த வாதங்களை ஏப்ரல் 1–ம் தேதி வரை இழுக்காமல் மார்ச் 31–ம் தேதிக்குள் முடித்து விடுவேன்’ என்றார்.

இதற்கு நீதிபதிகள் சிரித்துக் கொண்டே, ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஏப்ரல் 1–ம் தேதிக்கு அதனை இழுத்துச் சென்று எங்களை முட்டாள் ஆக்க வேண்டாம்' என்று கூறி வழக்கின் விசாரணையை வருகின்ற 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

http://www.vikatan.com/news/india/60775-14-crore-obtained-by-namathu-mgr-is-illegitimate.art

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு; உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

jayalalitha3502.jpgபுதுடெல்லி; தவறான நடைமுறை பின்பற்றப்பட்டிருப்பதால் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேற்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என வழக்கறிஞர் பரமாந்த கட்டாரியா மனு செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்று சொல்லி, வழக்கறிஞர் பரமாந்த கட்டாரியா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கின் இறுதியில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த நடைமுறை தவறு. சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 7 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கொடுத்து தீர்பபளித்திருந்தால் மட்டும்தான், குற்றவாளிகள் மேல் நீதிமன்றத்தை நாட முடியும். அப்படி இல்லாமல், 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கொடுத்திருந்தால், குற்றவாளிகள் தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில்தான் சீராய்வு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவேண்டும்.

எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முறையானது அல்ல. அதில் வெளியான தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவும் முறையான நடைமுறைக்குள் வராது. எனவே, இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவாராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/61403-petetion-on-appeal-in-jaya-case-in-supreme-court.art

  • தொடங்கியவர்
ஜெ.வின் சரியான சொத்து மதிப்பு என்ன? நீதிபதி குமாராசாமி தீர்ப்பில் எது பிழை? சுப்ரீம்கோர்ட் கேள்வி
 
 
 
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சரியான சொத்து மதிப்பு என்ன? ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தீர்ப்பில் என்ன கணக்கு பிழை? என்பதை தெளிவாக விளக்குமாறு கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பிவி ஆச்சார்யாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
 
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடகா அரசின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆஜராகி தமது இறுதிவாதத்தை முன்வைத்தார்.
 
பிவி ஆச்சார்யா தமது வாதத்தின் போது, ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதின்றத்தின் தீர்ப்பில் கணக்குப் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் தமக்கு கூடுதலாக 1 நாள் அவகாசத்தையும் கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், உங்கள் இறுதிவாதம் என்பது 2-வது கட்ட விசாரணையைப் போல இருக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் என்ன கணக்குப் பிழை இருக்கிறது என்பதைத் தெளிவாக சரியாக விளக்க வேண்டும்;
 
அதேபோல் ஜெயலலிதாவின் சரியான சொத்து மதிப்பு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆச்சார்யாவுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் உங்கள் வாதத்தை நாளை காலையில் 1 மணிநேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆச்சார்யாவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமியும் தம்முடைய வாதத்தை நாளை காலை 1 மணிநேரத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/get-us-the-exact-valuation-the-jaya-s-assets-asks-sc-250051.html
 
 
 
 
ஜெ.வுக்கு தண்டனை விதித்த நீதிபதி குன்ஹா தீர்ப்பு ஊழல் வழக்குகளுக்கு முன்னுதாரணம்- பிவி ஆச்சார்யா
 
 

 டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு (நீதிபதி குன்ஹா) ஊழல் வழக்குகளுக்கு ஒரு முன் உதாரணம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிவி.ஆச்சார்யா பாராட்டு தெரிவித்தார்.

 

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி முதல் விசாரித்து வருகிறது.

 

 இவ்வழக்கில் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே முதலில் தமது இறுதிவாதத்தை முன்வைத்தார். பின்னர் கர்நாடகா அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது இறுதிவாதங்களை முன்வைத்து வந்தார். அவர் தமது வாதத்தில், சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா வருமான வரி கணக்கையே தாக்கல் செய்தார்; அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழுக்கான சந்தாவும் போலியாக உருவாக்கப்பட்டதுதான் என வாதிட்டார்.

 

அத்துடன் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தீர்ப்பில் உள்ள கணிதபிழைகளையும் அவர் விவரித்தார். இவ்வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடகா அரசு, அரசு தரப்பாக இணைந்துள்ளது; ஆகையால் மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா அரசு தாக்கல் செய்ய முடியாது என்ற தமிழக அரசின் வாதமே அர்த்தமற்றது; வழக்கை இழுத்தடிப்பதற்காக ஜெயலலிதா தரப்பு இத்தகைய மனுத்தாக்கல் செய்துள்ளது என்றும் பிவி ஆச்சார்யா வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

இன்றைய விசாரணையின் போது பிவி ஆச்சார்யா முன்வைத்த வாதங்கள்: ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் யாரும் தலையிடவே முடியாது. அந்த அளவுக்கு அனைத்து ஊழல் வழக்குகளுக்கும் முன்மாதிரியாகப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அரசு ஊழியரான ஜெயலலிதா தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டியது கடமை.

 

ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுடைய சொத்துகளை அரசிடம் தெரிவிக்கும்போது ஜெயலலிதா மட்டும் அப்படி செய்ய தவறியது ஏன்?. ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஏனெனில் அந்த தீர்ப்பு புரியாத புதிராக, ஏராளமான கணக்கு பிழைகளுடன் இருக்கிறது. இவ்வாறு ஆச்சார்யா வாதிட்டார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
க.அன்பழகன் தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. வழக்கறிஞர்

 

டெல்லி: மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு இறுதி வாதத்தை முன்வைக்க அனுமதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வலியுறுத்தினார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

 

 இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசின் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது இறுதிவாதத்தை நாளை காலையில் 1 மணிநேரத்துக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதேபோல் இவ்வழக்கின் தொடக்க மனுதாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் தம்முடைய வாதத்தை நாளை 1 மணிநேரத்துக்குள் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், க. அன்பழகன் தரப்புக்கு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யும் உரிமை கிடையாது; ஆகையால் அன்பழகன் தரப்பு இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார்.

  • தொடங்கியவர்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக வாதத்தை மறுத்ததற்கு இதுதான் காரணம்!

 

முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்,  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை,  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

supremecourt-jaya-anbalaganlong.jpg

9வது நாளான நேற்றைய விசாரணையில் ஏற்கனவே நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க கட்டிடங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகள் பதிவாளரின் ஒத்துழைப்புடன் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பல்வேறு சொத்துகள் வாங்கப்பட்ட விதம் பற்றியும் அது தொடர்பான விவரங்களையும் விரிவாக முன்வைத்தார். மேலும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தனி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி தன்னுடைய வாதங்களை நிறைவு செய்தார் பி.வி.ஆச்சார்யா.

இதைத் தொடர்ந்து, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் தனது சுருக்கமான வாதத்தில் ஊழல் தடுப்பு சட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட சில தீர்ப்புகளில் உள்ள முக்கியமான பகுதிகளை படித்துக் காட்டினார். மேலும், "உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள் பற்றி பி.வி.ஆச்சார்யா முன்வைத்த வாதங்களில் உள்ள கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன். ஏற்கனவே இந்த வழக்கில் எனது வாதங்களில் உள்ள முக்கியமான அம்சங்களை தனியாக எழுத்து வடிவில் கோர்ட்டுக்கு தாக்கல் செய்திருக்கிறேன். அனைத்தையும் பரிசீலனை செய்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து இந்த வழக்கில் நீதி கிடைக்க வகை செய்ய வேண்டும்" என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது, அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், உங்கள் தரப்பு வாதத்தில் புதிதாக எதுவுமில்லை. போதுமான அளவுக்கு கர்நாடகா அரசு தனது வாதங்களை எடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களை கருத்தில் கொள்கிறோம் என்று கூறி அன்பழகன் தரப்பு வாதத்தை  கேட்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ், தனது வாதங்களை தொடங்குவார் என்று தெரிகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/61562-jayalalithaa-assets-case-sc-dmk-anbazhagan.art

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
2 நாட்களில் சசிகலா தரப்பு வாதம் நிறைவு.. தேர்தலுக்கு முன்பு, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு?
 

டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு தேதியை சுப்ரீம்கோர்ட் அறிவிக்க வாய்ப்புள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இவ்வழக்கில் முதலில் கர்நாடக தரப்பு வாதம் நடைபெற்றது.

ஆச்சாரியா, தாவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்து வருகிறார். இவர் தனது வாதத்தை வரும் வியாழக்கிழமை முடிக்க உள்ளதாக இன்று கோர்ட்டில் தெரிவித்தார்.

இதையடுத்து, கர்நாடக தரப்பு மீண்டும், பதில் வாதம் செய்ய நீதிபதி அவகாசம் தருவார். இந்த பதில் வாதத்தை, வெள்ளிக்கிழமையோ அல்லது சில நாட்கள் கழித்தோ கர்நாடகா முன்வைக்க முடியும்.இந்த வாதம், எழுத்துப்பூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் வாதிடவும் குறுகிய கால அளவில் வாய்ப்பு தரப்படலாம் எனவும், தெரிகிறது.

இதன்பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். அநேகமாக அடுத்த வாரத்தில், தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக, வழக்கில் தொடர்புள்ள வக்கீல்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.மே 16ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீர்ப்பு அதற்கு முன்பே வெளியாக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியது

 
jaya_sasikala_2137637h.jpg
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. இதனால் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பின் இறுதி வாதம் தொடங்கியது. மூவர் தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “கர்நாடக அரசு குற்றம் சாட்டுவதை போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமி கள் அல்ல. 1991-ம் ஆண்டுக்கு முன்பாகவே மூவருக்கும் தனித்தனியாக வருமானம் இருந்தது. இது தொடர்பாக 1991-96 காலகட்டத்தில் மூவரும் தனித்தனியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல ஜெயலலிதா வுக்கும் சசிகலாவுக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடை பெற‌வில்லை. ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்ததால் ஜெயலலிதாவின் பணத்தை சசிகலா பயன்படுத்தினார் என கூறுவதை ஏற்கமுடியாது. பணப் பரிவர்த்தனை, சொத்துகளை நிர்வகித்தது உள்ளிட்ட சசிகலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை'' என்றார்.

இதையடுத்து அடுத்தகட்ட விசா ரணையை வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article8497465.ece

  • தொடங்கியவர்

ஜெ., வழக்கில் ஆச்சார்யா ஆஜராகக் கூடாது! - மதுரையிலிருந்து புது புயல்

achrya-jayalong.jpg

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆஜராக தடை விதிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை,  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி,  ஏற்கனவே வாதங்களை முடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பி.ரத்தினம் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எழுதியுள்ள சுயசரிதை நூல் ஒன்றில் சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து பல்வேறு விஷயங்களை எதிர்மறையாக குறிப்பிட்டு இருக்கிறார். அவர் முன் முடிவுகளுடன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். எனவே, அவர் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராக கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு,  நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது , ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்க முடியாது என்றும், இதன் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/63107-advocate-acharya-will-not-argue-fo-jayalalithaa.art

  • தொடங்கியவர்

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சொத்து மதிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இறுதிவாதம்

 

 
jaya_sasikala_2137637h.jpg
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிடுகையில் “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அரசு சான்று ஆவணத்தின்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 306 சொத்துகள் இருக்கின்றன.

இதில் சுதாகரனுக்கும் இளவரசிக்கும் மட்டும் 63 சொத்து கள் இருக்கிறது. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 38 லட்சத்து 31 ஆயிரத்து 961 என மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது. இதே போல இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 6 கோடியே 91 லட்சத்து 81 ஆயிரத்து 200 என கூறப்பட்டுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை யின் மதிப்பீட்டு அதிகாரிகள் சுதாகரனும் இளவரசியும் பங்கு தாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராப்பர்டீஸ், ரிவர்வே அக்ரோ உள்ளிட்ட 6 நிறு வனங்களின் அசையும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்தனர்.

கட்டிட மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, இயந்திரங்களின் மதிப்பு ஆகியவற்றை மிகைப் படுத்தி மதிப்பீடு செய்தனர். கட்டப்படாத கட்டிடங்களுக்கும் இயங்காத நிலையில் இருந்த வாகனங்களுக்கும்கூட மிகைப் படுத்தி மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது.

இதன் மூலம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து மதிப்பு 12.90 கோடி எனவும் தனியார் நிறுவனங்களின் மதிப்பு ரூ. 4.60 கோடி எனவும் மதிப்பிட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டனர். இந்த சொத்துகள் யாவும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை'' என்றார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆச்சார்யா ஆஜராக எதிர்ப்பு

மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ரத்னம், ''ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா ஆஜராக கூடாது.

ஆச்சார்யாவின் சுயசரிதை யில் ஜெயலலிதா வழக்கு தொடர் பாக பல்வேறு ஆட்சேபமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அவர் உள் நோக்கத்துடன் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆச்சார்யாவின் நியமனத்தை ர‌த்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இம் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2 வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8526827.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவர் தரப்பு இறுதி வாதம் நிறைவு

 
jaya_sasikala_2137637h.jpg
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் நிறை வடைந்தது. இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது தொகுப்பு வாதத்தை தொடங்கி யுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரின் சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கு நடைபெறுகிறது.

சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தரப்பில் வழ‌க்கறிஞர் சேகர் நாப்டே நேற்று தனது இறுதி வாதத்தை முன்வைத்தார்.

அப்போது, “இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. கர்நாடக அரசின் வாதத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நால்வருக் கும் தண்டனை விதித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் தீர்ப்பும், அவரது முடிவுகளும் பல் வேறு குறைபாடுகளை கொண் டுள்ளன.

மேல்முறையீட்டில் கர்நாடக அரசின் இறுதிவாதம் குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ள தகவல்களுக்கு முரணாக இருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தொடுக்கப்பட் டுள்ள இந்த வழக்கில் இருந்து ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவிக்க வேண்டும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்''எனக் கூறி இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

இவ்வழக்கில், கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பு இறுதி வாதம் நிறை வடைந்துள்ளது. நீதிபதி பினாகி சந்திரகோஷ், “ஜெயல‌லிதா தரப் பில் முன்வைக்கப்பட்ட கேள்வி களுக்கு கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா ப‌தில் அளிக்க விரும்புகிறீர்களா? ''எனக் கேட்டார். இதையடுத்து ஆச்சார்யா தனது இறுதி தொகுப்பு வாதத்தை தொடங்கினார்.

அதில், '' ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதம் முற்றிலும் தவறானது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கர்நாடக அரசு இவ்வழக்கை தக்க‌ ஆதாரங்கள், சாட்சிகள், அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றுடன் தொடுத்துள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்த பிறகே நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது''என்றார்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article8554677.ece

  • தொடங்கியவர்

நாளை வெளியாகிறது ஜெ., வழக்கின் தீர்ப்பு தேதி?

Tamilnadu Assembly Election News: நாளை வெளியாகிறது ஜெ., வழக்கின் தீர்ப்பு தேதி?
 
 

புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வாதம் நாளை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி முதல் கர்நாடக அரசின் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதத்தை முன்வைத்தனர். தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் 4 நாட்கள் வாதிட்டார்.

கடந்த மாதம் சசிகலா தரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடந்த போது கர்நாடக தரப்பில் ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார். இன்றும் ஆச்சார்யாவின் வாதம் தொடர உள்ளது. அதன் பிறகு கர்நாடக தரப்பு பதில் வாதம் முன் வைக்கப்படும் என ஆச்சார்யா நேற்று கூறி உள்ளார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என ஆச்சாரியா தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக தரப்பு வாதம் நாளை முடிவடைந்ததும் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது

http://election.dinamalar.com/detail.php?id=9409

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவல்களை சசிகலா தரப்பு தெரிவிப்பது ஏன்? - கர்நாடக அரசு வழக்கறிஞர் கேள்வி

 
 
சசிகலா (கோப்புப்படம்).
சசிகலா (கோப்புப்படம்).

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா தரப்பு முன்னுக்கு பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 2-வது நாளாக கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா ஆஜராகி தனது இறுதி தொகுப்பு வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர் ‘‘சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த ஆஞ்ச நேயா பிரிண்ட்டர்ஸ் நிறுவனத் துக்கு சொந்தமான கட்டிடங்களின் மதிப்பை சசிகலா தரப்பு நீதிமன்ற த்தில் தெரிவிக்கவில்லை.இது பற்றி கர்நாடக உயர்நீதிமன்றத் திலும், உச்சநீதிமன்றத்திலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களே அளிக்கப்பட்டுள்ளது. அதன் உள்நோக்கம் என்ன?’’ என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நீதிபதி பினாகி சந்திரகோஷ் உத்தரவிட்டதன் பேரில் ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு நகலை சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் தாக்கல் செய்தார்.

கடனாக கருத முடியாது

தொடர்ந்து ஆச்சார்யா வாதிடு கையில், ''சசிகலா உள்ளிட்ட மூவ‌ ரும் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டத்துக்கு உட்பட்ட தாக காண்பிக்க பல தனியார் நிறுவனங்களை தொடங்கினர். இந்த நிறுவனங்கள் செயல்படாத போதும், அதில் இருந்து வருமான‌ம் வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கான வரியையும் செலுத்தி வருமான வரித்துறை தீர்ப்பாயத் தின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டு கின்ற‌னர்.

இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களின் பேரில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் அந்நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருப்பதால், அவற்றை கடனாக கருத முடியாது. எனவே நீதிபதி குன்ஹா சசிகலா தரப்பின் வாதத்தை முழுமையாக நிராகரித்தார். இதையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்''என்றார்.

இதைத் தொடர்ந்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. 3-வது நாளாக இன்றும் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது இறுதி தொகுப்பு வாதத்தை தொடர்வார். எனவே தீர்ப்பு தேதி வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8559376.ece

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கில் 13-ம் தேதிக்குள் வாதத்தை நிறைவு செய்ய கர்நாடகா, ஜெ. தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கெடு

 

 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து வாதங்களையும் வரும் 13-ம் தேதிக்குள் முடித்து கொள்ளுமாறு கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு தரப்பில் மூத்த‌ வழக்கறிஞர் ஆச்சார்யா தனது இறுதி தொகுப்பு வாதத்தை முன்வைத்தார்.

“ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தங்களது அனைத்து பண பரிவர்த்தனை களையும் வங்கிகள் மூலமாகவும், காசோலைகள் மூலமாகவும் மேற் கொண்டுள்ளனர். சில குறிப்பிட்ட செலவுகளுக்கு மட்டுமே ரொக்க மாக பணத்தை செலவு செய்துள்ள னர். இவ்வாறு செய்யப்பட்ட வரவு செலவை வருமான வரித்துறை யில் கணக்கு காட்டி, அவை சட்டத் திற்கு உட்பட்டு நடைபெற்ற பண பரிமாற்றமாக சித்தரித்துள்ளனர்.

ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரும் ஏற்கெனவே தொடங்கப்பட்டு செயல்படாத நிறுவனங்களை வாங்கி, அவற்றின் பேரில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி யுள்ளனர். சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலிதாவு க்கு பினாமியாக செயல்பட்டுள்ளனர். ஜெயலலிதா வின் பணத்தில் 32 தனியார் நிறு வனங்களை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நிர்வகித் துள்ளனர் என கர்நாடக அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு வழக்கில் ஏராளமான கணித பிழைகளுட னும், சட்டத்துக்கு புறம்பாகவும், தவறான முன்னுதாரணத்தின் அடிப் படையிலும் உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அளித்துள்ளார்” என அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “உங்களது (கர்நாடக அரசு தரப்பு) இறுதி தொகுப்பு வாதத்தை எப்போது நிறைவு செய்வீர்கள்? இன்னும் எத்தனை நாட்கள் வாதிடப் போகிறீர்கள்?'' என கேட்டனர். அதற்கு ஆச்சார்யா, “இவ்வழக்கில் பல்வேறு முக்கிய அம்சங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால், வாதிட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

அதற்கு நீதிபதிகள், ''கர்நாடக அரசு தரப்பு இறுதி தொகுப்பு வாதத்தை தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பும் தங்களது பதில் வாதத்தையும், இறுதி தொகுப்பு வாதத்தையும் வரும் 13-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்'' என அறிவுறுத்தினர்.

அடுத்தகட்ட விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 14-ம் தேதியில் இருந்து ஜூன் 29-ம் தேதி வரை கோடை விடுமுறை.

எனவே அனைத்து தரப்பு விசா ரணையும் வரும் 13-ம் தேதிக்கு முன்பாக முடிக்கப்பட்டால், கோடை விடுமுறை காலத்தில் வழக்கின் ஆவணங்களை படிக்க வும், இரு தரப்பு வாதங்களை ஆராயவும், தீர்ப்பு எழுதுவதற்கும் போதிய கால அவகாசம் இருக்கும் என்பதால் இத்தகைய காலக் கெடுவை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81/article8564238.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: கோடை விடுமுறையில் விசாரணை நடக்குமா?- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று முடிவு

 
 
 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கோடை விடுமுறையிலும் நடக்குமா என்பது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று முடிவு செய்யவுள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த‌து. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘‘ ஜெயலலிதாவின் இல்லத்தில் வசித்த சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகிய மூவரும் பல்வேறு வங்கிகளில் கோடிக்க ணக்கில் கடன் பெற்றுள்ளனர். 4 பேர் வங்கி கண‌க்கிலும் நூற்றுக் கும் மேற்பட்ட முறை கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் செயலாளராக பணியாற்றிய ஜெயராமன் சாட்சி யம் அளித்துள்ளார்.

இதே போல ஜெயலலிதாவின் மற்றொரு செயலாளரான விஜயன் என்பவரும், ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சசிகலா வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாக சாட்சியம் அளித்துள்ளார். இதை அடிப்படையாக கொண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதும் கூட்டுசதி யில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. அரசு தரப்பு ஆதாரங்களையும், அரசு சான்று ஆவணங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கூட்டுச தியில் ஈடுபட்டதற்கு தண்டனை வழங்கினார். ஆனால் நீதிபதி குமாரசாமி அந்த தண்டனையை ரத்து செய்ததற்கான விளக்கத்தை தனது தீர்ப்பில் குறிப்பிட வில்லை''என்றார்.

விரைவாக முடிக்க முடியுமா?

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், ‘‘உங்கள் (கர்நாடக அரசு தரப்பு) இறுதி தொகுப்பு வாதத்தை விரைவாக முடித்து கொள்ள முடியுமா?’’ என கேட் டனர். அதற்கு ஆச்சார்யா, ''ஜெ யலலிதா தரப்பு முன் வைத்துள்ள வாதத்துக்கு விரிவாக பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே அரசு தரப்புக்கு வாதிட கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்’’என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘‘உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை வரும் வெள்ளிக்கி ழமை முதல் தொடங்குகிறது. கர்நாடக அரசு தரப்புக்கு பின் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா தரப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரப்பு ஆகியவையும் வாதிட வேண்டும். எனவே கோடை விடுமுறை காலத்திலும் விசாரணை நடத்த வேண்டுமா?’’ என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக இன்று முடிவு செய்யலாம் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article8589354.ece?homepage=true

  • தொடங்கியவர்
தேர்தலுக்கு முன் வராது
ஜெ., வழக்கில் தீர்ப்பு
 
 
 

புதுடில்லி, : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் வாதம், சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறை காலமான, ஜூன், ௧க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_1520928_318_219.jpg

இதனால், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த வழக்கில் தீர்ப்பு வராது என்பது உறுதியாகி
உள்ளது.வருமானத்துக்கு அதிகமாக, ௬௬.௬௫ கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

விசாரணையில்...இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட், நான்கு பேரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் சார்பிலும், தாக்கல்

செய்யப்பட்ட அப்பீல் மனுக்கள், நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளன.

நேற்று, இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் நிறைவு பெறுவதாக இருந்தது. கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, நேற்று வாதிட்டதாவது:

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர், 'பினாமி' கம்பெனி களை துவங்கி, சொத்துகளை குவித்துள்ளனர். பல்வேறு வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன்களை, சிறப்பு கோர்ட்டும், ஐகோர்ட்டும் வருமானமாகக் கணக்கிட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் செலவுத் தொகையான, 13 கோடி ரூபாயை கழித்து விட்டு, மீதமுள்ள, 53 கோடி ரூபாயை வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்தாக, கீழ் கோர்ட் தீர்மானித்தது.

அதை, ஐகோர்ட் மாற்றியமைத்தது. வருமானத்துக்கு அதிகமாக, 2.82 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறிய ஐகோர்ட்டின் கணக்குகளை ஏற்றுக் கொண்டால் கூட, சிறப்பு கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.சட்டப்பூர்வமாக வருமானம் வந்தது என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருப்திகரமாக விளக்கவில்லை. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி, சொத்துகள் சட்டப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டவை என்பதை நிரூபிக்க வேண்டியது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான்

 

இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும், வழக்கில் வாதத்தை நிறைவு செய்ய, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, கூடுதல் கால அவகாசம் கோரினார். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறையான, ஜூன் ௧ம் தேதிக்கு, வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம், வாதத்தை நிறைவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினர்.

விரைந்து முடிக்க...வழக்கமாக, விடுமுறை காலத்தில் வழக்கறிஞர்கள் வாதம் ஒத்திவைக்கப் படுவது கிடையாது. இந்த வழக்கில், மூன்று மாதங்களாக வழக்கறிஞர்கள் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, ஜூன், ௧க்கு தள்ளி வைத்தனர்.இதனால், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், ஜெயலலிதா மீதான வழக்கில் தீர்ப்பு வராது என்பது உறுதியாகியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1520928

  • தொடங்கியவர்

ஜூன் 1-தான் கடைசி..! ஜெயலலிதா வழக்கில் நீதிபதிகள் கறார்

 

supremecourt-jaya-achariyalong.jpg

 

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. 23வது நாளான நேற்று கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதாடுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் சில, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுதாகரன் பெயரில் காண்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை இவர்கள் பெயரில் பதிவு செய்வதற்காக அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டார்கள்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்படும் சுதாகரன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக பெருத்த செலவில் நடந்து உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை நிகழ்ச்சியும் பெருத்த செலவில் நடைபெற்றதாக அவரிடம் ரசீது வாங்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தை அவர்கள் கட்டிடத்துடன் வாங்கி இருக்கிறார்கள். அதற்கான மதிப்பு மிகவும் குறைத்து காண்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகைகள் வருவாய் என்று தவறாக காண்பிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஜெயலலிதா தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு நீங்கள் பதில் வாதம் முன்வைக்கவில்லை. இந்த பட்டியலில் இருந்தே அனைத்தையும் வாசித்து வருகிறீர்கள். இயன்றவரை சுருக்கமாக வாதங்களை முன்வைக்க முயற்சியுங்கள். உங்கள் வாதங்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் தாக்கல் செய்ய முடியுமா?’’ என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஆச்சார்யா, "என்னால் இயன்றவரை சுருக்கமாகவும் அதே நேரத்தில் இந்த வழக்குக்கு மிகவும் முக்கியமான அம்சங்களைத்தான் என்னுடைய வாதத்தில் முன்வைத்து வருகிறேன். பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள். எக்கச்சக்கமான சாட்சியங்கள் என இந்த வழக்கின் மீதான வாதம் நேரத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளும்" என்றார்.
 

sasikala-elavarasi-jaya-sudhakaran1.jpg

உடனே நீதிபதிகள், "ஏற்கனவே உங்களுக்கு நிறைய நேரம் கொடுக்கப்பட்டது. இப்போது இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் வாதத்தை முடித்துக் கொள்வீர்களா? துஷ்யந்த் தவேயும் தனக்கு நேரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். இன்று (நேற்று) மதியம் இந்த அமர்வு இருக்காது. விடுமுறைக்கு முன்பு இதுதான் இறுதி நாள். விடுமுறையில் விசாரணையை தொடரலாமா?" என்று கேட்டனர்.

அதற்கு ஆச்சார்யா, தான் வெளிநாடு செல்வதாகவும், அதனால் மே 30ம் தேதிக்குப் பிறகு விசாரணையை தொடரலாம் என்றும், அப்போது தனக்கு ஒரு முழுநாள் தேவைப்படும் என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள், ஜூன் 1ம் தேதியன்று முழுநாள் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்றும், அன்று ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும், மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அப்போது, இந்தோ தோகா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களை உயர் நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிரான கர்நாடக அரசின்  மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக அரசு தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா கோரிக்கை விடுத்ததோடு, எழுத்து வடிவில் தன்னுடைய வாதங்களையும் தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தனர்.

இதனிடையே, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். அவருடைய வாதத்தை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறும், அவருக்கும் ஜூன் 1ம் தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வரும் 16ம் தேதியில் இருந்து ஜூன் 28ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு கோடை விடுமுறையின் இடையில், அதாவது ஜூன் 1ம் தேதியன்று இந்த விசாரணையை மீண்டும் தொடங்கி அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/64057-jayalalithaa-da-case-adjourned-to-june.art

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று இறுதி வாதம்..! விரைவில் தீர்ப்பு

supremecourt-jaya-anbalaganlong.jpg



முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இதனால் தீர்ப்பு விரைவில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 12ம் தேதியன்று நடந்த விசாரணையின்போது ஜூன் 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியிருந்தனர்.

இதுவரை மொத்தம் 23 நாட்கள் இந்த விசாரணை நடந்து உள்ளது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.பி.ஆச்சார்யா, பேராசிரியர் க.அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியார்ஜூனா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்), மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்கனவே நிறைவு செய்து உள்ளனர்.

ஜெயலலிதா தரப்பு வாதங்கள் மீதான எதிர்வாதத்தை மீண்டும் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா முன்வைத்து வந்தார். கடந்த மாதம் 12ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது, விசாரணையை நாள் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும். மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதாக தெரிவித்தார். அவருடைய வாதங்களை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறும் அவருக்கும் ஜூன் 1ம் தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தது இருந்தனர். அதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதங்கள் இன்று நடக்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் வாதம் முடிவடைந்தவுடன் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிப்பார்களா அல்லது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பாளர்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தத்தில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/64748-final-discussion-on-jayas-asset-case.art

  • தொடங்கியவர்

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல.. சுப்ரீம் கோர்ட் பரபரப்புக் கருத்து

 

 டெல்லி: முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கில் இன்று கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்று பரபரப்புக் கருத்தைத் தெரிவித்தது.

 

மேலும் பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியதும், முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதுதான் எனது கடைசி கோரிக்கை என்று கூறி அவர் தனது வாதத்தை முடிவு செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா வாதத்தை முன் வைத்தார். அப்போது சசிகலாவை அதிமுகவினர் சின்னம்மா என்று அழைக்கப்படுபவர் என்றும், அவர் தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார். இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு (இன்று) விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

இன்றை அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தான் வாதாட 2 மணி நேர அவகாசம் கேட்டார். பின்னர் தனது வாதத்தை அவர் தொடங்கினார். வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்துப் பேசிய அவர் கடைசியாக இது எனது வக்கீல் தொழிலில் மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு (ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்) செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை. இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார் ஆச்சார்யா.

 

ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

 

வருமான வரித்துறையின் வாதம்: அடுத்து, பிற்பகலில், வருமான வரித்துறை சார்பில் அதன் வாதம் எடுத்து வைக்கப்படுகிறது. வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெ. தப்ப முயற்சிப்பதாக ஆச்சார்யா வாதிட்டுள்ளார். வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்பது ஆச்சார்யாவின் வாதம்.

 

இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்யவுள்ளனர். இந்த வழக்கில் சுப்பிரமணிய சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தர ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-disprportionate-assets-case-final-hearing-commenced-in-supreme-court-254988.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.