Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c183ca627080400a2eb90a705b568728.jpg

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 
அதற்கமைய  பாதுகாப்பு கட்டமைப்பில் பதவியில் உள்ள இராணுவத்தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்திலேயே இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
 
தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரை பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் ஓய்வின் பின்னரும் இருதடவைகள் பதவி நீடிப்புச் செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர ரணசிங்கவை பதவி விலகுமாறும் புதிய அரசு கோரியுள்ளது.
 
மேலும் விமானப்படையின் தளபதி கே.ஏ குணதிலகவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். எனவே எதிர்வரும் 19 ஆம் திகதி வரைக்கும் பதிவியில் இருப்பதற்கு புதிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 
 
இருப்பினும் பொலிஸ் மா அதிபர் எம்.கே இலங்கக்கோன் தொடர்ந்தும் பதவியில் இருப்பார் எனவும் புதிய அரசு அறிவித்துள்ளது. 
 
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். இதனால நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் பாதுகாப்பு பிரிவில் பல மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=385573798110373146

இராணுவ, கடற்படைத் தளபதிகள் 'அவுட்'! விமானப் படைத் தளபதிக்கு ஓய்வு!! பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்வார்
 
ARMY%20FOCE%2097874454.jpg
 
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி - இன்னும் 9 நாள்களில் - ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான மூத்த விமானப்படை அதிகாரி ஒருவரை அப்பதவிக்கு புதிய ஜனாதிபதி நியமிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
தற்போதய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் அப்பதவிகளில் தொடர்வதை புதிய அரசுத் தலைமை விரும்பவில்லை என்பது அவர்களுக்குக் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவும், அப்பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் செல்வதற்கு அவர்களும் முன்வந்துள்ளனர் எனவும் கூறப்பட்டது. அவர்கள் - பதவிகளை விட்டு விலகியதும் அவர்களது இடங்களுக்கு புதியவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார். இதேவேளை ஓய்வுக்குரிய காலம் கடந்த பின்னரும் இரண்டு தடவைகள் பதவி நீடிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவை பதவி விலகிச் செல்லுமாறு புதிய அரசுத் தலைமை கோரியிருக்கிறது என்றும் தெரிகிறது. எனினும் பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்கக்கோன் அப்பதவியில் தொடர்வதை புதிய ஜனாதிபதி விரும்புகிறார் என்றும் கூறப்பட்டது. -
 
http://www.malarum.com/article/tam/2015/01/10/8022/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-.html#sthash.LUAdcgHZ.dpuf
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.