Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசின் தேசிய நலன்சார் திட்டங்களுக்கு ததேகூ ஒத்துழைப்பு

Featured Replies

புதிய அரசின் தேசிய நலன்சார் திட்டங்களுக்கு ததேகூ ஒத்துழைப்பு
 
141230100815_r_sampanthan_tna_leader_512'அமைச்சரவையில் சேர்வது பற்றி கூட்டமைப்பு கூடி ஆராயும்': சம்பந்தன்

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குகொள்ள வேண்டும் என்று புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசாங்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின் தேசிய நலன்கள் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் சேர்வது குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது பற்றி தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், அதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் கூடி முடிவெடுக்கவுள்ளதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தேசிய நலன்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் என்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்கள் நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150111_tna_maithri

  • கருத்துக்கள உறவுகள்

'மைத்திரி அரசாங்கம் நல்லெண்ணத்தை செயலில் காட்டவேண்டும்' - சுரேஸ் பிரேமச்சந்திரன்:-

 
 

 

Sures_CI.jpg

 

இலங்கையில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையிலான வெற்றியைப் புரிந்து கொண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், செயல் வடிவில் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 9 தமிழர்களின் 41 வது வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நிபந்தனையுமின்றி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் மக்கள் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, புதிய அரசாங்கம் தனது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டிய காலகட்டம் இது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கும் சொந்த இடங்களுக்குச் செல்லாமல் உள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நல்லுறவை வலுப்படுத்துவதுடன் சுமுகமாக பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்ககான ஓர் உந்து சக்தியாக அமையும் என்றும் சுரேஸ் கூறினார்.

புதிய ஜனாதிபதியின் தலைமையில் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா என கேட்டதற்கு, அது குறித்த தேவை இப்போது எழுந்திருக்கின்றதா என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று அவர் பதிலளித்துள்ளார்.

'புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிர்சசினைகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் இன்னும் 3 மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூடிப் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115421/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.