Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால சிரிசேன சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இடை நிறுத்தியுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“அவர்கள் எல்லோரும் ஒரே வழியிலேயோ அல்லாது வேறு வழியிலேயோ சீனாவின் பக்கம் திரும்புவார்கள்" - எலன் பாரி - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்-

 


ரோப்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகளையும் 360 பவுண்ட் எடையுள்ள வெடிபொருட்களையும் காவும் 329 என்ற இலக்கத்தையுடைய சீன கடற்படை நீர்மூழ்கி ஒன்று நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிறன்று  முன்னறிவிப்பின்றி கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது.


இலங்கையின் பாதுகாப்பு அமைச்சானது அது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான வழமையான செயற்பாட்டு ஒத்திகைக்கான வருகை மட்டுமே எனக் கூறிவிட்டு அது பற்றி எதுவும் மேலதிகமாக பேசவில்லை. ஆனால், அப்போதைய இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் சீனாவானது இந்தியாவின் கொல்லைப்புறத்திற்கு வந்துவிட்டதற்கான பிரகடனம் என இதனை நோக்கும் இந்தியா இது தொடர்பில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளது.   


கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் சீனா எத்தகைய நீண்டகால மூலோபாய திட்டங்களை கொண்டிருந்தாலும்  கடந்த வெள்ளிக்கிழமை காலை மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்பட்டதோடு சடுதியான ஒரு தடங்கலை சந்தித்து மிகுந்த வருத்தமடைந்துள்ளது.   


தன் மத்தியில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய விலையே இது என குறிப்பிடும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் வருகைப் பேராசிரியராக பணியாற்றும் டேவிட் புரூஸ்டர், “நீங்கள் ஒருவரோடு மட்டும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் போது, அவர் இல்லாமல் போகும் நிலை அந்த இணக்கப்பாட்டு உறவு மீது தீவிர தாக்கத்தை உண்டு பண்ணும்” என மேலும் விளக்கமளித்தார்.    
 
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவை மேற்கத்தேய நாடுகள் விமர்சித்து வந்த காலப்பகுதியில், சீனாவானது துறைமுகங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக பல பில்லியன்களை கடனாக வழங்கி இலங்கைக்கு ஆறுதலளித்தவாறு சீனாவுடனான இலங்கையின் உறவு படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டது. சீன இராணுவத்தினரின் நடவடிக்கைகளிற்காக இலங்கையை பயன்படுத்துவதனை மகிந்த ராஜபக்ச அனுமதிக்க தயாராகி இருந்தார் என்பதை இலங்கை அதிகாரபூர்வமாக மறுத்தாலும் சமீபத்தைய மாதங்களில் சீனாவுடனான இலங்கையின் உறவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை தென்படுவதால் அயல்நாடான இந்தியாவின் அச்சம் இது தொடர்பில் மேலோங்கியுள்ளது.   


சீனாவினால் நிதியளிக்கப்பட்ட  உள்கட்டமைப்பு திட்டங்களே மகிந்தவின் பிரதான அடைவுகளாக இருந்தது.  


மினுமினுக்கும் புதிய பாரந்தூக்கிகள் கொழும்பு கடலில் வரிசையாக நிற்க கடந்த புரட்டாதி மதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவிருக்கும் வணிக வளாகங்கள், விடுதிகள் மற்றும் துறைமுகங்கள் என்பன அடங்கியதான  துறைமுக நகரத்திற்கான கட்டுமானத் திட்டத்தை தொடக்கி வைத்தார். 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற்ற சீன முதலீடுகளின் ஒரு பகுதியே இத் திட்டமாகும்.  பல சீன கட்டுமான நிறுவனங்கள் இலங்கையில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர். மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யலாம் என்ற நம்பிக்கையில் உள்ள இலங்கையரிற்கு மண்டரின் மொழி படிக்கும் ஆர்வம் மேலோங்குகிறது என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.   


ஆனால், சீன திட்டங்கள் எரிச்சலை உண்டாக்குவதும் நோக்கத்தக்கது. துரித கதியில் சீனா கட்டங்கள் கட்டுவதும் அதன் இரகசியத் தன்மைகளும் மற்றும் "எரிபொருள் சதி கோட்பாடுகள்” போன்றனவும் இலங்கையானது சீனாவின் சட்டைப்பையாக மாறி வருகின்றதா என்ற பீதியை ஏற்படுத்துவதாக கொழும்பை தளமாகக் கொண்ட “த சண்டே ரைம்ஸ்” என்ற பத்திரிகை சீன அதிபரின் இலங்கை வருகையையொட்டி செய்தி வெளியிட்டது.


பெரும்பாலான கட்டட நிர்மான திட்டங்களில் சீன தொழிலாளர்களே வேலை செய்கின்றனர் என பெரும்பாலானோர் விசனப்படுகின்றனர். சீனக்கடன் மலை போல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களை எச்சரித்தனர்.    
 
திரு ராஜபக்சவின் கொள்கைகள் இன்னுமொரு ஆறு ஆண்டுகளுக்கு தொடருமெனில் இலங்கை ஒரு காலனியாக மாறும் எனவும் நாம் எல்லோரும் அடிமைகளாவோம் எனவும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்ற வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்ற புதிய சனாதிபதி எச்சரித்துள்ளார்.


"வெள்ளைக்காரர் இராணுவ வலிமை மூலம் முன்னர் அபகரித்த நிலத்தை தற்போது சில நபர்களிற்கு பணத்தை கொடுத்து வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள்”, என அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையின் தற்போதைய புதிய பிரதம மந்திரி, தான் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சீனாவினால் தலைநகர் கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் "துறைமுக நகரம்" என்ற திட்டத்தை இரத்துச்செய்யப் போவதாக சென்ற மாதம் தெரிவித்தார். முறைகேடுகள் தொடர்பாக சகல உட்கட்டமைப்பு திட்டங்களையும் மீளாய்வு செய்ய இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார விவகாரங்களிற்கான பேச்சாளர் கர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.


இந்த நிலைப்பாடானது சீனாவுடனான மனக்கசப்பாக அமையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
 “நாம் சீனாவை ஒரு நல்ல நண்பராகவே கருதுகின்றோம். பெரும்பாலான சீனாவின் திட்டங்கள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும். மகிந்த அரசாங்கம் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு சீனாவை நெருங்குவது போல் அல்லாது, நாம் இரு நாடுகளுடனுமான உறவில் ஒரு சமநிலையான அணுகுமுறையை பின்பற்றுவோம்”, என புதிய சனாதிபதி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்ப் போராளிகளினுடனான போரில் இலங்கை அரசாங்கம் நடந்து கொண்ட முறை தொடர்பாக தமது கடுமையான  அதிருப்தியை தெரிவித்து வந்த இலங்கைக்கான பாரம்பரிய நன்கொடையாளர்களான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தாம் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை குறைத்துக் கொண்டமையானது, இலங்கை சீனாவினை நெருங்கியமைக்கான ஒரு காரணமாக அமைந்தது.


இது இந்திய பெருங்கடலில் இன்னும் கூடுதலான அவதானத்தை ஈர்த்தது. சீனாவின் முக்கிய வெளிநாட்டுக் கொள்கைத் திட்டமான சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கடல் வர்த்தகப் பாதையான "பட்டு வீதி." திட்டத்தின் அச்சாணியாக இலங்கை அமைந்திருக்கின்றது.


40 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படும் இத்திட்டமானது தன்னை சுற்றி வளைத்து பிராந்தியத்தில் தன்னைப் பலவீனமாக்கும் மூலோபாயம் என இந்தியா கலக்கமடைகின்றது. இத்திட்டம் ஈற்றில் சீனாவின் இராணுவ கட்டுமானங்களாக அமையலாம் என இந்தியா அஞ்சுகின்றது.


வாக்குகள் முழுமையாக கணக்கிட்டு முடிவதற்கு முன்னரே இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி சிறிசேனாவை ஆர்வத்துடன் அழைத்து வாழ்தியிருக்கின்றார்.


மகிந்த ராஜபக்சவின்  தோல்வியானது  இலங்கையில் சீனாவின் திட்டங்களை சீர்குலைக்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்று சீன ஆய்வாளர்கள் தங்கள் பங்கிற்கு கூறியுள்ளார்கள்.


"பல அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்னர் சொல்வது ஒன்று. ஆனால் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் செய்வது வேறு", என சர்வதேச கற்கைகளுக்கான ஷாங்காய் இன்ஸ்டிடியூட்டினை சேர்ந்த தெற்காசியாவில் உள்ள ஒரு நிபுணரான வாங் டிகுவா கூறினார். “துறைமுக நகரம்” என்ற திட்டத்தை பொறுத்தவரை அது இலங்கைக்கு நன்மை பயப்பதாக அமைவதால் அதனை ஏன் இரத்துச் செய்ய வேண்டும்? என கேள்வியெழுப்பிய அவர் இத்திட்டம் இரத்துச் செய்யப்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என மேலும் கூறினார்.


உண்மையில், சீனா தான் பெரிதும் முதலீடு செய்த  வேறு சில நாடுகளிலும் மக்களின் எதிர்ப்புணர்வலைகளை காண நேரிட்டது என சமகால சீன கற்கைகள் நிறுவனமான பிரஸ்ஸல்சின் ஆராய்ச்சிக் கற்கைகளிற்கான  தலைவரான ஜொனாதன் கொஸ்லக் கூறினார். இவர் ஐந்து ஆபிரிக்க நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் போது சீனா எப்படி எதிர்வினை ஆற்றியது என்பது குறித்து ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக, இவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது சீனா பல மாதங்களுக்கு ஒரு குறைந்தளவிலான திட்டங்களையே பேணும். பின்னர் புதிய தலைமையை நெருங்கி கூட்டுத் திட்டங்களை செய்ய தொடங்கும் என அவர் மேலும் கூறினார்.  சீனாவை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர்களுடன் கூட இப்படியான கூட்டுத் திட்டங்களை ஏற்படுத்துவது அனேகம் எப்போதும் சாத்தியமானதாக இருந்திருக்கின்றது என மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


“அவர்கள் எல்லோரும் ஒரே வழியிலேயோ அல்லாது வேறு வழியிலேயோ சீனாவின் பக்கம் திரும்புவார்கள். ஏனெனில் சீனா மட்டுமே உட்கட்டமைப்பு மற்றும் பொது செலவுகளிற்காக நிதியுதவி செய்கின்றது. இதுவே இலங்கையிலும் நடக்கப் போகின்றது எனவே நான் ஊகிக்கின்றேன்”, என அவர் மேலும் விளக்கமளித்தார்.


இலங்கையில் புதிய சனாதிபதி பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இலங்கையுடனான உறவை மீளக் கட்டியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும். அவர்களில் அமெரிக்காவானது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது நடந்த உரிமை மீறல்கள் தொடர்பில் அழுத்தத்தை கொடுத்ததன் மூலம் தனது செல்வாக்கை இலங்கையில் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தவில்லை என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த திரு பிரெவ்ஸ்டர் கூறினார்.


இம்முறை, வோசிங்டன் தனது சொந்த முதலீட்டு திட்டத்துடன் தயாராக வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


"நான் இந்த நாடுகளிலுள்ள மூலோபாய சமூகத்துடன் பேசியுள்ளேன்”.


சீனாவின் பணம் தொடர்பாக அதாவது சீனாவானது எவ்வளவு பெருந்தொகை பணத்தை இப்பிராந்தியத்தில் கொட்ட தயாராகவிருக்கின்றது என்பது குறித்து குறைத்தே மதிப்பிட்டுள்ளார்கள் என மேலும் சுட்டிக்காட்டினார்.


வெறுமனே பணம் பலவற்றை பேசும் என அவர் மேலும் கூறினார்

 

--  எலன் பாரி -  தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115477/language/ta-IN/article.aspx

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.