Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயங்கியது ஐ.நா சபை! தண்டித்தார்கள் தமிழர்கள்!- இலங்கை தேர்தல் சொல்லும் பாடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத தேவதையைவிட தெரிந்த  பிசாசு மேல் என்று தேர்தலுக்கு முன் பிசாசோடு தன்னை ஒப்பிட்டு தமிழர்களிடம் ஓட்டுக்காக கையேந்தினார் ராஜபக்‌ஷே. அந்தச் சாத்தானை விரட்டியடித்து ஒட்டுமொத்த குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இலங்கை வாக்காளப் பெருமக்கள்.

ராஜபக்‌ஷேவுக்கு தமிழர்கள் தந்த தண்டனை என்றே அனைவரும் சொல்கிறார்கள்.

8.jpg

மைத்ரிபால சிறீசேனவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மகிந்த ராஜபக்‌ஷே 10 ஆண்டுகளாக சர்வாதிகாரமான ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார். தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை சகல விதத்திலும் தலைவர்களாகவோ, பொறுப்பாளர்களாகவோ நியமித்திருந்தார். அதுபோல 70 சதவிகித அரசு நிதிகளை குடும்பத்தினரே பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது.

இந்தத் தேர்தலில் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்திருக்கிறார். எதிர் தரப்பு ஆட்களை விலைக்கு வாங்க இருந்தார். வாக்காளர்கள் மிரட்டப்பட்டார்கள். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

புதிய ஜனாதிபதி சிறீசேன தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்பாரா என்பது தமிழர்களிடையே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மாட்டேன். சமத்துவ அரசியல் முறையை உருவாக்க மாட்டேன். ஒற்றை ஆட்சிக்குள்தான் நாட்டை வைத்திருப்பேன். பெளத்தத்துக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். ஜெனீவா விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் போன்ற பல விஷயங்களைக் கூறியிருந்தார். அவரிடம் தீர்வை எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் வாக்குகளை வைத்துத்தான் ஜனாதிபதியாக ஆகியிருக்கிறார். இவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா? இந்திய அரசுடன் கைகோத்து செயல்படுவாரா? என்பது போன்ற பல கேள்விகளும் இருக்கின்றன. தமிழ் மக்களுக்கு அதிகாரம், சமத்துவ ஆட்சி முறை என்பதில் இரு அரசுகளும் அக்கறை செலுத்த வேண்டும்.

சிறீசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறோம். எந்தவித வாக்குறுதிகளும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதே உண்மை. எங்களுடைய கோரிக்கைகள் தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். தமிழர்களுக்கு செய்ய வேண்டிய பல விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஜனநாயகம் என்பது சிங்கள மக்களுக்கு மட்டும் கிடைக்காமல் தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.

ஈழத்தமிழரும் எம்.ஜி.ஆரும் என்ற புத்தகத்தின் ஆசிரியர் வே.தங்கநேயனிடம் இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி கூறியதாவது,

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்‌ஷே, தான் தமிழர்களால்தான் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை ஒப்புக்கொண்டார். இதன்மூலம் ஓர் இனவெறி அரசையே இதுவரை தான் நடத்தி வந்ததை பகிரங்கமாகவே பறைசாற்றுகிறார்.

தான் அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகி விடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் முன்கூட்டியே இந்தத் தேர்தலை அறிவித்தார் ராஜபக்‌ஷே. அதற்குக் காரணம் உண்டு.

இந்தியாவில் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரசார யுத்தியை வடிவமைத்த அதே நிறுவனம்தான் ராஜபக்‌ஷேவுக்கும் துணை நின்றது. இந்தப் பிரமாண்டமான தேர்தல் ஏற்பாட்டில், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னை எதிர்க்கமாட்டார்கள் என்ற மமதையிலேயே ராஜபக்‌ஷே இருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறீசேனவை ஆதரித்தது. இதை நாடு கடந்து வாழும் உருத்ரகுமாரனின் பின்னணியில் இருக்கும் சிலர் கடுமையாக விமர்சித்தார்கள்.

தமிழகத்திலும் சிலர் ஊடகத்தின் வழியாக 'தனி வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் அல்லது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று தங்களது தனிநபர் கருத்தை திணித்தார்கள். இவர்கள் ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்ததுண்டா?

மூன்றாவது முறையும் அவர் ஆட்சிக்கு வந்தால், 'பார்த்தீர்களா, மக்களே சொல்லி விட்டார்கள், நான் நிரபராதி’ என்று தன்னைத்தானே நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்திருப்பார். இதற்கு வழிவிட்டிருந்தால் இனவெறி ஆட்சிக்கு தமிழர்களும் துணை போயினர் என்று ஈழத்தமிழர் மீதுதானே அந்தப் பழி விழுந்திருக்கும்.

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் மைத்ரிபால சிறீசேனவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்கள். இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளை மட்டும் ஏற்று வாக்களிக்கவில்லை. மாறாக, அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட கோபக் கனலை தமது வாக்குமூலமாகவே ராஜபக்‌ஷேவை வீழ்த்தினார்கள்.

குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக சொல்லொண்ணா துயரத்தில் துடித்தார்கள். தொலைக்காட்சிகளில், பிள்ளைகள் படிக்கும் பாடப்புத்தகங்களில் எல்லாம் ராஜபக்‌ஷேவின் படம். வீதிகளில் திரும்பும் திசையெல்லாம் ராஜபக்‌ஷே. உள்ளம் குமுறிய தமிழர்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

போராடுவதற்கு புல்லும் ஆயுதம் என்று கேர்ணல் கிட்டு சொல்லிக் கொடுத்தார். வாக்குச்சீட்டில் தமது சுண்டு விரலால் ராஜபக்‌ஷேவுக்கு அடி கொடுத்தார்கள்.

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக வாக்களித்தால் மிகப்பெரிய ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்று அவருடைய கைக்கூலிகள் டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் மிரட்டினார்கள்.

90 ஆயிரம் பெண்கள் விதவை ஆக்கப்பட்டுள்ளனர். உடல் உறுப்புகளை இழந்து விட்டோம். வாக்களித்ததற்கான பின் விளைவுகள் ஈழத்தமிழர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

கடலில் தத்தளிக்கும் ஒருவர் கிடைக்கிற துரும்பையும் பயன்படுத்துவார். அந்த நிலையில்தான் ஈழம், மலையகம், கொழும்பு தமிழர்கள் ஒருசேர இணைந்து ராஜபக்‌ஷேவின் அதிகாரத்தை ஆயுதமின்றி வீழ்த்தினார்கள்.

தயங்கி நின்றது ஐ.நா சபை... தண்டித்தார்கள் தமிழர்கள் என்ற பெருமை உலக வரலாற்றில் ஈழத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வந்து சேரும் என்றார்.

புதிய ஜனாதிபதியின் வருகை தமிழ் மக்களுக்கு நன்மையை பயக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஜூனியர் விகடன் 

1,498 தேர்தல் விதிமீறல்கள் 

தேர்தல் பிரசாரங்கள் தொடங்கியதும் ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களையும் தன் ஒருவனின் வெற்றிக்காக விரட்ட ஆரம்பித்தார் ராஜபக்‌ஷே என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது தேர்தலைக் கண்காணிக்கும் தனியார் அமைப்பான 'கேஃப்’. அந்த அமைப்பைச் சேர்ந்த ரஜித் கீர்த்தி, ''நாங்கள் இதுவரை 1,498 தேர்தல் விதிமீறல் புகார்களைப் பெற்றுள்ளோம். அதில் 193 வன்முறை புகார்களும் அடங்கும். பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு போலியான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. மேலும், அரசு ஊடகங்களோடு, ஊழியர்களும் ராஜபக்‌ஷே வெற்றி பெற வேண்டி தீவிரமாக இயங்கினர். இலங்கை அரசின் போக்குவரத்துக்குச் சொந்தமான 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், ராணுவம், சிறைத்துறை ராஜபக்‌ஷேவின் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப் பட்டன. வரலாற்றிலேயே முதன் முறையாக 44 சிறைக் கைதிகள் ஆளும் கட்சியின் பிரசாரத்துக்காக மேடைகள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன'' என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் அவர். தேர்தல் ஆணையர் மஹிந்தா தேசாபிரியாவும், ''இனி வன்முறைகள் அரங்கேறினால் அந்த மாகாணங்களில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட வேண்டியது வரும்'' என்று எச்சரிக்கை விடுக்க, நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்தது. ராஜபக்‌ஷேவின் இத்தனை தகிடுதத்தங்களையும் மீறி மைத்ரிபால சிறீசேன வென்றுவிட்டார்.

tamilwin.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.