Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபிகா படுகோனின் கதை

Featured Replies

தீபிகாவின் கதை

அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!... இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்...

(Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi)

ஹிந்தி படங்களில் காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று. உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்து தன் வாழ்கையின் இந்த இரு வேறு அம்சங்களை எப்படி ஒன்றிணைத்து வெற்றி கண்டார் என்பதை பற்றி பேசுகிறார்...

“2014ன் ஆரம்ப நாட்களில், எல்லோரும் என்னை என் வெற்றிக்காக பாராட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் வித்தியாசமான உணர்வுடன் கண் விழித்தேன். அதற்கு முன்தினம் சோர்வினால் மயக்கம் போட்டிருந்தேன். அதிலிருந்து எல்லாமே தலைகீழாக ஆரம்பித்து விட்டது. ஒரு வினோதமான வெற்றிடம் வயிற்றில் உண்டானது போன்ற உணர்வு.

முதலில் நான் அதை ஸ்ட்ரெஸ் என்றுதான் நினைத்தேன். அதனால் என் கவனத்தை திசை திருப்ப வேலையில் கவனம் செலுத்தினேன். மற்றவர்கள் சுற்றி இருக்கும் மாதிரி பார்த்துக்கொண்டேன். கொஞ்ச காலம் உதவியது. ஆனால் அந்த முள் போன்ற உணர்ச்சி போகவேயில்லை. மூச்சு வாங்க ஆரம்பித்தது, கவனம் செலுத்த முடியவில்லை, அடிக்கடி அழ ஆரம்பித்தேன்.

நாளாக நாளாக மிகவும் மோசமடைய தொடங்கியது. என் பெற்றோர் என்னை பார்க்க வரும் போது, அவர்கள் முன் தைரியமாக காட்டிக்கொண்டேன். ஏனென்றால் நான் தனியே வாழ்கிறேன், நீண்ட நேரம் உழைக்கிறேன் என்பதால் என்னைப்பற்றி அவர்கள் அதிகம் கவலை கொள்வார்கள்.

அதன் பின், ஒரு நாள், என் அம்மா உஜ்ஜாலா படுகோனேவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ஏதோ பிரச்சினை என்று உணர்ந்த அவர்கள், பிரச்சினையின் ஆணிவேரை கண்டுப்பிடிக்க, அவர்களின் தோழி அன்னா சண்டி (Anna Chandy), என்ற மனோதத்துவ நிபுணரை தொடர்புக்கொண்டார்கள்.

ஒவ்வொரு காலையும் கண் விழிப்பதும், ஹாப்பி நியூ இயர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு படம் பிடிப்பதும், மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. இறுதியில், ஒரு நாள் நான் அன்னா ஆண்ட்டியை தொடர்புக்கொண்டேன். அவர்கள் மும்பையில் இருந்து பெங்களுரு வந்தார்கள். நான் அவர்களிடம் மனம் விட்டு பேசினேன். எனக்கு மன அழுத்தம் மற்றும் மன பதட்டம் இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள்.

என்னை மாத்திரை எடுக்க சொன்னபோது முதலில் நான் ஒத்துக்கொள்ளவில்லை. பேசினால் போதும் என்று நினைத்தேன். அதன் பின், ஷ்யாம் பாட்(Shyam Bhatt) என்ற மற்றுமொரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று பார்த்தேன்.
சில நாட்களில் எல்லாம் சரியாக இருப்பது போல தோன்றும். ஆனால் சில நாட்களில் உணர்வுகள் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இறுதியில் என் நிலையை உணர்ந்தேன். கவுன்சலிங் உதவியது – ஆனால் ஓரளவுக்குத்தான். அதன் பின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். இப்பொழுது நன்றாகயிருக்கிறேன்.

ஹாப்பி நியூ இயர் படத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த காலக்கட்டத்தில்தான் நடைப்பெற்றன. ஆனால் என் அடுத்த படமான ஷூஜீத் சிர்கார்(Shoojit Sircar) நடிக்கும் முன், நான் மனதளவிலும் உடலளவிலும் நன்றாக இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டேன்.என் குடும்பத்துடன் நேரம் செலவிட்டப்பின் நன்றாக உணர்ந்தேன். ஆனால் நான் மும்பை திரும்பிய உடன் என் தோழி மன அழுத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்டதை அறிந்தேன். அது எனக்கு பேரிடியாகயிருந்தது.

என் தனிப்பட்ட அனுபவம் மற்றும் என் தோழியின் இழப்பு என்னை அதிகம் பேசப்படாத இந்த பிரச்சினையைப் பற்றி பேச தூண்டியது. மன அழுத்தத்தை பற்றி பேசுவது ஒரு அவமானமாக, ஒதுக்கி தள்ளப்பட வேண்டிய விஷயமாக இங்கே கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் நான்கில் ஒருவருக்கு மன அழுத்தம், மனப்பதட்டம் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மனஅழுத்தம்அடுத்த சில வருடங்களில் மிகப்பெரிய நோயாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. நாம் அனைத்து வகையான உபாதைகளை பற்றி பேசுகிறோம் ஆனால் இது ஒரு மிக மோசமான உயிர்கொல்லி நோய் என்பதை மறக்கிறோம். வாழ்க்கை உட்பட எதுவும் அர்த்தமாவதில்லை இந்த நோய் வந்தப்பின். இதை கடந்து வந்தது என்னை வலிமையானவளாக மாற்றியிருக்கிறது. எனக்கு என் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர வைத்திருக்கிறது. இந்த வியாதியை ஒப்புக்கொண்டு, அதை பற்றி பேசுவது எனக்கு ஒரு விடுதலை அளிக்கின்றது. இன்று நான் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்தி விட்டேன். என்னுடைய உதாரணம், மற்றவர்களுக்கும் இது போன்ற உதவியை அணுக உதவும் என்று நம்புகிறேன்.

சில சமயங்களில், எனக்கு இந்த வியாதி வந்தவர்கள் சற்றே தங்களின் பிரச்சினையை பற்றி பேச விரும்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் அறிவுரைகளை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் நலம் விரும்பிகள் சொல்லும்,” கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும்!” என்பது போன்ற அறிவுரைகள் உதவுவதில்லை.

கவலைப்படுவதென்பது வேறு, மன அழுத்தத்தில் இருப்பதென்பது வேறு. பல சமயங்களில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அப்படி தெரிவதில்லை. ஆனால் கவலையில் இருப்பவர்களை பார்த்தாலே தெரிந்து விடும். நான் இதை சொன்னவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி, “ உனக்கு எப்படி மன அழுத்தம் வரும்? உனக்கு எல்லாம் உள்ளது. நீ நம்பர் ஒன் நடிகை, பெரிய வீடு, கார், படங்கள்... இதற்குமேல் என்ன வேண்டும்?”... இது உங்களிடம் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை பற்றிய விஷயமில்லை. உடலின் ஆரோக்கியத்தை போல மனதின் ஆரோக்கியமும் சம அளவில் முக்கியம். நான் மக்கள் கஷ்டப்படுவதை பார்கிறேன், அவர்களின் குடும்பத்தினர் அதைப் பற்றிய ஒரு அவமான உணர்ச்சி கொள்கின்றனர், ஆனால் அது உதவப்போவதில்லை. அவர்களுக்கு புரிதலும் ஆறுதலும் வேண்டும்.

நான் இப்பொழுது மன அழுத்தம் மற்றும் மனப்பதட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களுக்கு உதவவும் முயற்சித்து வருகிறேன். இதற்கான ஒரு திட்டத்தை என் டீம் உருவாக்கி வருகின்றது, அது விரைவில் வெளியிடப்படும்.

 

(Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi)

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வளர்ந்த கலாச்சாரப் பின்னணி.. மிகவும் ஆபத்தானது!  ஆண்கள் அழுவது என்பது.. எமது சமூகத்தில் ஒரு பலவீனமாகப் பார்க்கப்படுகின்றது!

 

ஒரு நெருங்கிய உறவு, எம்மை விட்டுப் பிரியும் போது.. அருகிலிருந்து அழுது அரற்றுவதும், உற்றார் உறவினர்கள் ஆறுதல்கள் சொல்லுவதும், துயர் பகிர்வதில் எவ்வளவு முக்கியமானது என்பதை, வெளிநாடு வந்த பின்னர் தான் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது!

 

அருகிலிருந்தவர்கள் சிறுது காலத்தில், உறவின் இழைப்புத் துயரிலிருந்து விடுபட்டு விட, நான் மட்டும் பல வருடங்களின் பின்னரும், இன்னும் அந்த உறவின் பிரிவிலிருந்து முற்றாக விடுபட முடியவில்லை!

 

மேலுள்ள ' தீபிகாவின் கதை' யிலும் ஒரு தாயின் 'அருகாமை' அவரது ' தற்கொலையைக்' கூடத் தடுத்திருக்கக் கூடும் போல இருக்கின்றது!

 

குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழும் முதலாவது தலைமுறையான நாம் 'கவனத்தில்' எடுக்க வேண்டிய முக்கியமான கட்டுரை இது! நன்றி.. நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத் தெரியவில்லை, ஆனல் எல்லாம் இருந்தும் சில விடயங்கள்  அனாவசியமாக ?  பொதுவாக  உறவுகளின் இழப்புகள், சம்பவங்கள் , சில பிரிவுகள் என்பன மனதை அழுத்தத்தான் செய்கின்றன..., கொஞ்சநேரம் தனிமையில் அல்லது  பூஜை அறையில் இருக்கும் போது சில நாட்கள் நிம்மதியாய் இருக்கும்...! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.