Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர்

Featured Replies

இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர் JAN 29, 2015 | 0:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

Jaishankar-300x200.jpgஇந்திய வெளிவிவகாரச் செயலராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் எட்டுமாதங்களால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையின் நியமனக் குழுவின் கூட்டத்துக்குப் பின்னர், இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றும் எஸ்.ஜெய்சங்கர் வரும் 31ம் நாளுடன் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே, புதிய வெளிவிவகாரச் செயலராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

எஸ்.ஜெய்சங்கருக்கு வெளிவிகாரச் செயலர் பதவியை வழங்குவதற்காக, தற்போதைய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்கின் இரண்டு ஆண்டு பதவிக்காலம், எட்டு மாதங்களால் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.

புதிய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் இன்று தனது பதவியைப் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013ம் ஆண்டு அமெரிக்கத் தூதவராகப் பொறுப்பேற்க முன்னர் இவர் சீனா, சிங்கப்பூர், செக் குடியரசுக்கான தூதுவராக பணியாற்றியிருந்தார்.

இந்திய வெளிவிவகாரச் சேவையில் அனுபவம் மிக்க அதிகாரியான சுப்பிரமணியம் ஜெய்சங்கர், 1988ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில், முதன்மைச் செயலராகவும், இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/01/29/news/3236

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கரின்... பூர்வீகம், மலையாளமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கரின்... பூர்வீகம், மலையாளமா?

 

u r too sharp..! :icon_idea:

 

எங்கேயோ போய்ட்டீங்க..!! :lol::)

 

 

ஆனால் அவர் தந்தை கே.சுப்ரமணியம் தமிழ் நாட்டில் 'வளர்ந்தவர்' போல் தெரிகிறது.

 

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.