Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகதிகளை நடுக்கடலில் தடுத்து வைத்திருந்தது சரியே! - அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Aus-high-court-200-news.jpg

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி படகில் சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டரீதியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.சென்ற ஆண்டு இந்த அகதித் தஞ்சம் கோரியவர்களை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.

   

சிறு குழந்தைகள் உட்பட 157 பேரையும் நாட்கணக்கில் நடுக்கடலில் பலவந்தமாக தடுத்து வைத்ததன் மூலம் அவுஸ்திரேலியா அரசு அகதிகளை நடத்துவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளை மீறிவிட்டதாக ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன. ஆனால் தனது இந்த செயலை நியாயப்படுத்தியிருந்த அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலிய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே தான் நடந்து கொண்டதாக தெரிவித்து வந்தது. தற்போது பசுபிக் தீவான நவுருவில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் அந்த படகில் வந்த 157 இலங்கையர்களில் ஒருவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்திருக்கும் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியே என்று தெரிவித்துள்ளது. இந்ததீர்ப்பு தனது நடவடிக்கைகளுக்கு கிடைத்த நீதிமன்ற அங்கீகாரமாக அவுஸ்திரேலிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தீர்ப்பு அகதிகள் மற்றும் அகதித்தஞ்சம் கோருபவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு இது பின்னடைவாக அமையும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

தீர்ப்பு கொடுத்த நான்கு நீதிபதிகளில் மூவர் இணைந்து இந்த தீர்ப்பை அளித்திருக்கின்றனர். ஒரு நீதிபதி இவர்களுக்கு மாற்றுக்கருத்தை பதிவு செய்திருக்கிறார். எனவே இந்த தீர்ப்பின் முழுமையையும் படித்தால் மட்டுமே இதன் முழுமையான சாதகபாதங்களை விரிவாக புரிந்து கொள்ள முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://seithy.com/breifNews.php?newsID=125537&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவே தமது நாட்டவருக்கு நடந்திருந்தால் இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமா ???? இதெல்லாம் ஒரு மனிதாபிமானச் செயலா ? நியாய தர்மத்தை குழியில் போட்டு புதைத்து விட்டார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.